இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
தை 2009 இதழ் 109  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இம்மாத இணையத்தள அறிமுகம்: காகித மலர்கள்!
[ இம்மாத இணையத்தள அறிமுகத்தில் தான்யாவின் 'காகிதமலர்கள்' வலைப்பூவினை, மேற்படி தளத்தில் அவர் எழுத்தாளர் அம்பை பற்றி எழுதிய குறிப்பினை மீள்பிரசுரம் செய்வ்துடன் அறிமுகம் செய்து வைக்கின்றோம். - பதிவுகள் -]

காகிதமலர்கள் வலைபூவிலிருந்து..
அம்பை!

- தான்யா -


அம்பை!ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். ஒரு பெண் இன்னொரு பெண் உடம்பை உணரணும். பெண்ணோட உடம்பை மறுவாசிப்பு செய்யணும்.
(அம்பை-காலச்சுவடு நேர்காணல்)

அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷமி தமிழின் மிக முக்கியமான பெண் படைப்பாளி. இவரின் எல்லாப் படைப்புக்களையும் வாசிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கும். இன்று கூட பல பெண்ணியப் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் அம்பை தொட்டுச் சென்றிருக்கிறார். உறவு-காதல்-திருமணம்-அரசியல்-இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பொதுவாக (வெகுசன நாவலாசிரியை) லக்ஷ்மி போன்ற அவர் காலத்துப் பெண்கள் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அம்பை பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள் என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை. இதுவே தலித் பெண் எழுதியதென்றால் மிகமோசமான எதிர்வினைகளை சந்திக்கவேண்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை.

அம்பையின் முதலாவது தொகுதியான சிறகுகள் முறியும்(1976) பெண்ணிய மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான பிரதி. ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள். அவற்றைப் பற்றி (இவரது) காலச்சுவடுப் பின்னட்டைக் குறிப்பில் கற்பனைக் கதைகள் என்று எழுதியிருக்கிறார்- அது தேவையில்லை என்று தோன்றியது. மிக யதார்த்தமாய் சென்று கொண்டிருக்கும் கதைகளை உண்மையில்லை இது வெறும் கற்பனை தான் என்று வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் தான் பெண்களின் எழுத்தாய் இருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சொல்லுவார் அம்பை கருத்தை வைத்து கதைகளை கட்டுகிறார், அதை உணர்வு பூர்வமாய் எழுதுவதில்லை என்று. அவர் கருத்துக்காக எழுதினாலும் அவை ஆழமானவை. சில முயற்சிகள் தோல்வியடைந்தும் இருக்கிறது ஆனாலும் அவருடைய எழுத்து ஆளுமை சொற் பிரயோகங்கள் கருத்துப் போன்றவை மிகவும் திடமாய் வெளிப்பட்டிருக்கிறது.

சக்கர நாற்காலி என்ற கதை பணக்கார இளைஞர்கள் பேசும் புரட்சியை குடியுடன் கூடிய மேற்தட்டு வர்க்கப் பெண்கள் பேசும் பெண்ணியத்தை மற்றும் ஆண் உறவுகளை சாடுகிறது. வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்த மார்க்சிய பிரதிகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் சொற்களை உபயோகிப்பதும், புரட்சி பேசுவதும், குடித்துத் திளைப்பதும் எவ்வளவு போலியானது என்பதை சித்தரிக்கும் சிறுகதை. எல்லாக்கதைகளையும் விட இது தான் உறவு சார் கேள்விகளையும் எழுப்புவதாய் படுகிறது. இவர்களுக்குள் கேள்வி கேட்கிற ஒரு பெண், வறுமையே மிகப் பெரிய ஆசானாய் இருந்து அவளை உருவாக்கியது.

“ஆக்ஸ்போர்ட்டில் படித்திருந்தான் நம்பியார். போகும் போது பத்து ஸ_ட்டுக்கள் தைத்துக்கொண்டு போனானாம். திரும்ப வரும் போது பைஜாமா குர்த்தாவுடன் வந்தான். பல்கலைக்கழகத்தின் மிகத் தீவிர இடதுசாரி அவன். அவன் பீடி தான் குடித்தான். சிலசமயம் கிழிந்த குர்த்தாக்களையே அணிந்து கொண்டான். அவனுடைய ஆக்ஸ்பேட்டு பாணிகளையும், அம்பாசிடர் காரையும் தான். அவனால் விட முடியவில்லை. வாயில் பீடியுடன் ஆங்கில ‘ர”கரங்களை அழுத்திக் குழைத்துத்தான் அவன் பேசினான். அவனால் மலையாளத்தையும் ஹிந்தியையும் பயில முடியவில்லை. தன் பீடி, குர்தா, பைஜாமா மூலமே கேரளத்துப் பாட்டாளி வர்க்கத்தைத் தன் சிந்தனா முறைக்குத் திருப்ப முடியும் என்று அவன் மனதார நம்பிக்கொண்டிருந்தான்.” இது ஒரு கதாபாத்திரத்தின் மனப்போக்கைச் சொல்கிறது கூடவே ஒரு வசதி குறைந்த பெண்ணுடன் வாழ்வதும் புரட்சி என்று குழம்பும் ஒரு பகுதியினரை பற்றியது சக்கர நாற்ககாலி என்ற இந்தக் கதை. அதற்குள் வாழ்வை நேர்மையாய் எதிர்கொள்ளும் பெண் என்று கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாய் பின்னப் பட்டிருக்கிறது.

“ஸஞ்சாரி” என்ற கதை இரு காதலர்களைப் பற்றிய கதை. காதலர் என்றால் ஒர் படைப்பாளியான பெண்ணைப் பற்றிய கதை. அவளுடைய பிராமண காதலன் பற்றிய பிம்பங்கள் மிகுந்த எள்ளலுடன் வெளிப்பட்டிருக்கும். ஓர் சாதாரண சம்பவம் கூட எம்படியான ஓர் பிம்பத்தை எதிராளியிடம் உண்டு பண்ணுகிறது என்பதைச் சொல்லுகிறது இந்தக் கதை. ரங்கா என்கிற பிராமணப் பையன் அவனுடைய காதலி ருக்மா. அவர்களுக்கிடையிலான மனப்போக்கை உள்ளே என்ன நினைக்கிறார்கள் வெளிய என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் எழுதும் போது, அது எவ்வளவு போலியானது என்றெல்லாம் உணர முடியும். அவன் ஒரு நல்ல பிராமணப் பையன் என்று தான் கதையை ஆரம்பித்திருப்பார், அவன் பூணூல் எல்லாம் களைந்திருந்தாலும் அவன் ஓர் நல்ல பிராமணப் பையன்.

ரங்கா, ”ருக்மா நீ அடிக்கடி குமாரோட பேசிறதும், பழகறதும் எனக்குப் பிடிக்கேல்லை”

அப்ப அவள் மனசுக்குள்ள நினைக்கிறதா வரும் “கட்டாயம் உன் அப்பாவுக்கு அவர் மனைவி வேற ஆம்பளையைப் பார்த்திருந்தால் பிடித்திருக்காது. அவர் அப்பாவுக்கும் அப்படியே. அவர் அப்பாவின் அப்பாவுக்கும்..” அப்ப அவன் யோசிப்பான் ”எப்படிச் சொல்லுவது? உன் உடம்பில் ஒரு மிருக அழகு இருக்கிறது. உன் வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள்? நீ என்னை ஏன் விரும்புகிறாய்? நான் ஏமாந்தவனா? நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது. குமாரோடு நீ கதைப்பது உன் பின்னால் என்னை ஓடிவரவைக்கவா? நான் உன் செல்ல நாயா?” இப்படிப் போகும். இன்றைய நவீன ஆண் எழுத்தாளர்களுக்கு தங்களுடைய மனைவி பெண்ணிய சிந்தனை கொண்டவள் எண்டு காட்டவும் வேண்டும் ஆனா அவள் அவர்கள் நினைக்கிற எல்லைகளைத் தாண்டவும் கூடாது. எல்லாப் பேச்சுக்குப் பின்னாலும் அவர்களில் தங்கியிருக்கிற பெண்களாய் இருப்பது அவசியமாய் படுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கையை உறவுகளை இந்தக் கதை பேசுகிறது. சிலவேளைகளில் ஆண்களுக்கு ஏன் பெண்களுக்குக் கூட கொஞ்சம் கூட போல தோன்றலாம் ஆனால் ருக்மாவுக்கும் ரங்காவுக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்கள் எண்ணங்கள்-முரண்கள் உறவில் முக்கியமானவை, சிந்திக்கத் தூண்டுபவை.

கடைசியாக “சிறகுகள் முறியும்” என்ற சிறுகதை குடும்பம் என்ற பலமான அமைப்புள் அமிழ்ந்து அல்லது அழிந்து கொண்டிருக்கிற ஒரு சுயம் அல்லது அவள் வளர்த்து வந்த குணங்கள் என்று கூடச் சொல்லலாம். கருமியான கணவனின் இயல்புகள் எப்படி எல்லாம் ஓர் பெண்ணின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது என்பதே கதை. இந்தக் கதையை நிச்சயமாக சாதாரணமான நல்ல வாழ்க்கையை வாழ்கிற எந்தப் பெண்ணானாலும் வாசிக்கையில் உணர முடியும். அப்படியான அவர்களது வாழ்க்கையைப் பேசும் கதை.

**********

அம்பையின் முதலாவது தொகுதி சிறகுகள் முறியும். இந்தத் தலைப்பே நிலையில்லாமையை சொல்கிறது. போதுவாக பெண்களைப் பற்றி எழுதிய கவிஞர்கள் எல்லாம் விட்டுச் சிறகடிப்பாய், சிறகு முளைக்கும், சிறகு விரியும் என்று சிறகு என்பதே சுதந்திரமாய் சொல்வார்கள் அம்பை சிறகு முறியும் என்று பறக்கும் போதே சொல்லிவிடுகிறார். அடுத்தது வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988). வீடென்பது சுதந்திரம் வீடென்பது உனக்கான இடம் ஆனால் அதே நேரம் அங்கு தான் ஓர் மூலையில் சமையல் அறையும் இருக்கிறது என்பதையும் அங்கு தான் ஒர் பெண்ணின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்கிறது இந்தத் தலைப்பு. இவ்விரு தொகுப்புகள் போலல்லாது, காட்டில் ஒரு மான் (2000) பழைய ஒப்பிடல்களுக்குத் திரும்பியுள்ளது என்று தோன்றுகிறது. ஏனெனில், இதில் பெண்ணை மானுடன் ஒப்பிடும் அந்த பழைய உவமைகள் வந்துவிடுகிறது, பெண்ணை மானாக ஒப்பிட்ட அந்த மரபுக்குள் மீண்டும் அம்பை வருகிறார். அட்டைப் படங்கள் கூட மாறுகிறது. முன்பிருந்த தன்மை போய், காட்டில் ஒரு மானுக்கு வீணை, மான் என்று ஒருவகையான பெண் தன்மை என்கிற உணர்வை வலிந்து உண்டு பண்ணியிப்பார். புதிப்பகத்தை குறை கூற முடியாதவாறு அம்பை அவற்றில் தானே கவனம் செலுத்துவதாய் சொல்கிறார். தற்பொழுதைய அவருடைய படைப்புக்கள் பின்நோக்கிச் செல்கின்றன என்றே சொல்லலாம். வழமையான பெண்ணிய நோக்குப் போய், இருக்கிற நேரத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தன்மை வந்திருப்பது போல தோன்றுகிறது. ஒரு ஓய்வு எழுத்து என்று சொல்லலாம். தான் எதிர்த்த மேம்போக்கான பல விடயங்களை இன்று அம்பை தானே வலிந்து எழுதுவது போல் தெரிகிறது. ஆரம்ப உயிர்மையில் தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை வரும். இவை சொல்லுவது அவர் விமர்சித்த அந்த மேட்டுக்குடியினர் புரட்சி பேசும் தன்மையை அவர் சென்றடைந்ததையே. அம்பையை படிக்காமல் எந்த ஓர் பெண் எழுத்தாளரும் வந்து விட முடியாது என்கிறளவு அவரது கதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் அளுமை செலுத்தியிருக்கிறது.

அதே போல அம்பையின் மூன்று புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளி 12 வருடங்கள். இது தான் பெண்களின் படைப்புக்கும் ஆண்களின் படைப்புக்குமான மிகப் பெரிய இடைவெளி என்று தோன்றுகிறது. அவர்காலத்து எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை, நாடகம் என்று பல புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அம்பை இதுவரை 3 சிறுகதைத் தொகுதிகள் தான் வெளியிட்டிருக்கிறார்.

இன்று இவரோடும் படைப்போடும் நிறைய முரண்கள் ஏற்பட்டாலும் அம்பையின் இடம் பெண்ணியத்தில் மிகவும் முக்கியமானது. இவரின் படைப்புக்கள் எழுப்புகிற அல்லது தூண்டுகிற சிந்தனைகள் இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கும் ஆளுமை செலுத்தும். அவரை நெருங்கையில் ஏற்படும் முரண், தூரே இருந்து வாசிக்கையில், சிறிது சிறிதாய் என்னை அம்பை என்கிற படைப்பாளியின் படைப்புகளை மட்டுமே பார் என்பது போல இழுத்துச் செல்கிறது.

நன்றி: காகித மலர்கள்: http://malarkal.blogspot.com/2005_02_01_archive.html


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner