தமிழில் கல்வி! -
றதீஸ் -
தமிழில்
கல்விக்கான இவ்விணையம் சிறப்பாக இன்றைய உலக அறிவியல் மற்றும் கலை
தொழில்நுட்பங்கள் சார்பான விடையங்களை தமிழில் வெளிக்கொண்டுவருவதற்கான ஓர் சிறிய
ஆரம்பமாகும். தமிழ் மொழி மூலம் தம் கல்வியினை தொடர்கின்ற, மற்றும் தமிழ்
மொழி மூலம் தம் கல்வியினை கற்பதற்கு ஆவலாய் இருக்கின்ற மாணவர்களை பிரதானமாக
மையப்படுத்தகின்றபோதும் ஆர்வம் உள்ள அனைவரும் தம் துறைசார் தகவல்களை பெறுவதற்கு
வழிசமைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.
இதனை அடிப்படையாகக் கொண்டே இணையத்தின் பெரும்பாலான தலைப்புக்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தலைப்பு தொடர்பாக நீங்கள் ஆர்வம் உடையவர்கள் எனின்
நீங்களும் உங்கள் ஆக்கங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.
தமிழில் கல்வி இணையத்தில் பிரசுரமாகும் ஆக்கங்களின் பெறுமதி, பாதுகாப்பு, மற்றும்
பிரசுர உரிமம் என்பவற்றினை கருத்தில் கொண்டும் தேவையற்றவர்கள் இணையத்தில்
உலாவருவதனையும் தவிர்ப்பதற்காக நீங்கள் பதிவுசெய்த பின்னரே இவ்விணையத்தினை
பூரணமாக உபயோகிக்க முடியும். உண்மையில் தமிழில் கல்வி இணையம் உங்கள் அறிவுத்
தேவைக்கு பயன்படும் என நீங்கள் கருதினால் மாத்திரமே உறுப்பினராக இணைவதற்கு
முயற்சி செய்யுங்கள்.
அல்லாதவிடத்து உங்கள் பதிவுகளை எழுந்தமானமாக மேற்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
அவ்வாறு தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் என நாம் அடையாளம் காணும் உறுப்பினர்
பெயர்கள் உடனடியாகவோ அல்லது காலதாமதமாகவோ தடைசெய்யப்படலாம்.
பதிவுகளின் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி உண்மையானதாகவும் சரியானதாகவும்
இருத்தல் கட்டாயமாகும். மேலதிக விபரங்களை உங்கள் கட்டுரைகள் என்ற பகுதியில்
நீங்கள் காணலாம்.
கல்வியியலாளர்கள் மற்றும் குறிப்பிட்ட துறைசார் பாண்டித்தியம் உடையவர்களே தமிழில்
கல்வி இணையத்தில் பிரசுரமாகும் கட்டுரைகளில் புள்ளிவிபரங்களில் தவறுகள், சொற்
பிழைகள், எழுத்துப்பிழைகள், மற்றும் கருத்து முறன்பாடுகள் இருப்பின் தயவுசெய்து
எமக்கு தெரியப்படுத்தவும். அவை குறிப்பிட்ட கட்டுரைகளின் தரங்களை மேலும் ஒருமுறை
பரிசீலிப்பதற்கு வழிவகுக்கும் அதே வேளை தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளின்
பெறுமதியினை மேம்படுத்தவும் உதவும்.
இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு கட்டுரை ஆசிரியர் (எழுதியவர்) தவிர வேறு
யாரும் உரிமை கோர முடியாது. அத்துடன் இவ்விணையம் தொடர்பில் அனைத்து
விமர்சனங்களும், கருத்துக்களும் இணைய இயக்குணருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இயக்குணரே இவ்விணையத்தின் உருவாக்கம், வடிவமைப்பு, நிர்வகிப்பு போன்றவற்றிற்கு
முற்றான பொறுப்பினையும் கொண்டவர். இது ஓரு தன்னார்வ செயற்றிட்ட படைப்பாகும்.
இந்தப்பகுதியை மிகவும் கவனமாக வாசித்த பின்னரே உங்கள் எந்தவித பதிவுகளையும்
செய்யவும்.
தமிழில்
கல்விக்கான இவ்விணையம் எந்தவித பின்னணி ஆதரவுகளும் இன்றி தனிப்பட்ட ஓர்
முயற்சியின் செயல்வடிவமாகும். இதனை உருவாக்குவதற்கான எண்ணக்கருவூலமும்,
வடிவமைப்பும் இவ்விணையத்தின் இயக்குணருக்கே உரித்தானவை. தமிழில் கல்விக்கான
இவ்விணையத்தினை இயக்குவதற்கான வருடம் ஒன்றிற்கான செலவு ($1211) Rs 133,300 க்கும்
அதிகமாகும். இப்பெறுமதியினை ஈடுசெய்வதற்கான முற்றான பொறுப்பும் இயக்குணரிடமே
உள்ளது. ஆகவே இணைய இயகுணர் இவ்விணையத்தின் மேம்பாட்டிலும் அதன் பாதுகாப்பிலும்
அதிக அக்கறை உடைய முதலாவது உறுப்பினராவார். அந்த அடிப்படையில் இணையத்தில் புதிதாக
இணையவரும் உறுப்பினர்களை இனங்கண்டு இணைப்பதன் மூலம் தேவையற்றவர்கள்
இவ்விணையத்தின் வளங்களை விரையம் செய்வதனை தடுப்பதற்கும், புதிய எழுத்தாளர்களை
வரவேற்கும் அதேவேளை அவர்களின் ஆக்கங்களின் தரங்களை இனங்கண்டு முன்னுரிமை
வழங்குவதற்கும். இயக்குணருக்கு பூரண உரிமை உண்டு. காலக்கிரமத்தில் இணையத்தின்
கட்டுப்பாட்டுவிதிகளை மாற்றியமைப்பதற்கான சுதந்திரமும், இணைய விதிமுறைகளை மீறும்
உறுப்பினர்களை தடைசெய்வதற்கான உரிமையும் இயக்குணருக்கு உண்டு. ஆகவே தமிழில்
கல்விக்கான இவ்விணையத்தின் உறுப்பினராகவோ அல்லது ஓர் எழுத்தாளராகவோ நீங்கள்
இணையும் போது இவ்விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே உங்கள் பதிவினை
பூர்த்திசெய்ய முடியும். எமது இவ்விதிகளில் உடன்பாடு இல்லாதவர்கள் தமிழில் கல்வி
இணையத்தில் பதிவுகளை செய்வது கடினம். ஆகவே எமது இணையத்தின் கட்டுப்பாட்டு விதிகளை
ஏற்று நடக்கும் உறுப்பினர்கள், எழுத்தாளர்களை நாம் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
info@tamilnotes.com
http://www.TamilNotes.com |