இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2006 இதழ் 81 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இணையத்தள அறிமுகம்!
'இலக்கியப் பெட்டகம் : கவிஞர் நீலாவணனுக்கோர் இணையத்தளம்'.

கவிஞர் நீலாவணன்ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவர்களிலொருவர் கவிஞர் நீலாவணன். முக்கியமான கவிஞராக அறியப்பட்ட இவர் கவிதை மட்டுமின்றி சிறுகதை, குறுங்கதை, உருவகக் கதை, சிறுவர் கவிதைகள் மற்றும் நகைச்சுவை உரைநடைச்சித்திரங்கள் ('விருத்தாந்த சித்திரங்களென' கவிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டவை) என இலக்கியத்தின் பல்வேறு கோணங்களிலும் சிறந்து விளங்கியவர். ஏற்கனவே இவரது படைப்புகள் 'வழி', 'ஒத்திகை' என்னும் கவிதைத் தொகுதிகளாகவும், 'வேளாண்மை' என்னும் குறுங்காவியமாகவும், 'நீலாவணன் கவிதை நாடகங்கள்' மற்றும் 'ஒட்டுறவு' என்னும் கதைத் தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. நீலாவணனனின் படைப்புகள், வெளிவந்த நூல்கள், அவரைப் பற்றி வெளிவந்த நூல்கள், இவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் அரிய புகைப்படங்களின் தொகுதி, இவற்றுடன் முக்கியமாக கவிஞரின் 80 கவிதைகள் மற்றும் சிறுவர் கவிதைகளை உள்ளடக்கியதாகத் தற்பொழுது இணையத்தளமொன்று 'இலக்கியப் பெட்டகம்' என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய தகவலைப் பதிவுகளுக்கு அவரது புத்திரர்களிலொருவரான எழில்வேந்தன் தந்திருக்கின்றார். கவிஞர் நீலாவணனைப் பற்றிய அரியபடைப்புகள் மற்றும் தகவல்களுடன் விளங்கும் 'இலக்கியப் பெட்டகத்'தை இம்முறை பதிவுகள் வாசகர்களுக்காக அறிமுகம் செய்து வைக்கின்றோம். இணையத்தள முகவரி:
http://www.neelaavanan.com/ இத்தளத்திலுள்ள சில இணைப்புகள் இயங்கவில்லை. தளப்பராமரிப்பாளர் இவ்விடயத்தில் கவனம் எடுப்பாராக. மேலும் தற்பொழுதுதானே bloggers.com போன்ற வலைப்பதிவுத்தளங்களில் இலகுவாக மிகவும் கூடிய வசதிகளுடன் தளங்களை இலவசமாக உருவாக்க முடியுமே. அத்தகைய வசதிகளைப் பாவித்து கவிஞர் நீலாவணனுக்கோர் வலைப்பூவினை உருவாக்குவதும் நல்லதே.

தகவல்: எழில்வேந்தன்

s.elilventhan@gmail.com
Phone : 0094112526495
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner