இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010  இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

டி.செ.தமிழனின் 'சமகால ஈழத்து இலக்கியம்' பற்றிய கருத்துகள் சில...   - வ.ந.கிரிதரன் -
சமகால ஈழத்து இலக்கியம் என்னும் தலைப்பில் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிகள் பற்றி , மேலோட்டமாக, இயன்றவரை பதிவு செய்தலையே முக்கிய காரணமாகக் கொண்டு வாசிக்கப்பட்ட கட்டுரையென்றாலும் வரவேற்கத்தக்க முயற்சி.சமகால ஈழத்து இலக்கியம் என்னும் தலைப்பில் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிகள் பற்றி , மேலோட்டமாக, இயன்றவரை பதிவு செய்தலையே முக்கிய காரணமாகக் கொண்டு வாசிக்கப்பட்ட கட்டுரையென்றாலும் வரவேற்கத்தக்க முயற்சி. 2000 ஆண்டிற்குப் பிற்பற்ற பிரதிகளினூடு ஆராய முயன்றிருப்பதாக டி.செ.த. கூறினாலும், இவரது ஆய்வில் குறிப்பிடப்பட்ட பிரதிகள் 2000 ஆண்டிற்கும் முற்பட்ட பிரதிகளையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தனது கட்டுரையினை 1983ற்குப் பிற்பட்ட ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்புகளை உள்ளடக்கியதாக டி.செ.த. படைத்திருக்க வேண்டும். அது மிகவும் பயனுள்ளதாக விளங்கியிருக்கும். உண்மையில் ஈழத்து இலக்கியமென்று அனைத்துப் பிரிவினரையும் ஒரு பிரிவுக்குள் கொண்டு வருதல் சரியானதென்று நான் கருதவில்லை. அதே போல் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் தமிழ்ப் படைப்பாளிகளைப் பொதுவாக 'புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியம்' என்னும் பிரிவுக்குள் வகைப்படுத்திப் பொதுமைப்படுத்தலும் சரியானதொன்றல்ல. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தைக் 'கனடாத் தமிழ் இலக்கியம்', 'பிரெஞ்சுத் தமிழ் இலக்கியம்', இங்கிலாந்துத் தமிழ் இலக்கியம்', 'ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியம்'.. என வகைப்படுத்தி ஆராய வேண்டும். இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் போன்றவர்களும் இத்தகைய மனப்போக்கினையே கொண்டிருக்கின்றனர். இச்சமயத்தில் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்ட 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பு நூலினை நினைவு கூர்தலும் பொருத்தமானதே. அத்தொகுப்பு நூலில் அமெரிக்கக் கதைகள், ஆஸ்திரேலிய கதைகள், ஐரோப்பிய கதைகளென கதைகள் வகைப்படுத்தப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்விதமே புலம்பெயர்தமிழ் இலக்கியமும் அணுகப்பட வேண்டும். ஆங்கில் இலக்கியம் அமெரிக்க, கனேடிய, இந்திய, ஆபிரிக்க, ஆஸ்திரேலிய, கரிபிய, ஐக்கிய இராச்சியமென தத்தமது போக்கில் வளர்ச்சியுற்று வந்திருப்பதைப் போலவே புலம்பெயர் தமிழ் இலக்கியமும் கனடா, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரேலிய, நோர்வே, டென்மார்க்.. என வகைப்படுத்தப்பட்டு அணுகப்படவேண்டும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அந்தந்த நாட்டுக்குரிய சமூக, பொருளியல் மற்றும் கலாச்சார இயல்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. அதுவே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். .

சமகால ஈழத்து இலக்கியம் என்னும் தலைப்பில் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிகள் பற்றி , மேலோட்டமாக, இயன்றவரை பதிவு செய்தலையே முக்கிய காரணமாகக் கொண்டு வாசிக்கப்பட்ட கட்டுரையென்றாலும் வரவேற்கத்தக்க முயற்சி.அடுத்தது இன்னுமொரு முக்கியமான விடயத்தை டிசெதமிழன் தவற விட்டுவிட்டார். இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் கணித்தமிழ் முக்கியமானதொரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் தமிழகப் பல்கலைக கழக மட்டங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிவரும் தொகுப்பு மலர்கள் ஆற்றியதை விட மிக அதிக அளவில் பங்காற்றியுள்ள, படைப்புகளை மிகவும் அதிக அளவில் பிரசுரித்துள்ள இணைய இதழ்களின் படைப்புகளை எப்பொழுது வேண்டுமானால் இணையத்தில் தேடி வாசிக்க முடியும். அவற்றில் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகளெனப் பல்வேறு படைப்புகள் வெளிவருகின்றன. வெளிவந்துள்ளன. தீவிர கலை, இலக்கிய ஆர்வலர்களை அதிகமாக்ச் சென்றடையும் வல்லமை மிக்கவை இத்தகைய இணைய இதழ்கள். உண்மையில் இணைய இதழ்களின் படைப்புகளை பல நூற்றுக்கணக்கான தொகுப்பு மலர்களாக வெளியிட முடியும். உலகெங்கும் பரந்து வாழும் வளர்ந்த, வளர்ந்துவரும் படைப்பாளிகளின் பல்வேறு படைப்புகளை இவை பிரசுரித்து வருகின்றன. கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை, விமர்சனங்களை இவை பிரசுரித்து ஆவணப்படுத்தி வருகின்றன. விவாதங்கள் பலவற்றை ஆரம்பத்தில் மிகத் தீவிரமாக நடத்தக் களம் அமைத்துக் கொடுத்தவை இணைய இதழ்களே. டிசெதமிழனின் படைப்புகள் கூட அவரது இணைய வெளியீடுகளின் மற்றும் பல்வேறு இணைய இதழ்களின் வாயிலாகத்தான் பலரையும் சென்றடைந்து, அவரைக் கவனிக்க வைத்தனவென்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக அவரது வலைப்பூக்கள். இது போல் தமிழகத்தில் கலைவாணி இராஜகுமாரன் 'தமிழ்நதி'யாக ஆனந்த விகடன் போன்ற வெகுசன ஊடகங்களில் கவனம் பெறுவதற்கும் அவரது வலைப்பதிவுகளே முக்கிய காரணம். 'திண்ணை', 'பதிவுகள்', 'அப்பால்.தமிழ்', 'புகலி', 'உயிர்நிழல்' , 'கீற்று' , 'வார்ப்பு' என வெளிவரும் இணைய ஊடகங்களில் பல ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்தில் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் மற்றும் புகழ்பெற்ற அச்சு ஊடகங்களின் இணையப் பதிப்புகளென ('காலச்சுவடு' போன்ற) பல இணையத் தளங்கள் தின, வார, மாத மற்றும் காலாண்டிதழ்களென வெளிவந்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கின்றன. நூல்களாக வெளிவரும் படைப்புகள்: மட்டும்தான் வாசிக்கக் கிடைக்கின்றனவென்று ஆய்வுகள் செய்யும் கலாநிதிகளும், எழுத்தாளர்களும் இனியும் சாட்டுகள் கூறித்தங்கள் கடமையினைத் தட்டிக்கழிக்க முடியாது. நூல்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதைவிட, இணையத்தில் கூகுள் தேடுபொறியில் தேடி மிக அதிக அளவில் ஆக்கங்களை வாசிக்க முடியும். 'நூலகம்' போன்ற இணையத் தளங்களில் அரிய பல தமிழ் நூல்களை வாசிக்க முடியும். இத்தகையதொரு சூழலில் 'கணித்தமிழை' ஓரங்கட்டி (பெயருக்கு ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு) வெளிவரும் ஆய்வுகள் பூரணத்துவமானவையல்ல என்பதென் கருத்து. உண்மையில் கணித்தமிழும், அதன் பிரதான ஊடகங்களான இணைய இதழ்கள், வலைப்பதிவுகளெல்லாம் மறக்கப்பட முடியாதவை. வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் வாயிலாக அதிகக் கவனத்தைப் பெற்ற டிசெதமிழ்ன் அவற்றை மறந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது

உதாரணமாகச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் 'பதிவுகளில்' ஈழத்துப் படைப்பாளிகளின் பல சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அருள் சுப்பிரமணியம், சாரங்கா தயாநந்தன், சித்தார்த்த சேகுவேரா, மட்டுவில் ஞானகுமாரன், இளங்கோ, றஞ்சனி, பொ.கருணாகரமூர்த்தி, அ.முத்துலிங்கம், நவஜோதி ஜோகரட்ணம், சந்திரவதனா செல்வகுமாரன், குரு அரவிந்தன், கடல்புத்திரன், கே.எஸ்.சுதாகர், சாந்தினி வரதராஜன், தேவகாந்தன், டானியல் ஜீவா, வ.ந.கிரிதரன், சுமதி ரூபன், நடேசன் எனப் பல படைப்பாளிகளின் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. பல படைப்பாளிகளின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. கே.எஸ்.சிவகுமாரன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றார்கள். இலங்கைத் தமிழ் இலக்கிய வானின் முக்கிய படைப்பாளிகள் பலரின் - குறிப்பாக அறிஞர் அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள் சில - மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. 'திண்ணை' இணைய இதழிலும் பல ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகள் பல வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்தவரையில் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் பதிவுகளில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. பாலமனோகரனின் 'நிலக்கிளி' அப்பால்.தமிழ் இணைய இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மைக்கலின் 'ஏழாவது சொர்க்கம்' , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா (பாகம் இரண்டு) ஆகியன பதிவுகளில் தொடராக வெளிவந்த நாவல்கள். 'அமெரிக்கா' (பாகம் இரண்டு) 'திண்ணை' இணைய இதழிலும் தொடராக வெளிவந்துள்ளதும் கவனிக்க வேண்டியது. இவ்விதமே கவிதைகள், கட்டுரைகளெனப் 'பதிவுகள்' , 'திண்ணை' போன்ற இணைய இதழ்களில் பல ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அடுத்தது மொழிபெயர்ப்பென்பதும் தமிழ் இலக்கியவானிலோரங்கம்தான். என்.கே.மகாலிங்கத்தின் 'சினுவா அசுபே'யின் 'சிதைவுகள்' மொழிபெயர்ப்பும் குறிப்பிடப்பட வேண்டியதொரு முயற்சி. இது தவிர 'நாடகப் பிரதிகள்' பல பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளால் எழுதப்பட்டுள்ளன; நடிக்கப்பட்டுள்ளன. அவை பற்றியும் டி.செ.த கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

சமகால ஈழத்து இலக்கியம் என்னும் தலைப்பில் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிகள் பற்றி , மேலோட்டமாக, இயன்றவரை பதிவு செய்தலையே முக்கிய காரணமாகக் கொண்டு வாசிக்கப்பட்ட கட்டுரையென்றாலும் வரவேற்கத்தக்க முயற்சி.இருந்தாலும் டி.செ.தமிழன்தான் இவ்விதமாக ஈழத்தமிழ் இலக்கியம் பற்றி பரந்த அளவில் ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்புகளை உள்ளடக்கி இவ்விதமானதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். பேராசிரியர்களான கா.சிவத்தம்பியோ, மெளனகுருவோ, சித்திரலேகா மெளனகுருவோ, ஏனைய ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர்களோ அல்லது தமது எண்ணப்பதிவுகளை விமர்சனங்களாகக் கருதி நூல்களாக்கும் தமிழகத்தின் முக்கியமான படைப்பாளிகளோ டி.செ.தமிழனைப்போல் பரந்த அளவில் ஈழத்து இலக்கிய முயற்சிகளை ஆவணப்ப்டுத்தவோ அல்லது மதிப்பீடு செய்யவோ முயலவில்லை. அவர்களெல்லாரும் தமக்குக் கிடைத்த நூல்களை மட்டும் வாசித்துவிட்டுப் பொதுவாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியமென்றோ , ஈழத்துத் தமிழ் இலக்கியமென்றோ கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவற்றை ஆதாரமாகக்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வடிப்போரும் மேலதிகத் தேடல்களேதுமற்று கிளிப்பிள்ளகள் மாதிரி அவற்றை ஒப்புவித்துச் சென்றுவிடுவார்கள். உண்மையில் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது அவர்களது வாழ்வினைக் கொண்டு நடாத்தும் பிரதான தொழிலாக இருப்பதில்லை. எனவே ஆய்வு செய்வதில் அவர்களுக்கேற்படும் பிரச்சினைகள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் முனைவர்கள் பலரைப் பொறுத்தவரையில் அவர்கள் புத்திசீவிகள். புத்தியைச் சீவியத்துக்குப் பாவிப்பவர்கள். ஆய்வுகள் செய்வதற்கு, அவற்றைப் படைப்பதற்குத்தான் அவர்களுக்கு ஊதியமே வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அவர்கள் நினைத்தால் மிக விரிவான அளவில் ஆய்வுகளைச் செய்ய முடியும். அவர்கள பணியாற்றும் பல்கலைக்கழகங்களூடாகவே குறிப்பிட்ட ஆய்வுக்குரிய நூல்களை, ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் இந்த விடயத்தில் அவர்கள் அதிகக் கவன்ம் செலுத்துவார்களென எதிர்பார்ப்போம். இத்தகையதொரு சூழலில் டி.செ.தமிழனின் இவ்விதமானதொரு ஆரம்பக் கட்டுரையினைத் தொடக்கமாகக் கொண்டு விரிவாக மேலும் பல ஆய்வுகள் செய்யப்படுவது மிகவும் அவசியமென்று நான் கருதுகின்றேன். 'காலம்' சஞ்சிகையின் நிகழ்வில் வாசிக்கப்பட்ட இது போன்ற கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பதன் மூலம் 'கால'த்தின் அதன் 'கால'த்திற்குரிய பங்களிப்பின் கனம் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு.

ngiri2704@rogers.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்