பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
அரசியல்! |
பயனுள்ள மீள்பிரசுரம்: தினக்குரல் -02 -
January - 2007!
சதாமின் தூக்குத் தண்டனையும்
உலகின் பிரதிபலிப்பும்!
கடந்த
சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம்
ஹுசெய்னின் சடலம் வட ஈராக்கின் திக்ரித் பிராந்தியத்தில் உள்ள அவரது
சொந்த ஊரான அவ்ஜாவில் ஞாயிறன்று அடக்கம் செய்யப்பட்டது. 2003 ஆம்
ஆண்டு அமெரிக்கத் துருப்புகளினால் கொல்லப்பட்ட மகன்மார் உதய் மற்றும்
குசேயின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திலேயே தந்தையும்
புதைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சதாம்
ஹுசெய்னின் புதைகுழிக்குச் சென்று அஞ்சலிப் பிரார்த்தனை செய்து
வருவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அவரின் புதைகுழி `அரசியல் புனித
யாத்திரைக்கான தலமாக' மாறக்கூடுமென்று ஈராக்கிய ஆட்சியாளர்கள்
அஞ்சவில்லை என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதையும்
காணக்கூடியதாக இருக்கிறது. சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட சம்பவம்
உலகம் பூராவும் மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய அளவுக்கு இஸ்லாமிய
நாடுகள் உட்பட உலக நாடுகளின் அரசாங்கங்கள் வெளிக்காட்டிய
பிரதிபலிப்புகள் கடுமையானவையாக இருக்கவில்லை என்பது பெரும் வேதனையைத்
தருகிறது. ஏறத்தாழ சகல அரசாங்கங்களுமே முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி
மீதான தூக்குத்தண்டனை நிறைவேற்றம் குறித்து போதுமானளவுக்கு கடுமையான
வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி கண்டனத்தைத் தெரிவிக்கத்
தயங்கியிருக்கின்றன. `துரதிர்ஷ்டவசமானது', `ஏமாற்றம் தருகிறது' என்ற
பதங்களே பல அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
காணக்கூடியதாக இருக்கிறது.
சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டமை உண்மையிலேயே முழு உலக நாடுகளுமே
தயக்கமேதுமின்றிக் கடுமையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டிய ஓர்
அரச அட்டூழியமாகும். புராதன மனித நாகரிகத்தின் தொட்டில் என்று
வர்ணிக்கப்படுகின்ற ஈராக்கில் வன்முறைப் போக்கை இது மேலும்
தீவிரப்படுத்தி நாட்டைச் சின்னாபின்னமாக்கப் போகிறது என்பதில்
சந்தேகமில்லை. இந்தத் தூக்குத்தண்டனை மூலமாக, ஈராக்கில் இருந்து
அமெரிக்கத் துருப்புகளை விலக்கிக் கொள்வதற்கான மார்க்கங்களை
நாடுவதற்குப் பதிலாக, போரை மேலும் தீவிரப்படுத்தித் தொடருவதற்கான
`தெளிவான சமிக்ஞையை' அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்
காண்பித்திருக்கிறார். தூக்குத்தண்டனை நிறைவேற்றம் தொடர்பிலான உலகின்
பிரதிபலிப்புகள் குறித்து தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன்
கலந்துரையாடிய புஷ், சதாம் ஹுசெய்னின் மரணத்தை ஜனநாயகத்தை நோக்கிய
ஈராக்கின் பயணத்தில் ஒரு மைல்கல் என்று வர்ணித்திருப்பதன் மூலம்
அரசியல் நோக்குடனான கொடூரப் பழிவாங்கும் செயல்களுக்கு ஜனநாயக
முத்திரை குத்தியிருக்கிறார். முன்னாள் ஈராக் ஜனாதிபதியின் மரணம் அந்
நாட்டைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் முரண்பாடுகளையோ
அல்லது இரத்தக் களரியையோ நிறுத்தப் போவதில்லை என்று கூறுவதற்கும்
அமெரிக்க ஜனாதிபதி தவறவில்லை. இதன் மூலம் ஈராக்கியர்களுக்கு வெள்ளை
மாளிகை காண்பித்திருக்கும் `ஜனநாயகத்துக்கான பாதை' யின் இலட்சணத்தைப்
புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சதாம்
ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட அதேதினத்தன்று தலைநகர் பாக்தாத்தில்
வீதியோரமாக வெடித்த குண்டொன்றுக்குப் பலியான அமெரிக்கப் படைவீரருடன்
சேர்த்து 2003 மார்ச் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஈராக்கில் பலியான
அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை சரியாக 3 ஆயிரத்தை
எட்டியிருந்தது. மேலும், துருப்புகளை அனுப்புவதற்கு அமெரிக்கா
தீர்மானிப்பதாக இருந்தால் கூட, இந்த அபகீர்த்திமிக்க போரிலே
புஷ்ஷுக்கு மேலும் ஏமாற்றத்தைத் தரப்போகின்ற ஆக்கிரமிப்புப்
பயணத்தில் மூவாயிரமாவது அமெரிக்கப் படைவீரரின் மரணம் ஒரு
வித்தியாசமான `மைல்கல்' என்று சொல்ல முடியும். கடந்த இரு வருடங்களில்
2006 டிசம்பர் மாதமே அமெரிக்கப்படைகளைப் பொறுத்தவரை, படுமோசமான
காலப்பகுதியாக அமைந்தது. அந்த மாதம் 111 அமெரிக்கப் படையினர்
ஈராக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். `சதாம் ஹுசெய்ன் அவர்களே,
நீங்கள் இல்லாத உலகம் முன்னரைவிட சிறப்பானதாக இருக்கிறது. நல்லதொரு
தலை முழுகல்' என்று சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட செய்தி
அறிவிக்கப்பட்டதும் கூறிய புஷ், அந்த தூக்குத் தண்டனை
நிறைவேற்றத்தில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற வஞ்சப் பங்களிப்பை
உலகிற்கு பிரகாசமாக தனது வாயாலேயே அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இன்று
உலகிலே அதிகப் பெரும்பான்மையான மக்களினால் வெறுக்கப்படுகின்ற ஓர்
அரசாங்கத் தலைவர் என்றால் அது புஷ்ஷைத் தவிர, வேறு யாருமாக இருக்க
முடியாது. அவ்வாறு மனுக்குலத்தின் பெரும் பகுதியினால்
வெறுக்கப்படுகின்ற - அருவருக்கப்படுகின்ற ஒரு அராஜகவாதி முன்னாள்
ஈராக்கிய ஜனாதிபதியை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த
கொடுங்கோலன் என்று கூறுவதையும் அவருக்கு தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தை நோக்கிய ஈராக்கின் பயணத்தில் ஒரு
மைல்கல் என்று வர்ணித்து மகிழ்வதையும் உலகம் வெறுமனே கைகட்டிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, இத்தகையதொரு நிலைமை மனித
குலத்தின் மனச்சாட்சிக்கு ஒரு மாபெரும் சவாலாகும்.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக சதாம் ஹுசெய்னின் கழுத்தில்
சுருக்குக் கயிறு மாட்டப்படும் காட்சியை குரூரத் தத்ரூபமாக
தொலைக்காட்சிகளில் மனிதகுலம் பார்க்கக்கூடியதாக இருந்த நிலைமையை
என்னவென்று வர்ணிப்பதென்றே எமக்குத் தெரியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடனான சர்வதேச
அனுமதியளிக்கப்படும் சந்தர்ப்பத்தைத் தவிர, வேறு எந்தச்
சந்தர்ப்பத்திலும் சுயாதிபத்தியம் கொண்ட தேசம் ஒன்றுக்கு வேறு எந்த
நாடுமே படைகளை அனுப்ப முடியாது என்பதே சர்வதேச சட்டம். இந்தச்
சர்வதேச சட்டத்தை மீறி, உலகத்தின் அபிப்பிராயங்களையெல்லாம் துச்சமென
மிதித்து 2003 மார்ச்சில் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும்
துருப்புகள் ஈராக்கை ஆக்கிரமித்தன. சதாம் ஹுசெய்ன் பேரழிவு
ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்றும் அவரால் உலக அமைதிக்கு
ஆபத்து என்றும் கூறியே புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயரும்
தங்கள் படைகளை அனுப்பினார்கள். இன்று சுமார் 4 வருட கால
ஆக்கிரமிப்புக்குப் பிறகு அந்த பேரழிவு ஆயுதங்கள் என்று
கூறப்பட்டவற்றில் ஒன்றைத்தானும் அமெரிக்க - பிரிட்டிஷ்
துருப்புகளினால் கண்டு பிடிக்க முடியவில்லை. முழு உலகிற்குமே பொய்
கூறி சுயாதிபத்தியம் கொண்ட நாட்டை ஆக்கிரமித்து இன்றுவரை சுமார் 6
இலட்சம் ஈராக்கியர்கள் பலியாவதற்கு காரணமாயிருக்கும் புஷ்ஷும்
பிளயரும் செய்திருக்கும் கொடுமையை என்னவென்று வர்ணிப்பது? இவர்கள்
இருவரும் செய்திருப்பது மனித குலத்துக்கு எதிரான குற்றமில்லையா?
ஜனாதிபதியாக
இருந்த போது சதாம் ஹுசெய்ன் ஈராக்கிய மக்களைக்
கொடுமைப்படுத்தியிருக்கக் கூடும். தனது அரசு இயந்திரத்தைப்
பயன்படுத்தி மக்களையும் அரசியல் எதிரிகளையும் கொலை செய்திருக்கக்
கூடும். அத்தகைய ஒரு கொடுங்கோன்மை ஆட்சியாளரை தூக்கியெறிவது என்பதும்
தண்டிப்பது என்பதும் ஈராக்கிய மக்களின் உரிமை. அந்த உரிமையை
அமெரிக்காவோ அல்லது அதன் ஜனாதிபதியோ தனதாக்க முடியாது. உலகில்
ஆட்சியதிகாரத்தில் இருந்த அல்லது தற்போது இருக்கின்ற எந்தவொரு
நாட்டினதும் தலைவர் அரசு இயந்திரத்தின் பிரதான அங்கம் என
வர்ணிக்கப்படும் ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளையும்
மக்களையும் கொலை செய்யவில்லை என்றோ, கொடுமைப்படுத்தவில்லை என்றோ
எவராலும் கூறமுடியுமா? அரசியல் அதிகாரம் என்பது அடிப்படையில்
வன்முறைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.
அமெரிக்கப்
படைகளினால் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் வெள்ளை
மாளிகையின் பொம்மைகளாக அதிகாரத்தில் அமர்த்தப்பட்டிருக்கும்
அரசாங்கம்தான் 1982 இல் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்த
சம்பவத்துக்காக சதாம் ஹுசெய்னுக்கு எதிராக மனித குலத்துக்கு எதிரான
குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ் சுமத்தி தூக்கிலிட்டிருக்கிறது.
அமெரிக்க இராணுவத்தினால் இன்று ஈராக்கியர்கள் கொலை
செய்யப்படுகின்றமைக்கு எதிராக யார் மீது `மனித குலத்துக்கு எதிரான
குற்றங்களைப்' புரிந்ததாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது?
http://www.thinakkural.com
|
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|