பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
அறிவியல்! |
'ஜெய்ப்பூர் கால்களின்' பிரம்மா: 'டாக்டர்' சேதி!
- சௌந்தரி (ஆஸ்திரேலியா) -
செயற்கைக்
கால் என்றவுடன் நினைவுக்கு வருவது இந்தியாவில் ராஐஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர்
நகரம்தான். செயற்கைக் கால்களை முதல் முதலாக உருவகப்படுத்தி பல காரணங்களினாலும்
கால்களை இழந்து நடமாட முடியாமல் இருந்தவர்களுக்கு அவற்றை முறையாகப் பொருத்தி
மீண்டும் அவர்களை நடமாட வைத்ததில் முன்;னணியில் நின்றவர்
Dr Pramod Karan Sethi mth;fsi அவர்கள்.
டாக்டர் சேதி என்று அழைக்கப்பட்ட Dr P K Sethi அவர்கள்; ஐனவரி 05 ம் திகதி 2008
அன்று தனது 80 ஆவது வயதில் காலமானார். இறந்தபின்பும் சாதனைகளால் நினைவில்
நிற்பவர்கள் வரிசையில் டாக்டர் சேதியையும் நினைவுகூருவோம்.
டாக்டர் சேதியின் வாழ்நாள் பங்களிப்பு உலகில் பலரது வாழ்;கைக்கு ஊன்றுகோலாக
இருந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையில் கண்ணிவெடி விதைகளினால் கால்களை
இழந்த எமது உறவுகள் எழுந்து நடமாட முக்கிய காரணகர்த்தாவாக டாக்டர் சேதி
இருந்துள்ளார் என்பதை நாம் என்றும் நினைவுகூரவேண்டும்.
டாக்டர் சேதி ஆரம்பகாலத்தில் வடிவமைத்த செயற்கைக் கால்கள் மக்களது அன்றாட பாவனைக்கு
சற்றுச் சிரமமாக இருந்தாலும் பின்பு 1970 ம் ஆண்டுகளில் மிகவும் இலகுவாக பாவனைக்கு
ஏற்றவாறு நிவர்த்தி செய்யப்பட்டு உலகமட்டத்தில் பெரும் பாராட்டுகளையும்
விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன. 1970 ம் ஆண்டிற்குப்பின் செயற்கைக் கால்களைப்
பொருத்தியவர்கள் கடினமான வேலைகளைக்கூட மற்றவர்களது உதவியின்றி செய்யக்கூடியதாக
இருந்தது. உதாரணமாக மரம் ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், போட்டிகளில் கலந்துகொள்ளுதல்
போன்ற கடின வேலைகளைக் கூட அவர்களால் சிரமமின்றி செய்யமுடிந்தது. ஒரு காலை இழந்த
சினிமா நாட்டிய நடிகை மயூரி ஜெய்ப்பூரில் பொருத்;தப்பட்ட செயற்கைக் காலுடன்
திரைப்படத்தில் நடனம் ஆடியதையும் மறந்திருக்கமுடியாது.
ஜெய்ப்பூர் செயற்கைக்கால்கள் உள்நாட்டு வளங்களைக் கொண்டு உருவாக்கப்டுவதால் வசதி
குறைந்;தவர்கள்கூட குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு முறை
பொருத்திய கால்களுடன் குறைந்தது 5 வருடங்களுக்கு பிரச்சனைகள் ஏதுமின்றி
இயங்கக்கூடியதாகவும் இருந்தமை டாக்டர் சேதியின் செயற்கைக் கால்களின் தனித்தன்மை
ஆகும். அதுமட்டுமல்ல போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த அடித்தள
மக்களுக்கு இலவசமாக செயற்கைக் கால்கள் பொருத்தப்படட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மட்டுமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலநாடுகளிலும் டாக்டர் சேதியின்
செயற்கைக்கால்கள் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஈராக்,
கென்யா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் செயற்கைக் கால்களின் பாவனை அதிக அளவில்
இருக்கின்றது.
டாக்டர் சேதி 1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் வரணாசியில் பிறந்தார். இவரது தந்தை
பௌதீகத் துறை பேராசிரியர். சேதி அவர்கள் இந்தியாவில் டாக்டர் படிப்பை முடித்து
லண்டன் மாநகரத்தில் மேற்படிப்பை மேற்கொண்டவர். தொடர்ந்து பேராசிரியராக பணிபுரிந்து
பின்பு Sawai Man Singh Hospital இல் பெரிய பதவியான தலைமைப் பேராசிரியராக
பணிபுரிந்தார் (Head and Professor of Orthopaedic Department). பத்மசிறீ விருது,
விஞ்ஞான சாதனையாளருக்கான கின்னஸ் விருது, சிறந்த சமூகத் தலைமைத்துவத்துக்கான றேமன்
மக்சேசே விருது போன்ற பலவிருதுகளையும் பெற்ற சாதனையாளர் டாக்டர் சேதி அவர்கள்.
தற்கால போர்ச்சூழலில் குறிப்பாக இலங்கையில் செயற்கைக் கால்களின் தேவையும்
பயன்பாடும் அதிகரித்துவரும் இந்த வேளையில் கால்களை இழந்த பலரது வாழக்கைக்கும்
மீண்டும் உயிர்கொடுத்த டாக்டர் சேதி அவர்களை நினைவுகூருவது தேவையானதொன்றாகும்.
அதேவேளை அவரது மறைவால் துயருறும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
சில வெற்றிடங்களை நிரப்புவது சுலபம் ஆனால் ஒரு சாதனையாளன் விட்டுச்சென்ற வெற்றிடம்
நிரந்தரமாகவே இருக்கும். டாக்டர் சேதி அவர்கள் காலத்தின் ஓர் அடையாளம் அவரது
முயற்சியும் வெற்றியும் உலகம் முழுவதும் வாழும் எத்தனையோ உயிர்களின் வாழ்க்கையில்
சாட்சியாக நடமாடுகின்றது என்பது முற்றிலும் உண்மை.
tary22@yahoo.com.au |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|