இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
கனேடியக் கவிதைகள் சில! - மொழிபெயர்ப்பு : வ.ந.கிரிதரன்

கவிதை: கனவுக் குதிரைகள்!
(
Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர்
(Al Hunter)!

தமிழில்: வ.ந.கிரிதரன்!


1

கவிதை: கனவுக் குதிரைகள்!நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.


தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்
தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் -
ஆத்மாக்களின்
பயணத்தில்.
தெற்காகச் செல்லும்
அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை
மூடப்பட்ட நதிப்
பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும்
கிளைவிட்டுச் செல்லும்
பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு
போவது கிடையாது.
நான்கு நாட்களாக
இரவும் பகலுமாகப்
பயணித்து விட்டு
அதிகாலைப் பொழுதில்
உண்பதற்காக
அவை தங்கும்.
கனவுக் குதிரைகள்
முன்னர்
கடந்து சென்ற
இந்த வழியில்,
நினைவுகளின்
ஞாபகங்களின்
பழந்தீயில் அவை
இரவுகளினூடும்
அந்திக் கருக்களினூடும்
தம்மைச் சூடேற்றிக்
கொள்ளும்.
ஐந்தாவது நாட்
காலையில் அவை
கடக்கத் தேவையில்லாத
ஆற்றங்கரையினை
வந்தடையும்.
மீண்டுமொரு வைகறையில்
மீள்பிறப்பிற்காக
ஏனைய கனவுக் குதிரைகள்
கூடும்
தெற்குக் கரையினை
அடையும் வரையில்,
நீரின் மேற்பரப்பினூடாக
வைரங்களைப் போல்
நர்த்தனமிட்டபடி
அவற்றின் குளம்புகளே
அவற்றினை இழுத்துச்
செல்லும்.
ஓ! மகா
ஞாபகசக்தி மிக்கவரே
திரும்பி வாரும்.
திரும்பி வாரும்
எனது கனவுகளின்
வளம் மிக்க
நீல வயல்களிற்குள்...


2

பனித்துளிகள்
ஒட்டிக்
கொண்டிருக்கும்
இனிய புதிய
புற்களிருக்குமிடத்தில்,
உதிக்கும்
சூரியனை நோக்கி
உனது குதிரையினைத்
திருப்பியபடி, அதன்
பிடரி மயிரினை
ஒரு சேரப் பிடித்தபடி,
கனவுகள்
பயிரிடப்படாத
வயலிற்குள்
நோக்கியபடி
நீண்ட, ஆழ்ந்த நட்புமிகு
இதயத்துடன்
அதனை
நீர்
அருந்தவிடு.
அதனைச்
சுவைக்க விடு.
அதன் பின்
அதன் மீது
சவாரி
செய்.

மூலம்: பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்படும் கனேடிய இலக்கியம் ( Canadian Literature காலாண்டிதழ், மாரி 2000, இதழ் இலக்கம்: 167)

எனது விடுதி!

டூக் ரெட்பேர்ட் (Duke RedBird)
தமிழில்: வ.ந.கிரிதரன்


எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி.
தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர்.
வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு.
நேராயிருந்தது என்னைக் காத்த அம்பு.
மூர்க்கமாயிருந்தது நான் உண்ட இறைச்சி.
இனிமையாயிருந்தது மேப்பிள்மரச் சக்கரை.
வலிமையாயிருந்தது என்னைத் தாங்கிய மூலிகை.
உயர்வாயிருந்தது எனது அன்னை பூமி.


அவளது தலைமயிர்!

மூலம்: மெல் டாக் (Mel Dagg)
தமிழில்: வ.ந.கிரிதரன்


அவளது தலைமயிர்
இரு கரிய பின்னல்களாகப்
பின்னப் பட்டிருந்தது
இப்பொழுது.
அத்துடன்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
என்னுடைய
காதலைப் போல்
அவை வளர்ந்து கொண்டேயிருந்தன.
துதித்தலுடன் நான்
பின்னால் நடந்தபடி
நீண்ட கரிய பின்னல்கள்
நகரத்து வீதிகளைத்
தொட்டுவிடாமல்
தூக்கும் வரையில்.

ஆனால் கிராமத்திலோ
அவள்
அவற்றைச் சுயமாகவே
நிலத்தைக் கூட்டும்படி
தொங்க ஓட விட்டவளைப்போல்
இருக்கும்.

அவை எப்பொழுதுமே
தொடுவதற்காக
வளர்ந்திருந்தன.


கரும் பாத மொழி!

மூலம்: மெல்டாக் (Mel Dagg)
தமிழில்: வ.ந.கிரிதரன்


எங்களது மொழி
மிருகங்களினதும்
மரங்களினதும்
உருவங்களில்
எழுதப் பட்டது.
அதனால் தான் உன்னால்
அதனைப் பேச முடியாது.
ஆனால் உனது காதுகளை
நிலத்தில் வைத்துக் கேட்பாயானால்
வௌ¢ளை எருமைகளின்
ஆத்மார்த்த உணர்வுகளை நீ
கேட்கலாம்.
அவற்றின் குளம்புகள்
இப்பொழுதும்
எங்களது புல்வெளிகளினூடாகச்
செல்கின்றன.

-மேற்படி கவிதைகள் வில்லியம்/ஹிறிஸ்டின் மோவாட் (William
, Christine Mowat) ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு, மாக்மில்லன், கனடா
பதிப்பகத்தினால் (
Macmillan of Canada) வெளியிடப்பட்ட Native People in Canadian Literature என்னும் நூலிலிருந்து பெறப்பட்டவை.-

கோடைப் பல்லி!

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)
தமிழில்: வ.ந.கிரிதரன்


வெம்மை
கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு.

இந்தக்
கோடைப் பல்லி

எம்முடலின்
ஒவ்வொரு அங்குலத்தையும்

ஏறக்குறைய காதலுடன்
நக்கும்.


பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல்!

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)
தமிழில்: வ.ந.கிரிதரன்


எனக்கும்
கண்ணிற்குப் புலப்படாத
இந்த தண்ணீ£ரின் 'சளசள'ப்பிற்குமிடையில்
ஆறு அங்குல பனிக்கட்டி இடைவெளி.

நான் இன்னும்
மிகவும் அவதானத்துடன்
குற்றம் சாட்டும்
பயத்துடன் கூடிய
குதிகளுடன்
நடக்கின்றேன்.

ஆறு அங்குலத்திற்கும்
கீழ்
இந்த ஆறும்
என்னைப் போல்
தனது உறைந்துவிட்ட
பெருமைகளை
மீறாமாலிருப்பதில்
இரகசியமெதுவுமில்லை.


முதல்!

மூலம்: மார்கரெட் அவிசன் (Margaret Avision)
தமிழில்: வ.ந.கிரிதரன்


மிகவும் அதிகமான ஆனந்தம்
இந்த முப்பரிமாண,பரிதியற்ற
வட்டத்தை
கடந்தகாலமும்
பச்சாதாபமும்
அதனைச் சுற்றி
எல்லையாக
விரிந்திருக்காவிடின்
அதன் உயர்ச்சியான
உண்மையிலிருந்து
வெளியே
இழுத்து வந்துவிடும்.

கடவுளின்
கணக்கில்
நூறிற்கும் மேலும்
சதவீதமுண்டு.

அவருடைய
புதியபடைப்பு
முழுமையானது.
ஒன்றானது.
ஆரம்பம் மிக்கது.

[மேற்படி மொழிபெயர்ப்புக் கவிதைகள் அனைத்தும் பதிவுகளின் 'கனடாச் சிறப்பிதழில்' (ஜனவரி 2002) வெளிவந்தவை. இங்கு மீள்பிரசுரமாக வெளியாகின்றன.)


ngiri2704@rogers.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner