தமிழ் ஸ்டுடியோ.காம்: நல்லதோர் வீணை செய்து -
திரைக்கதை பயிற்சி! - அருண்
& குணா -
அறிமுகக் கூட்டம்
நல்லதோர் வீணை செய்து - தமிழ் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு
மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை
குறும்படமாக வடித்து, மக்களிடையே கொண்டு செல்வது இந்த திட்டத்தின் மிக
முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலக்கியமும், ஊடகமும் ஒரு
சேர, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வாய்ப்பு அமையும். இதன் பிரதிபலனாக
சிறந்த படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும்
தமிழ் ஸ்டுடியோவின் கிராமத் திரையிடலில் இந்தக் குறும்படங்கள்
திரையிடப்பட்டு மக்களிடையே கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் மூலம்
ஓரளவேனும் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் வாய்ப்பு
கிட்டும்.
இந்த திட்டத்திற்காக மிக தீவிர வாசிப்பு பழக்கம் உள்ள பத்து ஆர்வலர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி ஆறாம்
தேதி அன்று ஒரு அறிமுகம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போக்கு மற்றும்
அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார்
13 மேற்பட்ட ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதன் படி
திரைக்கதை அமைக்க இருவர், ஒளிப்பதிவு பணிக்கு இருவர், இயக்கம்
இருவர், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்க
ஒருவர், இடங்களை தெரிவு செய்ய ஒருவர், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு
பணிகளை செய்ய இருவர் என குழுப் பிரிக்கப்பட்டது. இந்த மாதம் 18 ஆம்
தேதி வெள்ளிக்கிழமை முதல் அவர்களுக்கான பயிற்சி தொடங்கப்படுகிறது.
திரைக்கதை அமைத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட
அனைத்து பிரிவுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த திட்டம்
அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். பயிற்சி
மற்றும் குறும்பட உதவிகள் தமிழ் ஸ்டுடியோ மூலம் அவர்களுக்கு
வழங்கப்படவிருக்கிறது.
நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்களைக் காண:
https://picasaweb.google.com/thamizhstudio/06022011
நல்லதோர் வீணை செய்து திரைக்கதை பயிற்சி
சிறந்த சிறுகதைகளை குறும்படமாக்கும் முயற்சியின் இத்திட்டத்தில்
முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆர்வலர்களுக்கு திரைக்கதை எழுதுவதற்கான
பயற்சி அளிக்கப்படுதிறது.
நாள்: 18-02-2011 முதல் 19-02-2011
இடம்: தமிழ் ஸ்டுடியோவின் கோடம்பாக்கம் அலுவலகம்.
நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை.
ஒவ்வொரு நாளும் இரண்டு பிரிவுகளாக பிரித்து திரைக்கதை எழுதவதற்கான
பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. காலை 10 முதல் 1 வரை ஒரு
பகுதியாகவும், மதியம் 2 முதல் 6 வரை இரண்டாவது பகுதியாகவும்
நடைபெறவிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்களைத் தவிர ஆர்வமுள்ள
நண்பர்கள் முன்பதிவு செய்து விட்டு கலந்துக் கொள்ளலாம்.
பயிற்சி அளிக்க வரும் சிறப்பு பயிற்சியாளர்கள்:
வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு - எழுத்தாளர் அஜயன் பாலா
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.
சீனிவாசன்
சனிக்கிழமை காலை 10 மணிக்கு - திரைப்படக் கல்லூரி பேராசிரியர் ரவிராஜ்
சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்.
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
தமிழ் ஸ்டுடியோ
<thamizhstudio@gmail.com
தமிழ்ஸ்டுடியோ.காம்
நடத்தும் 13வது பௌர்ணமி இரவு - அருண் & குணா (
தமிழ் ஸ்டுடியோ.காம் )
-
18-02-2011 . வெள்ளி, 18-02-2011 இரவு எட்டு மணிக்குத் தொடங்கி
நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.. இடம்: எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி
திரையரங்கம் எதிரில்) தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)
http://thamizhstudio.com/thodarbukku.php
வணக்கம் நண்பர்களே, இது பௌர்ணமி இரவின் இரண்டாமாண்டு தொடக்க விழா..
குறும்படங்களுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை "குறும்பட
வட்டம்" நடத்திய போதும், மாற்று திரைப்படம் சார்ந்த ஒரு நல்ல புரிதலை
ஏற்படுத்த அது போதுமானதாக இல்லை. மேலும், திரைப்படம் என்றாலே இருளின்
பிரம்மிப்பில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஒருவித இறுக்கமான
சூழ்நிலையில்தான் காண நேரிடுகிறது. இதுப் போன்ற நிலைகளை தவிர்த்து
அவரவர் தன் விருப்பபடி, படுத்துக் கொண்டும், சாய்ந்துக் கொண்டும்,
எவ்வித இறுக்கமும் இல்லாமல் இரைச்சல்கள் அடங்கிய ஒரு இரவு நேரத்தில்
உலக அளவிலும், இந்திய அளவிலும் எடுக்கப்பட்ட மிக சிறந்த திரைப்படங்களை
கண்டு நல்ல திரைப் படத்திற்கான புரிதலை உருவாக்கி கொள்ளும் எண்ணத்துடன்
பௌர்ணமி இரவு தொடங்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு மாதமும், தமிழில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த குறும்படமும்,
உலக அளவில் எடுக்கப்பட்ட சிறந்த உலகப் படமும் திரையிட்டு
காண்பிக்கப்பட்டது. சில மாதங்கள் சிறப்பு விருந்தினர்களும்
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தொடர்ந்து
சிறப்பு விருந்தினர்களை அழைப்பதில் இருந்த சிக்கல்களால் பௌர்ணமி இரவு
வாசகர்களே திரைப்படங்களை பார்த்து அதுபற்றி மிக பெரிய அளவில்
கலந்துரையாடும் நிகழ்வாக மாறியது.
இதில் உச்சக்கட்டமாக ஒவ்வொரு மாதமும் "நிலாச்சோறு" என்கிற உணவு
உபசரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மொட்டை மாடியில், இதமான தென்றலின்
இம்சையில், முழு நிலவை ரசித்தவாறே நமக்கு பிடித்த திரைப்படங்களை
பார்த்துக் கொண்டே, மூலிகை செடிகளின் வாசத்தில் உணவருந்தும் சூழ்நிலை
உருவாக்கப்பட்டது. தொடங்கி ஒரு வருடத்திற்குள் பத்திரிகை நண்பர்களும்,
தொலைக்காட்சி நண்பர்களும், ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பு மிக பெரியது.
கத்திரி வெயில், அடைமழை, பேய்க்காத்து, கடுங்குளிர் என எந்த ஒரு சீதோசன
நிலையிலும் திறந்த வெளியில் நடத்தப்படும் இந்த பௌர்ணமி இரவு ஒரு மாதம்
கூட நிறுத்தப்படாமல் 12 மாதங்களும் தொடர்ந்து நடைபெற்று
வந்திருக்கிறது. உங்களின் அதே ஆதரவை எதிர்வரும் மாதங்களிலும் கொடுத்து
இந்த பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்
கொள்கிறோம்.
சென்னையின் மையபகுதியில், மரங்கள் அடர்ந்த ஒரு மொட்டைமாடியில்,
சுற்றிலும் மூலிகை செடிகளின் வாசத்தில், புல்வெளியில் அமர்ந்துக்
கொண்டு, ஒத்த உணர்வுள்ள நண்பர்களுடன் நமக்குப் பிடித்த திரைப்படங்களை
பார்த்து, அது பற்றி விவாதத்தில் கலந்துக் கொண்டு, இந்த நிலாச்சோற்றை
ருசிக்க வாருங்கள். நீங்களில்லாமல் எந்த ஒரு நிகழ்வும் வெற்றி பெற
சாத்தியமில்லை. உங்களை இனிதே எதிர் நோக்குகிறோம்.
இந்த மாதம் திரையிடப்படவிருக்கும் படங்கள்:
இந்த மாதம் தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ராஜாங்கத்தின் முடிவு,
அருள் எழிலன் இயக்கிய இந்தக் குறும்படம் சதத் ஹசன் மாண்டோவின்
சிறுகதையை அப்படியே பிரதிபலித்து எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு, நம்முடன் உரையாட தமிழ் திரையுலகின்
முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வரவிருக்கிறார்.
இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:செவன்
சாமுராய் (அகிரா குரோசோவா)
இத்திரைப்படம் மேலும் தெரிந்துக்
கொள்ள:http://www.imdb.com/title/tt0047478/
(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக்
கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு
செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி
கிடையாது.)
முதலாமாண்டு நிறைவு விழா, இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்த
மாதம் ஒரு குட்டி உணவுத் திருவிழாவே நடக்கவிருக்கிறது. வகை வகையான
உணவினை ருசிக்க, சிறந்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்க வாருங்கள்
நண்பர்களே...
முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236,
9894422268
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
தமிழ் ஸ்டுடியோ
<thamizhstudio@gmail.com |