'திருமறைக்கலாமன்றத்தின் முழுநிலா
இலக்கிய சந்திப்பு -
மட்டுவில் ஞானக்குமாரன்.(கொழும்பிலிருந்து) -

திருமறைக்கலாமன்றம் கொழும்பு கிளையினர் மாதந்தோறும் நடாத்துகின்ற
முழுநிலா இலக்கிய சந்திப்பு 19.01.2011 புதன் அன்று காலை 11 மணிக்கு
திருமறைக்கலாமன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கவிஞர்
மட்டுவில் ஞானகுமாரன் தலமையிலே நடைபெற்ற இன்நிகழ்வுக்கு மன்றத்தின்
தலைவர் பீற்றர் அம்றோஸ் ஆரம்ப உரை நிகழ்த்த தமிழ்தாய்
வாழ்த்துப்பாடலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தினைப்பற்றி கவிஞர் மட்டுவில்
ஞானக்குமாரனின் சிறப்புரையைத் தொடர்ந்து பேராசிரியர் சிவசேகரித்தின்
“முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுப்பின் ஆய்வுரையை கவிஞரும் ஓவியருமான
கனிவுமதி ஆற்ற நி.பி அருளானந்தம் எழுதிய “கடந்து போதல்” கவிதை
தொகுப்பின் மீதான தனது பார்வையை கவிஞர் வினோராஐ; எடுத்துரைக்க அதே
நூலில் வெளியாகிய ஆதாம் ஏவாள் மறுவாசிப்பு மீதான விமர்சனத்தை கவிஞர்
மன்னார் அமுதன் நிகழ்த்தினார். தோடர்ந்து பேராசிரியர் சிவசேகரத்தின்
“முட்கம்பித்தீவு கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதையை பாடலாக்கி
திருமறைக்கலாமன்ற மாணவர்கள் இசைக்க நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே
நிறைவுற்றன. பெருமளவானவர்கள் கலந்து கொண்ட இன்நிகழ்வு மிகவும் சிறப்பாக
இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Gnanakumaran Kumaralingam
<maduvilan@hotmail.com |