இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
'டொராண்டோ': நவம்பர் 13, 2010 'ஜெராட் சினிமா'வில் மீண்டும் 'உறவுகள்'!  - க.நவம் -
உறவுகள் திரைப்படத்தில் ஒரு காட்சிவணக்கம் கலை , இலக்கிய ஆர்வலர்களே, எதிர்வரும் நவம்பர் 13 சனிக்கிழமை பி. ப. 3:30 மணிக்கு 'ஜெரார்ட் சினிமாவி'ல் 'உறவு' திரையிடப்பட இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கனவே பார்த்தவர்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் பார்த்திருப்பீர்கள். இது ஈழத்தவராகிய எம்மவர் தயாரிப்பு. எமது மொழியில் எமது கதையைச் சொல்வது. எமது கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. குறைந்த சாதனங்களையும் மட்டுப்படுத்தப்பட்ட மூலவளங்களையும் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது. எமது கலை ஆர்வத்தை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. தயவுசெய்து தயவுசெய்து எங்களுக்காக ஒருசில மணித்தியாலங்களை ஒதுக்குவீர்களா? உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் வாருவீர்களா? 'உறவு' திரைப் படத்தைப் பார்த்து எங்கள் முயற்சிக்கு ஆதரவு தாருவீர்களா?

உங்களை நாங்கள் ஏமாற்றமாட்டோம் என நீங்கள் நம்பலாம்! எங்களை நீங்கள் ஏமாற்றமாட்டீர்கள் என நாங்கள் நம்பலாமல்லவா?

'எமது இனம், எமது மொழி, எமது கலை - கலாசாரம், எமது பண்பாடு' என்ற எண்ணக் கருத்தில் உணர்வு பூர்வமான பற்றுறுதியும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்ட நீங்கள், இந்த முயற்சிக்கு கைகொடுத்து உதவுவீர்கள் என மனப்பூர்வமாக நம்பலாமல்லவா?

knavam27@hotmail.com

தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்  - ஆதவன் -

நாள்: சனிக்கிழமை (13-11-2010)
இடம் : தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
நேரம்: மாலை 4 முதல் இரவு 8 வரை

தமிழ் ஸ்டுடியோ.காம்வணக்கம் வாசகர்களே, தமிழ் ஸ்டுடியோவில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் பொருட்டு அவர்களின் குறும்படங்களுக்கான விரிவானதொரு சந்தையையும் குறும்படப் படைப்பாளிகளின் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கான ஒரு சங்கத்தையும் தோற்றுவிக்கும் முதல் முயற்சியின் கலந்தாய்வுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (13-11-2010) நவம்பர் 13அன்று கோடம்பாக்கத்தில் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் மிக முக்கியமானதொரு பயனை உங்களுக்கு விளைவிக்கும் என்பது திண்ணம்.

தமிழ் குறும்படங்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல், குறும்படப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்தல், குறும்பட படைப்பாளிகள் ஒன்றிணைந்து குறித்த இடைவெளியில் ஊர் சுற்றுவது, அங்கே குறும்படங்கள் சார்ந்து விவாதிப்பது போன்ற பல திட்டங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

எனவே தமிழகம் முழுவதிலும் இருக்கும் குறும்படப் படைப்பாளிகள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆர்வலர்களுக்கு தங்குமிடம் தமிழ் ஸ்டுடியோவே செய்துக் கொடுக்கும்.

குறும்படத்தை நேசிக்கும் எவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கான உரிமையை, தேவையை அறிந்துக் கொள்ளுங்கள்.
வாருங்கள் சந்திப்போம்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: 9840698236, 9894422268

அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com


தமிழ் இலக்கிய மன்றம் - டென்மார்க்
ஆயிரம் மலர்கள் அமைதியாய் மலரட்டும் ...
சமகால அரசியலும் கருத்தாடலும் தோழர் சண்முகதாசன் அரங்கம்
[தகவல்: யோகன் கண்ணமுத்து ..உள்ளே


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்