பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
மௌனம் சம்மதம் என்ற அர்த்தமில்லை..!
‘சமகால ஈழத்து இலக்கியம்’ என்ற கட்டுரை பற்றிய எனது பதிவு.
- குரு அரவிந்தன் -
பதிவுகள்
இணைய இதழ் எப்பொழுதுமே தவறுகளை ஆக்கபூர்வமாகச் சுட்டிக் காட்டுவதில்
முன் நிற்பதையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன். சரியான தகவல்களைச்
சேகரித்து ஒரு கட்டுரை எழுதுவது என்பது எவ்வளவு கடினமானது என்பது
இலக்கிய ஆர்வலர்கள் எல்லோரும் அறிந்ததே. கடின உழைப்பின் பின்பும் நாம்
தவறுதலாக எதையாவது குறிப்பிடத் தவறியிருப்போம். எனது முதற் கட்டுரையில்
எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆனால் மறுபதிப்பில் அதைத்
திருத்துவதற்கான முயற்சிகளை எடுத்துத் திருத்திக் கொண்டேன். ஏனெனில்
முற்றுப் பெறாத ஒரு கட்டுரை ஆவணமாகப் பதியப்பட்டால், அதிலிருந்து தவறான
தகவல்களை மற்றவர்கள் பின்பற்றக்கூடாது என்பதால் உடனடியாகவே நான் அந்தத்
தவற்றைத் திருத்திக் கொண்டேன். இது ஒரு வரலாற்றுத் தவறாகிவிடக்கூடாது
என்பதால் இதைக் குறிப்பிடுகின்றேன். சரியான தகவல் கொடுக்காவிட்டால்,
பலரின் காழ்ப்புணர்வையும் சம்பாதிக்க வேண்டிவரலாம் என்பதால்தான் பலரும்
இப்படியான கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்கிறார்கள். அதனால்தான்
ஈழத்தமிழர்கள் எதையுமே ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் என்ற குறை
இன்றும் தொடர்கிறது. அந்தவகையில் பல இடங்களிலும் தகவல்களைச் சேகரித்து
துணிந்து எழுதிய டி.செ. தமிழனின் இந்த முயற்சியை மனதாரப்
பாராட்டுகின்றேன்.
தகவல் என்பது நடுநிலையில் நின்று கொடுக்கப்படவேண்டும். ஆய்வுக் கட்டுரை
என்பது பலரை ஒதுக்கிவிட்டு ஒருசிலருக்கு மட்டும் மகுடம் சூட்டுவதாயும்
இருக்கக்கூடாது. தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அங்கே
இடம் கொடுக்கக்கூடாது. நேர்காணலின்போது அப்படிக் குறிப்பிட்டால் அது
உங்கள் சொந்தக் கருத்தாக இருக்கலாம். உங்களுக்கு யாரைப் பிடிக்கும்
யாரைப் பிடிக்காது என்பதெல்லாம் உங்களைப் பொறுத்தது. அதைப்பற்றி யாரும்
குறை கூறப்போவதில்லை. ஆனால் இங்கே சமகால ஈழத்து இலக்கியம் என்ற
தலைப்பில் கட்டுரை வரும்போது. இலக்கிய ஆர்வலர்களின் கவனம் கட்டாயம்
திரும்பவே செய்யும். கட்டுரை முற்றுப்பெறவில்லை என்பதை எல்லோரும்
அறிந்திருக்க நியாயமில்லை. முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க
முயற்சிப்பதாகவோ, துங்குவது போல நடிப்பவரை எழுப்ப நினைப்பதாகவோ, அல்லது
யாரையாவது பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தோடு சிலருக்காகக்
கட்டுரை எழுதியதாகவோ அவர்கள் நினைக்கக்கூடாது. இந்தக் கட்டுரை
எங்கேயிருந்து பெறப்பட்டது என்பது தெரியவில்லை. கட்டுரையின் ஒரு பகுதி
ஏதாவது சில காரணங்களுக்காகச் சுருக்கப்படும் போது எங்கேயோ தவற
விடப்பட்டிருப்பதாகவே நான் நம்புகின்றேன். நிறையவே வாசிக்கும் டி.சே.
தமிழன் நிச்சயமாகப் புலம்பெயர் சமகால படைப்பாளிகளை மறந்திருக்க
முடியாது. இந்த மண்ணிலேயே தினமும் சந்திக்கும் கண்முன்னால் நடமாடும்
படைப்பாளிகள் நிறைய இருக்கிறார்கள். எனவேதான் எங்கேயோ தவறு
நடந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.
பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ‘கணித்தமிழை ஓரங்கட்டி வெளிவரும்
ஆய்வுகள் பூரணத்துவமானவையல்ல என்பதென் கருத்து’ என்று துணிவோடு இந்தத்
தவறைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். முன்பும் ஒரு தடவை வேறு ஒருவரின்
கட்டுரையில் இப்படியான தவறு நடந்தபோது பதிவுகளில் ஊர்க்குருவி அதைச்
சுட்டிக் காட்டியிருந்தார். நல்ல முயற்சி, மௌனம் சம்மதம் என்று
எடுத்துக் கொண்டதால்தான் இப்படியான தவறுகள் தொடர்ந்தும் இடம்
பெறுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. தவறுகள் நடப்பது இயற்கை,
ஆனால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்வதுதான்
மனிதனுக்குரிய சிறந்த பண்பாகும். நண்பர் கிரிதரன் குறிப்பிட்டது போல
ஈழத்து இலக்கியம் என்று அனைத்துப் பிரிவினரையும் ஒரு குடையின்கீழ்
கொண்டு வருவது என்பது கடினமான காரியமாக இருப்பதால், அந்தந்த நாட்டிற்கு
ஏற்ப புலம்பெயர் இலக்கியத்தை வகைப்படுத்துவதே சிறப்பானதாகும். அப்படிச்
செய்யும்போது தவறுகளை இலகுவாகக் குறைத்துக் கொள்ளவோ, அல்லது திருத்திக்
கொள்ளவோ முடியும் என்பது எனது கருத்தாகும்.
kuruaravinthan@hotmail.com |
|
|
|
©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|