இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2007 இதழ் 86 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுவர் புதினம்!
ரினோ!
- கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு) -

அத்தியாயம் 2!

எழுத்தாளர் கனிஷ்காவின் சிறுவர் புதினம்: ரினோ"சரிப்பா…அமைதியின் சின்னமே நீதானே… நாளைக்குப் பார்க்கலாம் உன் சமர்த்தை" என்று சொல்லி ரிஷி ரினோவின் முதுகில் செல்லமாகத்தட்டினான்.

"ம் ..ம் .. இப்ப நான் யார் கண்ணிலும் படாம மறைவா வாழலாம். ஆனால் ஒரு நாள் எனக்கும் நேரம் வரும். அப்பப்பாருங்க எங்கும் ரினோ எதிலும் ரினோ. இந்த ரினோவைக்காண மக்கள் ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கும் காலம் விரைவில் வரும்."

"அப்படியா! சரி… அப்போ நானும் உனக்குப்பெரிய கட்அவுட் வைத்து கற்பூரம் காட்டுறேன். போடா பைத்தியம். பெரிய ஹீரோன்னுநினைப்பு. வயிறு நிறைய கொட்டியாச்சில்ல… வா போய்த் தூங்கலாம்."

"க்கும்… உனக்குப் பொறாமை. அதுதான் நான் எது சொன்னாலும் நக்கலாப் பேசுற.""ஆமாம் இவரு பெரிய பில்கேட்ஸ் பாரு
இவரு மேல எனக்குப்பொறாமை. பேசாம வாடா."இரவு மணி பத்து இருக்கும். பாட்டி நன்றாகத் தூங்கிவிட்டாள்.ர்pஷி தூக்கம் வராமல் சன்னல் வழியே சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிய நகரமாதலால் பத்துமணிக்கு சாலையெல்லாம் வெறிச்சோடிவிட்டது.

நல்ல நிலவொளி. ரிஷிக்கு அந்த இரவு மிகவும் பிடித்திருந்தது. ரசித்துக்கொண்டிருந்த ரிஷியின் பின்பக்கத்தில் ரினோ வாலால்தட்டியது.

"என்னடா நீ இன்னும் தூங்கலியா?" ரிஷி திரும்பிப் பார்த்துக்கேட்டான்.

"தூக்கம் வரல ரிஷி. அங்க பாரு அந்த ரோட்ல யாருமே இல்லை.நாம அங்க போய் கிரிக்கெட் விளையாடலாமா?"

"இந்த நேரத்திலா ஏய்.. போலீஸ் யாராவது ரவுண்டஸ் வந்தா நான்மாட்டிக்குவேன். நீ பாட்டுக்கு பறந்து வந்துருவே வேண்டாம்பா உன்னை நம்பி நான் வரலை."

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. வா…. பாட்டியும் தூங்கிட்டாங்க"ரிஷிக்கும் ராத்திரி வேளையில் வெறிச்சோடிய சாலையில் விளையாடஆசைதான். அதனால் மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டுசத்தம் வராமல் கதவை மெதுவாக திறந்து ரினோவுடன் புறப்பட்டான்.ரினோ பந்தை பறந்து பறந்து போட ரிஷி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினான்.

இருவருக்கும் ஒரே குஷி. ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்ததில் அங்கு போலீஸ்காரர் ஒருவர் வருவதைக் கவனிக்கவில்லை.

"டேய்… யார்டா அது? இந்த நேரத்தில் நடுரோட்டில. கையிலமட்டைவேற வைச்சிருக்கிற. யார்கூட விளையாடுற?"

போலீஸ்காரர் ரிஷியைப் பார்த்து அதட்டினார்.

"சார் விளையாடல. சும்மா வாக்கிங். மட்டை ஒரு பாதுகாப்புக்காக" என்று பயப்படுபவன்போல் நடித்தான் ரிஷி. "என்னது அர்த்த ராத்திரியில வாக்கிங்கா! உங்க வீடு எங்க இருக்கு காட்டு. வா என்னோட உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் சரிவருவே"

"அதோ…அந்த ஏழாம் நம்பர் வீடுதான் எங்க வீடு." என்று மாஷாடீச்சரின் வீட்டை கை நீட்டிக் காட்டிக்கொண்டிருக்கும்
பொழுது ரினோஒரு மரத்தின் மேலிருந்து பந்தை போலீஸ்காரரின் தலையில் எறிந்தது.

"ஐயோ! அம்மா! யாரது தலையில் பந்தை எறிந்தது? ஆ…. ஆ...வலிக்குதே" என்று கத்திக்கொண்டே பந்தை எடுக்க கீழே குனிந்தார்.அதற்குள் ரிஷி பந்தை எடுத்துக்கொண்டு "சார் பேய்…" என்று கத்திக்கொண்டே ஓடிவிட்டான்.

"டேய்... என் மேலே பந்தை எறிஞ்சி காயப்படுத்திட்டு ஓடுறியா. இருஉங்க் வீட்டுக்கே வர்றேன். உன்னைச் சும்மா விடமாட்டேன்." என்றுசொல்லிக்கொண்டே ஏழாம் நம்பர் வீட்டைநோக்கி நடந்தார்.டிரிங்….டிரிங்….காலிங் பெல்லை பலமுறை அழுத்தியும் பதில் இல்லாததால் கதவைத்தட்டுவதற்காக கையை கதவில் அழுத்தமாக வைத்தார்.

அதேநேரம் உள்ளுக்குள் கதவு திறக்கப்பட்டதால் பொத்தென்றுவீட்டுக்குள் குப்புறவிழுந்தார்.கதவைத்திறந்த மாஷா டீச்சர் 'ஆ….' என்று அலறிவிட்டார்.கீழே விழுந்து எழுந்த போலீஸ்காரர் டீச்சர் அலறிய அலறலில் எதுவும்பேச முடியாமல் நின்றார்."நீ யார் மேன்? இந்த நேரத்தில் இங்கு எதுக்கு வந்தே. யூனிஃபார்ம்வேற போட்டிருக்க. வாட்ச்மேனா? போலீஸுக்கு போன் பண்ணிடுவேன்.வெளியே போ." என்று டீச்சர் அவரை விரட்டினாள்.

"சாரி மேடம். நானும் போலீஸ்தான். உங்க பையன் அங்க ரோட்டில….."என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்பு" வாட்……நான்சென்ஸ் என்ன உளர்ற? என் பையனா? வெளியிலபோர்டை பார்த்தியா மேன். போய்ப்பார்" என்று மாஷா டீச்சர் சொன்னதும்வெளியில் போய் போர்டைப் பார்த்தார்.

அதில் 'மிஸ் மாஷா' என்று எழுதியிருந்தது. 'ச்சே.. பொடியன் ஏமாத்திட்டானே' என்று மனதில் நினைத்துக் கொண்டு டீச்சரிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று வீட்டிற்குள்நுழையப்போக அதே நேரம் கதவு படாரென்று சாத்தப்படுகிறது."ஐயோ என் மூக்கு உடைந்கதே.. கடவுளே … இன்று யார் முகத்தில் முழித்தேனோ அடிமேல் அடியாய் விழுகிறதே. எல்லாத்துக்கும்காரணம் அந்த பையன்தான். அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்…ஆ….வலிக்கிறதே" என்று புலம்பிக்கொண்டே திரும்பி நடந்தார்.

அவரிடமிருந்து தப்பி ஓடிய ரிஷியும் ரினோவும் வீட்டிற்கு வந்தனர்.தற்செயலாக தூக்கத்திலிருந்து விழித்த பாட்டி வாசல்கதவு திறந்திருப்பதைப் பார்த்து 'கதவை மூடிவிட்டுத்தானே படுத்தேன். யார் திறந்தது?ஒரு வேளை மூடமறந்து விட்டேனோ? ம்….. வயசாக வயசாக மறதி அதிகமாயிட்டே போகுது.' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே எழுந்துகதவை மூடப்போனாள். அப்பொழுது ரினோ வேகமாக உள்ளே நுழைந்தது.

அதைப்பார்த்தபாட்டி "டேய்! இந்த நேரத்தில் எங்கேடா போயிட்டு வர்றே? தினமும் எங்கேயோ ஊர் சுற்றிட்டு வர்ற . ராத்திரி நேரத்திலேயாவது பேசாம தூங்கினா என்னடா." என்று ரினோவிடம் கோபப்பட்டாள்.

அதற்கு ரினோ "இல்ல பாட்டி வெளியில ஏதோ சத்தம் கேட்டமாதிரி இருந்திச்சு. அதுதான் உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு நானே என்னுன்னு போய் பார்க்கப்போனேன்." என்று பதில் சொல்லியது.சரி சரி போ. போய் சத்தம் போடாம தூங்கு. ரிஷியோட தூக்கத்தைகலைச்சிடாதே. அவனைப்பாரு எவ்வளவு நல்ல பையனா நடந்துக்கிறான். நீயும் இருக்கியே. போ….போ….போய்த்தூங்கு" என்று சொல்லிக் கொண்டே கதவை மூடப்போனாள்.

"பாட்டி ரிஷி…." ஏதோ சொல்ல வந்த ரினோவை பாட்டி கண்டுகொள்ளவில்லை. போய் படுத்துக்கொண்டாள்.பாட்டியின் சத்தத்தைக் கேட்டதும் ரிஷி வெளியிலேயே நின்றுகொண்டான். கதவை வேறு பூட்டி விட்டாள். ரிஷிக்கு என்ன செய்வதுஎன்று தெரியவில்லை.சிறிது நேரம் வெளியிலேயே நின்றான். ரினோவாவது கதவை திறக்கும் என்று நினைத்தான்.

ஆனால் அதுவும் திறக்கவில்லை. வீட்டின்பின்பக்கமாக நடந்து அங்கு திறந்திருந்த சன்னல் வழியே உள்ளே பார்த்தான். அங்கே நின்றிருந்த ரினோவிடம் " டேய் தடியா! நீ மட்டும்உள்ளே வந்துட்டே. கதவைத் திறடா…." என்றான்."நீதான் சமத்துப் பையனாச்சே. அமைதியா உள்ளே தூங்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு உன்னைப்பற்றி தெரியட்டும். அவங்களையே கூப்பிட்டு திறக்கச்சொல். எனக்கு தூக்கம் வருது.குட்நைட்." என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட்டது.

ரிஷிக்கு ஆத்திரமாக வந்தது. "டேய் ஒத்தைக்கொம்பா! உனக்குதூக்கமா வருது!. இரு இரு உன்னை எப்படி வெளியே வரவழைக்கிறேன் பாருடா தடியா.

"தூங்குவது போல் பாசாங்குடன் படுத்திருந்த ரினோவுக்கு திடீரென்று 'ஆ…ஐயோ அம்மா…' என்று ரிஷி அலறும் சத்தம் கேட்டது.

பதறி எழுந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தது. அங்கே ரிஷியைக் காணவில்லை. ஆனால் அவன் முனங்கும் சத்தம் மட்டும் கேட்டது.

'ரிஷி! ரிஷி!' என்று அழைத்துப் பார்த்தது. ஆனால் ரிஷியிடமிருந்து பதிலில்லை. மிகவும் பயந்து விட்ட ரினோ அறையிலிருந்து வெளியேவந்தது. பாட்டி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஓசையின்றிகதவைத் திறந்து வெளியே சென்று ரிஷியைத்தேடி ஓடியது. ஓரிடத்தில்ரிஷி தரையில் உட்கார்ந்து காலைப்பிடித்துக்கொண்டு'ஆ .. அம்மா… வலிக்கிறதே' என்று வேதனையால் துடித்துக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் ஓடிச்சென்ற ரினோ அவன் காலைத்தொட்டுப் பார்த்து " ரிஷி! காலில் என்ன ஆச்சு?"என்று மிகவும் ருத்தத்துடன்கேட்டது.
ரிஷி நிமிர்ந்து ரினோவைப் பார்த்தான். சடாரென்று ரினோவை தள்ளிவிட்டு எழுந்து வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்து கதவை மூடிவிட்டு உள்ளே போய் படுத்து விட்டான். ரிஷிக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதும் ரினோவுக்கு மனதில் பெரியநிம்மதி. சிரித்துக்கொண்டே எழுந்து வந்தது. பூட்டியிருந்த கதவைத்தடடியது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பாட்டி தூக்கம் கலைந்தாள்.

"யாரது இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது?" கேட்டுக்கொண்டேகதவை நோக்கி நடந்தாள். " பாட்டி நான்தான் ரினோ கதவை திறங்க"

'ரினோவா! இப்பத்தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உள்ளேவந்தான் திரும்பவும் எப்படி வெளியே போனான்? கதவு வேறு பூட்டியிருக்குதே' என்று சந்தேகத்தோடு ரிஷியின் அறைக்குச் சென்றாள்.அங்கே ரிஷி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான்.கோபத்தோடு வந்து கதவைத்திறந்தாள்.

அங்கு நின்றிருந்த ரினோவைப்பார்த்து "உன் மனசுல என்னதாண்டா நினைச்சிட்டு இருக்கே. இப்படித் தூங்க விடாம தொந்தரவு பண்ணுறே. எப்படித் திரும்பவும்வெளியே போனியோ அப்படியே உள்ளே வா?" என்று கோபத்தோடுசொல்லிவிட்டு கதவைப் படாரென்று சாத்தினாள். ரிஷி அனைத்தையும் கவனித்து சிரித்துக் கொண்டே படுத்திருந்தான். அப்பொழுது "ரிஷி" என்று அழைத்தவாறு ரினோ நின்றிருந்தது.

'கதவு பூட்டியிருக்கே…. இவன் எப்படி உள்ளே வந்தான்?' என்று ரினோவை சந்தேகத்தோடு பார்த்தான் ரிஷி."என்ன கண்ணா எப்படி வந்தேன்னு பார்க்கிறியா? கற்கோட்டைக்குள்ளும் கல்பாவின் ரினோ நுழைந்து விடுவான்." என்ற ரினோவிடம்"ரினோ 'கல்பா'ன்னா என்ன? யார் அந்த வத்ஸாசர்?" என்று கேட்டான் ரிஷி.

"ரிஷி! அதை தெரிந்து கொள்ளும் முன்பு நான் ஒரு விஷயம்சொல்றேன் கேள். இந்த பிறந்த நாளைக்குப் பாட்டிக்கிட்ட நீ என்ன கேட்கப்போற?"

"இந்த நேரத்தில இது ரொம்ப முக்கியம். முதல்ல உன்னை வெட்டிபிரியாணி போடச்சொல்லணும்."

"அதெல்லாம் நல்லாயிருக்காது. முதல்ல நான் கேட்டதுக்குப்பதில் சொல்.""அதெல்லாம் காலையில பார்த்துக்கலாம்"

" இல்ல ரிஷி இப்பவே சொல்லியாகணும். அந்த பூட்டியிருக்கிறபெரிய அறைக்குள்ள என்ன இருக்குன்னு தெரியுமா உனக்கு?""தெரியாது."

"அங்கே ஒரு பறக்கும் தட்டு அதுதான் 'கல்பாவின் ரோடாஸ்'இருக்கு. அது உனக்கு மட்டுமே சொந்தமானது. அதை உன்னுடைய பிறந்தகாள் பரிசா தரணும்னு பாட்டிக்கிட்ட கேள்."

"பறக்கும் தட்டா?" பாட்டி இதுவரை என்கிட்ட அதைப்பற்றி நல்லா இருக்கு."என்றான்.உடனே ரினோ "பாட்டி! எனக்கு புதுடிரெஸ் கிடையாதா?" என்றுகேட்டது.

"உனக்கு டிரெஸ்ஸா? பாட்டி! இவனுக்கு ஓரு கோணிப்பபையைபோர்த்தி விடு பொருத்தமாக இருக்கும்." என்று ரிஷி ரினோவை கிண்டலடித்தான்.

அப்பொழுது ரிஷியின் பிரண்ட்ஸ் வரும் சத்தம் கேட்டது. ரினோகுடுகுடுவென்று மாடிக்கு ஓடிவிட்டது.

"ஹாய் ரிஷி! ஹாப்பி பர்த்டே" சொல்லிக்கொண்டே உள்ளேநுழைந்தனர்."வாவ்! டெக்கரேஷன் சூப்பர். யார் செய்தது?" என்று வீட்டுஅலங்காரத்தைப் பார்த்துக் கேட்டனர்.

"வேற யாரு. எல்லாம் நான்தான்" என்று பெருமையாக ரிஷி சொல்லிக்கொண்டான். இதை உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரினோ'அடப்பாவி இப்படி மூட்டை மூட்டையா பொய் சொல்றானே! அவங்களெல்லாம் போகட்டும் வச்சிக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டது.

ரிஷி மெழுகுவர்த்தியை ஊதியணைத்து கேக் வெட்டினான். எல்லோரும் கைதட்டி "ஹாப்பி பர்த்டே" பாட்டு பாடினார்கள். ஒரு குரல்மட்டும் கரகரவென்று வித்தியாசமாகப் பாடுவது கேட்டது.உடனே அனைவரும் பாடுவதை நிறுத்திவிட்டு "அது யார்?"என்று கேட்டனர்.

"அது சி டி யில் பாடுது. நான்தான் செட் பண்ணி வச்சிருந்தேன்." ரிஷி அவர்களை சமாளித்தான். அப்பொழுது பாட்டி " இந்தாங்கமுதலில் எல்லோரும் கேக் பால்பாயசம் சாப்பிடுங்க " என்று அவர்களதுகவனத்தைத் திருப்பினாள்."பாட்டி பால்பாயசம் ரொம்ப நல்லா இருக்கு" என்று அனைவரும்பாராட்டினர். பால்பாயசம் என்றதும் ரினோவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

"இந்த வாண்டுங்க எப்ப போக நான் எப்ப கேக்கும் பால்பாயசமும்சாப்பிட? இன்று அரைநாள் பட்டினிதான் சே.." என்று வாலைஉதறியது. அது கதவில் பட்டு படீர் என்று சத்தம் வந்தது.எல்லோரும்சத்தம் வந்த திசையை நோக்கினர்.

'தடிப்பய…அமைதியா இருக்கானா…'என்று மனதிற்குள் ரினோவைதிட்டிக்கொண்டு

"அது ஒன்றும் இல்லை. பக்கத்து வீட்டு பூனைக் குட்டிதான்சன்னல் வழியே வந்திருக்கும். இந்தாங்க எல்லோரும் சாக்கலேட்
எடுத்துக்குங்க." என்று நண்பர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி சமாளித்தான்.

சிறிது நேரத்தில் அனைவரும் புறப்பட்டனர். அவர்களை வாசல்வரை சென்று அனுப்பிவிட்டு உள்ளே வந்தான் ரிஷி. ரினோ சாப்பிட்டுக்கொண்டிருந்தது. ரிஷிக்கு ரினோவைப் பார்த்ததும்கோபம் வந்தது.

"டேய்! இன்று ஒருநாளாவது அமைதியாய் இருந்தாஎன்னடா… அவங்கள சமாளிக்கும் முன்பு எவ்வளவு கஷ்டமாயிடுச்சு
தெரியுமா? ஏண்டா இப்படி முட்டாள் தனமா நடந்துக்கிறே?" என்றுரினோவைத் திட்டினான்.

"நல்ல நாளில் கோபப்படாதே பிரதர். பாட்டி செய்த கேக்கும் பால்பாயசமும் ரொம்ப டேஸ்டா இருக்கு. வா வந்து முதலில் சாப்பிடு" என்றுசொல்லிவிட்டு பாட்டியைத் தேடியது. பாட்டி சமையலறையில் எதையோஎடுத்துக்கொண்டிருந்தாள்.

மெதுவாக ரிஷியின் பக்கம் திரும்பிய ரினோ "ரிஷி நான் சொன்னது ஞாபகம் இருக்கா? அந்த பறக்கும் தட்டு பாட்டிக்கிட்ட கேள்" என்று மெல்லிய குரலில் சொன்னது.

அப்பொழுது பாட்டி வந்து "ரிஷி உட்கார் சாப்பிடலாம்" என்றாள்ரிஷி "பாட்டி" என்று மெதுவாக அழைத்தான்.

"என்ன ரிஷி""பாட்டி என்னோட பிறந்தநாள் பரிசாக நீ என்ன தரப்போற?""உனக்கு என்ன வேணும் கேள்""பாட்டி… அந்த பூட்டியிருக்கிற பெரிய ரூம்ல என்ன இருக்கு?""அங்கே பழைய சாமான்கள்தான் இருக்கு. வேறு ஒன்றுமில்லையேஏன் கேட்கிறே?" என்று சொல்லிவிட்டு பாட்டி ரினோவைப் பார்த்தாள்.ரினோதான் ரிஷியிடம் ஏதாவது சொல்லியிருக்குமோ என்று சந்தேகப்பட்டாள்.ரினோ எதையுமே கவனிக்காதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தது."பாட்டி! அந்த ரூமை திறந்து பார்க்கலாமா?""இப்ப என்ன அவசரம்? அதை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.முதலில் நீ சாப்பிட வா."

"இல்லை பாட்டி முதலில் அதை பார்த்துட்டு அப்புறம் சாப்பிடலாம்."பாட்டிக்கு தர்மசங்கடமாக இருந்தது. ரிஷிக்கு என்ன பதில் சொல்லிசமாளிப்பது என்று தெரியவில்லை. ரினோவிடம்" ரினோ! நீ ஏதாவது ரிஷியிடம் சொன்னாயா?" என்று கேட்டாள்.

"ஐய்யோ! எனக்கு ஒன்றுமே தெரியாது." என்று ரினோ கூறியது.

"பாட்டி! அந்த ரூம் சாவியைக் கொடுங்க நானே திறக்கிறேன்."என்றான் ரிஷி.

"இப்ப அந்த சாவியை நான் எங்கேபோய் தேடுறது? அது எங்காவது இருக்கும். நாளைக்குப் பார்க்கலாம்."

"எனக்குத்தெரியும் சாவி எங்கேயிருக்குன்னு. நானே எடுத்திட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு ரினோ உள்ளே ஓடியது. பாட்டிக்கு ரினோமேல் கோபமாக வந்தது. ஏதும் நடந்து விடுமோஎன்று பயந்தாள்.ரினோ சாவியை எடுத்துக்கொண்டு வந்து ரிஷியிடம் கொடுத்து"ரிஷி! வா போய்த்திறக்கலாம்." என்றது.

சாவியை வாங்கிக்கொண்டு பூட்டியிருந்த அறையை நோக்கிநடந்தான்."ரிஷி! நான் சொல்வதைக்கேள். வேண்டாம் அந்த அறையைத்திறக்காதே. அங்கு ஒன்றுமில்லை. இந்த ரினோவின் பேச்சை நம்பாதே.உனக்கு பிறந்த நாள் பரிசுதானே வேணும்.
என்ன வேணும் கேள் வாங்கித்தர்றேன்." பாட்டி ரிஷியைத் தடுத்தாள்.

"எனக்கு பிறந்த நாள் பரிசா அந்த அறையில் பூட்டி வச்சிருக்கிறபறக்கும் தட்டுதான் வேணும்.""பறக்கும் தட்டா!

அதெல்லாம் சும்மா கதையிலதான் வரும்.அப்படிஎதுவும் இங்கே இல்லை."ர்pஷி பாட்டி சொல்வதை ஏற்கவில்லை.
அறையைத்திறந்து உள்ளேநுழைந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

'ஆகா இப்படி ஒரு அழகான வாகனமா! இதுதான் பறக்கும் தட்டா?டிவியில்கூட இதுமாதிரி இதுவரைப் பார்த்ததில்லையே' என்று சொல்லிக்கொண்டே அந்த வாகனத்தைச் சுற்றி சுற்றி வந்தான். அதில் 'கல்பாவின் ரோடாஸ்' என்று எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டுஇ"டேய் ரினோ! இதிலும் கல்பான்னு எழுதியிருக்கே. அப்படின்னா என்னடா?" என்று கேட்டுக் கொண்டே 'பளிச்' என்று எழுதியிருந்த எழுத்துக்களைத் தடவிப்பார்த்தான்.அப்பொழுது அவன் உடம்பில் சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ந்தான்.

சற்று நிலை தடுமாறினான். அவன் நிலை கண்டுபாட்டி பயந்து விட்டாள். சிறிது நேரத்தில் நிதானமான ரிஷி தன்உடம்பில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தான். தன்னிடம் புது சக்திபிறந்தது போல் இருந்தது அவனுக்கு. ஆனால் அதை வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை.

"ரிஷி! வெளியே வா .இது உனக்கு வேண்டாம்." பாட்டி ரிஷியைக்கெஞ்சினாள். ஆனால் ரிஷிக்கு பாட்டியின் வார்த்தைகள் காதில் விழவில்லை. ரோடாஸின் வெளிப்புறமாக இருந்த பட்டனை அழுத்தினான்.உடனே அதன் மேற்புறமுள்ள கண்ணாடி போன்ற மூடி திறந்தது.அதில்அமர்ந்து ஓட்டிப்பார்க்க எண்ணி அதில் ஏறி உட்காரப் போன ரிஷியைரினோ தடுத்து" ரிஷி! இன்னும் சிலநாள் பொறுமையாக இரு. இதை இப்பொழுதுவெளியில் எடுக்க வேண்டாம். அதற்கு நேரம் வரும்." என்றது.

சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் ரிஷியும் 'சரி' என்று சொல்லிவிட்டு அந்த அறையைப்பூட்டி விட்டுவெளியே வந்தான். பாட்டிக்கு இப்பொழுதுதான் சிறிது நிம்மதி வந்தது.

ஒரு நாள் மூவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுதுடிவியில் 'நூற்றி ஐம்பது குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த தொழிலதிபர் போலீஸில்சரணடைந்தார். அவரைச் சரணடையச் செய்த 'சக்தி' எது? இதோஅவரே கூறுகிறார்.' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து அந்த தொழிலதிபரின் பேட்டி ஒளிபரப்பாகியது.

அதில் அவர்" எனது பெயர் ராகேஷ். ஒரு நாள் நான் எனது கூட்டாளிகளுடன்பேசிக்கொண்டிருக்கும் பொழுது எனது ஆள் ஒருவன் ஓடிவந்து

என்னிடம் வேலை பார்த்த நூற்றி ஐம்பது சிறுவர்களையும் யாரோ விடுவித்துவிட்டதாகச் சொன்னான்.அதைக் கேட்ட எனக்கு மிகவும் கோபம் வந்தது. 'என்னைஎதிர்த்து யாரவன் இந்தச் செயலைச் செய்தது' என்று கத்தினேன்.அப்பொழுது 'நான்தான்' என்று சொல்லிக் கொண்டே ஒரு வினோதஉருவம் என் முன் மாயாவி போல் திடீரென்று வந்து நின்றது.அதைப் பார்த்த எனது கூட்டாளிகளுள் ஒருவன் உடனே துப்பாக்கியை எடுத்து அதைச் சுடப்போனான்.

ஆனால் அதற்குள் அந்தஉருவம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்து ஒருமலை உச்சிக்குச்சென்றுவிட்டது. அங்கே என்னிடம்'உன்னை இங்கிருந்து கீழே போட்டால் நொறுங்கிவிடுவாய்.ஆனால் நீ திருந்துவதற்காக நான் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்.
அதனால் நீயும் உனது கூட்டாளிகளும் உடனே போலீஸில் சென்று சரணடைந்து செய்த அனைத்து தவறுகளையும் ஒத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் உங்களை மட்டுமல்ல யார் எங்கு என்னதவறு செய்தாலும் அங்கு உடனே வந்து அவர்களைத் தண்டிப்பான்இந்த ரினோ' என்று சொல்லிவிட்டு என்னைப் போலீஸ் ஸ்டேஷன்அருகில் விட்டுவிட்டு மறைந்து விட்டது.

'ராகேஷின் பேட்டி முடிந்தவுடன் டிவியில் 'ராகேஷ் மட்டுமல்லஇன்னும் பல சட்டவிரோத செயல்களைச் செய்தவர்களும் போலீஸில்சரணடைந்துள்ளனர்.

அனைவருமே ரினோ சொன்னதனால் தான் வந்ததாகக் கூறுகிறார்கள். யார் இந்த ரினோ? எங்கிருந்து வந்தது? எதுவுமே தெரியவில்லை. ஆனால் இந்த ரினோ வருகையால் குற்றங்கள்குறைந்துள்ளன.டிவி செய்தியைக் கேட்டதும் ரிஷியும் பாட்டியும் ரினோவிடம்"ஏய் இதென்ன புதுக்காரியம் பண்ணுறே. இப்ப எல்லாரும் 'இந்த ரினோயாரு? அது எங்கேயிருக்கு' என்று தேட ஆரம்பிச்சுடுவாங்க. ஏண்டாபேசாம இருக்காமே சமுதாயத்தை திருத்தப் போறதா நினைப்பாஉனக்கு" என்றனர்.

ரினோ அவர்கள் பேசுவதைப் பொருட்படுத்தாமல் "ரிஷி! அந்தகாசியும் ஜானும்கூட போலீஸில் மாட்டிக்கிட்டாங்க தெரியுமா?" என்றது.இப்படி பல குற்றவாளிகளை சரணடைய வைத்த ரினோ நாடுமுழுவதும் பிரபலமாகியது.

ஆனால் யாருக்கும் ரினோவைப் பற்றிஎதுவும் தெரியவில்லை. அனைவரும் ரினோவை ஒரு மாயாவி என்றே நினைத்தனர்.சமூகவிரோதமான காரியங்களோஇ அல்லது மக்களைப் பாதிக்கும்விஷயங்களோ எங்காவது நடந்தால் அடுத்த நிமிடம் ரினோ அந்த இடத்தில் இருக்கும். அதனால் ரினோவிடம் உள்ள பயத்தால் பலரும் தவறுகள் செய்ய அஞ்சினார்கள்.ஒரு நாள் ரிஷி காய்கறி வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்றான். வழியில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ரிஷி 'சிறிது நேரம் அவர்கள் விளையாடுவதை ரசித்துவிட்டுப்போகலாம் என்று எண்ணி அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீதுசாய்ந்து நின்றான். அவன் சாய்ந்ததும் அந்த கார் முன்னோக்கி நகர்ந் தது.

அதனால் அங்கு காரின் முன்பக்கம் நின்று பேசிக்கொண்டிருந்தஒரு இளம் ஜோடி தடுமாறி கீழே விழுந்தது. ரிஷி அதைக்கவனிக்கவில்லை. அங்கிருந்து சென்றுவிட்டான்இதை அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த சுமோ என்பவன்'என்னடா இது! ஒரு பொடியன் கார்ல சாய்ந்ததும் கார் நகருது.அவனுக்கு இவ்வளவு பலமா! சரி. நமக்கும் அந்த பலமிருக்கான்னுபார்ப்போம்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே காரின் மீது சாய்ந்தான். அது நகரவில்லை.ஆள்காட்டி விரலை நாடியில் தட்டிக்கொண்டு "நகரலையே சரிதள்ளிப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு இரண்டு கைகளாலும்காரைப்பிடித்து தள்ளினான்.

அதே நேரம் காருக்கு சொந்தக்காரர் அங்குவந்தார். "டேய் யாருடா அது என் காரைத் தள்ளிக் கொண்டு போகப்பார்க்கிறது?" என்று கத்தினார்."ஐய்யய்யோ… மாட்டுனா ஜெயில்தான்." என்று சொல்லிக் கொண்டேஓடினான். வேகமாக ஓடியவன் ரிஷி போய்க் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான். அவன் பின்னாடியே சென்றான்.ஒரு இடத்தில் பைக்ஸ்டாண்டில் வரிசையாக வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த வழியே சென்ற ரிஷி ஒரு வண்டியை லேசாக கையால் தட்டிவிட்டுச் சென்றான். உடனே அந்த வண்டி சாய்ந்ததும்அடுத்து வரிசையாக நின்றிருந்த அனைத்து வண்டிகளும் சாய்ந்தன.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த சுமோ நாமளும் லேசா தள்ளிப்பார்ப்போம்' என்று அடுத்த வரிசையில் நின்றிருந்த
வண்டியை ஒருகையால் தட்டினான். அது அசையவேயில்லை. 'அசையலையே. சரிதள்ளிப் பார்ப்போம்.' என்று சொல்லிவிட்டு
அந்த வண்டியை இரண்டுகைகளாலும் தள்ளினான்.

உடனே வரிசையாக அனைத்து வண்டிகளும் சாய்ந்தது. அப்பொழுதுஸ்டாண்ட் ஓனர் சுமோவைப் பார்த்து விட்டார்.

"டேய் நீதானா வண்டியைத் தள்ளுனது. இரு வந்து உன்னை
என்ன செய்றேன்னு பாரு." என்று கத்திக்கொண்டே ஓடிவந்தார். அதற்குள் சுமோ ஓட்டமெடுத்து விட்டான்.அவன் ஓடிவந்து நின்றது ஒரு மார்க்கெட் பகுதி. மூச்சுவாங்கியவாறே 'அப்பாடா' என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தான். அங்கு ரிஷிநின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் சுமோ "ஏண்டா கண்ணா! நீயாரு? காரைத் தொட்டா…நகருது. வண்டியை லேசா தட்டுனா... அதுஅப்படியே சாஞ்சிருச்சி. உன்னை மாதிரி நான் செய்யப்போக யப்பா..நல்லவேளை தப்பிச்சேன். இல்லைன்னா உன் புண்ணியத்துல தர்மஅடிதான்" என்றான்.

அவன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷி என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துக்கொண்டான். சுமோவிடம் " அண்ணே! உங்கபேரென்னண்ணே?" என்று கேட்டான்." என் பேரு சுமோ. ஆமா உம்பேரு என்ன? நீதானே ரினோ?"

"அதென்ன சுமோ? வித்தியாசமா இருக்கு."

"அது வந்துப்பா… எங்க அப்பன் ஒரு கிராமத்தான் 'சுடலைமுத்து'ன்னு வச்சிட்டான் . அது எனக்குப் பிடிக்கலை. அதனாலசுமோன்னு நானே மாத்திட்டேன். எப்படி நம்ம பேரு சூப்பரா இருக்கில்ல?."

"ம்..ம்.. இருக்கு" என்று சொல்லிவிட்டு ரிஷி காய்கறி கடையில் நுழைந்தான். அப்பொழுது அந்த கடைமுன் ஒரு லாரி வந்து நின்றது.அதில் இருந்து கீழே இறங்கிய டிரைவர் கடைக்காரரிடம் "அண்ணேலோட் வந்திருக்கு இறக்கலாமா" என்றான்.

"இறக்குப்பா. கூட ஆள் வரலியா. தனியா எப்படி இறக்குவே? வயசான என்னாலும் முடியாது. இரு யாரையாவது கூப்பிடுறேன்" என்றார்கடைக்காரர்.இதைக் கவனித்துக் கொண்டிருந்த ரிஷி கடைக்காரரிடம் "தாத்தாநான் வேணா உங்களுக்கு உதவி செய்யட்டுமா?" என்று கேட்டான்.

"நீ சின்ன பையன்பா உன்னால முடியாது" என்று கடைக்காரர்சொல்லிக் கொண்டிருக்கும்போதே டிரைவர் லாரியிலிருந்து தூக்கித்தந்த மூடையை ஒரு வெற்று அட்டைப்பெட்டியைத் தூக்கி வருவதுபோல்தூக்கி வந்தான்.அதைக் கண்டு சுற்றி நின்ற அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

"தம்பிஎப்படி உன்னால் முடிந்தது" என்றனர்."அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கப்போறேன்ல அதுக்குத்தான் இப்பவே டிரெயினிங் எடுக்கிறேன். அது இருக்கட்டும். தாத்தாசீக்கிரம் இந்த சீட்டுல இருக்கிற காயெல்லாம் நிறுத்துப் போட்டு எவ்வளவுன்னு சொல்லுங்க. நேரமாகுது பாட்டி தேடுவாங்க" என்றான் ரிஷி."தம்பி!

இனிமேல் நீ எப்ப காய் வாங்கினாலும் பைசாவே தரவேண்டாம்" என்ற கடைக்காரரிடம்இ"அதெல்லாம் தப்பு. இந்தாங்க பிடிங்க." என்று அவர் கையில் காசைதிணித்து விட்டு திரும்பியவன் கீழே சுமோ விழுந்துகிடப்பதைப் பார்த்தான்.

அவன் அருகில் சென்று"என்ன சுடலைமுத்தண்ணே… என்ன ஆச்சு?" என்றான்.இடுப்பைப் பிடித்துக்கொண்டு 'அம்மா…. வலி
உயிர் போகுதே!.யப்பா… சுமோன்னு கூப்பிடக்கூடாதா?" என்றான் சுமோ."க்கும்… வலியிலேயும் பந்தாவுக்கு குறைச்சலில்லை. சரி….. என்னநடந்துச்சுன்னு சொல்லுங்க.""சொல்றம்பா…சொல்றேன். கொஞ்சம் கையைக்குடு எழுந்திருச்சிக்கிறேன்." ரிஷி கையை நீட்டியதும் அதைப் பிடித்துக்கொண்டுஎழுந்த சுமோ " வா…அப்படியே நடந்துக்கிட்டே பேசுவோம்.

இங்கஎல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. நீ மூடையை அலக்கா தூக்குனதைப் பார்த்து நானும் தூக்கலாம்னு நினைச்சேன். கடைசில மூடை எம்மேல விழுந்து… யப்பா…எலும்பெல்லாம் நொருங்கின மாதிரியில்ல வலிக்குது. தம்பி! இப்பவாவதுசொல்லு… நீ ரினோதானே?"

ரிஷி சுமோவிடம் கொஞ்சம் வம்பு செய்து பார்க்கலாம் என்றுநினைத்து "அண்ணே… ரினோ இல்ல நான். அந்த ரினோவுக்கு வாலெல்லாம் இருக்குமாம். எனக்கு என்ன வாலா இருக்கு?உங்களுக்கு சூப் பர்மேன் தெரியுமா?""தெரியும்.""ஸ்பைடைர்மேன் தெரியுமா?""யாரு நம்ம பாபா மாதிரி விரலை வச்சுக்கிட்டு வருவாரே அவருதானே. தெரியும்.;""அவரு பாபா மாதிரி வைக்கல. பாபாதான் அவரு மாதிரி வச்சாரு. சரி பேட்மேன் தெரியுமா?"

"தெரியும்.""சக்திமான் தெரியுமா?""யப்பா! அவங்க எல்லாரையும் தெரியும். ஏன் ஹாரிபாட்டரையும்தெரியும். இதெல்லாம் இப்ப எதுக்குப்பா நீ யார்னு முதல்ல சொல்லு."

"ம்… நானும் அவங்க மாதிரிதான்.""என்னப்பா சொல்ற? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லேன்.""புரியும்படியா எப்படி சொல்றது… சரி… இப்ப பறக்க வைக்கட்டுமா?""எதை?""உங்களத்தான்." என்று சொல்லிய ரிஷி திடீரென்று "அண்ணே!அண்ணே! ஓடுங்க அந்த பைக் ஸ்டாண்ட் ஓனர் போலீஸோட வர்றார்."என்றான்.அவ்வளவுதான் அங்கு ஓட்டமெடுத்த சுமோ வீட்டில்தான் போய்நின்றான்.ரிஷி நடந்ததை ரினோவிடம் சொல்லி சிரித்தான்.ரினோ "ரிஷி! உன்னிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்கிறாயா?" என்றது"ஆமாம் ரினோ. அது அந்த ரோடாஸைத் தொட்டதிலிருந்துதான்எனக்கு அந்த சக்தி ஏற்பட்டது என்று நினைக்கிறேன்" என்றான் ரிஷி

."இல்லை ரிஷி. உன்னிடமுள்ள சக்தி உன் ஜனனத்திலே உனக்குஅளிக்கப்பட்டது அது இப்பொழுதுதான் வெளிப்படுகிறது."சுமோவுக்குத் தூக்கமே வரவில்லை. 'சே! ஒரு பொடியன் அவன்பொடியனில்ல பெரிய பலசாலி…. நம்மள ஏமாத்திட்டானே. அவன்தான் ரினோவா இருப்பான். அவன் எங்கே இருக்கான்னு கண்டுபிடிச்சி அவங்கூடப் போய் இருந்துக்கிடணும். நமக்கும் ஒரு பாதுகாப்பாஇருக்கும். அவன எப்படிக் கண்டுபிடிக்கிறது?. கடைசி வரைக்கும்அவன் பேரைக் கூடச் சொல்லாமல் போயிட்டானே. கில்லாடிப்பய… சரி இன்னொரு நாள் எங்காவது பார்க்கமலா போய்டுவோம்' என்று ரிஷியின் நினைவாகவே இருந்தான்.

மற்றொரு நாள் ரிஷி பாட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்ததை சுமோ பார்த்துவிட்டான். 'ஆங்… ரினோ மாட்டிக்கிட்டான்

இன்னைக்கும் இவங்கிட்ட ஏமாந்துறக் கூடாது. அவங்கூட போறதுயாரு? வேற யாரு அவனோட பாட்டியாத்தான் இருக்கும். முதல்லபாட்டியை மடக்குவோம்' என்று சொல்லிக்கொண்டே சுமோ அவர்களைநோக்கி ஓடினான்.

அருகில் சென்றதும் "பாட்டி! நல்லா இருக்கீங்களா? பாத்து எவ்வளவு நாளாச்சு. என்னை யாருன்னு தெரியுதா? உங்களுக்கு எங்கேதெரியப்போகுது. வயசாயிட்டாலே எல்லாம் மறந்துருமே. தாத்தா எபபடிஇருக்காங்க?" என்றான்.

"டேய் நீ யாரு? ஏன் என்னைத் தெரிஞ்சமாதிரி கதை விடுறே.உன் பேரென்ன?" என்று பாட்டி கேட்டாள்."அதுதான் சொன்னேனே வயசாயிட்டா எல்லாம் மறந்துரும்னு தாத்தான்னா உடனே கண்டுபிடிச்சிருவாரு. அவருக்கிட்ட சுமோன்னுசொல்லுங்க தெரிஞசுக்குவாரு. இந்த தம்பிக்கும் என்னை நல்லாத் தெரியுமே. என்ன தம்பி நம்மளப்பத்தி பாட்டிக்கிட்ட கொஞ்சம் சொல்லுப்பா"

என்று சுமோ சொன்னதும் பாட்டி ரிஷியைப்பார்த்து"ரிஷி! இந்த பைத்தியத்தை உனக்குத் தெரியுமா?"என்று கேட்டாள்ரிஷி தெரியாது என்பதற்கு அடையாளமாக தோள்களைக் குலுக்கி தலையை ஆட்டினான்.

உடனே பாட்டி "அப்படின்னா இது உண்மையிலேயே பைத்தியம்தான். அதோ அந்த போலீஸ்கிட்ட சொல்லி ஹாஸ்பிட்டல்ல சேர்க்கச் சொல்லலாம்" என்றாள்.அதற்கு ரிஷி; "பாவம் பாட்டி விட்டுரு " என்றான்.'என்ன சொன்னாலும் இவங்களை மடக்க முடியலியே ரொம்ப விவரமான குடும்பமா இருக்கும் போலிருக்கே. நம்மள வேற பைத்தியம்னுசொல்லிருச்சே அந்த பாட்டி.

பொடியனும் தெரியாதுன்னுட்டானே.பொல்லாத பய' என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டான் சுமோ.அப்பொழுது முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த ரிஷி திரும்பி

சுமோவைப் பார்த்து கண்களைச் சிமிட்டினான்.அதைப்பார்த்த சுமோ 'கண்ணையா சிமிட்டுற. இரு ராசா! உன்னைஇன்னைக்கு நான் விடுறதாயில்லை.' என்று சொல்லிக்கொண்டேஅவர்கள் பின்னால் மறைந்து மறைந்து சென்றான்.அதே நேரம் ரோட்டில் ஒரு காரில் நாலு வயது குழந்தையுடன்ஒரு இளந்தம்பதியினர் வந்துகொண்டிருந்தனர்.

எதிரே ஓரு லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதுபோல் வந்தது. அதைப்பார்த்து விட்டபாட்டி "ரிஷி! அங்கே பார் ஐயோ…. என்ன நடக்குமோ" என்று பதறினாள். ரிஷிக்கு ஒரு நொடி தனது பெற்றோரின் நினைவு வந்து மறைந்தது. அடுத்த வினாடி ரிஷி லாரியை நோக்கிப்பாய்ந்தான். அவன் பாய்ந்தவேகத்தில் லாரி திசை மாறி ஒரு மரத்தில் மோதி நின்றது. அதிலிருந்தடிரைவர் நன்றாகக் குடித்திருந்தான். ரிஷிக்கு அவன் மேல் பயங்கரகோபம் வந்தது.

கண்மூடி திறப்பதற்குள் நடக்கவிருந்த ஒரு பெரும்விபத்து தடுக்கப்பட்டதைப்பார்த்து சில நொடிகளில் அந்த இடத்தில்ஒரு பெரும் கூட்டம் கூடிவிட்டது.ரிஷி டிரைவரைப் பிடித்து கூட்டத்தில் தள்ளி விட்டு லாரியின் மறுபக்கமாக இறங்கி வேகமாக சென்றுவிட்டான். ரிஷியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஒரு நிமிடம் உயிரே நின்றுவிட்டதுபோல் இருந்தது.

சுமோ வாயைத்திறந்தவன் மூடவேயில்லை.வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்த ரிஷியை யாரும் சரியாகபார்க்கவில்லை. அனைவரும் நடக்கவிருந்த விபத்தைத் தடுத்ததுரினோதான் என்று நினைத்து ரிNhவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.ரிஷி சிறிது தூரத்தில் பாட்டிக்காக காத்துக் கொண்டிருந்தான்.ஆனால் அங்கு முதலில் வந்தது சுமோ.

"தம்பி! என்ன சாகசமெல்லாம் செய்யிறே….நீ ரினோதானே? ஒத்துக்கப்பா நான் உங்கூட ஒட்டிக்கிறேன்." என்று சுமோ ரிஷியிடம் மிகவும்பணிவாகக் கேட்டான்.ரிஷிக்கு சுமோவைப் பார்த்ததும் சிரிப்பாக வந்தது. "அண்ணே நான் ரினோ இல்ல. உங்களுக்கு ஸ்பைடர்மேன் தெரியுமா?" என்று கேட்டான்"யப்பா எல்லா மேனும் தெரியும். நீ என்ன மேன்? முதல்ல அதைச்சொல்லு"அதற்குள் பாட்டி 'ரிஷி! ரிஷி என்று கத்திக்கொண்டே அங்குவந்துவிட்டாள்.

"ரிஷி! என்ன காரியம் பண்ணினே. உனக்கு ஏதாவதுஆகியிருந்தா என்ன செய்ய முடியும்? உன் செயலைப் பார்த்து ஒருநிமிஷம் நான் ஆடிப்போயிட்டேன் தெரியுமா…." என்றாள்.உடனே சுமோ "என்ன பரதமா குச்சுப்புடியா? நீங்க ஆடினத நான்பார்க்கலியே." என்றான்.

"டேய் கிறுக்கா! நீ இங்கேயும் வந்துட்டியா. உன்னை…" என்றுசுமோவை அடிக்கப் போனாள் பாட்டி. ரிஷி அவளைத் தடுத்து" பாட்டி! இவரை எனக்கு ஏற்கனவே தெரியும். நல்லவருதான்ஆனால்…"என்று ரிஷி இழுத்ததும் சுமோ "ஆனால் என்ன நீயும் என்னை பைத்தியம்னு சொல்லப்போறியா.என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனால் நீ யாருன்னு மட்டும்சொல்லிடு. இதுக்கு அப்புறமும் நீ சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடும்."

"சரி என்னோட அட்ரஸ் தர்றேன் எங்க வீட்டுக்கு வாங்க சொல்றேன்""அதுவும் நல்லதுதான். இந்தா இதுல்ல எழுதிக்கொடு" என்றுஒரு பேப்பரையும் பேனாவையும் நீட்டினான் சுமோ.அதை வாங்கிய ரிஷி அட்ரஸை எழுதிவிட்டு பேப்பரை மடித்துசுமோவிடம் கொடுத்தான். சுமோ அதை வாங்கிசட்டைப்பைக்குள்வைத்துக் கொண்டு "இது போதாதா வீட்டுக்கு வந்து உன்னை யார்னுதெரிஞ்சுக்கிறேன். இப்ப எனக்கு முக்கியமான வேலை இருக்குவரட்டா… " என்று சொல்லி விட்டு கிளம்பியவனிடம் ரிஷிஇ"இருங்கண்ணே… நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லவேயில்லையே!" என்றான்.

புத்திசாலி… பையன் நீ.. நம்பர் பதினேழு திருவள்ளுவர் தெரு செண்பகபுரம். இதுதான் நம்ம விலாசம்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் சுமோ.அவன் சென்றதும் பாட்டி ரிஷியிடம் "என்ன ரிஷி! அவன் கேட்டதும் அட்ரஸ் எழுதிக்கொடுத்திட்டே!

நாளைக்கே வீட்டுக்கு வந்துநிக்கப் போறான்" என்றாள்.அதற்கு "நான் எங்கே அட்ரஸ் எழுதிக்கொடுத்தேன். நான்எழுதிக்கொடுத்ததைப் பார்த்துட்டு திரும்பவும் அவன் என்னை தெருத்தெருவா தேடப்போறான்" என்றான்.அட்ரஸை வாங்கிக்கொண்டு நடந்த சுமோ சிறிது தூரம் சென்றதும் 'இப்பவே அவங்க வீட்டுக்குப் போனால் என்ன? இதுக்கு நாளும்கிழமையுமா பார்க்கணும். அதுதான் அட்ரஸ் கையில இருக்கே' என்றுஎண்ணிக்கொண்டே பையிலிருந்து ரிஷி எழுதிக் கொடுத்த பேப்பரைஎடுத்து விரித்துப் படித்தான்.அதில் ரிஷி நம்பர் மூன்றுஇ வானவீதி. என்று எழுதியிருந்ததுஅதைப்படித்துப் பார்த்த சுமோ 'என்னது இது...…. வானவீதியா?இந்த ஊர்ல வீதி வீதியா நாயாட்டம் சுத்தியிருக்கேனே இதுவரை இப்படி ஒரு வீதியைக் கேள்விப்படவே இல்லையே. திரும்பவும் ஏமாத்திட்டானே!.' என்று புலம்பினான்.

அடுத்து சில நாட்கள் ரிஷிக்கு தேர்வு நடந்ததால் ரிஷி எல்லாவற்றையும் மறந்து படிப்பில் மூழ்கினான். ரினோவும் ரிஷியை தொந்தரவுபண்ணாமல் அமைதியாக இருந்தது. டிவி கூட போடுவதில்லை.தேர்வு முடிந்ததும் ஒரு நாள் ரினோ "ரிஷி டிவி பார்க்கலாமா?"என்று கேட்டது."நீ போய் பார்… நான் அப்புறமா வர்றேன்." என்றான் ரிஷிடிவியை ஆன் பண்ணிய ரினோ திடீரென்று "ரிஷி! இங்க வந்துபாரேன் சூப்பர் நிகழ்ச்சி…." என்றது.ர்pஷியும் ஆவலுடன் ஓடிவந்து பார்த்தான். அங்கே செய்தி ஓடிக்கொண்டிருந்தது. ரினோவை ஒரு உதைவிட்ட ரிஷிஇ " இதுவாடாசூப்பர் நிகழ்ச்சி. தடியா இனிமேல் ஏமாத்தினே பாரு! அந்த தேள்கொடுக்கு வால ஒட்ட கட் பண்ணிடுவேன்."என்றான.;அப்பொழுது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டுது."யாரோ நம்மள டிவி பார்க்கவிடாம தொந்தரவு பண்ண வந்துட்டாங்க." என்று சலித்துக்கொண்ட ரினோவை"ஏய்… நீ எரிச்சல் பட்டது போதும் முதல்ல உள்ளே போ யாரோவர்றாங்க" என்று விரட்டினான்.

ரினோ அவசரம் காட்டாமல் மெதுவாக எழுந்து உள்ளே சென்றது.பாட்டி கதவைத் திறந்தாள். அங்கே ரிஷியின் நண்பன் கோபியின்தந்தை இன்ஸ்பெக்டர் ஆனந்த் நின்றிருந்தார்.ரிஷிக்கும் பாட்டிக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 'இவர் எதுக்குஇங்கே வந்தார்.' என்று இருவரும் யோசித்தார்கள்.

"என்ன…என்னைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியாயிட்டீங்க.என்னை நீங்க இங்கே எதிர்பார்க்கல இல்ல?" என்று சொல்லிக்கொண்டே ஆனந்த் உள்ளே வந்து உட்கார்ந்தார்.
"என்னம்மா…என்னை அடையாளம் தெரியுதா?" என்று பாட்டியைப்பார்த்துக்கேட்டார்."நீங்க இன்ஸ்பெக்டர்தானே! உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க ரொம்ப நேர்மையான அதிகாரி என்றும் கேள்விப்பட்டேன்." என்றுபாட்டி சொன்னாள்."பாட்டி… இவர் என் பிரண்ட் கோபியோட அப்பா" என்றான் ரிஷி."ஆனால் ரிஷி…உன் பாட்டிக்கு என்னைப்பல வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். இப்ப அடையாளம் தெரியவில்லை போலிருக்கு.

நானேசொல்லிடுறேன்." என்று சொல்லிவிட்டு" அம்மா…உங்களுக்கு பேங்க்ல ஆபிஸரா இருந்த சோமசுந்தரம்ஞாபகம் இருக்கா? ரிஷியோட தாத்தாவுக்கு நெருங்கிய நண்பர். அவரோட கடைசி மகன் ஆனந்த்தான் நான்" என்றார்.பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மறந்துவிட்டிருந்த பாட்டிக்கு அப்பொழுததான் ஞாபகம் வந்தது.

"அடடா….அந்த ஆனந்தா! சின்ன வயசில் பார்த்தது… ரிஷியோடஅப்பாகூட ஸ்கூலில் படிச்சியே. நல்லா இருக்கியா?""நல்லா இருக்கேம்மா…" என்று சொல்லிவிட்டு ரிஷியிடம் "இந்தவீட்டில் யாரெல்லாம் இருக்கீங்க?" என்று சந்தேகத்துடன் கேள்விஎழுப்பினார்.

"ஏன் கேக்கிறீங்க அங்கிள். நானும் பாட்டியும்தான் இருக்கோம்.""அப்படின்னா… நான் உள்ளே நுழையும் பொழுது யாரோ மாடிப்படியில் ஏறிச்சென்ற மாதிரி இருந்ததே! அது யார்?" என்று கேட்டார்."அப்படி யாரும் போகலியே…இங்கே இருக்கிறது நாங்க ரெண்டுபேரும்தான் நாங்கள் இங்கேதானே இருக்கிறோம்." பாட்டி சொன்னதைஆனந்த் நம்பவில்லை."இல்லை….. என் கண்கள் பொய் சொல்லாது. கண்டிப்பாக யாரோமாடி அறைக்குள் இருக்கிறார்கள். ஒருவேளை உங்களுக்குத்தெரியாமலே உள்ளே நுழைஞ்சிருப்பார்களோ நானே போய்ப் பார்க்கிறேன்."என்று சேரிலிருந்து எழுந்தார்.

பாட்டியும் ரிஷியும் என்ன சொல்லியும் கேட்காமல் ரினோ சென்றஅறையை நோக்கி நடந்தார் ஆனந்த்.'ரினோ இங்கிருப்பது தெரிந்துதான் வந்திருக்கிறாரோ? ரினோவைப்பார்த்து விட்டால் என்ன நடக்குமோ' என்று இருவரும் பயந்துகொண்டிருந்தனர். மாடியறைக்குச் சென்றவர் கையில் ரிவால்வருடன் அறைமுழுவதும் தேடினார். ஆனால் அங்கே யாருமே இல்லை. இருந்தாலும்சந்தேகம் தீரவில்லை. அமைதியாக கீழிறங்கி வந்து சேரில் அமர்ந்தார்.

"என்ன அங்கிள்! உள்ளே யாராவது இருந்தாங்களா?" என்று ரிஷிகேட்டான்."இல்லை"பாட்டிக்கும் ரிஷிக்கும் இப்பொழுதுதான் நிம்மதி வந்தது.

போல் மறைந்திருப்பான்' என்று எண்ணினார்கள்.அப்பொழுது அங்கு ஓடிக்கொண்டிருந்த டிவியில் 'ஒரு முக்கியஅறிவிப்பு' என்ற குரலைக் கேட்டதும் அனைவரது கவனமும் டிவிக்குதிரும்பியது.'மூன்று மாதங்களுக்கு முன்பு ராம் முகுந்தன் என்ற இரு பேராசியர்கள் வெளியூர் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர்கள் இரகசியமாக ஏதோ ஆராய்ச்சிநடத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றுபோலீஸசந்தேகப்படுகிறது.

'அறிவிப்பைக் கேட்ட பாட்டி "துரோகிகள் அழியட்டும்" என்றுதிட்டிக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தாள். 'பாட்டி ஏன் வருத்தப்படுகிறாள்?' என்று இருவருக்கும் புரியவில்லை."அவங்களை உங்களுக்குத் தெரியுமா? அவங்க யாருக்குத் துரோகம் பண்ணினாங்க?" என்று ஆனந்த் பாட்டியிடம் கேட்டார்.பாட்டி இதுவரை தன் மனதில் பூட்டி வைத்திருந்த விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தாள்.ர்pஷியோட அப்பா சுதர்சனன் அவனோட நண்பர்கள் ராம் முகுந்தன்மூன்றுபேரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தார்கள். மூன்றுபேருமே மிகவும் திறமையானவர்கள். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும்என்று நினைத்தனர்.

படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எதையாவது ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக நிறையபுத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தார்கள்.மூவரும் சேர்ந்து ஏதாவது புதுமையான ஒன்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணினர். இவர்களுடன் தேசிகன் என்ற பணத்திமிர்பிடித்த ஒருவனும் படித்தான். யாரையுமே துச்சமாக எண்ணும் அவன்இவர்கள் மூவரையும் எதிரிகளாக நினைத்தான்.காரணம் இவர்களது படிப்பும் இவர்களுக்குக் கிடைத்த பாராட்டும்தான். மூவருக்கும் கெட்டபெயர் ஏற்படுத்த எவ்வளவோ முயன்றான்.ஆனால் அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால்அவர்கள் மேல் அதிக வெறுப்புக்கொண்டான்.படிப்பு முடிந்து மூவரும் வௌ;வேறு ஊர்களில் வேலை செய்தாலும் அவர்களுடைய ஆராய்ச்சித் தாகம் மட்டும் அடங்கவில்லை.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தங்களுடைய ஆராய்ச்சிக்கானஃபார்முலாக்களை எழுத ஆரம்பித்தார்கள்.மாதத்திற்கு ஒருமுறை மூவரும் ஒன்று கூடி மூவருடையஃபார்முலாக்களையும் பொருத்திப்பார்த்து விவாதிப்பார்கள்.

இப்படிப் பலவருட முயற்சசிக்குப்பின் சரியான ஃபார்முலாவைக் கண்டுபிடித்தார்கள்.ஆனால்…அதை செயல்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவைப்பட்டது. அவ்வளவு பணம் யாரிடமும் இல்லாததால் அவர்களதுஆராய்ச்சி எழுத்து வடிவிலேயே இருந்து விட்டது. இப்படியே சிலவருடங்கள் கழிந்தன.தேசிகனின் தந்தை அரசியல்இ கடத்தல் என்று பல வழிகளில் சம்பாதித்து பெரும் பணம் சேர்த்திருந்தார். தேசிகனும் அரசியலில் சேர்ந்துவிட்டான். பல கோடிகள் சம்பாதித்தான்.

ஒரு முறை ஒரு விழாவில் சுதர்சனன் ராம் முகுந்தன் மூவரையும் தேசிகன் சந்தித்தான். அவர்களிடம்"என்ன நண்பர்களே…. நலமா இருக்கீங்களா?" என்று விசாரித்தான். மூவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. 'கல்லூரியில் தங்களை எதிரிகளாக நினைத்தவன் இப்பொழுது நண்பர்களே என்று சொல்கிறானே'என்று நினைத்தனர். மூவரும் எதுவும் பேசவில்லை. ஆனாலும் தேசிகன் அவர்களிடம் " மூணுபேரும் ரகசியமா ஏதோஆராய்ச்சி செஞ்சிட்டிருக்கீங்களாமே…. நானும் ரகசியமாகத்தான் கேள்விப்பட்டேன். இப்பொழுது உங்க ஆராய்ச்சி எதுவரை இருக்குது? ஏதாவது பண உதவி தேவைப்பட்டால் எங்கிட்ட தயங்காமல் கேளுங்க.நான் உங்களுக்கு உதவி செய்றேன்." என்றான். "தேவையில்லை… நன்றி…" என்று தேசிகனுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு "வாங்க போகலாம்" என்று நண்பர்களை அழைத்துக்கொண்டு வெளியேறினான் சுதர்சனன். தேசிகன் அவர்கள் மூவரையும் பார்த்து ஒரு அலட்சியப்புன்னகைபுரிந்தான். விழா நடந்த இடத்திலிருந்து வெளியேறிய மூவரும் காரில் ஏறிபுறப்பட்டனர்.

ஒருவருக்கொருவர் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.சிறிது நேரம் கழித்து முகுந்தன் மெல்லிய குரலில்இ"சுதர்சனா….நமக்கு இப்போ பணம் தேவைதானே. அது கிடைச்சாநம்மளோட கனவை நனவாக்கலாமே." என்றான்."அதற்காக நாம இப்போ என்ன செய்யலாங்கிறே?" என்று சுதர்சனன்முகுந்தனைப் பார்த்துக் கேட்டான்.அதற்கு முகுந்தன்இ "நாம ஏன் தேசிகனிடம் பணம் வாங்கிக்கொள்ளக்கூடாது? அவனே தர்றேங்கிறானே. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொண்டால் என்ன?" என்றான்."முகுந்தா…..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அந்த தேசிகன் மகா அயோக்கியன். ஏற்கனவே சட்டவிரோதமா அவன் தந்தைசம்பாதித்தது போதாதுன்னு இப்போ இவன் அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாத்தி சம்பாதிக்கிறான். அப்படிப்பட்ட பணம் நமக்குத்தேவையா?" என்று கோபமாகக் கத்தினான் சுதர்சனன்.அதன்பின் யாரும் தேசிகனைப்பற்றி எதுவும் பேசவில்லை.சில நாட்களுக்குப்பிறகு முகுந்தனும் ராமுவும் சந்தித்தார்கள்.

முகுந்தனின் எண்ணம் போலவே ராமுவுக்கும் இருந்தது. அதனால் ராம்முகுந்தனிடம்இ"முகுந்தா… நீ சொல்றதை எண்ணிப் பார்த்தா சரின்னு தான்தோணுது. நம்மளோட ஆராச்சிக்குத் தேவையான பணத்தை தேசிகனால்தான் கொடுக்கமுடியும். அவனும் தர்றேங்கிறான். இது நமக்கு நல்லவாய்ப்புதான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலைன்னாநமது பல நாள் உழைப்பு வீணாயிடும்." என்றான்."ஆனால்…. சுதர்சனன் இதற்கு சம்மதிக்கமாட்டானே"சொல்லவேயில்லையே! உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"

"முதல்ல பாட்டிக்கிட்ட கேள். அப்புறம் நானே உனக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன்."

காலை ஐந்து மணி பாட்டியும் ரினோவும் ரிஷியின் பிறந்த நாளுக்காக வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

"பாட்டி! கேக் செய்தாச்சா?" ரினோ பாட்டியிடம் கேட்டது.

"செய்தாச்சு. ஏன் கேக்குறே?"

" ரிஷியோட பிரண்ட்ஸ் எல்லாம் வராங்கல்ல. அதுதான் கேக்டேஸ்ட்டா செய்திருக்கீங்களான்னு ருசி பார்க்கலாம்னு கேட்டேன்"

"உதை படுவே ரஸ்கல். ர்pஷி பிறந்தநாள் கேக் வெட்டினப்புறம்தான் சாப்பிடணும் தொண தொணக்காம வேலையைப்பாரு."

"பாட்டி! ரிஷிகூட விளையாடியே போரடிச்சுப்போச்சு. அதனால இன்றைக்கு அவன் பிரண்ட்ஸ்கூட ஜாலியா விளையாடணும்"

"ஓ….. இதுவேற மனசுல ஆசையா. டேய் அவங்க போற வரைக்கும் ஒழுங்கா வாலைச் சுருட்டிட்டு ரூம்லேயே இருக்கணும் புரியுதா"

"புரியுது.. ம்… இந்த வீட்டில எனக்கு என்றைக்கு சுதந்திரம் இருந்துச்சு"

"என்னடா முணுமுணுக்கிறே"

"ஒன்றுமில்லை புரியுதுன்னு சொன்னேன்"  .

காலையில் எழும்பி வந்த ரிஷி வீட்டின் அலங்காரத்தைப் பார்த்து "ஆகா…அருமையாக இருக்கு. பாட்டி! இதெல்லாம் நீங்களா செய்தீங்க? என்னைக் கூப்பிட்டா நான் செய்திருப்பேனில்ல" நான் மட்டும் செய்யல. நம்ம ரினோவும்தான். உனக்குப் பிறந்த நாள்என்றதும் அவனுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? சரிஇ நீ போய்குளிச்சிட்டு புது டிரெஸ் போட்டுட்டு வா நேரமாகுது உன் பிரண்ட்ஸ்எல்லாம் வந்துருவாங்க"

"ஆமா சீக்கிரம் போ பசிக்குது. பால்பாயசம் கேக் எல்லாம் சாப்பிடணும்" என்ற ரினோவிடம் "திங்கிறதிலேயே இரு" என்று சொல்லிவிட்டுk குளிக்கச் சென்றான். புத்தாடையில் புதுப்பொலிவுடன் வந்து நின்ற ரிஷியைப்பார்த்து"ரிஷி கண்ணா! இன்று நீ ஒரு இளவரசனைப்போல இருக்கே.உன்னைப் பார்த்தால் உன் அப்பாவைப் பார்க்கிறமாதிரி இருக்கு. அதேகம்பீரம்." பாட்டி பேரனின் அழகில் சொக்கினாள்."பாட்டி! ரிஷியும் இளவரசன்தான்.
ஆனால் சாதாரண இளவரசன்இல்ல." என்றது ரினோ.ரிஷி பாட்டியிடம் "பாட்டி! நீங்க வாங்கின இந்த டிரெஸ் ரொம்ப"அவன் சம்மதிக்கலைன்னா பரவாயில்லை. நாம ரெண்டு பேரும்முயற்சி செய்வோம்.""அதற்கு முழு ஃபார்முலாவும் வேணுமே?""அதைப்பற்றிய கவலை வேண்டாம். லாக்கரில்தானே இருக்குது.நாம பயன்படுத்திக்கொள்வோம்." 
[தொடரும்]

kalpa2011@yahoo.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner