இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010  இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நலந்தானா? நலந்தானா?

சா.முன், சா.பின் - நீரிழிவு மாத்திரைகளை முன்நிறுத்தி....

- 'டாக்டர்' .எம்.கே.முருகானந்தன் -


'டாக்டர்' .எம்.கே.முருகானந்தன் -நண்பன் எழுத்தாள நண்பர் தெணியான் ஒரு பகிடி சொல்லுவார். இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுக்கப்பட்டன. அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் காணப்பட்டன. அதற்கு மேலதிகமாக காணப்பட்ட குறிப்புத்தான் இவரை அசர வைத்தன.

"சாமுன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது" என்று மருத்துவரைக் கேட்டாராம்.

இதைக் கேட்ட டொக்டர் மயங்காத குறை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை. இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள். எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள். பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள். அவற்றைச் சா.முன், சா.பின் !!! சாப்பாட்டுவதா என்ற சந்தேகம். பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.

நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.

நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.

1. சதையியைத் தூண்டி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கொஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
2. மேலதிக இன்சுலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.

சாப்பாடிற்கு முன்
முதலாவது வகையான, இன்சுலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் சமிபாடடைந்து, உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.

அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் அதிகளவில் தேவை. எனவே இன்சுலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.

ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்னபதாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்தில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா (Sulphanylureas) வகை Glibenclamide, Glipizide, Glimepride, Gliclazide போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.

சாப்பாடிற்கு பின்
இரண்டாவது வகையானவை இன்சுலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை (Metformin) ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்கள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குரதியின் குளுக்கோஸ் அளவைக் குறைத்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.

அதேபோல தயசொலினிடயோன்ஸ் (Thiazolidinediones) நோயாளிகளின் உடலின் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Rsistance) முறியடித்து, இன்சுலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் ஈரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.

தயசொலினிடயோன்ஸ் ரகத்தைச் சேர்ந்த பயோகிளிடசோன் (Pioglitazone) மருந்து இங்கு இலங்கையில் Pioglit, Pionorm, Glizone, போன்ற பல வியாபாரப் பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த இரண்டு வகை மருந்துகளும், இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்கமாட்டாது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்கப் பின்னர் எடுப்பது நல்லது.

சாப்பாடுடன்
இதனைத் தவிர அக்கரபொஸ் Acarbose மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அதாவது மாப்பொருள் பதார்த்தங்கள் சமிபாடு அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிரியமில்லாவிட்டால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.

சா.முன், சா.பின் விடயம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

********************

சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?

- 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன்.-


'டாக்டர்' .எம்.கே.முருகானந்தன் -பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.
முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள். ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.

ஆண் பெரிய பிள்ளை
ஆண் குழந்தை 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது? இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?

இல்லை! ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல. படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும். உடல் வளர்கிறது. குரல் தடிப்படைகிறது. மீசை அரும்புகிறது. ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது. 9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது. ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.

ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை.

இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள் இல்லை.

பையன்களின் சில சந்தேகங்கள்

உடல் வளர்ச்சி
பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு. இதற்கக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.

அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.

எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன. தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு. விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி அரும்புவது கண்டு, 'எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா' என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.

எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள். எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில் மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது நல்லதல்ல. சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.

பாலுணர்வு
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள், சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.

உங்கள் உடல் சிலிர்க்கிறது. முகத்தில் வியர்வை அரும்புகிறது. உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன. அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள். இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது. அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.

'ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு'

இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது. ஆனால் பாலுணர்வு அல்ல. தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.

அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான். அவளது குணங்களை மெச்சுவான். ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டாது இருக்கலாம்.

காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன. அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.

விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான உணர்வுதான். இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன. இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.

நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும். முகத்தில் மீசை தாடி அரும்பும், நெஞ்சில் வளரும் அக்குளுக்குள் தடிப்பாக வளரும். கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.

முடி வளர்தல்
நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும். முகத்தில் மீசை தாடி அரும்பும், நெஞ்சில் வளரும் அக்குளுக்குள் தடிப்பாக வளரும். கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.

ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?
இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான். ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும். பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும். இதனால் உங்கள் விதைகள் வளரும். அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும். முடி வளரும். ஏனைய மாற்றங்களும் தொடரும். எனவே இவை யாவும் இயற்கை நியதிதான். சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம். அவ்வளவுதான்.

வியர்வை
'இவன்றை வேர்வை மணக்கிறது' பல அம்மாக்கள் சொல்வார்கள். எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள் உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.

வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது. ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு ஆகியவையும் இருக்கும். வியர்வை உண்மையில் மணமற்றது. ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது.

இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.

இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorant) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.

விறைப்படைதல்
முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும் இருக்கும். சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல. விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுக்குவதாகும். ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும். பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.

இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.

தூக்கத்தில் விந்து வெளியேறல்
அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் nocturnal emission என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து semen எனப்படுகிறது. உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம். பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.

ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில் அவளது கரு முட்டை இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.

அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.

தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.

இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம். இது இயற்கையான செயற்பாடு. பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.

தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.

ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும்.

தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.

.
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்