ஹாய் நலமா?
தீண்டத்தகாத உணவா சோறு?
- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -
அவர்
ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில்
சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின்
நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். �சாப்பாட்டில்
அவதானம் எடுங்கள்� என்றேன். 'அப்ப சோறை நிப்பாட்டட்டோ� என்றார். நான் மனத்திற்குள்
சிரித்துக் கொண்டு �சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்� என
அப்பாவியாகக் கேட்டேன். �வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
இதுகளைத்தான்.� என்றாள்.
உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர்.
அவருக்கும் எடையைக்
குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து
வைத்தவர் போல �சரி நான் சோத்தை கைவிடுகிறன்� என்றார். �சோறு சாப்பிட வேண்டாம் என
நான் சொல்லவில்லையே�� என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக்
கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை
என்மீது வீசினார்.
காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே
�இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப்
போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்� என்றாள்.
ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல
முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக
சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என
எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.
ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி
புரதம், விற்றமின்கள், கனியங்கள்,
நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல்
(நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும்
பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது
என்பது பலரும் உணராத உண்மையாகும்.
இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக
அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக
அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி
இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது
மாப்பொருள்தான்(ளுவயசஉh). எனவே எதைச்
சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.
இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான
காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு
சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம்,
புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப்
பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள்
ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டு;ம். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும்,
விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.
காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு
போஷாக்குள்ள உணவு உட்கொள்வது
அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல்
பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல்
என்றவுடன் சோடா வேண்டும்
என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த
போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.
எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு
சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப்
போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.
*** ******
தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா?
- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -
"தினமும் சிறிதளவு மதுபானம் அருந்துவது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்
தானே" எனக் கேட்டார் அவர்.
"ஆம் பல மருத்துவ ஆய்வுகள் அவ்வாறு தான் கூறுகின்றன" என நான் கூறியதும் அவரது முகம்
அன்றலர்ந்த தாமரை போலப்
பூரித்தது. அருகில் இருந்த அவரது மனைவியின் வார்த்தைகளோ நெருப்பில் விழுந்த உப்புப்
போல படபடவெனச் சீறி வெடித்தது.
நீரிழிவு கொலஸ்ட்ரோல், பிரஸர் எல்லாம் கலந்து உழலும் அவரைக் குணமாக்க மனைவியும்
கூடவே அலைந்து திரிகிறார்.
போதாக்குறையாக அவருக்கு மதுப்பழக்கமும் தாராளமாகவே உண்டு. எனவே, மனைவி கோபிப்பதில்
நியாயம் உண்டுதானே?
அதேபோல அவர் பக்கமும் நியாயம் உண்டா?
தினசரி சிறிதளவு மதுபானம் எடுப்பதில் ஒரு சில நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ
ஆய்வுகள் கூறுகின்றன. அளவோடு மது
அருந்துவது மாரடைப்பு , அஞ்சைனா போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியத்தை 30 முதல் 35
சதவீதம் குறைப்பதாக அவ்
ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இரத்த நாளங்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதை
(Antiatheosclerotic effect) தடுப்பதாலேயே இது
சாத்தியமாகிறது.
நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் எச்டிஎல் (HDL) லின் செறிவை அதிகரிப்பதும் அழற்சியைத்
தடுப்பதில் உதவுவதும் இன்சுலின் நிகர்த்த செயற்பாடும் மதுவினால் ஏற்படக்கூடிய
நன்மைகள் என நம்பப்படுகிறது. குறைந்தளவு மதுபானம் (1 or 2 drinks daily) தினமும்
அருந்துபவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என மற்றொரு கள ஆய்வு
சொல்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாக
எடுத்த தரவுகளின்படி புதிதாத நீரிழிவு தோன்றுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம்
குறைகிறது என்கிறார்கள்.
நாளாந்த உடற்பயிற்சியானது இருதய நோய்கள் வராமல் தடுப்பதில் எவ்வாறு பங்களிக்கின்றதோ
அவ்வாறே தினசரி குறைந்தளவு மது
அருந்துவதும் நன்மையளிக்கின்றது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், மதுவின் அளவு
அதிகமானால் பல்வேறு ஆபத்தான
விளைவுகள் காத்திருக்கின்றன என்பதையும் மறக்கக்கூடாது. அதிக மது அருந்துவதானது அந்
நபருக்கு மாத்திரமன்றி அவர் வாழும்
சமூகத்திற்கும் பாரிய பிரச்சினைகளை உருவாக்குகிறது.
வருடாந்தம் ஒரு இலட்சம் நபர்கள் அதீத மதுபாவனையால் வரும் நோய்களாலும்
விபத்துகளாலும் அமெரிக்காவில் மட்டும்
மரணிக்கிறார்கள். அங்கு தடுக்கக்கூடிய மரணங்களுக்கான மூன்றாவது முக்கிய காரணியாக
மது இருக்கிறது. எனவே உலகமெங்கும்
எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்களேன்.
வீதி, வாகன விபத்துகள் , பக்கவாதம் , இருதய துடிப்பு நோய்கள் , இருதய தசை நோய்கள்,
சடுதியான இருதய நிறுத்தம், ஈரல் சிதைவு,
தூக்கத்தில் சுவாச நிறுத்தம்,மார்பு மற்றும் உணவுக்கால்வாய் புற்றுநோய்கள், தற்கொலை
நாட்டம் போன்றவற்றிற்கு அதீத மது
பாவனையே காரணம் என்பதை மருத்துவ உலகம் நீண்ட நாட்களாகவே அறிந்திருக்கிறது.
"இவை எல்லாம் கூடச் குடிச்சால் தானே வரும். அளவோடு பாவித்தால் பிரச்சினை
இல்லைத்தானே" என அவர் கேட்டார்.
உண்மை தான் ஆனால் ,மாரடைப்பு , நீரிழிவு ஆகியவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புக்
குறைந்த அளவு மதுவை <strong>தினசரி
</strong>உபயோகித்தால் மட்டுமே கிட்டும் என்றே ஆய்வு கூறுகிறது.
மது என்பது பழக்கப்பட்டு மனிதனை அடிமைப்படுத்தும் பொருள். சிறிது சிறிதாக தினசரி
உபயோகிக்கும் போது அதற்குப் பழக்கப்பட்டு
அடிமையாகி படிப்படியாக உபயோகிக்கும் மதுவின் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்படும். மதுவின் அளவு கூடினால்
மேற்படி நன்மைகள் கிட்டாது. அத்துடன் மதுவின் தீயவிளைவுகள் அனைத்தும் வந்து சேரும்
என்பதை மறந்துவிடக்கூடாது.
மது அருந்துவது என்பது செங்குத்தான வழுக்குப்பாறையில் வெறுங் கையால் பிடித்து
ஏறுவதற்கு நிகரானது. சற்று கைப்பிடி
தவறினாலும் அதல பாதாளத்தில் விழுந்து மரணத்தை அடைவது நிச்சயம். அத்தகைய சாகசத்தை
விரும்புபவர்கள் மாத்திரம் மது
அருந்தி மாரடைப்பு வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என விளக்கினேன்.
அன்றலர்ந்த தாமரையாகப் பூரித்த அவர் வதனம் கடும் வெயிலில் வாடி வதங்கியது
போலாயிற்று.
Dr.M.K.Muruganandan
Family Physician
http://hainallama.blogspot.com
http://suvaithacinema.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@hotmail.com |