அகஸ்தியரின் “லெனின் பாதச் சுவடுகளில்…” ஒரு
பார்வை…
- கவி வீரவாகு (லண்டன்) -
“மானிட
விடுதலைக்கு ‘எழுத்தும் ஓர் ஆயுதம்’ என்று போதித்த மார்க்சிய சிந்தனையாளர்
அகஸ்தியருக்கு” இவ்வாறுதான் அகஸ்தியரின் லெனின் பாதச் சுவடுகள் என்ற நூல் அவருக்கே
அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. 34 சிறு அலகுகளாய் 168 பக்கங்களுக்குள் லெனினின்
சிறுவயதின் சில பகுதிகளைத் தொட்டும் - விட்டும், பின் போராட்டக் காலங்களில் பெரும்
பகுதிகளை எடுத்துக்காட்டியும் வரையப் பட்டுள்ளது. ஒரு விறுவிறுப்பான துப்பறியும்
புதினம் படிப்பதுபோன்று, அடுத்து என்ன நடக்கும் என வாசகனைத் தூண்டி இழுத்து
நகர்த்திச் செல்லும்
பாங்கு அகஸ்தியருக்கே கை வந்த கலை. பெருமளவிலான புதினங்கள்இ சிறுகதைகள், நாடகங்கள்
எழுதியவருக்கு இது சாலுமே.
அரசியல் சார்ந்த விளக்கங்களுடன் புதினங்கள் எழுதுவது எவ்வளவு கடினமானது என்பது
எழுத்தாளர்களும்இ சுவைஞர்களும் அறிந்ததே!
இந்நூல் லெனினின் முழு வாழ்க்கையையும் கொண்டிருக்கவில்லையானாலும் - சில சமயம்
அகஸ்தியர் உயிருடன் இருந்திருந்தால் தன் வாழ்நாளில் சாதித்திருப்பார்இ ஆங்காங்கே
ரஷ்யப் புரட்சியின் முக்கிய நிகழ்வுகள் - உரையாடல்கள், அரசியல் விளக்கங்களை காட்டி
நிற்கின்றது.
1890 ல் வொல்கா நதியோரம் தனது அண்ணன் அலெக்ஸாந்தர் சகோதரிகள் ஒல்கா,
திமித்ரி, மரியா ஆகியோருடன் வந்து
கொண்டிருப்பதுடன் கதை தொடங்குகிறது. அலெக்ஸாந்தர் கொலையுண்டதுடன் லெனின் எவ்வாறு
ஒரு புரட்சிவாதியாக – மார்க்ஸ் - ஏங்கல்ஸ் சித்தாந்தங்களை மக்களுக்கு தெளிவூட்டி
அவர்களைத் தயார் செய்யும் குறிப்புகளும் தொடர்கின்றன.
அடிக்கடி மறைந்தும், ஒளிந்தும் வாழும் நிகழ்வுகளும் பொலிஸ் இராணுவத்துக்கு தப்பி
தலைமறைவாகும் செய்திகளும் தெளிவாக
எழுதப்பட்டுள்ளது.
மனைவி குரூப்ஸ்கயாவுடன் இருக்கின்ற இனிய காலங்களும் மின்னல் போல் தோன்றி மறைகின்றன.
22வது சிறுகதையில் மாக்ஸிம் கார்க்கியுடனான சந்திப்பில் டால்ஸ்;டாயின் “போரும்
சமாதானமும்” பற்றிய இவரின் கருத்தாடல்களும் விபரமாக வருகின்றன.
32 வது சிறுகதையில் எச்.ஜி.வெல்ஸ_டனான சந்திப்பில் லெனினுக்கும்
வெஸ்லுக்குமிடையேயான உரையாடல்கள் கம்யூனிஸம் பற்றி முதலாளித்துவ நாடுகள் அன்று
கொண்ட கருத்துருவாக்கம்இ மனித உரிமைகள், எழுத்துச் சுதந்திரம், கூட்டுப்பண்ணை போன்ற
பல விடயங்கள் சிலாகிக்கப் பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன.
அண்மைக்காலங்களிலும் விவாதத்துக்குள்ளாயிருக்கும் ட்ரொஸ்க்கியின் பங்கு (விசாரம்,
.மு.பொன்னம்பலம் பார்க்க…) அவருக்கும் லெனினுக்குமிடையேயான கருத்து வேறுபாடுகள்
சிறுகதை 10 ல் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’ என்ற பகுதியில் காணப்படுகின்றது.
நூல் திறனாய்வுஇ ஆய்வுரைகளை விஞ்ஞான அடிப்படையிலும் நிகழ்த்துமாறு முனைவர் ஆய்வுகள்
கொள்பவர்களுக்கு இந்நாட்டு
பல்கலைக்கழகங்கள் வழிகாட்டுகின்றன. ஜே. கிருஸ்ணமூர்த்தியின் ‘சார்பிலா
தத்துவத்தின்’ அடிப்படையில் இந்நூலை தரிசிக்க விரும்பின் கலாகீர்த்தி பேராசிரியர்
சி. தில்லைநாதனின் அணிந்துரையை கடைசியாகப் பார்க்கவும். லெனின் பற்றியும்,
அகஸ்தியர் ஆளுமை பற்றியும் பெருமளவிலான தகவல்களை, தமிழர்களுக்கு பரிட்சயமான
முறையில் பாரதி, பாரதிதாசன் கவிதைகளுடன் விளக்கியுள்ளார்.
வீரகேசரி பிரதம ஆசிரியர் வி.தேவராஜின் “அகஸ்தியரின் பன்முக ஆளுமை”யும்
ரத்தினச்சுருக்கமாக அகஸ்தியரை அறிமுகஞ்
செய்கிறது.
நூலாய்வுக்குத் தேவையான கதைக்கூறு, இழைபொருள் பற்றிக் கவனம் செலுத்தின்,
சிறுவர்களுடன் லெனின் எவ்வளவுதூரம் நேசமாகவும் அன்பாகவும் இருந்தார் என்பதற்கு
‘சிறுவர்களின் நேசம்’, ‘சிறுவனிடம் எளிமை’ என இரு பகுதிகளாகக் கையாண்டுள்ளார்.
இழைபொருட்களான இவை மையக்கருவுடன் தொடர்பு கொண்டதாகவோ தொடர்பற்றதாகவோ விளங்கும்
முக்கியமற்ற இரு காட்சிகள். இவைகள் மிகவும் பாரதூரமான கதைப் பின்னல்களுக்கு இடையே
சிறிது மெத்தெனப் போக்கில் வாசகரைக் கொண்டு செல்ல
பாவிக்கப்படும்; உபாயம். அகஸ்தியரும் இதில் கைதேர்ந்தவரே.
இனி இப்புதினத்தை முற்றும் பார்த்தபின் முன்னே குறிப்பிட்ட மானிட விடுதலைக்கு
‘எழுத்தும் ஓர் ஆயுதம்’ என்று போதித்த மார்க்சிய சிந்தனையாளர் அகஸ்தியர் எவ்வாறு
அதைச் செயல்படுத்தியுள்ளார் என்பது தெளிவு. பெரும்பாலும் ஒரு புதினம் போலச்
சென்றாலும் மார்க்சிய லெனினியச் சிந்தனைகளை பாத்திரங்களினூடே கருத்தாடல்கள்
மூலமும், நிகழ்வுகள் மூலமும் எடுத்துக் கூறுகின்றது.
சாதி,
மத பேதமற்ற மானிட விடுதலையில் இருந்து இலங்கைத் தேசம் வேறுபட்டு இன ரீதியாக
பிளவுபட்டு நிற்கும் இந்நேரத்திலும்
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு விடுதலைகாண விழையும் சகலராலும் வாங்கிப் படிக்க
வேண்டிய ஒரு நூல். மார்கழி 8 இல் நினைவு
நாளைச் சந்திக்கும் அன்னாரின் இலக்கிய தேட்டத்தில் மேலும் ஒரு பெரு மலர்.
இதற்காக அவரது குடும்பத்தினருக்கும்; குறிப்பாக
வாழ்வியல் - கால நெருக்கடிகளுக்குள்ளும் “என்னுள் வாழும் எனது தந்தை” எனத் தன்
தந்தையை நினைவு கூர்ந்து நூலை வெளியிட்டமைக்கு அவரது மகள் நவஜோதி ஜோகரட்னத்துக்கும்
தமிழ் இலக்கிய உலகு நன்றி செலுத்துகின்றது.
பதிப்பகம்: புதுச்சேரி கூட்டுறவுப்
புத்தகச் சங்கம், 17, 14வது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி - 605 008
மேலதிகத் தகவல்களுக்கு: நவஜோதி
யோகரட்ணம் navajothybaylon@hotmail.co.uk
6.12.2007
navajothybaylon@hotmail.co.uk |