logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                Editor: V.N.Giritharan
ஏப்ரல்  2003 இதழ்40 -மாத இதழ்
 விளம்பரம்
இங்கே விளம்பரம் செய்யவேண்டுமா? ads@pathivukal.com
Computer Image
Computer Training!
[விபரம்உள்ளே]
தமிழ்எழுத்தாளர்களே!..
அன்பானணையவாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள்.'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணையவாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசுஅஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்editor@pathivukal.comமூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்குஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழைவளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்குமுதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனைஅனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில்தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 
DownloadTamilFont
மண்ணின்குரல்.. 
மண்ணின் குரல் நூல் வெளி வந்துவிட்டது. நூலினை வாங்க விருப்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com
இணையத்தில்உழைப்போம்!
எமதுசேவை...
விரைவில்பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.

வர்த்தகர்களே! உங்கள் விளம்பரங்களைப் பதிவுகள்ில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.

பதிவுகளில் விரைவில் மின்னஞ்சல் நண்பர்கள் பகுதி தொடங்கவுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

ணையத் தளங்களை வடிவமைக்க , கிராபிக்ஸ் உருவாக்கஎம்மை நாடுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.     editor@pathivukal.com

இலக்கியம்
அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள் - 3

அமரர் எஸ்.அகத்தியர்

A.N.Kanthasamiஓர்இலக்கியவாதிபோல் கருத்தியலை ஜனநாயக பூர்வமாக வலுப்படுத்தும் பிரசார வேட்கை அவரிடம் இயல்பாகவிருந்தது.ஆனால், எழுதத்தெரியாத இலக்கியத்திற்கு நடையாய்  நடந்து விளம்பரம் தேடும்  பாமரத்தனவெறி அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் அவர் இலக்கியக் களத்தில் சுத்த வீரன் போல்இருந்தார். 1959இல் எழுதிய எனது 'எரிமலை' நாவலை அநக படித்து  விட்டு, "இது உடனே நூலாக வரவேண்டும். கணேசலிங்கனிடம் கொடுத்தால் இந்தியாவில்  போடுவார்" என்றார். 'பொற்காலம்'தாமதித்தே விடியும்'  என்பதும் சரிதான்.

அநகவின் 'மதமாற்றம்' நாடகம்  நான்  பார்த்ததில்லை.இலங்கை பூராவும் மதமாற்றம் நாடகம் பற்றியே பேச்சு.  பேர்னாட் ஷா நாட்கங்களுக்கு ஈடாக  விமர்சிக்கவும் பட்டது.  சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை நெறியாள்கை அந்நாடகத்திற்குமெருகூட்டியதாகவும் பேசப்பட்டது. 'மதமாற்றம்' விமர்சிக்கப்படாத பத்திரிகை இல்லை. அதனைப் பார்க்கும்போசிப்பினை இழந்தமை இன்றும் கவலை.

"அப்பேர்ப்பட்ட நாடகக் கருவின் மையக்கரு என்ன?" என்றுஒருநாள் அவரிடமே கேட்டேன். வழக்கம்போல் அவர் 'கல'த்துச் சிரித்தார். "நல்ல முழு முட்டாள்களின்படுபயங்கர முட்டாள்தனமே அதன் மூலக்கரு" என்று சுருக்கமாக சொன்னார். 

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த யுவதிகள் மதங்களால் ஒன்றுசேரமுடியாமல் தங்கள் வாழ்வை மதமாற்றம் செய்து ஈற்றில் தனிமைப்பட்டு வெறுமையாய்ப் போன அவலத்தைஅமபலப்படுத்துகிறதாக நாடகம் அமைகிறது. வாழ்க்கைக்காக மதம் என்ற  அறியாமையும்  போய் மதத்திற்காக   வாழ்வு என்றாகிவிட்ட   மூடத்தனத்தை அதில் அவர்நேர்த்தியாகக் கையாண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் வியந்தனர். பேர்னாட் ஷாவுக்குப் பின் இப்படியான கருவைக் கையாண்டு வெற்றி கண்டவர் அநக ஒருவர்தான் என்றும் விமர்சனங்கள் கூறின.

"இலக்கியம் கடைச் சரக்கல்ல" என்னும் நேர்மையான போர்க்குணம்மிக்க எழுத்தாளன் கூற்றுக்கு இலங்கையில்  நானறிந்தவரை இலக்கணமாகத் திகழ்ந்தவர் அநக ஒருவர்தான்.

குறிப்பு- அநகவின் இலக்கிய வாழ்கையைச் சொல்வதாயின்ஒரு நூல் எழுத வேண்டும். இது சிலேடையான ஓர் அவசரக் குறிப்பு மட்டுமே.

[ அடுத்த 'பதிவுகள்' இதழில் தொடங்குகிறது அந்தனி ஜீவா அநக பற்றி எழுதியுள்ள கட்டுரைத்தொடரான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்'. ]
 

அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள்- 1...உள்ளே
அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள்- 2...உள்ளே
 

நன்றி: தினகரன்ஆகஸ்ட் 18, 1991
[ அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி14. அதனையொட்டிய நினைவுக் கட்டுரை ]
முகப்பு|கவிதைகள்|கனடியத்தமிழ்லக்கிய  பக்கம்
காப்புரிமை :  வ.ந,கிரிதரன்2000