- த.சிவபாலு B.Ed. (Hons), M.A -

'கல்லும் முள்ளும் எனது எலும்புகளை உடைத்துவிடும் ஆனால் சொற்கள் என்னைப் புண்படுத்தாது' என்னும் பழய கதையை நீங்கள் யாராவது ஏற்றுக்கொள்ளுவீர்களா என்றால், இல்லை என்றே பதில் சொல்வீர்கள். ‘ஆயிரம் அம்புகள் தைத்த காயத்தைவிட ஒரு சொல்லினால் அடித்த அடி வேதனை தருவது அதிகம்” என்பதனை நடைமுறையில் நாம் காண்கின்றோம். ஏம்மால் சொல்லப்படும் சில சொற்கள் மற்றவரைச் சுடத்தக்கதாக அமைந்துவிட்டால் அந்தவார்த்தைகளால் ஏற்படும் தாக்கம் மிக அதிகமே. ஊடலில் ஏற்படும் காயங்களோ அன்றி வலியோ மிக விரைவாக அறிவிடும். ஆதனை மறந்தும் விடலாம், ஆனால் சொல்லம்பு படட இதயப் புண் ஆறாது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இதனையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் சால்புணர்த்திய வள்ளுவம் விபரிக்கின்றது. உலகம் பண்பாடு காணமுன்பே பண்பாடு கண்டது தமிழகம். புண்பாட்டுக்கருவூலமாகக் காணப்படும் வள்ளுவர் வாய்மொழி
தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு - குறள் 129)
என அழுத்தம் திருத்தமாகப பொருள்பொதியத் தந்துள்ளமையை நாம் கருத்திற்கொள்ளுதல் சாலப்பொருந்தும்.
நாங்கள் சொல்லும் ஒவ்வொரு சொற்களுக்கும் பொருளுண்டு. அதன் கருத்தின் ஆளத்தை அறியாது நாம் தடுமாறியாவது ஒரு சொல்லைப் பாவித்துவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். பண்புடன் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பெறுமதி உண்டு. பண்பு தவறி ஒருவர் ஒன்றைச் சொல்லிவிட்டால் அது கேட்பவரை மாத்திரமன்றி சொன்னவரையும் பாதிக்கும். எவ்வளவுதான் நல்ல கருத்தைச் சொன்னாலும் அவற்றுள் ஏதாவது ஒருசொல் தீமை தருவதாக அமையுமாயின் அது நன்மைபயப்பதற்குப் பதிலாக தீமையைத் தருவதாக அல்லது துன்பத்தைத்தருவதாக அமைந்துவிடும் என்பதனை
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகி விடும் (குறள்- 128)
என்று அவர் கூறும் வகையிலே எத்தனை நல்ல செயல்களைச் செய்பவனாக இருந்தாலும் அவன் சொல்லுகின்ற ஒரு சொல்லே அவனது நல்ல செய்கைகளினால் வருகின்ற பயன்களை எல்லாம் தீயதாக ஆக்கி விடும் என்பது சிந்தையில் கொள்வேண்டிய ஒன்றே.

எடுத்துக்காட்டாக எமது பண்பாட்டு வழக்காற்றில் கணவனின் பெயரைப் பெண்கள் கூப்பிடாமல் இருந்ததிலும் ஒரு பண்பை அவர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதனை நாம் அவதானிக்கலாம். எனக்குத் தெரிந்த இரு இளம் தம்பதிகளின் மூன்றுவயது மகன் தந்தையை அவனது தாய் செல்லப் பெயரால் அழைப்பது போன்று ஷஇராசா| என்று பெயர் சொல்லி அழைப்பதனை அவதானிக்க நேர்ந்தது. தாய் அடிக்கடி அழைக்கும் பெயரை பிள்ளையும் சொல்லத் தொடங்கியது. ஆரம்பத்தில் அதனை ஆமோதித்த பெற்றோர் தந்தையைப் பெயர்சொல்லி அழைப்பதனை நிறுத்த வழிதெரியாது தவிக்கின்றனர். அது பிள்ளையின் தவறு அன்று. பெற்றோரின் தவறே.
நீங்கள் கடலை நோக்கி ஒரு தடியை எறிந்தால் அது திரும்பிக் கரையை வந்து சேரும். அதே போன்று ஒரு பொருளை மேலே காற்றில் எறிந்தால் அது திரும்ப உங்களிடமே வரும். அவ்வாறானதே நீங்கள் உபயோகிக்கும் சொற்களும். கடும் சொற்களை உபயோகித்தால் கடுஞ்சொற்களே உங்களை வந்து சேரும். ஆனால் பணிவான, அன்பான, பண்பு நிறைந்த, மென்மையான இனிய சொற்களை உபயோகித்தால் அது உடனடியாக அல்லாவிட்டாலும் நாளடைவில் உங்களை பண்பான சொற்கள் வந்தடைவதை அறுவடை செய்யலாம். பண்புள்ளவரை நோக்கிப் பண்பான சொற்களே வந்துசேரும். சுதா மற்றவர்களைத் திட்டி, குறைபட்டுக் கொண்டு, வக்கிரமான வார்த்தைகளை வீசுபவர்கள் ஈற்றில் அவற்றைத் தாங்களே திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சமுதாயத்தில் இவர் இப்படியானவர்தான் என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் களாகின்றார்கள். எதைச்சொன்னா லென்ன எனச் சிலர் பேசாமல் இருப்பதனால் அது அவர்களின் இயலாமை என எடைபோடமுடியாது. அது அவர்களின் பலமும், ஆற்றலுமாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று - (குறள் 100) என்பதனை நோக்கும் போது இனிமை தரக்கூடிய சொற்களை விடுத்து நன்மை பயக்காத வன் சொற்களையோ அன்றி ஒவ்வாத சொற்களையோ உயயோகிப்பதனால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. மாறாக வெறுப்பையே மீதியாக பெற்றக் கொள்வேண்டி வரும்.
தொடர்பாடல் என்பது உணர்வுகள், மனவெழுச்சி, கலைவடிவங்கள், பொருட்கள், தொழில்நுட்பம், எழுத்து, வழிபாடு, எண்ணங்கள், சிந்தனைகள், வாய்மொழி, உடற்கூறு என்பன போன்று பலவற்றோடு தொடர்புடையன. இவையனைத்தும் பல்வேறு பரிணாமங்களில் விரிவடைவதனை அவதானிக்கலாம். ஏடுத்துக்காட்டாக நாம் மனவெழுச்சியினை பார்த்தால் அவை கண்ணீர், அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு, பயம், சோகம், கவலை, போன்றன வற்றின் மூலம் வெளிப்படுவதனை அவதானிக்கலாம்.
இவ்விதமாக தொடர்பு கொள்ளும்போது ஒவ்வொரு விடயமும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டiவாயக வியாபிக்கின்றன. நல்ல தொடர்பாடல் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பின்வரும் 12 முறைகளை பிள்ளைகள் பின்பற்றவேண்டும் என உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். அவவை கீழே தரப்படுகினறன:
1. தெளிவாகப் பேசுதல். யாருடன் கதைக்கின்றோமோ அவரை நேரடியாகப் (னசைநஉவ நலந உழவெயஉவ) பார்த்துப் பேசுதல் வேண்டும்.
2. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதனை சரியாகக் கவனித்தல் வேண்டும். அவர்கள் கதைப்பதற்கேற்ப விடையினைத் தரவேண்டும். யார் கதைக்கிறார்களோ, அல்லது பேசுகிறார்களோ அவர்களைப் பார்க்கவேண்டும்.
3. நல்ல வாய்ப்பான கண்பார்வையினை ஏற்படுத்துதல், இருவருக்கும் இயைபானதாக இருத்தல் வேண்டும். சுpரமத்தை ஏற்படுத்தும் பார்வையாக அது அமையக்கூடாது
4. மற்றவர் சொல்வதனை கூடியளவிற்கு விளங்கிக் கொள்ள முயற்சி செய்தல்வேண்டும். விளங்காதவிடத்து அவற்றை கேட்டுத் தெளிவாக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
5. கை, கண் போன்ற உடற் கூற்றுச் சைகைகளையும், அசைவுகளையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். சொற்களின் பொருட்களை விளங்கிக்கொள்ள மிகக் கவனம் செலுத்த வேண்டும். மிகுந்த அக்கறையோடும் உற்சாகத்தோடும் இருத்தல் முக்கியம்.
6. தேவைப்படும் போது திரும்பவும் நினைவூட்டுதல், மீள வலியுறுத்தல் இடம்;பெறவேண்டும் தேவையானால் தேவையானவற்றைக் கேட்கவும் கேட்பதைக் கொடுக்கவும் அல்லது சொல்லவும் தயங்கக்கூடாது.
7. நீங்கள் சொல்லுவதை ஏற்க வைக்க உதாரணங்கள் தருதல் வேண்டும்.
8. உங்களது கருத்துக்கள் கேட்கப்பட்டால் அதனைத் தரவேண்டும்.
9. கதைக்கும் போது மற்றவர்களுக்கும் இடம்தர வேண்டும்.
10. நீங்கள் யாருடன் கதைக்கிறீர்களோ அவர்களின் தரத்திற்கேற்ப உங்கள் பேச்சை மாற்றி யமைத்துக் கொள்ளவேண்டும். நண்பர்களுடன் கதைப்பதுபோன்று பெரியவர்களுடன் அல்லது புதியவர்களுடன் உரையாடுதல் சிலவேளைகளில் தவிர்க்கப்படல் வேண்டும்.
11. உங்களிடம் எதிர்பார்க்கப்படும் வேண்டுதல்களை அல்லது வினாக்களை நன்கு கவனிக்கவேண்டும். அவற்றிற்கு தகுந்த வகையில் உங்கள் பதில்கள் அமைய வேண்டும்.
12. பேச்சால் மட்டுமன்றி உணர்வுகள் மூலமும் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும். சிலவேளைகளில் சொற்களில்லாமலே சிலவற்றை உணர்த்த முடியும். (மகிழ்ச்சி, கவலை, துன்பம், விருப்பு, வெறுப்பு என்பன முக பாவத்தின் பிரதிபலிப்பாக அமையும் - துக்கம் தெரிவிக்கும் போது கேலிப்பேச்சு, சிரிப்பு என்பன தவிர்க்கப்படவேண்டும். துக்கத்தில் பங்குகொள்ளும் மனோ பக்குவம் முகத்தினால் மட்டுமே தெரியப்படுத்த முடியும்)
பிள்ளைகள் இவற்றை நல்ல முறையிலே பயின்று அதன் வண்ணம் ஒழுகுவதன் மூலம் நல்ல பேச்சாற்றலையும், பண்பையும் அவர்களுக்து அது பெற்றுத்தரும். உயர்ந்து பண்பான சொற்கள் தாமதமின்றி மேடைப் பேச்சுக்கு உறுதுணையாக அமையும், நாம் கதைப்பது வேறு மேடையில் பேசுவது வேறு என்பதனை பிள்ளைகள் உணர்ந்து நல்ல உரையாடலை, அல்லது தொடர்பாடலைக் கைக்கொள்ளும் போது அவர்கள் உயர்ந்த பண்பாளர்களாக வளர்த்தெடுக்கப்படுவார்கள் என்பதனைப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ளுதல் இன்றியமையாதது. புpள்ளைகளை வைத்துக்கொண்டு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் உபயோகிப்பது எம்மையறியாமலே நாம் அவர்களை தவறாக வழி நடத்துகின்றோம் என்பதே பொருளாகும். புpள்ளைகளுக்கு நல்ல சூழ்நிலையைத் தோற்றுவிக்கவேண்டும் என்பதன் உட்பொருள் இதுவெயாகும். இவற்றை நாம் நாளாந்தம் பின்பற்ற வேண்டும். வள்ளுவர் காணும் இன்சொல் பேசி உவப்புடன் வாழ எம் சிறார்களை வாழ வைக்க நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். 'கண்கெட்டபின் சூரிய வணககம்' பொருத்தமற்ற ஒன்றே!
ஆங்கிலத்தில் “Say what you mean and mean what you say” என்பது அனைவருக்கும் பொருத்தமான, தேவையான அறிவுறுத்தல் பொருளுணர்ந்து சொல்லுதல் வேண்டும் சொல்லுவதன் பொருள் உணர்ந்திருத்தல் வேண்டும் என்பது முக்;கியமான தொன்று. உங்கள் மகனுக்கு வெளியே செல்வதற்கு அரைமணித்தியாலத்திற்கு முன்னரே போதவற்கு நேரமாகிவிட்டது என்பதனை கூறுகிறீர்கள். நீங்கள் பின்னர் அரைமணித்தியாலத்திற்குப் பின்னரே தயாராகிறீர்கள். பி.ப. 9மணிக்கு திரும்பிவிடவேண்டும் என உங்கள் பதின்மப் பருவத்து இளைஞனுக்குச் சொல்லுங்கள். அவர் 10மணிக்கு வீட்டிற்கு வந்தால் ஒன்றுமே சொல்லாது அமைதியாக இருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால். அவன் நீங்கள் சொல்வதன் கருத்தை மறந்துவிட்டீர்கள் உன உணர்ந்துகொள்ளவைக்கும். உங்கள் மகனை இரவு வெளியே போவதை நிறுத்திவிடுவேன் என்று பயமுறுத்தினால் அது உங்களுக்குத்தான் விபரீதமாக அமையும். அவர் அவ்விதம் செய்தாலும் நீங்கள் எதுவம் செய்யாதிருத்தல் அல்லது கதையாதிருத்தல் நல்வழிக்குத் திருப்பும். சிறிது நேரத்தின் அல்லது காலத்தின் பின்னர், உங்களின் இளவல் நீங்கள் சொன்னதை உணர்ந்துகொள்ளவில்லை அல்லது கருத்திற்கொள்ளவில்லை என்பதனை அவர் உணரமுடியம். எனவே இந்த விடயங்களில் நீ;ஙகள் சொல்வதைக் கடைப்பிடிப்பவராகவும் இருத்தல் அவர்களை நல்வழிப்படுத்தும்.
பெற்றோர்களில் பலர் உணர்ச்;சிவசப்பட்டு வாயில் வந்தபடி திட்டித்தீர்க்கின்றார்கள், அந்த கொடிய வார்த்தைகள் பிள்ளைகளின் மனதில் மிகுந்த மனப்பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. இவ்விதமாக பிள்ளைகளுடன் எதைக்கதைக்கின்றோம் என்பதனை உணராது ஆத்திரப்பட்டு மிகக் காரசாரமான வன்மையான சொற்களைப் பிரயோகித்த பெற்றோரின் பிள்ளைகள் ஒன்றில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்கள், அல்லது தங்கள் அன்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தங்கள் ஒத்தகுழுவினருடன் சேர்ந்துகொள்கின்றார்கள். இதனால் பெற்றோரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இளைஞர்கள் விலகிச்செல்ல பெற்றோரும் காரணமாக அமைந்துவிடுவதற்கு அவர்களின் தொடர்பாடலகளில் உள்ள தவறுகளே காரணமாகின்றன.
சொற்களைப் பாவிக்கும் போது அதனை உணராது ஆத்திரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ அல்லது சிந்திக்காமலோ சொல்லும் சொற்றக்கள் தொடர்பாடல் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அமைதியாக சிந்தித்து என்ன கதைக்கப்போகின்றோம் என்பதனை ஒரு நிமிடமாவது சிந்தித்து எந்தவிதமான கட்டளையையோ அன்றி பலாபலன்களையோ எச்சரிக்கைகளையோ பற்;றிக் கதைக்காது சரியானவற்றைக் கதைப்பதனால் பலவிதமானசிக்கல்களைத் தவிர்த்துக்கொள்வதோடு இளைஞர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரவும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவம்முடியும்.
“வயதுவந்த பிள்ளைகளுடனான தொடர்புகளில் பல பெற்றோர்கள் சிக்கல்களை எதிர்நோக்குவதற்கு தெளிவற்றதும், குளப்பமானதுமான செய்திகளை அவர்களுக்குக் கிடைக்கச்செய்வதே” Denise Witmer (Parenting Guide) என்பவரின் கூற்றுக்கமைய பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளுதல் அவர்களின் வயதிற்கேற்ப மாறுபாடுடையதாக உள்ளது. உங்கள் பிள்ளைகளுடன் மிக நெருக்கமான தொடர்பு அல்லது பிணைப்பினைக் கொண்டிருக்கவேண்டுமாயின் அது தெளிவானதும் சரியானதுமான தொடர்பாடலைக் கொண்டிருக்கவேண்டியது அத்தியாவசியமானது. குறிப்பாக பதின்ம வயதினரிடையேயான தொடர்பாடல் இத்தகைய தன்மையைத் துல்லியமாகக் கொண்டிருக்கவேண்டிதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. நன் நடத்தைக்கான ஊக்குவிப்புக்கள், சகநலமான நற்பயன்கள், நம்பிக்கைகான அடித்தளம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பவும், குடும்பத்தில் மனமுறிவு, மனஅழுத்தம், வெறுப்பு என்பனவற்றை இல்லாதொழித்தல் போன்றனவற்றை மேற்கொள்ள மிகத் தெளிவான உறவு, தொடர்பாடல் என்பன முக்;கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பல பண்பாட்டு நிலைப்பாடுகளில் ஊறிய அல்லது பழக்கப்பட்ட பெற்றோருக்கு வயதான தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளுதல் இயலாத ஒன்று என நினைக்கின்றார்கள். அவர்களுடன் கதைப்பதை குறைத்துக்கொள்கின்றார்கள். வயது வந்த இளைஞர்களைத் தோழனாக மதித்து நடத்தப்படவேண்டியது அவர்களின் வயதுப்பருவத்தினரால் வேண்டப்படும் ஒன்று. இவ்விதம் அவர்களுடன் நடந்துகொள்வதனால் அவர்கள் நண்பர்கள்போன்று நெருங்கிப் பழகவாய்ப்பு ஏற்படும். அதனை ஏற்படுத்தவேண்டியவர்கள் பெற்றோரே.
உசாத்துணை:
1. Esay: ‘Communication with childern’, Denise Witmer, Parent Guidence councillor. 2005
2. The Developing Person, Through Childhood and Adolescence, Kathleen Stassen Berger. 1999
3. Educational psychology, Classroom Connections, Paul Eggen, Don Kauchak. 1994
4. Gleitman Basic Psychology, John Jonides and Paul Rozin. 1983
thangarsivapal@yahoo.ca