சென்னை; 17-01-2011 திங்கள் மாலை 5.30
மணி
யுகமாயினி நிவேதிதா
புத்தகப் பூங்கா இணைந்து வழங்கும் நூல்கள் வெளியீடும் ஆய்வுரைகளும்!
[ தகவல்:
chithan prasad] விரிவான விபரங்கள் ....உள்ளே
சென்னை;
21-01-2011
மனம் விட்டும் பேசுவோம்:
தினமணி நாளிதழ் / யுகமாயினி மாத இதழ் வழங்கும் மாதமொரு இலக்கியக்
கலந்துரையாடல் / விவாதம்.
கருத்தாக்கம்: இலக்கியச் சிந்தனை - ப. லட்சுமணன். விரிவான விபரங்கள்
...
உள்ளே
முத்துக்கமலம் இணைய
இதழைப் பாருங்கள்!
அன்புடையீர், வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். மாதமிருமுறை
புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ்
(http://www.muthukamalam.com/homepage.htm) 01-01-2011 அன்று
புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல சுவையான பகுதிகளுடன் முத்துக்கமலம்
தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முத்துக்கமலம் இணைய
இதழைப் பாருங்கள்! புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!! புதுமைப் படைப்புகளைப்
பதிவிட வாருங்கள்!!! முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
M. Subramani <msmuthukamalam@gmail.com>
கிழக்கு மாகாண வெள்ள நிவாரண நிதி: நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக்
கருத்தில் இயங்க ஆரம்பிக்கிறது!
- சாந்தி ரமேஷ் -
அன்புடையீர், 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக்
கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது
தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால்
நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம்
மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த
நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு
செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க
வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும்
தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை
சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். நமது இடைநிறுத்தம் பயனாளிகள் பலரைச்
சங்கடப்படுத்தியது. எனினும் எமது நடைமுறைச் சிக்கல்கள் நாம்
எதிர்கொள்ளும் அரசியல் தலையீடுகளை விளங்கப்படுத்தியதன் பின்னர்
மெனளமானாலும் அது அவர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாயிருந்ததை
உணர்ந்தோம்.
தொடர் மனப்போராட்டம் எம்மை நசுக்கும் சவால்களைத் தாண்டி இயங்குவதில்
உள்ள தடைகள் யாவற்றையும் விட்டு ஒதுங்குவதே சரியென ஒதுங்கிக்
கொண்டோம். ஆனால் நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற கிழக்கு மாகாணத்தில்
வாழும் பயனாளிகள் பலர் தற்போதைய கடும்மழையில் பாதிக்கப்பட்டு
அவலமுற்று வருவதையும் தமக்கான உதவிகளையும் வேண்டி நிற்கும் தொடர்
தொலைபேசியழைப்புக்கள் அவர்களது அவசர வேண்டுதல்களை ஒதுக்கி நம்மால்
ஒதுங்கியிருக்க முடியவில்லை.
இயற்கை கொடுத்திருக்கும் அழிவால் தண்ணீரில் மிதக்கும் எமது
உறவுகளுக்கு முன்னால் நாம் மீண்டும் தோற்றுப்போனோம். அவர்களுக்காக
மீண்டும் எங்கள் உதவிகளை கொண்டு சேர்க்க எமது செயற்பாட்டாளர்கள்
கிழக்கு மாகாணத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தின்
தேவையை கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற வெள்ள நிவாரணத்தை எமது
மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.
எங்கள் குழந்தைகளும் மனிதர்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள்.
அவர்களை மீட்டெடுக்க எங்கள் முயற்சிக்கு ஆதரவும் பலமும் தந்த
புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிகளை அவசரமாக வேண்டுகிறோம். விரைந்து
உதவிகளை வேண்டுகிறோம்.
- நேசக்கரம் செயற்பாட்டாளர்கள் –
உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.
தொடர்புகளுக்கு
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Shanthy Germany – 0049 6781 70723
Sri France – 0033 611149470
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com
வங்கியூடாக உதவ விரும்புவோர் -
NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein
Account Number : 0404446706,
Bank code 60010070,
Postbank, Stuttgart, Germany.
IBAN : DE31 6001 0070 0404 4467 06.
SWIFT CODE : PBNKDEFF.
"Lassen Sie uns unseren Brüdern und Schwestern helfen"
*Let us help our brothers and sisters*
www.nesakkaram.org
ramesh santhi <rameshsanthi@googlemail.com |