பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
வரலாறு: கனடா! |
கனடாவிற்கு வயது 143
- மாலினி அரவிந்தன் -
கனடாவின்
பிறந்த தினம் யூலை மாதம் முதலாம் திகதி ஒவ்வொரு வருடமும் கனடா
தினமாகக் கொண்டாடப்படுகிறது. 143வது பிறந்த தினம் இவ்வருடமும்
மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1867ம் ஆண்டு யூலை மாதம்
வடஅமெரிக்காவில் உள்ள அனேகமான மாகாணங்கள் ஒன்றாகச் சேர்ந்ததால்
கனடா என்ற நாடு உதயமானது. சென்றமாதம் யூன் 25, 26, 27ம்
திகதிகளில் அனேகமான உலகத் தலைவர்கள் கனடாவில் நடந்த பு - 20
மகாநாட்டிற்காகக் கனடாவிற்கு வருகை தந்திருந்ததும் உங்களுக்கு
நினைவிருக்கலாம்.
பிரித்தானிய இளவரசி எலிஸபெத் மகாராணியார் இவ்வருடமும் கனடாவிற்கு
வருகை தந்திருக்கிறார். அவருடன் 89 வயதான இளவரசர் பிலிப்பும்
வந்திருக்கிறார். கனடாவும் காமன்வெல்த் அங்கத்தவ நாடுகளில்
ஒன்றாக இருப்பதால் மகாராணியாரின் வருகை பழமையைப் பேணும் பலருக்கு
மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. யூலை மாதம் 7ம் திகதிவரை
இவர்கள் இங்கே தங்கியிருப்பர். அநேகமாக பிரித்தானிய அரச
குடும்பத்தினர் அவ்வப்போது கனடாவிற்கு வருகை தருவதுண்டு. சென்ற
வருடம் இளவரசர் சாள்ஸ்சும் காமிலாவும் வருகை தந்திருந்தனர்.
கனடாவிற்கு வருகை தந்திருந்த பிரித்தானிய மகாராணியார்
கனடாதினத்தில் மட்டுமல்ல, கனடிய கடற்படையின் நூற்றண்டு
விழாவிலும் கலந்து கொண்டார். கலிபாக்ஸ்சில் உள்ள கனடிய கடற்படைத்
துறைமுகத்திற்கும் மகாராணியார் விஜயம் செய்திருந்தார்.
துறைமுகத்தில் அணிவகுத்திருந்த கனடா, ஜக்கிய இராச்சியம்,
பிரான்ஸ், நோர்வே, பிரேசில், ஜெர்மனி, ஒல்லாந்து, டென்மார்க்,
அமெரிக்கா போன்ற நாடுகளின் கடற்படை கப்பல்களில் சீருடை
அணிந்திருந்த கடற்படையினர் மகாராணியாருக்கு அணிவகுப்பு மரியாதை
செலுத்தினர். பிரித்தானியாவில் இருந்து பல வருடங்களுக்கு முன்பு
கனடா வாங்கியிருந்த, தற்போது பாவனையற்ற நிலையில் இருக்கும்
நீர்மூழ்கிக் கப்பலையும் மகாராணியார் பார்வையிட்டார்.
பிரித்தானியாவில் இராணி மாளிகையில் காவலர்கள் கடமை மாறுவது போன்ற
நிகழ்ச்சி கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்றத்
திடலிலும் நடைபெற்றது. 84வயதான மகாராணியார், இதுவரை 22 தடவைகள்
கனடாவிற்கு வருகை தந்திருக்கிறார். 1997ம் ஆண்டும் கனடாவின்
பிறந்த தினக்கொண்டாட்டத்திற்காக உத்தியோக பூர்வமாக கனடா
பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார். இம்முறையும் சினோபேட்ஸ்
விமானங்கள் மேலாகப் பறந்து அணிவகுப்புச் செய்ய, 21 பீரங்கிக்
குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு, முப்படையினரின் அணிவகுப்பு
மரியாதையோடு மகாராணியார் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில்
மகாராணி சிகப்பு நிற ஆடை அணிந்து வெள்ளை நிறத்தில் தொப்பி
போட்டிருந்தார். சுமார் 70,000 பேர் வரை ஒட்டாவா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.
ஊரிலே தீபாவளி பண்டிகையின்போது எப்படி பட்டாசு, வாணவேடிக்கை
எல்லாம் நடக்குமோ அதே போல கனடாவிலும் கனடா தினத்திலன்று இரவு
வாணவேடிக்கை நடைபெறும். பாதுகாப்புக்கருதி வீடுகளில் பட்டாசு,
வாணவேடிக்கைகளுக்கு அனுமதி கிடைப்பதில்லை. குறிப்பாக ரொறன்ரோவில்
ஒன்ராறியோ வாவிக்கரையில் மிகப் பெரிய அளவில் இந்த வாணவேடிக்கை
நடைபெறும். ஏரிக்கரை என்பதால் உல்லாசப் படகுகளில் இருந்து
வானவேடிக்கையைப் பார்ப்பது மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த
நிகழ்ச்சி எம்மவருக்கு முன்பு யாழ் முற்ற வெளியில் நடக்கும்
தினகரன் விழாவின் வாணவேடிக்கையை அடிக்கடி நினைவில் கொண்டு வரும்.
கனடாவைப்போலவே, இலங்கையும் ஒரு காலத்தில் பிரித்தானியரின்
ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், எலிசபெத் மகாராணியார் 1954ம் ஆண்டு
ஏப்ரல் மாதம் இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தது
குறிப்பிடத்தக்கது. இலங்கை சுதந்திரம் பெற்று குடியரசாக
மாறியதால் தற்போது காமன்வெல்த் அங்கத்தவர் பதவியை இழந்துவிட்டது.
கோயில்களிலே அன்னதானம் கொடுப்பதுபோல இங்கேயும் கனடா தினத்திலன்று
இலவச உணவு பரிமாறுவார்கள். பல்கலாச்சார மக்கள் இங்கே வாழ்வதால்
பலவிதமான உணவு வகைகளும் இந்த விருந்துபசாரத்தின்போது இடம்
பெறும். அவரவர் விரும்பிய உணவுகளை எடுத்துச் சாப்பிடுவர். கனடா
தினத்திலன்று விடுமுறையாகையால் பல்கலாச்சார மக்களும் அந்த
விடுமுறையை மகிழ்ச்சியோடு அனுபவிப்பர்.
kuruaravinthan@hotmail.com
|
|
|
|
©>©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|