பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
இசைச் சொற்கள் மொழிபெயர்ப்பு _ தவறான
முயற்சிகள்!
- முனைவர் செ. அ. வீரபாண்டியன் (தமிழ்நாடு) -
தமிழ்
இசை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வரவேற்கத் தக்கதே.
அறிவுபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய இம்முயற்சிகளில் உணர்வு
பூர்வமான நிலைப்பாடுகள் எடுத்து, அவற்றின் அடிப்படையில் நடைபெறும்
முயற்சிகள் தமிழ் இசை வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும். குறிப்பாக,
பிற மொழிகளில் உள்ள இசைச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் உள்ள
தவறான முயற்சிகள் தமிழ் இசை அறிவிற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.
எந்த மொழியிலும் உள்ள இசை தொடர்பான சொல் ஒவ்வொன்றும் அந்த மொழியில்
அதற்கானப் பொருளுடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். அதைத் தமிழில் மொழி
பெயர்க்கும் போது, அதற்கான வேறு சொல்லைத் தமிழில் உருவாக்குவது
நிவர்த்தி செய்ய முடியாத பாதிப்பை (Irreversible Damage)
ஏற்படுத்தும். அதாவது வேறு மொழியில் உள்ள இசை தொடர்பான சொல்லுக்கும்
அந்த மொழியில் அதற்கானப் பொருளுக்கும் இடையிலானத் தொடர்பைத்
துண்டித்து, அந்த சொல்லின் பொருளைத் தமிழில் உள்ள சொல் குறிக்கும்
பொருளுடன் தொடர்பு கொள்ளச் செய்வதே அந்த பாதிப்பாகும்.
மொழிபெயர்ப்பில் பொருள் சிதைவு ஏற்படுவது மிகப்பெரும் தவறாகும்.
உதாரணமாக, "பண்' என்ற சொல்லின் பொருள் பற்றி பழந்தமிழ்
இலக்கியங்களில் கிடைக்கும் தகவல்களுடன், கர்நாடக இசையில்
பயன்படுத்தப்படும் "ராகம்' என்ற சொல்லின் பொருள் பற்றிய தகவல்களை
ஒப்பிட்டால் இரண்டிற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும்.
மேற்கத்திய இசையில் உள்ள ஸ்கேல் (Scale) (அதாவது, இசைக்கப்படும்
இசையில் என்னென்ன சுரங்கள் இடம் பெறும் என்ற தகவல்) என்ற சொல்லின்
பொருள் மட்டுமே "பண்' என்ற சொல் பற்றிய தகவல்களுக்கும், "ராகம்' என்ற
சொல் பற்றிய தகவல்களுக்கும் பொதுவாக இருக்கிறது. எனவே தமிழில்
"ராகம்' என்ற சொல்லை அப்படியே பயன் படுத்தும் போது தான்
மொழிபெயர்ப்பில் ஏற்படும் பொருள் சிதைவினைத் தவிர்க்க முடியும்.
மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஏற்கனவே தமிழில் உள்ள சொல்லைப்
பிறமொழியில் உள்ள சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதில் உள்ள
ஆபத்தை மேலேப் பார்த்தோம். இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதாக
நினைத்து,பிறமொழியில் உள்ள சொல்லுக்குப் பதிலாக புதிய தமிழ்ச் சொல்லை
உருவாக்குவதில் உள்ள ஆபத்தை அடுத்துப் பார்ப்போம்.
உதாரணமாக,
'Oxygen' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக தமிழில் "தீயகம்' என்ற
சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று தனித்தமிழ்ப் பற்றாளர்கள்
வலியுறுத்துகிறார்கள். ( "மொழிப் பார்வைகள்' þ திரு.முருகன் பக்கம்
59). ஆக்ஸிஜனின் ('Oxygen') பல பண்புகளில் ( எரிவது சம்பந்தப்பட்ட)
ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு "தீயகம்' என்ற சொல்லை உருவாக்கிப்
பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆக்ஸிஜன்
('Oxygen) என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தான 'ஞ' அது
சம்பந்தப்பட்ட சமன்பாடுகளில் குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது.
"தீயகம்' என்ற சொல் "தீ' மற்றும் "அகம்' என்ற ஏற்கனவே தமிழில் உள்ள
சொற்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு சொற்களும்
அவற்றிற்கானப் பொருட்களுடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். அந்தப்
பொருட்களின் செல்வாக்குடன் "தீயகம்' என்ற சொல் தமிழில்
பயன்படுத்தப்படும். ஆக்ஸிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது,
ஆக்ஸிஜன் ('Oxygen') என்ற சொல் உணர்த்தும் பல பண்புகளில் நாம்
விளங்கிக் கொண்டவையும் விளங்க வேண்டியவையும் பாதிப்பின்றி இருக்கும்.
மாறாக, "தீயகம்' என்ற சொல்லினைப் பயன் படுத்தும்போது, "தீ' மற்றும்
"அகம்' என்ற ஏற்கனவே தமிழில் உள்ள சொற்களின் பொருட்களின்
செல்வாக்குடன் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படும். எனவே ஆக்ஸிஜன் ('Oxygen')
என்ற சொல்லை அப்படியே பயன் படுத்தும் போது தான் மொழிபெயர்ப்பில்
ஏற்படும் பொருள் சிதைவினைத் தவிர்க்க முடியும். Oxygen என்ற
ஆங்கிலச் சொல் உச்சரிப்பிற்கும், தமிழில் ஆக்ஸிஜன் என்ற
உச்சரிப்பிற்கும் இடையே ஒலிச்சிதைவு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிக்
கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ் சொல்லுக்கு உரிய விதிகளை அந்த
ஆக்ஸிஜன் என்ற சொல்லுக்குப் பொருத்திப் பார்க்க
வேண்டிய அவசியமில்லை.
மேற்சொன்ன நிலைப்பாட்டிற்கான சான்று தொல்கப்பியத்திலேயே உள்ளது.
தொல்காப்பியம் "சூத்திரம்' என்ற சொல்லைப்
பயன்படுத்தியுள்ளது .(பொருள் 8:161,162) இது வடசொல் என்று தனித்தமிழ்
அறிஞர் திரு.முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
("மொழிப்பார்வைகள்' பக்கம் 172)
எனவே வடசொல்லைத் தமிழில் பயன்படுத்தத் தொல்காப்பியம் தடை
விதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு வடசொல்லைத் தமிழில்
பயன்படுத்தும்போது, ஏற்படும் ஒலிச்சிதைவினைப் பற்றி கவலைப்பட
வேண்டியதில்லை என்பதையும் தொல்காப்பியம் கீழ்வரும் வரிகளில்
தெளிவுபடுத்தியுள்ளது.
'' வடசொல் - கிளவி வடஎழுத்து ஒரீஇ.
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். '' ( சொல் 5:6 )
"ஒரீஇ' என்ற சொல்லிற்கு "நீக்கிய, தவிர்த்த' என்றே பொருள் கொள்ள
வேண்டும் என்றும், எனவே "வடஎழுத்து ஒரீஇ' என்றால்,
வடஎழுத்துக்களைத் தவிர்க்கவேண்டும் என்றும், பெரும்பாலான தமிழ்
அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். தமிழில் மேற்கொள்ளப்படும்
மொழிபெயர்ப்பு முயற்களில் ஏற்படும் தவறுகளுக்கு இந்த தவறான
நிலைப்பாடே காரணமாகும்.
"ஒரீஇ' என்ற சொல் இசை தொடர்பாகத் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்
பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, ஒரீஇ' என்பது தமிழில்
பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களுக்கு உரிய எழுத்துக்களை
மாற்றத்திற்கு உட்படுத்தி தமிழில் பயன்படுத்துவதையேக் குறிக்கும்
என்பதையும், அவ்வாறு மாற்றத்திற்கு உட்படுத்தி பயன்படுத்தும் போது,
ஓலி சிதைந்து வருகின்ற வடமொழிச் எழுத்துக்களுக்கு தமிழ்
எழுத்துக்களுக்கு உரிய இலக்கண நெறிமுறைகளைப் பயன்படுத்த
வேண்டியதில்லை என்பதையும், "ஓரீஇ - சில ஐயங்கள்' என்ற
கட்டுரையில் (www.musicresearch.in) கட்டுரையில் நான்
விளக்கியுள்ளேன்.
எனவே சமஸ்கிருதம்,தெலுங்கு,ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் உள்ள இசைத்
தொடர்பான சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது, தொல்காப்பியத்தை
("சூத்திரம்) முன்மாதிரியாகக் கொண்டு, ஒலிச்சிதைவைப் பற்றிக் கவலை
கொள்ளாமல், அப்படியே தமிழில் பயன்படுத்துவதே அறிவுபூர்வமான செயலாக
அமையும். அம்மொழிகளில் அச்சொற்களுக்கு உரிய பொருட்கள் அப்போது தான்
தமிழில் சிதைவின்றிப் பயன்படுத்தப்படும்.
pannpandi@yahoo.co.in
|
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|