பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
நலந்தானா? நலந்தானா? |
பற்கூச்சம் ஏன்? நீங்கள் செய்யக் கூடியது என்ன?
- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -
 குளிராக
எதுவும் சாப்பிட முடியுதில்லை என்று சொல்பவரா நீங்கள்? அல்லது காரம்
புளிப்புச் சாப்பிட்டால் பல் கூசுகிறது என்கிறீர்களா? ஆம் நீங்கள்
சொல்வது சரிதான் உங்களுக்குப் பற்கூச்சம் இருக்கிறது. பற்கூச்சம்
என்பது பாரதூரமற்றதாக அலட்சியம் பண்ணும்படி இருக்கலாம் அல்லது தாங்க
முடியாத வேதனையாகவும் இருக்கலாம். சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம்
நீடிப்பதாகவும் இருக்கலாம். பிரிட்சில் இருந்து எடுத்தது போன்ற
குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த
மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும். அதேபோல புளிப்பு அதிகம்
உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும்.
சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.
பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமானது. எமது
உடலின் மிகக் கடுமையான பகுதி இதுதான். உணர்வற்றது அதனால் வலி
தெரிவதில்லை.
ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன்
இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள
டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும்.
பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக்
குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும்
பற்கூச்சம் ஏற்படும்.
காரணங்கள்
மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள்
உபயோகிக்கும் முறையும்தான்.
பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை
(Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.
மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.
பல் துலக்கும் முறை
பல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.
அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக்
கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். பற்களை
மட்டுமில்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.
மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல
கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு
துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.
பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு
காரணமாகும்.
இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும்.
அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல்
கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.
முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு
போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.
முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய
ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.
அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம்
ஏற்படுகிறது.
முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது
விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது
பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது
இறுகி காரையாகப் (Tartar) படியும். இவ்வாறான காரை படர்தல் முரசு
கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய
காரணியாகும்.
பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக்
கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.
பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம்
ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும்.
நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப்
பாதுகாக்க Tooth guard உதவும்.
பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும்
பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.
அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.
சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும்
பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல
பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு
சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.
வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில்
(Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற
ஒருவர் தொடரந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம்
உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.
ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை
குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது
உசிதமானது.
பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.
வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன்,
உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம்.
கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு
நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.
மென்மையான பற்தூரிகையை உபயோகிங்கள்.
முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து
சீர்மையாகத் துலக்க உதவும்.
தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.
மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும்.
முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத்
துலக்கவும்.
பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக்
கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது
அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை
வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக்
கூடாது.
அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள்.
கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.
பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
|
|
|
|
©>©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|