ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம்.
* படங்கள் ஒரு தடவை அழுத்துவதன் மூலம் தெளிவாகப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம். சிவ வரதன் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார். களமாடுபவர்கள் ஆசி கந்தராஜா, பொன்ராஜ் தங்கமணி, ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி. பிற்பகுதி ஆட்டத்தில் நேயர்களும் கலந்துகொள்ளலாம்.




‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.



அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் வதியும் ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பில் நடைபெற்றது.
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.







தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









