க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்; விளையாடும் பூனைக்குட்டி!
(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
“இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான்" - - க.நா.சு
க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]
இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக்கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்துபவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவிதமாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் எண்ணிவிட லாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றியது].
எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.
க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தன எழுதுவதைப் பிரதியெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்ததைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது. அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக் கங்களைப் பிரதியெடுத்துக்கொடுப்பதும் வழக்கமாகியது. அவருடைய கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வதைப்போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக்கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.

(* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)
இது ஒரு எளிய முயற்சி. அடுத்தடுத்த தொகுதிகள் வெளியிடும்படியாகத் தொடரவேண்டும் என்று மனதார விரும்பும் ஒரு முயற்சி. இன்னும் சில கவிஞர்களையும் சேர்த்து இப்பொழுது 130 கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில் ஏறத்தாழ 300 பக்கங்களில் (மூல கவிதைகளையும் உள்ளடக்கி) தயாராகிவிட்டது. மூத்த கவிஞர்கள், இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் கவிஞர்கள், பெயர்பெற்ற கவிஞர்கள், அதிகம் தெரியாத கவிஞர்கள், நிறைய தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர்கள், தொகுப்பே இதுவரை வெளியிட்டிராத கவிஞர்கள் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் என்னுடைய முகநூல் நட்பினரில் எனக்கு அவர்கள் டைம்-லைனில் வாசிக்கக் கிடைத்து நான் மொழிபெயர்க்க விரும்பி அதைச் செய்வதற்கான நேரமும் கிடைத்ததில் நான் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு மட்டுமே இது. இன்னும் 400 கவிதைகளுக்கு மேல் மொழிபெயர்க்கும் பெருவிருப்போடு எடுத்துவைத்திருக்கிறேன். சீக்கிரம் செய்யவேண்டும். ஏற்கனவே மொழிபெயர்த்துவைத்திருப்பதில் இதேயளவு இன்னொரு தொகுதி யையும் கொண்டுவரவேண்டும்.

நூல்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்




For more than 30 years now, since the 80s I have been associated with the field of Neo-Thamizh Poetry and I can say with conviction that Poet Brammarajan is a pioneer in this realm, in more than one way. Form-wise and content-wise he has experimented a lot in this area. Anyone who objectively writes the history of the History of Neo-Thamizh Poetry cannot but mention Poet Brammarajan as a name to reckon with in this realm. Though I cannot claim to have understood the full texts and sub-texts of all his poems and the myriad lanes and by-lanes of the inner world through which the Poet's mind and imagination choose to undertake a lone, wholesome voyage, the Style and Content of his poems have given me lot of new openings and poignant moments. Latha Ramakrishnan.
- ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை. 





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









