பதிவுகள் முகப்பு

இலங்கையில் - தமிழ்ப் பண்பாடு – அனைத்துலக மாநாடு - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
14 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!

தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு  இலங்கையில்  யாழ்ப்பாணத்தில்  30-06-2025  தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும்    இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்  இம்மாநாட்டில்  தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி  யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும்,  கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக  இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு.  ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு.  ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக  பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும்  செயற்படவுள்ளனர். 

மேலும் படிக்க ...

யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம் - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
14 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* Photo by David Edelstein on Unsplash

மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது.

எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது.

யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது.

மேலும் படிக்க ...

கவிஞர் ஜெயதேவன் மறைந்தார்! கண்ணாடி நகரம் - கவிதைகள் - ஜெயதேவன் - ஒரு பார்வை! - பொன்.குமார் -

விவரங்கள்
- பொன்.குமார் -
நூல் அறிமுகம்
13 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் ஜெயதேவனின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவாக எழுத்தாளர் பொன்.சுகுமார் எழுதிய கவிஞர் ஜெயதேவனின் 'கண்ணாடி நகரம்' கவிதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பிது. இக்குறிப்பு கவிஞர் ஜெயதேவனின் ஆளுமையை நன்கு விபரிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், சுற்றுச் சூழற் பாதுகாப்பு, விம்ப வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் நவகாலத்து மானுடர், விவசாயத்தின் தேவை, புலம்பெயர்தலின் வலி எனக் கவிஞரின் பன்முகப்பட்ட பார்வையினை வெளிப்படுத்தும் குறிப்பு. கவிஞர் நவீன தொழில் நுட்பத்தை நன்கறிந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதையும் மேற்படி குறிப்பு புலப்படுத்துகின்றது.

கவிஞர் ஜெயதேவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அதே சமயம் கவிஞரின் எழுத்தை, ஆளுமையை இத்தருணத்தில் அறிந்து கொள்ளலின் அவசியம் கருதிப் பொ.குமாரின் முகநூற் குறிப்பையும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள்.காம்

மேலும் படிக்க ...

டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
11 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டால்ஸ்டாய்  இறைவன் போலவே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். உடல் உருக்குலைந்து, கசங்கி, சிறுத்துப்போய் இருந்தாலும் களைப்பினால் அல்லது சலிப்பினால் எழுந்ததாய் இருக்க வேண்டும்-உதடுகளைக் குழந்தைகள் போல் பிதுக்கி, குவித்துச் சீழ்கை அடிக்க முயன்று கொண்டிருந்தார்-எங்கோ ஒளிந்திருந்த ஒரு சிறு பறவையைத் தன் கூர்மையான கண்களால் தேடியப்படி. பற்றைகளும் அடர்ந்த தழைகளுமாய் இருந்த ஓரிடத்தில் இருந்து அந்த குருவி மறைந்தவாறே பாடியபடி இருந்தது. “உயிரை வாட்டி எடுக்கிறது. முழு உயிரையும் கொடுத்துப் பாடுகிறது… ஆனால் ஒரே ஒரு ராகம்… என்ன குருவி…”.

சிவந்த மார்பை உடைய இவ்வகை குருவிகளை நான் அறிவேன். சின்னஞ்சிறியவை. சொல்லத் தொடங்கினேன் - முக்கியமாக இக்குருவிகளில் இருக்கும் பொறாமை குணத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்டேன்.

“அப்படியா. பொறாமையா?-வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ராகம். இதற்குள் பொறாமை வேறு! மனிதனுக்கோ, அவனது இதயத்தில் ஆயிரம் ராகங்கள் உண்டு. அவனது ஆத்மாவில் இருந்து. இருந்தும் அவன் பொறாமை கொள்வதற்காகச் சபிக்கப்படுகின்றான்… எப்படி?”

“ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களில், அவ் ஆண்மகன் தான் சொல்ல நினைக்காத உண்மைகளைக்கூட அவளிடம் மனம் திறந்து ஒப்புவிக்கின்றான். அதன் பின்னர், அவன் அது குறித்தெல்லாம் முற்றிலுமாய் மறந்து போயிருப்பான். ஆனால், அவள்? அவள் அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பாள். ஏன்? தன்னைத் தாழ்த்திக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணம். பொறாமை இங்குதான் உருவாகின்றது. எங்கே தன்னைக் கீழ்மைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து பிறக்கின்றது. எனவேதான் உன் ஆன்மாவை இறுகப் பற்றுபவளே அபாயகரமானவள் - உனது ----- அல்ல”.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
10 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* அறிவித்தலைத் தெளீவாகப் பார்க்க, படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

தமிழ் இலக்கியத் தோட்டம்  25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்!   - தகவல்: அ.முத்துலிங்கம் -

2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்

இயல் விருது - சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)

புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)

அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)

கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)

மொழிபெயர்ப்பு :  நீட்ரா ரொட்ரிகோ   நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan) 

மேலும் படிக்க ...

பெண்களின் பாரிய பிரச்சினைகள்! - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
சமூகம்
08 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.

பெண்கள் பலம்:

ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

„நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்“

என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது.

மேலும் படிக்க ...

எழுநாவின் புத்தக மன்றம்! நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்! ஆதரவு நல்குவீர்! - தகவல்; சஜீவன் -

விவரங்கள்
- தகவல்; சஜீவன் -
நிகழ்வுகள்
08 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களின் கவனத்துக்கு...

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
07 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனுப்பும் படைப்புகளில் ஒழுங்காகத் தரிப்புக் குறிகள் இட்டு அனுப்புங்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற தரிப்புக்குறிகள் அற்று வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும். ஒருங்குறிகளில் படைப்புகளை அனுப்புங்கள். இயலாதவர்கள் பாமினியிலும் அனுப்பலாம். படைப்புகளுடன் புகைப்படங்களை, படங்களை இணைத்து அனுப்புபவர்கள் அவற்றுக்கான உரிமை இல்லாதவிடத்து அவற்றை அனுப்ப வேண்டாம்.

நிகழ்வுகள் அல்லது சிறப்புத் தினங்கள் பற்றிய படைப்புகளை உரிய கால அவகாசம் கொடுத்து அனுப்புங்கள். இறுதி நேரத்தில் அனுப்பினால் அவை நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.  ஏனைய ஊடகங்களில் வெளியானவற்றை அனுப்பாதீர்கள். ஊடகங்கள் குறிப்பிடாதவாறு கிடைக்கப்பெறும் படைப்புகளே ஏற்றுக்கொள்ளப்படும்.

யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
06 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* Photo by David Edelstein on Unsplash

இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும்  நாங்கள் தங்க வேண்டிய  ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன்.   இத்தனை  உயரமான மாடிக்கட்டிடத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்  தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி  இருக்கும் நாடு  யப்பான்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள்.  படைப்பில் நம்பிக்கையற்ற,  பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்!

இலகுவான வழி?

எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது  என்ற எனது கேள்வியை நாகரிகமாக  எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக்   கேட்டேன்.

அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை.

இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது.

அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை?

மேலும் படிக்க ...

லண்டன் பாரதியவித்ய பவனில் ‘சாஸ்வதம்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்
05 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

கலாநிதி ஜெயந்தி யோகராஜாவுடன் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைந்து ஆரம்பித்த ‘சாஸ்வதம்’ என்ற நாட்டிய அமைப்பு, அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.

 பிரதம விருந்தினர்களாக பாரதியவித்ய பவனின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீ நேக்கா நாயகர் அவர்களும், கலாமண்டலம் பாபறா நந்தகுமார், மற்றும் கலாமண்டலம் நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீ ஜெயந்தினி ஸ்ரீகரக்குருக்கள், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.


இந்தியா, கங்கேரி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து சிறப்பு நடனங்களை வழங்கியமையைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ரூபேஷ் கேஷி, சமிக்ஷா திவாகர், சுருதி பாக்கியராஜா போன்ற மற்றும் சில நாட்டியத் தாரகைகள் வித்தியாசமான கோணங்களில் தமது நாட்டியத் திறமையை வெளிக்காட்டி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

மேலும் படிக்க ...

சுடர் விட்டெரியும்’ தீப்பந்தம்’ திரைப்படம் - மாதவி சிவலீலன் -

விவரங்கள்
- மாதவி சிவலீலன் -
கலை
05 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.

அரசியல் படமாக இருந்தாலும் அதனைப் பிரசார நெடியின்றிக் கலைத்துவத்துடன் தர முயன்றுள்ளார்கள். பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்பு, வைத்தியர் பற்றாக்குறை, 2009 ஆம் ஆண்டு போர் வடுக்கள், எம்மவரே எமக்குத் துரோகிகள், அறிவுச்சோலை, ஆவணப்படுத்தலின் தேவையென பல வரலாற்று நிகழ்வுகளுக்கூடாக திரைக்கதை நகர்ந்து செல்கின்றது.

ஆரம்பத்தில் சிறுவனின் கையில் இருக்கும் புகைப்பட பிரதிச் சுருளின் தொகுப்பு, திரைப்படத்தின் நிறைவுப் பகுதியில் திருப்பு முனையாகக் காட்டப்படுவதும், மாநகரப் பொது நூலகத்தில் இருந்து, சிவப்பு நிற ஆவணத் தொகுப்புடன் வரும் சிவம் ஐயா அதனை மோட்டார் வண்டி பெட்டியில் வைப்பதும் அதனைப் பின் குளிர்சாதனப் பெட்டியில் பேணுவதும், புகழ், சிறுமியிடம் பென்சிலைக் கொடுப்பதும், குறியீடாக வரும் பூனை கிணற்றடியிலும் குளிரிசாதனப் பேட்டியில் இருந்து ஓடுவதும், யாழ் நூலகம் எரிந்த அன்று குழந்தை பிறப்பதுமாக வரும் காட்சிகளினூடாகக் கதைத் தொடர்ச்சியினைக் காண முடிகின்றது. அத்துடன் பல திருப்புமுனைகள உருவாக்கும் வகையில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவை கதைக்கருவிற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன. வரலாற்றை அறிந்தவர்களால் இத்திரைப்படத்துடன் இன்னும் இரசனையுடன் ஊடாட முடியும்.

மேலும் படிக்க ...

சமண சமயமும் திணைமாலை நூற்றைம்பதும்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
ஆய்வு
04 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைக் காலத்திலே சமண சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலை பெற்றிருந்தது. இந்த சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றி விட்டது.  சமணர்கள் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வது பேரறமாகக் கொண்டிருந்தர்கள். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டிலே சமண சமயம் வேரூன்றியது. சமண சமயம் தமிழின் சிறந்த சங்க இலக்கியங்கள் இலக்கண நூல்கள் அறநூல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.

சமணம்    

சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் போன்ற பெயர்கள் உள்ளன. சமணர் என்பதற்குத் துறவிகள் என்று பொருள். சமணம் என்பது துறவு எனப் பொருள்படும். சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக  வழங்கப்படுகிறது. மேலும் சமணத்திற்குப் பலன்களையும் கர்மங்களையும் வென்றவர் எனவும் கூறலாம். ஆதலால் தீர்த்தங்கரருக்கு ஜீனர் என்னும் பெயருண்டு. ஜீனரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது.

சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும், அதனால் இந்த மதத்திற்கு ஆருகத மதம் என்று பெயர் வழங்கப்படுகிறது. சமணக் கடவுள் பற்றற்றவர். ஆதலின் நீர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதனால் நிகண்ட மதம் எனப் பெயர் பெற்றது.சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது.ஆகவே இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் எனப்பெயர் உண்டாயிற்று.

சமண முனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று சமணர் இரண்டு விதமாகப் பிரித்துள்ளார்கள் . இவ்விரண்டினையும் சாவக தர்மம் ஆதிதர்மம் என்றும் கூறுவர். இல்லறம் என்பது சாவக தர்மம் மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம் உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கம் ஆகும்.

மேலும் படிக்க ...

டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (2) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
அரசியல்
03 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”

வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.

இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.

அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.

இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.

டால்ஸ்டாய் கூறுவார்:

“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”

மேலும் படிக்க ...

'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
02 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர். 
 
அண்மையில் 'ரொரன்றோ தமிழ்ச் சங்க'த்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற , இணைய வழிக் கலந்துரையாடலில் 'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை இது. இதனை 'இலக்கியவெளி டிவி' யு டியூப் சானலில் பகிர்ந்திருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
 
https://www.youtube.com/watch?v=Z812NvjjYoM 

 

மீள்பிரசுரம்: யாழ் பொதுசன நூலக நினைவுகள்.... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

 பொதுவாக  அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என்  மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட  வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை. 

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சிவராசா கருணாகரனின் தேசிய மக்கள் சக்தி பற்றிய கேள்விகள் சில பற்றி..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
01 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்  சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.

1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?  
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? 
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? 
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? 
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது”  என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். 
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.  அப்படியென்றால் எது உண்மை? 

இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)'  என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் அல்லது கருத்துகள் இவை

மேலும் படிக்க ...

குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை - முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா, பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. -

விவரங்கள்
- முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா, பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. -
இலக்கியம்
31 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.


முன்னுரை

குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.

வாழ்வியல் விழுமியங்கள்

படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

காதலும் அன்பும்

‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.

“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

மேலும் படிக்க ...

குரு அரவிந்தன்: வேடன் & பூமியில் விழப்போகும் சோவியத் விண்கலம்

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
31 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேடன்

"Voice of voiceless" - Vedan | Malayalam Rap. Official Music Video



வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.

ஹிரந்தாஸ் முரளி என்று சொல்லப்படும் 30 வயதான இவரது தந்தை கேரளாவையும், தாயார் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர் திருச்சூரில் பிறந்தார். இவர் தனது மார்பிலே ‘அ’ என்ற தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தைப் பெரிதாகப் பச்சை குத்தியிருப்பதால், தமிழ் இசைப் பிரியர்களின் பார்வை இவர்மீது திரும்பியது. பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கும் சேரவில்லை என்று அறிவிப்பாளர் குறிப்பிட்டார். கனடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்கூட இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப பாவனை செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.

ஒரு காலத்தில் மைக்கல் ஜாக்ஸன் எப்படி பரதநாட்டியத்தை தனது காணெளியில் கலந்து வெளியிட்டுத் தமிழர்களிடையே பிரபலமானாரோ, அதேபோல இவர் தமிழர்களின் பறை இசையைக் கலந்து கேரள மக்களைக் கவர்ந்து வருகின்றார். இதைவிட ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான இவரது பாடல் வரிகளுக்காக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை காணெளி மூலம் அவர் பிரபலமானார். ‘பூமி என்ஜன் வாழுனிதம்’ என்ற இசைத்தட்டு அடுத்து வெளிவந்ததும் இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
 
ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் எழுதியவர் அதை நிறுத்தி விட்டுத் தன் தாய்மொழியில் எழுத ஆரம்பித்தவர். காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதுவதில் காலனித்துவச் சிந்தனைகளும், அடையாளங்களும், மரபுக் கூறுகளும் உள்ளடங்கி இருக்கும் என்று நம்பியவர். காலனித்துவ ஆதிக்கம் காலனித்துவாதிகளின் மொழிகளை முக்கியப்படுத்துவதாகக் கருதினார். அதனால்தான் தாய்மொழிகளில் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அவை வேண்டுமானால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம் என்று கருதியவர்.

மேலும் படிக்க ...

குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
ஆய்வு
30 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

சங்க இலக்கியங்களில் எளிமையான மொழி நடையும், கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் உடைய நூல் குறுந்தொகை. அழகான சொல்லோவியங்களாக அதன் பாடல்கள் இன்றும் படித்து இன்புறத்தக்கன. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பரணர் பாடல்கள்

குறுந்தொகையில் பரணர் 17 பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தையும், தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் அல்ல குறிப்பட்டு தலைவி பெறுவதற்கறியவள் என்று புலம்புவதாகவும் அமைந்துள்ளன. இவரது பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள தன்மையும் அறியமுடிகிறது. குறிப்பாக நன்னன், பாண்டியர்களில் அதிகன், அழிசி மன்னனின் ஆர்க்காடு நகர் பற்றிய குறிப்பு ஆகியவையும் குறிக்கத்தக்கன.

நடை என்பது

நடை என்பதற்குப் பலரும் வரையறை வகுத்துள்ளனர். “எண்ணங்களையும் மனதில் எழும் உணர்ச்சிகளையும் உரிய சொற்களால் வடித்துக் கொடுக்கும் கலைத்திறனையே நடை எனலாம்” என்று இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார்.

நடை என்பது புலவன் தான் சொல்ல வரும் கருத்தைப் புலப்படுத்த பயன்படுத்தும் உத்திகளையும் அதன் மூலம் வெளிப்படும் கவிதையழகுமே நல்ல நடைக்குச் சான்றுகளாகும். அவ்வகையில் பரணர் பாடல்கள் சிறப்புடையன.

மேலும் படிக்க ...

கண்டித் தமிழ் மன்றம் வழங்கும் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
29 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டி தமிழ் மன்றம் வழங்கும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பேராசிரியர் துரை. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டித் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. எஸ். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இரு நூல்கள் வெளியீட்டுரையினை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களும். இந்தியா - இலங்கை ஒப்பந்தம் பற்றிய நூலின் அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களும் மற்றும் ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்களும் நிகழ்த்தினார்கள்

நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் அவர்களும்

மற்றும் ஏற்புரையும் நன்றியுரையினையும் பேராதனைப் பல்கலைக்கழகம். தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், நூல்களின் பதிப்பாசிரியர், கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களும் நிகழ்த்தினார்கள்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் சுதர்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சித் தொகுப்பினை பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சர்வேஸ்வரன் வில்வசரன் அவர்கள் வழங்கினார்.

இதன் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்லைக்கழக மாணவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க ...

புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல்.  ஆழ்ந்த இரங்கல்.

என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.

அப்பொழுதெல்லாம் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் அதனை ஒலிபெருக்கி கட்டப்பட்ட காரொன்றில் அறிவித்தபடி வருவார்கள். விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் அவ்விதம் திரைப்பட 'நோட்டிஸ்'களை விநியோகித்துச் செல்கையில் அனைவரையும் கவரும் குரலில்  அறிவித்தபடி வருபவர் அண்ணாமலை என்பவர்.  அவர்  அப்போது யாழ் மனோஹராவின் உரிமையாளர்களாக இருந்த ஒருவரின் உறவினர் என்று கேள்விப்பட்டதாக  ஞாபகம். உண்மை பொய் தெரியவில்லை. நான் அவரது இரசிகர்களில்  ஒருவன்.  அவரது  அறிவிப்புக் குரலினிமையை இரசிப்பவன்.

'பாரா வலலு'  பற்றிய அறிவிப்பில் அவர் காமினி கொன்செகரா, மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு என்று அறிவித்திருந்தார். பொன்செகாவை அவர் கொன்செகராவாக மாற்றியதை அப்போது பெரிதும் இரசித்தோம்.  அவர் உண்மையில் அவ்விதம் அறிவித்தது அவரது அறியாமையினாலா அல்லது அவ்விதம் உச்சரிப்பது 'ஸ்டைலா'க இருக்குமென்று எண்ணியதாலா என்பதில் இதுவரை தெளிவில்லை. ஆனால் அவ்விதமான அவரது அறிவிப்பில் ஈர்க்கப்பட்டவன்  நான் என்பதால் , என் நெஞ்சில் அச்சம்பவம் நிலையாக் நின்று விட்டது.

மேலும் படிக்க ...

இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்காவின் இனவாதத்துக்கெதிரான ஆரோக்கியமான அரசியல்! - நந்திவர்ம பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்ம பல்லவன் -
அரசியல்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    - இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா -

முகநூலில் எம்.எல்.எம். மன்சூர்   ( MLM Mansoor)  என்பவரின் இப்பதிவு என் கண்களில் பட்டது.  இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை.  இவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வேண்டுபவை. அதனால் பகிர்ந்து கொள்கின்றேன்.

தற்போது ஆட்சியிலிருக்கும் அநுரா குமார திசாநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ளன. இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கைகளிலிருந்த ஆட்சி முதன் முறையாக அடித்தட்டு  வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் கையில் சென்றிருக்கின்றது. மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றம். இதனை இதுவரை அதிகாரத்தைத் தம் கைகளில் வைத்திருந்த தமிழ், சிங்கள அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் பதிவு.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இனவாதத்தை அநுரா அரசால் பதிலுக்குப் பதில் தோலுரித்து காட்ட முடியும். மேலும் அநுராவின் பலம் அவரது வர்க்கத்துப் பின்னணி. இதனால் தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செயயும் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதையே அம்மக்களும் விரும்புவார்கள். எனவே அவ்வளவு இலகுவாக அநுரா அரசைப் பதவியிலிருந்து கலைக்க முடியாது. அவர்களுக்குப் பின்னால் ஒழுங்காக,அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமொனறு அணி திரண்டு நிற்கிறது.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 4 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

நான்கு நாட்களாய் மிகத் தீவிரமாக இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாய் இன்று முளைத்துள்ள பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே தொடர்வதாய் உள்ளன. அது “சிந்து நதி” சார்ந்த பிரச்சினைகளாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா ரத்து செய்யப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால், இவற்றை ஆழ நோக்கும்பொழுது, பிரச்சினைகள், இன்னும் பிரச்சினைகளாக உள்ளமை தெளிவாகின்றன.

சென்ற கட்டுரைத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக ட்ரம்பின் மதிநுட்ப கூற்றுக்களும், எப்படி அது, ஜெயசங்கராலும் மோடியாலும் நிராகரிக்கப்பட்டன என்பதனையும் விவரித்திருந்தோம்.

உதாரணமாக, “அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிந்து நாங்கள், ஜெர்மனி போன்ற பிறிதொரு நாட்டை, மத்தியஸ்தத்திற்கு அழைப்பதற்கு நாம் கனவில் கூட இடம் தருவதற்கில்லை”. ஜெயசங்கர் இவ்வாறு கூறுவது முக்கியமானது-மேல் வரும் நிலைப்பாட்டை நிரூபிக்கின்றது எனலாம் (25.05.2025). இதுபோலவே, மேலே கூறப்பட்ட, “சிந்து நதி” சார்ந்த இன்றைய பிரச்சினைகளுக்கு, இன்னமும் தீர்வொன்றைக் கண்டுப்பிடித்ததாக இல்லை.

பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் என்று தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளுமோ அன்றே “சிந்து நதியின்” பிரச்சினையும் தீர்க்கப்பட்டதாக இருக்கும். காஷ்மீர் என்பது, எம்மைப் பொறுத்தவரையில், தீர்மானிக்கப்பட ஒன்றுமே கொண்டதாக இல்லை. அது முற்றுமுழுதாய்த் தீர்வைக் கண்டுவிட்டது. அது, இந்தியாவினுடையது. இந்தியாவுக்கு உரித்தானது. இது குறித்து அளவளாவுதல் என்றால் அது, பாகிஸ்தான், காஷ்மீரை விட்டு, என்று-எப்போது, வெளியேற எண்ணியுள்ளது என்பதைப் பொறுத்தது மட்டுமே ஆகும் என ஜெயசங்கர் மேலும் குறிக்கின்றார். இக்கூற்றுடன், லெப்ரோவின் கூற்றும் தொடர்புபடக் கூடியதுதான். லெப்ரோவின், கூற்று: “இந்தியாவைத் துண்டு போட இடமளிப்பதா?” (24.05.2025).

இதுபோக, மேற்படி இந்தியா-பாகிஸ்தான் போரில், தொடர் வர்ணணையில் ஈடுபட்டிருந்த மேற்கின் ஊடகங்கள், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதை (சீண்டி விடுவதை), நோக்காக கொண்டு இயங்கின என்பதும், இது, இரு உலக ஒழுங்குகளின் போராட்டத்தையே பிரதிபலிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.

மேலும் படிக்க ...

எழுநா பதிப்பகம் வெளியிட்ட மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948)

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
26 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு'  (1621 - 1948) என்னும்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:

"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். 

தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.  |  +94 77 797 5029 "

வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!
  2. என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
  3. அமுதவிழாவைக்காணும் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் நினைவுகள்! பாரிஸில் அமுதவிழா! - முருகபூபதி -
  4. கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களின் பதிப்பிலான கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” - இக்பால் அலி -
  5. கண்டித் தமிழ் மன்றம் வழங்கும் தேசபக்தன் கோ.நடேசையரின் இரு நூல் வெளியீடு!
  6. பகைநாட்டின் அழிவுகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -
  7. திருக்குறள் கூறும் மறுபிறப்புச் சிந்தனைகள் - முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105 -
  8. அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -
  9. உங்கள் இணையத்தளங்களையும் இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்துங்கள்! - வ.ந,கி -
  10. கம்பராமாயணத்தில் பாவிக அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  11. இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 50 - "ராஜம் கிருஷ்ணனின் பன்முக ஆளுமை" - அகில் -
  12. கிடைக்கப்பெற்றோம்: எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் 'பாவை என்று சொல்லாதே என்னை' கவிதைத்தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -
  13. அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு! - வ.ந.கி -
  14. கணேஷின் கவிச்சரம்!
பக்கம் 24 / 129
  • முதல்
  • முந்தைய
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • அடுத்த
  • கடைசி