பதிவுகள் முகப்பு

தமிழக அரசியல் ஒரு பார்வை! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
23 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர் (1) பஹல்காம் (Pahalgam) நினைவுகள்! - நடேசன். -

விவரங்கள்
- நடேசன். -
பயணங்கள்
23 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2025 சித்திரை 22, புதன்கிழமை

மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம்  நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.

வழியோரமாக, ஒரு காவல்துறை அதிகாரி எதிரே நின்ற வாகனத்தின் கண்ணாடியை லத்தியால் தாக்கினார். சாரதி எதையோ விளக்க முயன்றபோதும், அவர் மீண்டும் வந்து அவரது முகத்தையே தடியால் அடித்தார். அந்தக் கோரக் காட்சியைச் சகிக்க முடியாமல் நான் முகத்தை வாகனத்துள் திருப்பிக்கொண்டேன்.

சில நிமிடங்களில் நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றடைந்தோம். பூட்டியிருந்த இரும்புக்கதவுகள் எங்கள் வருகைக்காகத் திறக்கப்பட்டன. உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் நின்றிருந்த பெண் ஒருவர் உடனே கவனத்தை ஈர்த்தார்—அவரது உடை ரத்தத்தில் தோய்ந்திருந்தது. இரு சிறிய குழந்தைகளைப் பிடித்தவாறு, திகைப்பும் துயரமும் கலந்து, “எனது கணவரைக் காணவில்லை!” என்று ஆங்கிலத்தில் அழுதுகொண்டிருந்தார்.

அவரது ஆங்கிலத்தில் ஒரு மலையாளச் சாயல் இருந்தது. அவளது முழுமையான கூற்றுகள் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது—அவளுக்கு நாம் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த வரவேற்பறையில், அந்தக் காட்சியின் பயங்கரத்தன்மை எங்கள் மூச்சை முட்டியது. நாங்கள் அமைதியாகப் பார்போது,  உடையிலிருந்த ரத்தக் கறைகள் கழுவ, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளியின் நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக விழா! - தகவல் - அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பாத்திமுத்து சித்தீக்கின் ‘ஒற்றைப் பறவை சிறுகதை வாயிலாக வெளிப்படும் சமூக; நிலைகள்! - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை , இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி. -

விவரங்கள்
- முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை , இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி. -
ஆய்வு
22 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

முன்னுரை

இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘ஒற்றைப் பறவை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலக்கியமும்; சமூகமும்

மனிதர்களின் அறிவுத் தோட்டத்தின் களமாக இயற்கை இருப்பது போலவே அவர்கள் கூடிவாழும் சமூக அமைப்பும் ஒரு களமாக இருந்து வருகிறது. அந்தச் சமூக அமைப்பு குடும்பம்,மதம், அரசு, பொருளாதார உற்பத்தி, கலை, இலக்கியம், நாடு, மொழி, இனம் முதலிய பல உட்கூறுகளால் ஆனது.

இந்த உட்கூறுகளுக்கிடையே நிலவுகின்ற உறவுகளையும் அந்த உறவுகள் எந்த அடிப்படையில் இயங்குகின்றன என்பதையும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் வெளிக்கொணருவதுதான் சமூக இலக்கியமாகும்.

“மனிதர் நடத்தை அல்லது சமுதாய நிகழ்வுகளை அறிவார்ந்த முறையில் விளக்கி புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியே சமூக இலக்கியமாகும்” என்பார் பாலின் யங் என்னும் சமூக இலக்கிய அறிஞர்.

“சமுதாயச் சூழ்நிலைகளில் மனித சமுதாயத்தை ஆராய்ந்து அதன் ஒழுங்குமுறை, நிறுவனங்கள், அறநெறி ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுவதே சமூக இலக்கியமாகும்” என்பார் ரம்மல் என்னும் சமூக இலக்கிய ஆய்வாளர். இதனடிப்படையில் பாத்திமுத்து சித்தீக்கின் ஒற்றைப் பறவை சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வோம்.

பிள்ளை பேற்றிற்காக தர்கா வழிபாடு

இசுலாத்தில் ஒரு சில சாரார் இடையே தர்கா வழிபாடு இருந்து வந்தமையைப் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் தம் ‘ஒற்றைப்பறவை’ சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு என்ன தேவையோ அதைத் தர்காவிற்குச் சென்று நேர்ந்து கொள்வதையும் தன் கதையின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பிள்ளைப் பேற்றிற்கான தர்கா வழிபாட்டை பின்வரும் கூற்றின் வாயிலாக அறியலாம்.

“இந்த வருஷம் கூட கோட்டைப்பட்டினம் ராவுத்தர் சாயபு தர்காவுக்கு நேர்ந்துகிட்டு இருக்கேன். பிள்ளை பொறந்தா அம்மியும் குழவியும் வாங்கிப் போடுகிறதா..” மனதில் பல்கீஸ் நன்னி நேர்ந்திருந்ததை வெளியே அறிவிப்புச் செய்து விட்டது.

“நன்னி, ஒன்னு கேக்குறேன்னு… கோவிச்சுக்காதே… போனவருஷம் நாகூர் காதர் அவ்லியா தர்காவுக்கு, கந்தூரி ஆக்குறதா நேர்ந்திருந்தியே அது கான்ஸலாயிருச்சா.. முத்துப்பேட்டை சேக்தாவூது அவ்லியா, கமுதி சகுபர் சாதிக் அவ்லியா தர்காவுக்குப் போய் இரண்டு, மூன்று நாளைக்கு டேரா போடுறேண்டு நேர்ந்தியே”1 என்ற கூற்றின் வாயிலாக பிள்ளைப் பேற்றிற்காக தர்கா வழிபாடு இருந்தமை அறியப்படுகின்றது.

மேலும் படிக்க ...

மாக்சிம் கார்க்கியின் தாய்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த முகநூற் பதிவொன்றிலிருந்து இந்த அட்டைப்படத்தினைப் பெற்றேன். மாக்சிம் கார்க்கியின் "தாய்'  நாவலுக்கான அட்டைப்படம்தான்.  பார்த்ததுமே 'தாய்' நாவலுக்குரிய இந்த அட்டைப்படம் பிடித்துப்போனது.  இதுவரை நான் பார்த்த தாய் நாவலின் அட்டைப்படங்களில் சிறந்ததாக இதனையே குறிப்பிடுவேன். ஏனென்றால் தாயின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியம் இது என்பதில் எவருக்கும்  மாற்றுக் கருத்துகளில்லை.

மேலும் படிக்க ...

வாசிப்பும் யோசிப்பும் : குந்தவையின் 'மாயை' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ குந்தவை - டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]

சுதந்திரன் பத்திரிகையின் , 1967  ஜனவரி வெளியான பொங்கல் மலருக்கான சிறுகதைப் போட்டிக்காக எழுத்தாளர்  குந்தவை சிறுகதை அனுப்பிப்  பாராட்டினைப்பெற்ற சிறுகதையாக , 24.2. 1967 இல் வெளியான சுதந்திரனில் பிரசுரமான சிறுகதை  'மாயை'.  வித்தியாசமான சிறுகதை  கதையின் நாயகி  புனிதம் பேராதனைப்  பல்கலைக்கழகக் கலைப்ப்பிட  மாணவி. அவள் தன் தோழிகள் இருவருடன் பொல்காவகைத் தொடருந்து நிலையத்தில் , காத்திருந்து  யாழ் மெயில் தொடருந்தில் ஏறுகின்றாள்.  அவளது தோழிகளில் ஒருத்தியின் பெயர்  மாயா. அப்புகைவண்டியில்  இன்னுமோர் இளைஞன் வந்து அவர்களுடன் இணைகின்றான். அவனை மாயா தம்பி என்று கூறுகின்றாள். அவன்  மாயாவுக்கும் , அவளுக்கு அருகில் தள்ளியிருந்த மனிதனுக்குமிடையில் அமர்கின்றான். 

புனிதம் தூக்கக் கலக்கத்தில் மாயாவையும், அவளருகில் வந்தமர்ந்த இளைஞனையும் அவதானிக்கின்றாள். அவர்கள் இருவரும் அக்கா தம்பி  போல் நடப்பதாகத் தெரியவில்லை என்றுணர்கின்றாள்.  உண்மையில் அவ்விதம்தான் அவர்கள் நடந்த்துகொண்டார்களா அல்லது புனிதம்தான் அவ்விதம் தூக்கக்கலக்கத்தில் உணர்கின்றாளா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க முடியாத வகையில் குந்தவையின் எழுத்து மிகவும் நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கின்றது.

மேலும் படிக்க ...

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் எழுதிய கடிதமொன்று - கொழும்புத் தமிழ் நாடகங்களைப்பற்றிய எனது நினைவுகள் ! - கே.எஸ்.சிவகுமாரன் -

விவரங்கள்
- கே.எஸ்.சிவகுமாரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
21 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இது கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரன் எனக்கு எழுதிய கடிதங்களிலொன்று. இதில் அவர் கொழும்பில் மேடையேறிய தமிழ், சிங்கள, ஆங்கில நாடகங்கள் பற்றியும், .நாடகத்துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், பற்றியும்  அத்துறைக்கான தனது பங்களிப்பு பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.  கே.எஸ்.சிவகுமாரனின் நினைவு தினம் செப்டெம்பர் 15. அதனையொட்டி இக்கடிதத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -


1960களிலும் 1970களிலும், நான் தீவிரமான நாடக விமர்சகராக இருந்தேன். கொழும்பு வடக்கில் நடந்த சினிமா-நாடகங்களையும், இராஜரத்தினத்தின் கொழும்பு தெற்குப் பகுதி நகைச்சுவை நாடகங்களையும் பார்த்திருந்தேன். தினகரன் வாரமஞ்சரியில் “மனத்திரை” என்ற தலைப்பில் நான் ஒரு காலம் கட்டுரை எழுதியேன். “தமிழ் நாடகம்” என்ற பெயரில் நடந்த சிரிப்பூட்டும் விளக்கங்களை நான் விமர்சித்தேன். காரணம் என்னவென்றால், நான் ஆங்கிலத்தில் நாடகம் மற்றும் அரங்கக் கலை பற்றிய பல நூல்கள் படித்திருந்தேன். அவற்றின் மூலம் நாம் பார்த்திருந்தவை பெரும்பாலும் இந்தியத் தமிழ் திரைப்படக் காட்சிகளை மேடையில் மீண்டும் உருவாக்குதல் அல்லது யாழ்ப்பாணச் சொற்கள் கலந்த நகைச்சுவைகளை மட்டுமே கொண்டிருந்தன என்பதைப் புரிந்தேன். 1953 அல்லது 1954-ல் TKS சகோதரர்கள் கொழும்புக்கு வந்து ஒரு தொழில்முறை நாடக நிகழ்ச்சி நடத்தினர். அவர்களது நிகழ்ச்சியில் நாடகத்தன்மையின் சுவடு காணப்பட்டது. இலங்கைத் தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படும் சோணலிங்கத்தின் ஓரிர்ண்டு  நாடகங்களையும் நான் பார்த்தேன்.

1961 அல்லது 1962-இல் மறைந்த எழுத்தாளர், மார்க்சிய சிந்தனையாளர் .அ.ந.  கந்தசாமி எழுதிய மதமாறம் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முற்றிலும் வேறுவிதமான அனுபவமாக இருந்தது. ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் நாடகத்தைப் போல. சிந்திக்கத் தூண்டும், ஆழமான நாடகமாக இருந்தது. அதற்கான விமர்சனத்தை நான் அப்போது Tribune இதழில் எழுதினேன் (இப்போது டிரிபியூன் வெளிவருவதில்லை).

மேலும் படிக்க ...

நெடுங்கவிதைகள் இரண்டு : சமர்ப்பணம்! & ஞாபகமழை! -இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
கவிதை
21 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. சமர்ப்பணம்!

ஊரின் வாசம்
அப்படியே காற்றில் கரையாமல்
வெட்டிவேரின்வாசம்போல,
மூக்கைத்துளைத்தது.
நல்லூர் தேரிலன்று சுடச்சுட வாங்கின
வறுத்த கச்சான்.அந்தவாசம்தான் அது.
வாங்கியது யார்? பேர்லின் உறவுகள்.

எந்தையும், தாயும்போல 
எமக்குக்கிடைத்த உறவுகள்.
ஒன்று கெங்காக்கா,
அடுத்தது சித்தப்பா. 
எங்களை நினைச்சு 
வாங்கிய கச்சான் பையது.
வாங்கி,ஊரிலிருந்து 
கவனமாக முதலில் 
பேர்லினிற்குக்கொண்டுவந்து,
பின்பு 
கட்டிக்காத்த அன்பைச்சுமப்பது போல, 
பீலவில்ட்'வரைக்கும்
சுமந்துவந்து தந்தபோது 
ஒரு வார்த்தை சொன்னா 
எங்கட கெங்காக்கா.
"இஞ்ச பார் சித்ரா,
உங்கள் இரண்டுபேருக்கும் பிடிக்குமெண்டு
ஊரிலயிருந்து உங்களுக்கொரு 
பொக்கிஷம் கொண்டந்திருக்கிறன்.
என்ன எண்டு சொல்லு பார்ப்பம்..?"

மேலும் படிக்க ...

யாழ் ' எங்கட புத்தகங்கள் இல்லத்தில்' இலக்கியமாலை! - தகவல்- வி.ரி.இளங்கோவன் -

விவரங்கள்
- தகவல்- வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
21 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்கள்…(பகுதி 2) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

*ஓவியம் - AI 

6

ஆனால், இவை அனைத்தும், கிட்டத்தட்ட, நேற்றைய அரசியலாகின்றது. அதாவது, இவை அனைத்தும் ஒரு  முனை உலக ஒழுங்கின், ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளன. இன்றோ, நிலைமை வேறுபட்டுள்ளது. அமெரிக்கா, தானே ஏற்படுத்திய கடந்த கால ஒப்பந்தங்களில் இருந்தும் அமைப்புகளில் இருந்தும், தனது சர்வதேசிய போலிஸ்காரன் என்ற கடப்பாட்டில் இருந்து வாபஸ் வாங்கியும் வெளிக்கிளம்பி ஒதுங்கிக் கொள்ளும் ஓர் சூழ்நிலையானது, இன்றைய உலகில், உருவாகி விட்டது.

உதாரணமாக, 2021இல், தனது முழு மூச்சில் ஏற்படுத்திய கால சுவாத்தியம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொள்வதாக 20.01.2025 இல் ட்ரம்ப் கைச்சாத்திடும் சூழ்நிலை தோன்றி விட்டது. (நான்கு வருடங்களில்).

இதனைப் போன்றே, அல்லது இதனை ஒத்ததாய், உலக வர்த்தக சந்தைக்கு (WTO) தான் வழங்க வேண்டிய பொருளாதார கடப்பாடுகளைத் தாமதித்து வழங்க போவதாகவும் இதேபோல் ஐக்கிய நாடுகளின் பல அமைப்புகளில் இருந்து விடைபெற்று கொள்வதாகவும் (UNESCO போன்றவை) அல்லது அவற்றின் பல அமைப்புகளுக்கு கொடுபட வேண்டிய நிதியைக் குறைத்தும் தாமதப்படுத்தியும் வழங்குவதாகவும் அல்லது UNHRC போன்ற மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் இருந்து 03.02.2025 முதல் முற்றாக விலகியும் தனது புதிய அரசியலை இன்று அமெரிக்கா கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்கா தனது அரசியல் முகத்தையும் மீள வடிவமைக்க வேண்டிய தேவையை இந்த மாறிய உலகானது ‘உருவாக்கி’ உள்ளது எனலாம். இனியும் சர்வதேச போலிஸ்காரன் என்ற முகத்துடன் வலம் வராமல் புதிய அரசியல் முகத்தைத் தரிக்க அமெரிக்கா இன்று நிர்பந்திக்கப்பட்டுப் போகின்றது.

மேலும் படிக்க ...

எனது வாசிப்பு அநுபவம்: எழுத்தாளர்: ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் சிறுகதைத்தொகுப்பு 'நெய்தல்நடை' - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
நூல் அறிமுகம்
17 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.

சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை வடிவத்தைக் கைவரப் பெற்றவர் ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்கள் என்று கூறலாம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான கருப் பொருட்களுடன் கதைகள் இடம்பெற்றிருப்பது; வாசகர் மனதில் ஒரு பல்சுவைக் கதம்பமாக இதன் நினைவுகளை மிளிர வைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள சில கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு கதைசொல்லி நேரடியாக விளக்கம் கொடாது அவர்களின் செயல்களினால் பாத்திரங்களின் தன்மைகளை அழகாகப் படைத்திருப்பது சிறப்பு. இவரின் கதைகளை வாசிக்கும்போது நாமும் உணர்வுத்தொற்றுக்கு உள்ளாகி விடுகிறோம். பல கதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சில கதைகள் உரையாடல் வடிவில் அமைந்திருப்பதால் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் நெய்தல்நடை என்ற கதை, மிகவும் அழகாகப் புனையப்பட்ட இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய கதை. மிகவும் மென்மையான உணர்வுகளால் நெய்யப்பட்ட கதை. இந்தக்கதை குறைந்த பாத்திரங்களுடன் ஒரு செய்தியை விளக்குவதாக அமைந்திருப்பினும் அதிலிருந்து நாம் பலவற்றைக் கற்கக்கூடியதாக உள்ளது. இராணுவப் பயிற்சி முகாமில் விமான இலத்திரனியலும் தொலைத் தொடர்பு குறித்துப் பயிற்சிகளை வழங்குபவர்தான் கதாநாயகன். அவன் திருமணமானவன் எனத் தெரிந்திருந்தும் அவனிடம் மயக்கம் கொள்கின்ற இளம்பெண். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் கதை. கதை உரையாடல் வடிவில் பல முடிச்சுகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. ஏதோ எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு கதையின் இறுதிப் பகுதி ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருக்கலாம். ஆனால் வித்தியாசமான கதையை வாசித்த அநுபவம் மனதை நிறைக்கிறது.

மேலும் படிக்க ...

முற்றாத இரவில் முற்றாத காதலால் வாடும் மானுட உள்ளங்கள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
16 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


"முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று..

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று"..   - கவிஞர் கண்ணதாசன் -

இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் ,  அனுபவத்தில் தோய்ந்த  காதல் போன்ற மானுடர்தம்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.  

'முற்றாத  இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.  

இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது  உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின்  தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.  

என்னை மிகவும் கவர்ந்த  கவிஞரின் படிமங்களில் ஒன்று 'முற்றாத இரவு'. இத்தகைய படிமங்கள் மிக்க, கவிஞரின் கவித்துவம் மிக்க மானுட  உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்  தமிழ் இலக்கியத்தில் அவரின் இருப்பிடத்தை நிரந்தரமாக்கிவிட்டன. சங்கக் கவிகளை இன்று நாம் நயப்பதைப்போல் , எதிர்காலச் சந்ததியினர் கவிஞரின் வரிகளையும் சேர்த்தே நயப்பர்.

மேலும் படிக்க ...

மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்கள்…(பகுதி 1) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
16 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*ஓவியம் - AI

அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது.  இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.

ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.

வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.

2

மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.

இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.

பல்கலைகழகங்களின் ஸ்தாபிப்பில் இருந்து, விண்வெளியை ஆட்சிப்படுத்துவது முதல், கிட்டத்தட்ட பதினொரு விமானம்தாங்கிக் கப்பல்களை உலகம் முழுவதும் சுற்றி வரச் செய்தும், கிட்டத்தட்ட 750 ராணுவ தளங்களை உலகெங்கிலும் 80 நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவானது, இப்படியாய், இன்று தனது உலக ஆதிக்கத்தைக் கட்டமைத்து உள்ளது.

மேலும் படிக்க ...

உயிர் சுருட்டி - ஒரு நிலவியல் வரைபடம்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
16 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உயிர் சுருட்டி கனிமொழி செல்லத்துரை என்பவரால் எழுதப்பட்ட நாவல். 2025 இல் வெளியான இந்நாவல் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளது. கதைக்களம் என்று சொல்லுவதை விட வேதாரண்யத்தின் நிலவியல் வரைபடமாக இந்நாவல் உள்ளது என்றால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது இது.

பொதுவாக நாவல்களில் ஒரு மையத்தைச் சுற்றியதாகக் கதைப்பின்னல் அமைந்திருக்கும். அதாவது, கதை அல்லது கத‍ப்பாத்திரம் என்ற ஏதாவதொன்றினை அது முதன்மை படித்தி அமையும். அதுவும் இம்மாதிரியான வட்டார நாவல்கள் என்ற வகைப்பாட்டில் உள்ளவை அதை இன்னும் கூர்மைபடுத்திக் கூறும்.

இதுதான் முதன்மை கதாபாத்திரம் என்று கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையின் தொடர் இயங்கியலை இந்நாவல் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனில், இந்நாவலில் கதாநாயகன், கதாநாயகி என்று யாரும் இல்லையா? கதை என்று எதுவும் இல்லையா? என்று நாம் நினைத்துவிட முடியாது. ஏனெனில் இதற்குள் தொடர்ந்து ஒரு கதை, அந்த கதையோடு தொடர்புடைய இன்னொரு கதை என்பதாக, கதைக்குள் கதை கதையோடு தொடர்புடைய இன்னொரு கதை என்று அது பின்னிப் பிணைந்துள்ளது.

நாவலுக்குரிய புனைவுத்தன்மையில் சிறிதும் குறைவில்லாமல் விளங்கும் இந்நாவலில் அழகியலைக் காட்டிலும் அரசியலை அதிகம் முன்னிருத்திச் செல்லுகிறது. அது கதாப்பாத்திரங்களின் வாழிலாகவும் கதாசிரியன் இடையீடுகளாகவும் நாவல் நெடுகிலும் பரவலாக வெளிப்படுகின்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை : எய்யப்படும் அம்புகள் - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
15 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே   இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க  , '' அதில்லையடி  ,நாம  ஒரே  பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் .  உனக்கும்  அவனுக்கும் பல வயசு  .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் .  அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது  நடக்கிறது . இப்பத்தைய பெடியள்  நீரிலே மூழ்கிற படகுகள்  மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற  முடியாத முடக்கு,  சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த  இனப்பிரச்சனை  .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .

'' அம்மா ,  'தாயே , நீ என்னென்னவோ எல்லாம் பேசுகிறாயே ‘’' கத்தினாள் .’’ நீ  அவனுக்கு சப்போர்ட் பண்ணுறே '' எனச். சிரிக்கிறார் . '' எடியே , அவனும் எனக்குப் பிள்ளை தான்டி . தம்பி இல்லையா ,  விளங்கிக் கொள்றது ஒன்றும் கஸ்டமில்லை . வயசு வித்தியாச வாட்டம் .   '' . அம்மா பேசுறது ஒன்றும்  புரியவில்லை  ,. எரிச்சலுடன் '' அப்ப , அவன் கனவிலே நான் நடனம் செய்கிறேனா ?'' என்று கேட்க . ''சரியாய் சொல்லி விட்டாய்  '' என்று  பெலத்துச் சிரிக்கிறார் . 

அவளுக்கு திடுக்கென்றது . திரைப்படக்கதையா கதைக்க   ''என்னம்மா ! இதெல்லாம்..'' என்று சிணுங்கினாள் . ''  உன்னிடம் இருக்கிற திறமை , நடனம் அவனை ஆச்சரியப்படுத்துகிறது .  அவனுள் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது .. அவளுக்கு நோக்கும் தெரியாது .  உன்னிடம் ஏதாவது பேசினனா ?  இருக்கமாட்டான் .. நீ சிறுமி  என்பது அவனுக்கு   புரியும்  . ‘’ .  ‘’ நான்  சிறுமியா , எட்டாம் வகுப்பு படிக்கிறேன்’’  என்று சொல்ல , முந்தி இங்கே படிக்கிற போதும் பார்த்திருப்பான் . நகரப்பள்ளிக்கு ...விலகிய பிறகு கற்பனை  பறக்கிறது போல .'' என்று மடக்கி னார் . யோசித்துப் பார்த்தாள் . ' முந்தி என்னைப் பார்த்தானா? ' தெரியவில்லை . அந்த பள்ளிக்கூடத்திலே புதிதாய்  சேர்ந்து   குட்டிப்பத்மினியாய் நடனம் ஆடிய ஒரே பொண்ணு அவள் ஒருத்தி தான் . அம்மாவிற்கு நடனம் வரவில்லை என்ற குறை . பிறந்தவுடனேயே தை , தை… என...பழக்க  தொடங்கி விட்டார் .  அப்ப  அவள் குழந்தை . அம்மா அதையே குறிப்பிட்டார் . '' நீ இப்ப , அழகாய் இருக்கிறேயாயடி '' . ' பெண்ணாகி விட்டால்… முறைத்து , முறைத்துப் பார்ப்பினமோ ?' கோபமும் வருகிறது .

மேலும் படிக்க ...

துரைராஜா கணேஷ்வரன் கவிதைகள்!

விவரங்கள்
- துரைராஜா கணேஷ்வரன் -
கவிதை
15 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

கறுப்பு ஜூலை

மரண​ வாடையும்
அகதி அவலமும்
லங்கா ரத்னாக்கப்பல்
கறுப்பு ஜூலையை
கண் முன்னே நிறுத்தும் .

காமமும் கொடூரமும்
காடைத்தனமும்
தலை கொண்ட​ நாட்கள்
மனிதத்தை இன்னும்
கேள்வி கேட்கும் .

வரலாற்றுச் சிதைவுகளுக்குள்ளே
வாழும் மனிதர்கள்
பதியப்படாத​ புத்தகங்களாய்ப்
புதைந்து
போய் விடக் கூடாது .

ஆவணங்களுடன்
ஆதாரமாய் 
மீண்டும் எழுவோம்  !

தமிழ் வாழ்க​ !

தமிழ்க் கலாச்சாரம் என்று 
செய்யப்படும் நிகழ்வுகளில்
தமிழ் அருகி வருகிறதைத் தான் 
காண​ முடிகிறது .

அதிசய​ மானிடனே

யார் , யார் மீதோ கோவம் 
கொள்வதாய் நினைத்து
உன் முகத்தை ஏன்
அகோரப்படுத்திக் கொள்கிறாய்?
அதன் பயன் அறியாயோ !

ஆடம்பரங்களை 
தேவைகளாக​ எண்ணும்
நீ 
அடிப்பதைத் தேவைகளுக்கு 
அல்லல்
படுபவர்களை 
மறந்து விடுவது ஏனோ?

மேலும் படிக்க ...

மானுட அவதானிப்பும், சமுதாயப் பிரக்ஞையும் மிக்க எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் கதைகள் .. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்  ரஞ்ஜனி  சுப்ரமணியத்தின் சிறுகதைத்தொகுப்பான 'நெய்தல் நடை' தற்போது ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு நான் எழுதிய அணிந்துரை இது. 


ஒருவகையில் சிறுகதையை இவ்வுலகைப் பார்க்கும் ஜன்னல் என்றும் கூறலாம். அந்த ஜன்னலூடு வெளியே விரிந்து கிடக்கும் 
உ லகைப் பார்க்கின்றோம், வியக்கின்றோம். உணர்கின்றோம. புரிந்து கொள்கின்றோம். அந்த உணர்தல் பலவகைப்பட்டதாக  இருக்கும். இவ்வகையில் சிறுகதை ஒவ்வொன்றையும்  ஒரு ஜன்னல் என்று உருவகிக்கலாம்.  இத்தொகுப்பில் பல ஜன்னல்கள் இருக்கின்றன. இந்த ஜன்னல்களைக் கொண்டு இச் சிறுகதைத் தொகுப்பென்ற மண்டபத்தினை அமைத்திருக்கின்றார் எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியம்.  இந்த மண்டபத்தின்  ஜன்னல்கள் , ஜன்னல்களுக்கு வெளியே விரிந்து கிடக்கும் உலகை, அங்கு வாழும் பல்வகை மாந்தரை, அவர்தம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள எம்மைத்தூண்டுகின்றன. மருத்துவராக, மானுடராக ,அவர் அன்றாடம் கண்டு அறிந்த, அவதானித்த  உலகை,  சக மாந்தரை  , அவர்தம் வாழ்வை அவதானித்து, அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கொண்டு ஜன்னலொவ்வொன்றையும்  உருவாக்கியுள்ளார்  ரஞ்ஜனி  சுப்ரமணியம்.  சமுதாயப் பிரக்ஞை மிக்க ஜன்னல்கள் அவை.

ரஞ்ஜனி  சுப்ரமணியம்  மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  அதன் பின்னரே அவர் எழுதத்தொடங்குகின்றார். குறுகிய காலத்தில் புனைவு, திறனாய்வு இரண்டிலும் தன் கவனத்தைத்திருப்பிப் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்கு முக்கிய காரணங்கள் அவரது தீவிர இலக்கிய வாசிப்பும், அவர் அகத்தில் எந்நேரமும் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் இலக்கிய உணர்வும்தாம் என்றே  உறுதியாக நம்புகின்றேன். 

மேலும் படிக்க ...

'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!

விவரங்கள்
- திலகபாமா -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57 

செப்டம்பர் மாத சந்திப்பு! நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்!  சிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்! பாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி 

5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு  நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்  பற்றிய”   ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில்  தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது  என்கின்ற சூழலில் தான்   எழுத்து பற்றிய என்  விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு  நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம்  இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது. 

வாழ்வியலில்   இருளும் ஒலியும் இரண்டரக் கலந்திருப்பினும் இருளை வெல்வதற்கான போராட்டமே மனிதனது அப்படியான போராட்டத்தையும் அதன் வலிகளைப் பேசுவதன் மூலம் போரட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுமே இலக்கியம். ஆனானப் பட்ட தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைகையிலேயே  கூட விசம் வருகின்றது. இலக்கியத்தின் புதிய போக்குகள் தோன்றும் போது அதன் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும்  இருக்கும்.. ஆனால் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் முழுமையாக ஆக்கிரமிக்கப் பார்க்கின்றன. வெளிப்படும் விசத்தை அள்ளி விழுங்கி தனை பலி கொடுக்க ஒருவர் முன் வந்தால் மட்டுமே அமிர்தம் என்பது சாத்தியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. நடக்க இருக்கின்ற போரில் எனக்கு முன்னால் முப்பாட்டனாரும், பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளும் கூட  இருக்கின்றார்கள்.. என்ன செய்ய எல்லாம் கௌரவ சேனையி;ல்  இருக்க உணமையை நிலை நிறுத்த, உணர வைக்க வில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. 

மேலும் படிக்க ...

'பதிவு'களில் அன்று - சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! ஒரு குறிப்பு! - றஞ்சி (சுவிஸ்) -

விவரங்கள்
- றஞ்சி (சுவிஸ்) -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50 

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும்  பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல்  நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன. 

வழமைபோல் சுய அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. ”தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கலாச்சாரமும் பெண்களும்” என்ற தலைப்பில் பிரான்ஸைச் சேர்ந்த பரிமளா தனது கருத்தை வெளியிட்டார் அவர் கூறும்போது சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கின்றோம், வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட. குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், ஆபிரிக்கப் பெண்களைவிட இந்திய, இலங்கைப் பெண்கள் கலாச்சாரத்தினால் கூடுதலாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்திய இலங்கைப் பெண்கள் 'தாலி' என்ற பதத்தை வைத்து சென்ரிமென்டாகவும் பெண் ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். பண்டைய காலத்தில் மாடுகளை தங்களுடைய மாடுகள்தாம் என அடையாளம் காண்பதற்காக நிறம் பூசிய கயிறுகள் மூலம் கட்டுவர். அதேபோல்தான் இந்தத் தாலியும் என்று கூறினார். கலாச்சாரத்தை பெண்கள் மட்டும்தானா கட்டிக்காக்க வேண்டும்  என்றும் கேள்வி எழுப்பினார்.   தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தாய்வழிச் சமூகம் மாறி தந்தைவழிச் சமூகம் வந்தபின் அவர்கள் பெண்களை அடக்குவதற்காக தாலி, சாமர்த்திய சடங்கு, பொட்டு பூ நகை போன்ற அடையாளங்களை வேண்டுமென்றே கலாச்சார சின்னங்களாக திணித்து பெண்களை அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பா¢மளா. கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் அமைந்தது. 

மேலும் படிக்க ...

'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் நிகழ்வுக் குறிப்புகள் (1)

விவரங்கள்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் யூலை 2004 இதழ் 55

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புலகம்!  

ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. 

கூட்டத்தில் மா.அரங்கநாதனின் படைப்புலகம் பற்றியும், அவருடைய 'மூன்றில்' சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கியப் போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு.க.நா.சு ஆசிரியராக இயங்கினார். 'மூன்றில்' சார்பில் நடத்தப்பட்ட மூன்றூ நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'First of Kind' என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயற்படாமல், ஒரு சிறு பத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. கோபிக்கிருஷ்ணனின் 'சமூகப்பணி- அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி' மற்றும் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அழுவலகம் இலக்கியவாதிகள்  இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்றால் மிகையாகது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் நினைவு கூர்ந்தார்கள்.

எழுத்தாளர் அமரந்தா உரையாற்றுவதையும் அருகில் 'வெளி' ரங்கராஜன், எழுத்தாளர் பாரதிராமன், கவிஞர் ஞானக்கூத்தன் உரையினைச் செவிமடுப்பதையும் காண்கிறீர்கள்.

மேலும் படிக்க ...

பண்டிதர் வி.சீ.கந்தையாவின் ”மட்டக்களப்புத் தமிழகம்” பாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.... - இன்பவல்லி -

விவரங்கள்
- இன்பவல்லி -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48

உடல் உழைப்பாளர்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகளவில் கொண்ட பாரிஸ் - 18 இல் கடந்த 16-11-2003 அன்று மட்டக்களப்பு தமிழகம் எனும் வரலாற்று நு¡ல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வணிகரீதியாக மையங்கொண்டுள்ள லாசப்பல் எனும் இடத்தில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயத்தில் சுமார் மாலை 5மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது. ”எக்ஸில்” வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக அமைந்த மட்டக்களப்பு தமிழகம் ஜரோப்பாவில் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது தடவையாக சுவிஸ் -சூரிச் நகரில் 12.10.2003 வெளியீட்டு வைக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு கிழக்கிலங்கை தோறும் ஆலயங்களிலும், பண்டைத்தமிழ்ப் புலவர்களிடத்திலும் அடங்கிக்கிடந்த கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு விளக்கவுரையுடன் முதன்முதலில் ”மட்டக்களப்பு மான்மிகம்” அச்சுருவம் பெற்றது. இதையடுத்து வீ.சி.கந்தையா பண்டிதர் அவர்கள் 1949 இலிருந்து எழுதிவந்த ஆராய்ச் சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முழுமையான ஒரு வரலாற்று நு¡லாக 1964 இல் ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் நு¡ல் வெளியிடப்பட்டது. தமிழர் குடியேற்றம், நாட்டுக்கூத்துகள், பாடுமீன், புலவர் பரம்பரை, பண்டைய வழிபாட்டுமுறைகள், மந்திரவழக்கு, அரசியல் வரலாறு என்று குறித்த சமூகத்தின் சகலவித அசைவியக்க அம்சங்களையும் ஒன்றுசேர்த்து தொகுக்கப்பட்ட இந்நு¡ல் எதிர்கால ஆய்வுகளுக்கு சிறந்தவொரு ஆதார மையமாகும். 

மேலும் படிக்க ...

'பதிவுக'ளில் அன்று: சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கு! - நா.முத்து நிலவன் -

விவரங்கள்
- நா.முத்து நிலவன் -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50 

அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும்  ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.

பல்கலையின் துணைவேந்தர் திரு சொக்கலிங்கம் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவரும், அறியப்பட்ட தமிழறிஞருமான- 'அறியப்படாத தமிழகம்' முதலான நூல்களின் ஆசிரியர்- முனைவர் தொ.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அந்த மூன்று நாள்களிலும் தமிழறிஞர்கள்/ஆங்கில இலக்கிய விமர்சகர்கள்/ தமிழ் இலக்கிய முன்னோடிகள், பெரும் பேராசிரியர்கள் - (Senior Doctorates), நெல்லை, மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுவை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் ஆகிய 7 பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த சுமார் 36 மூத்த பேராசிரியர்கள் ஆய்வுரைகளை (Research Papers) முன்வைத்தனர். (இதில் நான் மட்டும்தான்  பள்ளிக்கூட வாத்தியாருங்கோ!)

அந்த மூன்று நாள்களிலும் நெல்லை ப.க.வைச்சேர்ந்த -பல்வேறு கல்லூரிகளின் ஆங்கில மற்றும் தமிழ்த்துறை சார்ந்த- 60 பேராசிரியர்களுடன் அங்கேயே முதுகலை படிக்கும் சுமார் 60 மாணவர்களும் பார்வையாளர்களாக - விவாதங்களிலும் - கலந்துகொண்டனர்.  ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள், ஒவ்வொரு வேளையும் இரண்டு அமர்வுகள், ஒவ்வொரு அமர்விலும் ஒரு தலைவர், ஒரு பொருண்மை உரை(Key Note), + இரண்டு அல்லது மூன்று ஆய்வுரை, ஒரு கருத்துரை என, 5 அல்லது 6 பேர். எனும்படியாக,

1.கட்டமைப்பியம் , கட்டுடைப்பியம், 
2.புதுமையியம் , பின்னைப் புதுமையியம்,
3.மார்க்சியம் , பெண்ணியம் , 
4.காலனியம் , பின்னைக் காலனியம்,
5.நாடகம் - நாட்டார் இலக்கியம், 
6.தலித்தியம் , மறுகட்டமைப்பியம் 
ஆகிய 6 அமர்வுகள் நடந்தன. 

மேலும் படிக்க ...

'பதிவுக'ளில் அன்று: கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களுக்கு கனடாவில் ஒரு நினைவு விழா! - N.சிவகுருநாதன் (சட்டத்தரணி, இலங்கை) , ரொரன்ரோ, கனடா -

விவரங்கள்
- N.சிவகுருநாதன் (சட்டத்தரணி, இலங்கை) , ரொரன்ரோ, கனடா -
'பதிவுகளில்' அன்று
14 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


[செப்டம்பர் 2003 இதழ் 45 -மாத இதழ்] கனடாவில் கோடைகாலம் தொடங்கிவிட்டால் போதும், அதிலும் சனி, ஞாயிறு தினங்கள் என்றால் கூறத் தேவையில்லை. தமிழர்களின் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஒரே நாளில், ஒரே நேரத்தில் பல இடங்களில் வைபவங்கள். புகழ் விரும்பிகள், போலிப்பட்டம் விரும்பிகள், பந்தம் பிடிப்பவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் நடாத்தும் விழாக்களுக்கு மத்தியில் சமூகத்தை அறிவுபூர்வமாக முன் தள்ளக் கூடிய விழாக்களும் நடைபெறத்தான் செய்கின்றன. இவ்வாறான விழாக்களில் பங்குபற்றுவோரின் தொகையையும் எண்ணிவிடலாம். இவ்விழாக்களுக்கு மத்தியில் அறிவும் ஆக்கபூர்வமும் கொண்ட அதேவேளை 300க்கு மேற்பட்ட ஆத்மார்த்தமான சபையோரைக் கொண்டு கடந்த 2003 ஆவணி மாதம் 24ந்திகதி கனடாவின் ரொரன்ரோ நகரின் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் ஒரு விழா மாலை 6-8.30 மணிவரை வெகுசிறப்பாக நடைபெற்றது. அது மார்க்சிஸ மேதையும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியும் ஆசிரியருமான தோழர் மு.கார்த்திகேசனுக்கு எடுக்கப்பட்ட ஞாபகார்த்த நூல் அறிமுக விழாவாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி என்பது இலங்கையில் - யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட சாதிமக்களின் கட்சி, வட அமெரிக்காவில் பலருக்கு அது ஒரு பூதம் என்ற தப்பான அபிப்பிராயம் இருந்தும், அவர்களது வட்டத்தைக் கடந்து, கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களுக்கு நினைவு விழா என்ற பதாகையை அரங்கில் முன்வைத்து விழாவை ஒழுங்கு செய்த விழாக்குழுவினரின் துணிச்சலையும் ஆளுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும் படிக்க ...

கனடாவில் நடைபெறவுள்ள (19-09-2025 - 21-09-2025) ஆறாவது திருக்குறள் மாநாடு! - தகவல்: 'ரொரான்றோ' தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- தகவல்: 'ரொரான்றோ' தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
13 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கனடாவில் நடைபெறவுள்ள (19-09-2025 - 21-09-2025) ஆறாவது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள கீழ்வரும் இணைப்பின் ஊடாக பதிவுசெய்யலாம்.

விழா குழு

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் வெளியீடு! - தகவல் - வி.ரி.இளங்கோவன் -

விவரங்கள்
- தகவல் - வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. டொரோண்டோ'வில் எழுத்தாளர் தமிழ்நதியின் மூன்று நூல்களின் வெளியீடு! - தமிழ்நதி -
  2. விவேகானந்தனூர் சதீஸின் 'துருவேறும் கைவிலங்கு' நூல் வெளியீடு! - தகவல் - விவேகானந்தனூர் சதீஸ் -
  3. கனடாவில் தொல்காப்பிய விழா - 2025! - குரு அரவிந்தன் -
  4. மக்கள் கவிஞன் பாரதி! போற்றுவோம்! - வ.ந.கிரிதரன் -
  5. டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' எனக்கு மிகவும் பிடித்த அவரது நாவல்! - வ.ந.கிரிதரன் -
  6. யப்பானியப் பயணத்தொடர் (15 & 16) - ஓசாகா & நாரா! - நடேசன் -
  7. சரித்திரத்தை பார்த்தல் - சண்ணின் நினைவு மலரை முன்னிறுத்தி…- ஜோதிகுமார் -
  8. இளைஞர்களே! நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் போராடினால் வெற்றி நிச்சயம்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -
  9. பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் மெய்நிகர் வழி நிகழ்வு - எழுத்தாளர். அ.ந. கந்தசாமியின் படைப்புலகம்! - தகவல்: பவானி -
  10. கம்பராமாயணத்தில் புலவி நுணுக்கம்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  11. கதிர்காமத் திருமுருகன்: பதிப்பு வரலாறும் விசாரணையும்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -
  12. நெடுங்கவிதை: வம்சாவழிப் பூவரசு! - இந்து.லிங்கேஸ் -
  13. சிந்தனைக்களம்: ' பரதநாட்டியத்தில் இன்றைய மார்க்கம் - ஐந்து பாரம்பரியங்களின் சங்கமம்'
  14. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 37! உரையாளர் எழுத்தாளர் அகணி சுரேஷ்!
பக்கம் 3 / 115
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி