பதிவுகள் முகப்பு

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (14) யப்பானியத் திருவள்ளுவர்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    -  முன்றிலில் பெரிய நந்தியின் சிலை -

யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.

இந்த காளையில் உருவத்தில் இரகசியம் ஏதோ இருக்கவேண்டும் என்ற என் நினைவு மனதை கோடைகாலத்து இலையானாக மொய்தபடி இருக்க அந்த ஆலயத்தின் உட்சென்றேன். ஆலயம், மரங்கள் பூங்கா என அழகான பின்னணியில் இருந்தது . இந்த ஷின்டோ ஆலயம் 903இல் இறந்த ( Michizane) மிசிசான் என்ற ஒரு அறிஞரது சடலத்தை கொயோட்டாவிலிருந்து (Kyoto) வண்டியில் வைத்து இழுத்து வந்த இந்த காளை மாடு , வண்டி இந்த இடத்தை வந்ததும் நகர மறுத்துவிட்ட தாகவும், அதனால் மக்கள் இதுவே அந்த அறிஞரின் இறுதியான இடமென நினைத்து இங்கே அவரது சடலத்தை அடக்கம் செய்து அவருக்கு சமாதி கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த சமாதியருகே இந்த ஷின்டோ ஆலயம் உருவாகியது. ஆலய முன்றலில் சடலத்தை இங்+++++++++++++++++++++ கொண்டு வந்த அந்த காளையின் உருவம் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது என அறிந்தேன்.

மேலும் படிக்க ...

குரு அரவிந்தனின் சிறுகதைகளில் சமூகப் பார்வை! - சி. ரஞ்சிதா (களனிப் பல்கலைக்கழகம், இலங்கை) -

விவரங்கள்
- சி. ரஞ்சிதா (களனிப் பல்கலைக்கழகம், இலங்கை) -
இலக்கியம்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து யாழ். மண் ஈன்றெடுத்த எண்ணிலடங்காத புலமையாளர்கள் பலர். அவர்களுள் எழுத்துத் துறையில் பிரவேசமாகி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மிகு சான்றோர்கள் வரிசையில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஈழத்தில் யாழ். மண்ணில் அவதாரம் எடுத்த அவர் இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் மணமும் தமிழ் உணர்வும் இலக்கிய படைப்பின் மீது கொண்ட தீராத அவாவினாலும் தன்னை ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொண்டு சிறுகதை, நாவல், மேடை நாடகங்கள், திரைக்கதை, சிறுவர் நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பயணிக்கின்றார். இவருடைய எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தையும், அதன் பண்பாடு, பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் அந்தப் பண்பாடு சார் பழக்கவழக்கங்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக சித்திரித்துள்ளன.

குரு அரவிந்தனின் படைப்புகளான இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைகளிலும் உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி… ஆகிய நாவல்களிலும் இவரது சமூக நோக்கு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இக்கட்டுரையில் குரு அரவிந்தன் அவர்களால் படைப்பாக்கம் செய்யப்பட்ட “இழப்பு” ,“மூன்றாவது பெண்”, “பனிச்சருக்கல்” , “என் காதலி ஒரு கண்ணகி” ஆகிய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை பற்றியே ஆராயப்படுகின்றது.

மேலும் படிக்க ...

பெருங்கதையாய் விரியும் ஒரு சிறுகதை! 'காலச்சுவடு' சஞ்சிகையில் வெளிவந்த 'கங்காரு' சிறுகதையை முன்னிறுத்தி ஒரு ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


 'அதிகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில் பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும்...

அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான்.....'

இந்த வரிகளை வாசிக்கும் போது கங்காருவுடனும் சயந்தனுடனும் சேர்ந்து,  உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃபுரொய்ட் (Sigmund Freud )உம் ஞாபகத்தில் வரக் கூடும். கனவுகளுக்கு அர்த்தம் சொன்னவர்தான் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இந்த உளநோய் மருத்துவர்.

மேலும் படிக்க ...

ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' சிறுகதைத்தொகுப்பு பற்றிச் சில குறிப்புகள்! - அ.வா. முஹ்சீன் -

விவரங்கள்
- அ.வா. முஹ்சீன் -
நூல் அறிமுகம்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே'  தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்தேன். அதை ஒட்டியதாக என்னுடைய இந்தக் குறிப்புகள் அமைந்துள்ளன.அவரது கதைகள் பிரதானமாக இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

1 புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும். (இங்கு கனடா மையமாகக் கொள்ளப்படுகிறது.)

2 பெண்கள் மீது ஆண்களினால் பாலியல்ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும்!

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து கொள்வதில் பெரியளவிலான சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக முன்னர் புலம்பெயர்ந்தவர்களும் புதிதாகப் புலம்பெயர்ந்து செல்பவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். தலைமுறைகளுக்கு இடையிலான முரண்பட்ட நிலைமைகளும் புதிய சூழலை எதிர்கொள்வதில் அவர்கள் அடைகின்ற சிக்கல்களும்  பல கதைகளில் நுணுக்கமாக எடுத்தாளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

கணனித்திருடன் திருடிய நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்கு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அறிவியல்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் 'வாட்ஸ்அப்' (WhatsApp) மூலம் நண்பர் ஒருவரிடமிருந்து செய்தி வந்திருந்தது. Please do me a favour என்ற தகவலைப் பார்த்ததும் விளங்கியது நண்பரின் 'வாட்ஸ்அப்'  கணக்கு கணனித்  திருடன் ஒருவனால்  அபகரிக்கப்பட்டு விட்டதென.  அச்சமயம் நண்பரும் அலைபேசியில் அழைத்தார். தன் 'வாட்ஸ்அப்' கணக்கு இவ்விதம் கணனித் திருடன் ஒருவனால் திருடப்பட்ட விடயத்தைக் கூறினார். ஒருவர் இலங்கையிலிருந்து பணம்  அனுப்பும்படி தகவலைத்  தன் நண்பர்களுக்கு அனுப்புவதாகக் கூறினார். அவர் தன் 'வாட்ஸ்அப்' கணக்கை மீண்டும் இயுங்கும் நிலையில் பெறுவதற்கிடையில் அவரது நண்பர்களில் ஒருவர் பணம் அனுப்பி விட்டிருந்தார்.

இவ்விதம் அவரது 'வாட்ஸ்அப்' கணக்குத்  திருடப்பட்டதை அவர் தவிர்த்திருக்க முடியாதா?  இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் அவர் தடுத்திருக்கலாம். அவரது 'வாட்ஸ்அப்' கணக்கின் பாவனையாளர் பெயர்,  கடவுச்சொள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கணனித்திருடர் பெற்று விட்டிருக்கின்றார். அவர் அவற்றைப் பாவித்து நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்குக்குள் செல்ல முயற்சி செய்திருக்கின்றார். புதியதொரு அலைபேசியில் யாரோ ஒருவர் புக முயற்சி செய்வதைப்பார்த்த 'வாட்ஸ்அப்' நண்பரின் அலைபேசிக்குத் தகவலை அனுப்பி யாரோ ஒருவர் அவரது கணக்குக்குள் புக முயற்சி செய்கிறார். அவர் என்றால் அனுப்பும் இலக்கத்தைப்பாவித்து உட் செல்லவும். அத்துடன் அவ்விலக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கூறியுள்ளது. 

மேலும் படிக்க ...

கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள் 
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து  
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு 
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே 
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு 
நட்பு ஒப்பந்தம் செய்து 
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
 எண்ணங்கள் எல்லாமே 
என்னைச் சுற்றிக் குளிர்காலம் 
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது 
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும் 
எண்ணங்களைத்  தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

சட்டமும் , முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்! - நந்திவர்ம பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்ம பல்லவன் -
அரசியல்
27 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அவர் குற்றமிழைத்திருக்கின்றார். கைது செய்யபப்ட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் ரணில் தன் வீட்டையே தான் படித்த கல்லூரிக்குக் கொடுத்தார். அதன் பெறுமதி 200 கோடி. அதைக்கொடுத்தார். இதைக்கொடுத்தார். பதவிக்குச் சம்பளம் வாங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியை சிறு குற்றத்துக்காகக் கைது செய்யக்கூடாது. இப்படி ஆளுக்கு ஆள் கூறுகின்றார்கள். 

இவர்களிடம் ஒரு கேள்வி?

மிகப்பெரும் பணக்காரரும், கொடை வள்ளலுமான ஒருவர் மிகவும் வேகமாகத் தன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றார். 40 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 100கிலோமீற்றர் / மணி வேகத்தில் செல்கின்றார். அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். அப்பொழுதும் இப்படித்தான் ரணில் 200 கோடி கொடுத்தார்,அவருக்கு அபராதக் கட்டணம் விதித்து 'டிக்கற்'கொடுக்கக்கூடாது என்பீர்களா?

மேலும் படிக்க ...

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும். 
அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியின் எழுத்தின் நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித்  தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார்.  பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்: 

“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "

இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.  

மேலும் படிக்க ...

நூல்களால் கட்டும் தேசம் - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை)

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை)
இலக்கியம்
25 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(* புகைப்படம் - நன்றி - தாயகம்)

எழுத்தாளர், கலை,இலக்கிய ஆர்வலர், நூல் வெளியீட்டாளர், நூல் சேகரிப்பாளர், நூல் ஆவணச் செயற்பாட்டாளர் எனப் பன்முக இலக்கியப்பங்களிப்பைச் செய்து வருபவர் பத்மநாப ஐயர் அவர்கள். அவரது பிறநத நாள் ஆகஸ்ட் 24. அதனையொட்டிக் கலாநிதி சுதர்சன் செல்லத்துரை எழுதிய கட்டுரை. அவருக்கும் பதிவுகள் இணைய இதழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


 

“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” - மாக்கியவல்லி.

பண்பாட்டு விடுதலைக்கான தேசியப் போராட்டங்கள் உலகில் நடைபெறும்போதெல்லாம் பண்பாட்டழிப்பே ஆதிக்கவாதிகளின் ஒரேகுறியாக இருந்துவந்துள்ளது. அழிக்கப்பட்டதும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுமான பண்பாட்டை மீள நிலைநிறுத்துவதற்காக உலகெங்கிலும் நிகழும் போராட்டங்கள் இருவகை. ஒன்று, ஆயுதத்தால் நிகழ்வது. மற்றையது, எழுத்தினால் நிகழ்வது. முன்னையதை ஆயுத அரசியல் என்றும் பின்னையதை எழுத்து அரசியல் என்றும் குறிக்கலாம். பண்பாட்டு அழிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஆயுத அரசியலைவிடவும் எழுத்து அரசியலுக்கு அதிக முதன்மை உள்ளது. எழுத்து என்பது அர்த்தம் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு இயக்கியாக, வலுவுள்ள பேசும் சாதனமாக, சுடுகுழலைவிடவும் வன்மையான ஆயுதமாக எல்லாம் விடுதலைக்காகப் போராடும் நிலத்தில் முக்கியமான பாத்திரமேற்றலை நிகழ்த்துகிறது. காலனித்துவம், பேரரசுவாதம் என்பவற்றுக்கெதிரான வரலாற்றுரீதியான பண்பாட்டுப் போராட்டங்கள் வெற்றிபெற்றனவோ, இல்லையோ அப்போராட்டங்களில் இடம்பெற்ற எழுத்து அரசியலுக்கு, அப்போராட்டங்களை இயக்கின என்பதிலும் பதிவாக்கின என்பதிலும் முக்கிய பங்குண்டு.

எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்திய, கவிதையிலிருந்து விமர்சனம்வரையும், சடங்கிலிருந்து நவீன ஆற்றுகைக்கலைகள்வரையும், துண்டுப்பிரசுரத்திலிருந்து சுவரொட்டிவரையும், இனவரலாற்றிலிருந்து இலக்கிய வரலாறுவரையும், பதிப்பிலிருந்து விநியோகம்வரையும் நீண்டு விரிந்த அர்த்தப்பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களைக்கொண்டு உரையாடுவதாக அது அமைந்திருக்கும். ஓர் இனத்தின் உரிமை, அழிவுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும்போது, அந்த இனம் தனது பண்பாட்டு முதுசொத்திலிருந்து தனக்கான அரசியலை வடிவமைத்துக்கொள்ளும்.

பண்பாட்டு அழிப்புக்கு எதிரான கலாசார எதிர்ப்புமுகமாக மட்டுமன்றி, புவியியல்சார் எல்லைகளால் வரையறுத்துக்கொள்ளப்படும் தேசத்துக்கு அப்பால் அரசியல், சமூக, பண்பாட்டுக் கருத்துநிலைகள் நிர்ணயிக்கும் தேசத்தை, அறிவுநிலையில் கட்டியெழுப்புவதும் நிலைநிறுத்துவதும் எழுத்து அரசியலே. ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான எழுத்துவழி நிகழ்ந்த பண்பாட்டழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம்.

மேலும் படிக்க ...

திரு.எல்.ஜோதிகுமாரின் இரு நூல்களின் அறிமுக நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்: ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
25 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலச் சுவடுகள் -இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
கவிதை
24 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

எங்கே போயின எல்லாமே?
வீட்டைச்சுற்றி
வாழ்ந்த தென்னை மரங்கள்.
வீட்டு வாசலைப் பார்த்தபடி
காவல்நின்ற பலா.
கிணற்றடியில் நின்ற வாழைகள்.
தென்மேற்குப் பருவக்காற்றில்
மோகங்கொண்டு எம்மை மயக்கிய 
முற்றத்தில் நிலைத்து நின்ற
வேம்பும், கறி வேப்பிலை மரமும்.
கூடிவந்து குந்தியிருந்து
'குசாலம்'விசாரித்த பறவைகள்.
கோடிக்குள் குடியிருந்த பப்பாளி.
வாசம் பரப்பிய மல்லிகை.
பின் தோட்டத்தில்
செழித்து நின்று சுவைதந்த 
பாண்டியும்,அம்பலவியும்.
வீட்டைச் சுற்றிச்
சோடிச்சு நின்ற பூமரங்கள்!"
அங்கேதான் நாம் வாழ்ந்தோம் என்ற
எம் அடையாளங்கள்
அனைத்தையும் புதிதாக வந்தவர்கள் 
முற்றாக அழித்துவிட்டு
காற்றும் வராதபடி புதிதாக
அடுக்குமாடி வீடொன்றைக் கட்டிவிட,
இப்போது அது
இயற்கையைத்தடுத்துத்
துரத்திவிட்டு உயர்ந்து நிற்கின்றது.

மேலும் படிக்க ...

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 3) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் முகங்கள் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்;  அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண்.  இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார்.  இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.

அடுத்து அவர் கவனம் 24 வயது இளைஞனான பாரதியின் மானுட  இருப்பு, மரணம், சிறை, ஆங்கிலேயரின் மத ரீதியிலான பிரித்தாளும் தந்திரம், மிதவாதப் போக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் அம்மிதவாதப் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள், அவன் மீதான திலகரின் தீவிரவாதப் போக்கின் தாக்கங்கள், அக்கால உலக அரசியலில் அவனுக்கிருந்த் அறிவு, தெளிவு, ருஷய புரட்சியின் அடித்தளம் பற்றிய புரிதல் போன்றவற்றில் திரும்பி விடுகிறது. அவை பற்றிய விபரிப்புகளிலும், கேள்விகளிலும் மூழ்கி விடுகின்றது.  இவை பல தகவல்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றன. 

மேலும் படிக்க ...

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 2) - ஆன்ம உணர்ந்திறன்! - வ.ந.கிரிதரன் - -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் - -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.'  என்று குறிப்பிடுகின்ரார்.  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள்.  ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.  உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?

ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''

இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச்  சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது.  சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.

இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.  கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான்.  பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது.  பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி,  தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு.  இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?

மேலும் படிக்க ...

இப்பால் நிலத்தாரின் அப்பால் நிலம்: யாழ்ப்பாணத்தாரின் வேதாரணிய பாரம்பரியமும் இலக்கியமும்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
ஆய்வு
22 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                        - வேதாரணியேசுவரர் ஆலயம் -

கட்டுரை ஆசிரியர்: கலாநிதி செல்லத்துரை சுதர்சன். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். ஆய்வாளர், கவிஞர், விமர்சகர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். அவரது முக்கியமான கவித்தொகையான ‘தாயிரங்கு பாடல்கள்’ என்பதை மணற்கேணி வெளியிட்டுள்ளது.


அறிமுகம்

‘அப்பால் நிலம்’ என்ற கருத்தாக்கம் ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதி’ என்பதையே இங்கு குறித்துநிற்கிறது. ‘அப்பால் நிலக்கோயில்’ என்பது ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதியில் அமைந்த கோயில்’ என்பதைக் குறிக்கிறது. கப்பலசைவின் காரணமாக, அப்பால் நிலத்துக் கோயில்களுடன் சமய பண்பாட்டுத் தொடர்புகளைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்ப் புலவர்களும் புலமையாளர்களும் பேணியுள்ளனர். யாழ்ப்பாணத்தவரின் வேதாரணியப் பாரம்பரியம், அதனுடனான ஊடாட்டம், அது குறித்த இலக்கியப் பங்களிப்பு ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுக்கான முன்வரைபு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது. அந்த வகையில், இப்பொருள் குறித்த ஓர் அறிமுக எழுத்தாக இது அமைகிறது.

அப்பால் நிலக்கோயில்களும் பண்பாட்டு உறவும்

சைவமறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றகாலத்தில் தமிழ்நாட்டுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் ஈழத்தவர் மேற்கொண்ட சமய, சமூக, பண்பாட்டுத் தொடர்புகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் ஏராளமானவை.

தமிழகத்தில் உள்ள பல ஆலயங்கள் யாழ்ப்பாணத்தவருடன் மிகநெருக்கமானவை. குறிப்பாகச் சிதம்பரம், வேதாரணியம், இராமேஸ்வரம், திருச்செந்தூர், எட்டிகுடி முதலாய இடங்களுடன் யாழ்ப்பாணத்தவருக்கு நீண்டகால ஊடாட்டம் உள்ளது. வேதாரணியம் ஈழத்தவருக்குரியது என்பது வரலாற்று ரீதியாகவும் ஆவணங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட ஒன்று. யாழ்ப்பாணம் வரணி கரணவாய் ஆதீனமே வேதாரணியத்தை நிர்வகிக்கும் முழுமையான உரித்துடையது.

மேலும் படிக்க ...

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
19 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

கம்பராமாயணத்தில் ஜனகர்

ஜனகர் மிதிலையின் மன்னர். சீதையைத் தன் மகளாக எடுத்து வளர்த்தவர். நாட்டு மக்களைத் தன் கண் போல் காப்பவர். இவருக்குத் துணையாக தேவர்களே தம் படைகளை அனுப்பி வைப்பர். அத்தகைய ஆற்றல் மிக்கவர். இராமன் வில்லை வளைத்ததைக் கண்ட ஜனகர் மிக்க மகிழ்ச்சி பொங்க நாட்டு மக்களுக்கு தேவையான பெருஞ்செல்வத்தை வாரிச் செல்லக் கூறினான்.மன்னன் ஜனகனின் ஆணைப்படி அவனது பெருஞ் செல்வத்தை மிதிலைவாழ் மக்கள் வாரிச்சென்றார்கள்.

“வெண்நிற மேகம் மேன்மேல்விரி கடல்பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்“
(கார்முகப்படலம் 653)

கம்பர் ஜனகனை அறிமுகப்படுத்தும்போது ' மருதம் சூழ் மிதிலையர் கோன்' என்கிறார். நிலவளம், நீர்வளம் முதலிய பல வளங்களை உடையது மருதநிலப்பகுதி.

மிதிலையின் சிறப்பு

விசுவாமித்திரர், இராம இலட்சுமணனுடன் மிதிலை நகர வீதியில் வரும் போது நகரின் சிறப்புகள் பேசப்படுகின்றன. நடன மங்கையர் நடனமாடும் பொன்னாலான நடன சாலைகளை அவர்கள் கண்டார்கள். குற்றம் உடைய பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய குற்றமற்ற பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே, பெண்கள் தம்மைச் சுற்றிலும் ஆரவாரத்தோடு மேலெழுந்த வண்டுகள் ஒலித்து நிற்க, ஆடவர்களின் மனதோடு ஆடுவதை அவர்கள் கண்டார்கள். அளவில்லாத இரத்தினங்கள், பொன்முத்துக்கள் கவரிமானின் வால், காடுகளில் உண்டாகும் வகிர்க் கட்டைகள், மயில் தோகைகள், யானை தந்தங்கள் ஆகியவற்றை வயல்களுக்கு வரப்புகளை அமைத்து முடிக்கும் உழவர்கள் குவித்து வைக்குமாறு இரு கரைகளிலும் பரவச் செல்கின்ற காவிரி நதியைப் போன்ற கடைவீதிகளை அவர்கள் கண்டார்கள். மகளிர் வீணை வாசிப்பதைக் கண்டார்கள்.

மேலும் படிக்க ...

வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சமூகம்
18 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (adulthood) இடையிலான காலம் வளரிளம்பருவம் எனப்படுகின்றது. இதன் தொடக்கமும் முடிவும் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். ஒன்பது வயது முதல் 25 வயது வரையான காலத்துக்கிடையில் இப்பருவம் அமைந்திருக்கும்.

வளரிளம்பருவத்தினருடன் தொடர்பாக உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியே பொதுவாக பேசப்படுவதுண்டு.  இந்தக் கட்டுரை வளரிளம்பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றை அவர்கள் மேவுவதற்கு வளர்ந்தோர் எவ்வகையில் உதவிசெய்யலாம் என்பதையும் ஆராய்கின்றது.

ஒருவரின் உளவியல்ரீதியான நலத்துக்கும், மேம்பாட்டுக்கும், குடும்பத்தவராலும், சூழவுள்ள சமூகத்தவராலும் அங்கீகரிக்கப்படும் ஒருவராக நான் இருக்கிறேன் (belonging), என் இருப்பு முக்கியமானது (significance) என்ற நம்பிக்கை அவசியமானது என்கின்றனர் உளவியலாளர்கள். குழந்தைகளினதும், வளரிளம்பருவத்தினரதும் உளவியல்ரீதியான இந்தத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும்போது, பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு அவர்களின் சுயமதிப்பை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க ...

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் கல்வெட்டுக்கள்! - திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
17 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

]

முன்னுரை

நம் பண்பாட்டு‌க் கலாச்சாரத்திற்கும் அமைதி மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்வது கோயில்கள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற உலகநீதியின் அடிகள் கோயிலின் இன்றியமையை எடுத்துரைக்கிறது. அவ்வகையில் மதுரைக்குத் தென்மேற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் தே.கல்லுப்பட்டி (தேவன்குறிச்சி கல்லுப்பட்டி) பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறமாக உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலின் தலவரலாறு, கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்களின் அமைவிடம் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வாய்வு கட்டுரை அமைகின்றது.

தல வரலாறு

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. தே.கல்லுப்பட்டியை அடுத்த ஆவுடையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர், தனது மாடுகளைத் தினமும் இந்த தேவன்குறிச்சி மலையை ஒட்டிய இடங்களில் மேய்த்து வந்திருக்கிறார். மாடுகள் எல்லாம் சரியான அளவு பால் கொடுத்து வர, ஒரே ஒரு மாடு மட்டும் மிகக் குறைந்த அளவு பால் கொடுத்து வந்தது.

அவர் மாட்டைப் பின் தொடர்ந்து செல்ல அந்த மாடு மலையின் நடுவிலிருக்கும் ஓரிடத்தில் நிற்க, அதன் மடுவிலிருந்து பால் தானாக சுரந்தது. கோபம் கொண்டு அதைச் சத்தம் போட்டு விரட்டி அடித்து விட, மாடு தடுமாறி அங்கிருந்த கல்லின் மீது காலை வைத்து மிதித்துவிட்டு ஓடியது. மாடு பால் சுரந்த இடத்தைப் பார்த்த மாட்டின் உரிமையாளர் திகைத்துப் போனார். அந்தக் கல்லிலிருந்து இரத்தம் வடிந்தது. அந்தக் கல்லைச் சுற்றியுள்ள மண்ணை அகற்றிவிட்டுப் பார்த்தார். அங்கு லிங்க வடிவமாக சிவபெருமான் எழுந்தருள் செய்தார்.

மேலும் படிக்க ...

இசைக்கு ஏது எல்லை: 'புஞ்சி சமனலி' நெஞ்சங் கவர்ந்த சிங்களப் பாடல்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                             - பேராசிரியர் சுனில் ஆரியரத்னா -

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'.   'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம். 

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne)  சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.   

காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும்  2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் கண்ணகியைத் தெய்வமாகக்கொண்டு வழிபடும் முறை சிங்கள , தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வருவதற்குச் சான்றாகக் கண்ணகி அம்மன் கோவில்கள் உள்ளன. சிங்கள மக்கள் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

சிறுகதை: அம்பா பாடலின் கடைசி அலை! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
14 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


* ஓவியம் - AI - 

எங்களூர்க் கடலில் ஒருகாலத்தில் மீன்கள் அளவுக்கு அதிகமாகக் கிடைத்தன. மீன்களின் வாசம் காற்றில் கலந்து, நம் மூச்சுக்கே ஒரு சுவை கொடுத்தது. தோணிகள் நீரில் வரிசைபோட்டு மிதந்துகொண்டிருந்த நாட்கள். அவற்றில் பிரபலமானவை பெரியடம்பர், காக்காமொட்டையன், சின்ன டெம்பர்… அவற்றின் பெயர்களை கேட்டாலே கடலின் கருப்பு நீரின் வாசனையும், வலையில் சிக்கிய மீன்களின் மினுமினுப்பும் நினைவுக்கு வரும். அந்த நாட்களில் அம்பா பாடல் என்று ஒன்று இருந்தது. வலை இழுக்கும் போது பாடுவார்கள். அந்தப் பாடல் கடலின் அலைக்குள் கலந்து, மீன்களை கவர்ந்தது போல இருந்தது.

இப்போது அந்த காட்சி அரிது. மீன்கள் இல்லாமல் போனது போலவும், பாடல்கள் மறைந்து போனது போலவும். பெரியடம்பர் வயதானவர். அவரது கைகளில் ஒருகாலத்தில் வலை ஓசையோடு இருந்த வலிமை, இப்போது வெறும் நினைவாகவே உள்ளது. காக்காமொட்டையன், பழைய நாட்களில் போல பாடாமல், கடற்கரை வாசலில் அமர்ந்து அமைதியாகக் கடலை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார். சின்ன டெம்பர்… யாரும் அவர் எங்கே சென்றார் என்று சரியாகச் சொல்லவில்லை. சிலர் அவர் கடலில் மூழ்கினார் என்பார்கள், சிலர் அவர் மீன்களுடன் வாழ்கிறார் என்பார்கள்.

ஓர் இரவு, கடல் பேசவில்லை. ஆனால் பாடியது. மழை நின்றுவிட்டது. கடல்மேல் பச்சை மின்சாரம் ஓடும் மாதிரி ஒளி பரவியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் அம்பா பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அலை மீது அலை அடித்தது.

மேலும் படிக்க ...

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும்  முக்கியமான  அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;

1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும்.  அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும்.  இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள்.  அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு.  'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

மேலும் படிக்க ...

யப்பானில் சில நாட்கள் (13) : யப்பானியஉணவு.! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
13 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள்  விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள் ஒரு உணவகத்தைத் தேடிச் செல்வார்கள் அதேபோல் தீயணைப்பு படையின் ஒரு உணவகத்தை நோக்கிச் செல்வார்கள். ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு உணவுக்கு விசேடமானது அதாவது நமது பிராமணாள்  தோசை கடை,  ஆப்டீன் பிரியாணி கடை போல். தொடர்ச்சியாகப் போவதால்   வாடிக்கையாளர்களும்  உணவகத்தினருக்கிடையே ஒரு அறிமுகம் , அன்னியோன்னியம் உருவாகி உள்ளது.

தற்போது  மேற்கு நாட்டு உணவுகள், இந்திய,   சீன உணவுகள் என எல்லாம் உள்ளது.

இலங்கையில் ஒரு முறை சீனர்கள் இலவசமாகத் தந்த  அரிசியை உட்கொண்டதால் வயிற்றுப்போக்கு உருவாகி,  பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது.  இலங்கை அரசு,  சீனர்களின் தரங்குறைந்த உணவை வடபகுதியில் விநியோகித்தது என்ற பிரசாரம்,  கேக்கில் சீனி கலந்தது போல் பரவியது . இலங்கை அரசின் மேல் அக்காலத்தில் அதிக காழ்ப்புணர்வு உள்ளதால் மக்கள் நம்பி விட்டார்கள். ஊடகங்கள் செய்தியை ,  குழந்தைகள் ஊதிய பலூனை வாயில் எச்சி வடிய ஊதிப் பெருப்பித்தன.

மேலும் படிக்க ...

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (2) - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
13 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 -  இளைஞன்  எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை ...  டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiiah) -

வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி.  மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.

தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியிலேயே (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலைத் தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.

இக்காலத்தை ஒட்டி பிறப்பெடுத்ததே மற்றுமொரு காவியமான ‘உழைக்க பிறந்தவர்கள்’ (Born to Labour) என்னும் மலையக மக்களின் வாழ்வியல் சித்திரங்கள்.

இதன் பின்னரான காலப்பகுதியில், இவரது இறுதி எழுத்துக்களாகவே, ‘வீடற்றோர்’ அல்லது ‘நாடற்றோர்’ போன்ற நவீனங்கள் உருவாகியவை.

இந்த மாற்றங்கள் குறித்தே – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இளைஞன்’ என்று இவ் வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.

இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்ப Photo அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைக்க வாய்ப்பளிக்கின்றது.

மேலும் படிக்க ...

திருவை. மு.இரா கவிதைகள்!

விவரங்கள்
- திருவை. மு.இரா -
கவிதை
11 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. உருவமில்லா மனிதர்கள்

உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்
அவர்கள் எப்படி இருப்பர்
நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும்
இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா
புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட
மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான
மிகப்பெரிய அரக்கன் போன்றா
கொன்றுவிடுவானோ என்ற பயத்தில்
நம்மை எதிர்த்து சீறும் சிறு பாம்பு போன்றா
பயமுறுத்தும் விஷமில்லாத அந்த
பாம்பின் காட்சியில் தெரியும் நாம் போன்றா
கழட்டி வைத்துவிட்ட மனசாட்சியோடு திரியும்
நாமும் அது போலவே

மேலும் படிக்க ...

முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய படையினரின் மனித உரிமை மீறலகள்! (ஓவியம் - AI) - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
10 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்குத் தகரம் எடுப்பதற்காக அழைக்கப்பட்ட ஐந்து தமிழர்களில் ஒருவர், குடும்பஸ்தர், மர்மமான முறையில் காணாமல் போய், சடலமாக அருகிலிருந்து குளமொன்றில் மீட்கப்பட்ட சம்பவமானது தற்போதுள்ள அரசியற் சூழலில் அதிர்ச்சி தருவது. இச்செய்தி எனக்கு எம் தலைமுறையினரின் இளம் பருவக் காலகட்டத்தை நினைவு படுத்தியது. அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு முக்கிய காரணங்களில் பிரதானமானது தமிழ்ப் பகுதிகளில் படையினரின் மனித உரிமை மீறல்களும், அவர்கள் விடயத்தில் இலங்கையின் சட்டம் தன் கடமையினைச் செய்யாமலிருந்ததும்தான். இவ்விதமான தமிழ்ப்பகுதிகளில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களினால் தமிழ் மக்கள் தம் சொந்த மண்ணிலேயே அந்நியப்பட்ட மனநிலையை அடைந்தார்கள். இலங்கை அரசின் சட்டம் தம்மைப் பாதுகாக்கவில்லையே என்பதால் எழுந்த மனக்குமுறலே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது.
 
யுத்தம் முடிந்து பதினாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் , இன்றுள்ள இளந்தலைமுறையினரும்அன்று தமிழ் இளைஞர்கள் அடைந்த மனநிலையை அடையும் சாத்தியமுண்டு. இன்றுள்ள இலங்கையின் பல்லின மக்களுக்கிடையில் எம் காலத்திலிருந்ததை விடக் கூடுதலான புரிந்துணர்வு உள்ளது. அதற்கு முடிவுக்கு வந்த யுத்தமும், சமூக ஊடகங்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். இன்று தமிழ் இளைஞர்கள் எவ்வித அச்சமுமற்றுத் தென்னிலங்கைப் பிரதேசங்களுக்குச் செல்ல முடிகின்றது. அதுபோல் தென்னிலங்கை இளைஞர்களும் வடகிழக்குப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல முடிகின்றது. இந்நிலை தொடர்வது இலங்கையின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம். ஆனால் இந்நிலையை மிகவும் இலகுவாகக் குலைந்து விடும் சாத்தியமும் உண்டு என்பதையும் தவிர்க்க முடியாது. இது போன்ற படையினர் புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையின் சட்டம் தன் கடமையினை உடனடியாக, பாரபட்சமின்றிச் செய்யத் தவறும் பட்சத்தில் , உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்களில் சிலரின் ஆயுதரீதியிலான எதிர்வினைகள், அவற்றின் அடிப்படையில் தென்னிலங்கையில் இனவாதச் சக்திகளின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டை யுத்தச் சூழலுக்குள் தள்ளிவிடும் அபாயமுண்டு.
மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. யப்பானில் சில நாட்கள் (12) :ஹிரோஷிமாவில் நதிகள் சலனமின்றி ஓடுகின்றன! - நடேசன் -
  2. நடேசனின் 'தாத்தாவின் வீடு' நாவல் பற்றி... - புஷ்பா ஜெயா நயினை ஊராள் -
  3. மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (1) - எல்.ஜோதிகுமார் -
  4. வாணிதாசனின் தொடுவானம் கவிதை மறுவாசிப்பு! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
  5. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 36
  6. Dr. Kawsalya Subramaniam and Dr. Subramaniam Nagarasa Iyer invite you for a scheduled Zoom meeting in Chinthanai kalam(isai-Nadanam)
  7. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “தமிழ்ப் பண்பாட்டை உலகமயப் படுத்துவதில் பேச்சுக்கலையின் அரசியல்”
  8. கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை! - வ.ந.கிரிதரன் -
  9. நூல் மதிப்புரை: எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்! - அம்ஷன் குமார் -
  10. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடந்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
  11. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (11) - ஜப்பானிய மதுக்கள் - நடேசன் -
  12. தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -- வ.ந.கிரிதரன் -
  13. சிறுகதை: அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை -தேவகாந்தன்-
  14. சண்முகதாசனின் நினைவாக...(2) - எல். ஜோதிகுமார் -
பக்கம் 5 / 115
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி