விடை பெற்று விட்டாயா, நண்பனே? - கடல்புத்திரன் -

முகிலுக்கு …வாழ்வின் நிலயாமையை வசந்தனின் சாவு மறுபடியும் நினைவு கொண்டிருந்தது .இங்கே தான் இருந்தான், ஈழம்போல் தூரத்திலு மில்லை . அவன் இறந்தது கூட அவனுக்கு தெரியாமலே போய் விட்டிருக்கிற தே .அது அவனை துயரப்படுத்துகிறது . வந்த புதிதில் தந்தையோடு வசந்தன் தங்கி இருந்த கீழ்வீட்டிற்கு நிறைய தடவை போய் வந்திருக்கிறான் .
முகிலை விட ஐந்து வயசு இளையவன் , இங்கே வந்தலிருந்து உதவியாயிருக்கிற இருந்த ..தோழன் . இனி அவனை படத்தில் மட்டுமே காணலாம் . நெஞ்சில் ஒரு வெறுமை சுளிரென ஓடியது . இயற்கை , செயற்கை.. ஏற்படுத்தும் காயங்கள் வலிக்கவேச் செய்கிறது .ஊரிலேயே இருந்திருந்தால் …தீவு சிறிய தொலைவுத்தூர வசிப்பிடம். இங்கே இருப்பது போல கண்ணில் காணாது இருக்க மாட்டார்கள் . ‘
இறப்பு இயல்பாக சென்றிருக்கும் வருத்தி இருக்காது . அவனின் உறவுகள் கண்ணில் பட்டு ..நீரை நிறுத்தி விடுவர் இங்கே வாழும் முறையே வேறு. அகதி வாழ்வை வாழ வைக்கிற உலகத்தையே அவன் மனம் சபிக்கிறது. உள்நாட்டில் இருப்பதை ,வெளியில் வாழ்தகவு கூட …இருந்தாலும் நம் ஊரைப் போல் வருமா ? அத்திலாந்திக் , இந்து , பசுவிக் , மத்தியதரைக் கடல்கள் எம்மை அங்கே பிரிப்பதில்லை . கூட்டணிகளை ஏற்படுத்தி விசராகவே மாறிய பேய் மனிதர்கள் திரியும் கடல்கள் ,
அவனையும் அவர்களாக மாற்றும் நாடுகள் .கொஞ்ச காலமாவது அமைதியாய் , நிம்மதியாய் , திருப்தியாய் வாழ மனம் ஏங்கிறது . சுதந்திரக் காற்றை சுவாசிக்க மூக்கு ஏங்கிறது . .இங்கே இறப்பை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.. முற்பது வருசங்களை உறைய வைத்து அகதியாய் விரட்டுற இனவெறி . அவன் என்னவோ நடை பிணம் தான்.
கடிபட்ட அவனுக்கு துவசம் செய்யவே கோபம் தலைக்கு ஏறுகிறது . இந்த ‘அச்சம்’ ஒன்றும் முகிலை பெரிதாய் அசைக்கும் வலுவற்றது . வயது மீறிச் செல்கிற போதும் கோபமும் உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது .
. கிராமத்தில் முகில் பிரிவிலே விடுதலை அமைப்பிற்கு அள்ளுப்பட்டவர்களை கை விட்டு எண்ணலாம் , அயலில் வேற மாதிரி இருக்கலாம் . அவனும் அப் பிரிவோடு அப்படியே நின்றிருந்திருந்தால் …வாழ்க்கை வேற மாதிரிமாறிப் போயிருக்கலாம் . அவனுள் விடுதலை வேணும் என்ற குரலும் எழாமல் கூட போய் விட்டிருக்கலாம் . ஒவ்வொருவருக்கும் மணி அப்பப்ப அடிக்கும் என்பர் . விடுதலை என்பது ஒரு புனிதவேள்வி . அதில் கலக்காமல் போய் விடுற தவறை நல்லகாலத்திற்கு அவன் செய்திருக்கவில்லை . எப்படியும் வாழலாம் என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை . கண்ணெதிரே அநியாயம் நடக்கிற போது தட்டிக் கேட்கப்பட வேண்டும் . கேட்டேயாக வேண்டும் .




சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் ரொறன்ரோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தில் மொழியியல் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாணடு விழா கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்பு நடனமும், கனடா, அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்களின் வரவேற்புரையும் இடம் பெற்றன.

"அப்பா என்னும் பெருவெளி” என்ற படைப்பின் மையத்தில் எனக்குத் தெரிவது ஒரு தந்தையின் மரணம் அல்ல; தந்தை இறந்த பிறகும் மகனுக்குள் தொடர்ந்து வாழும் ஒரு தந்தையின் இருப்பியல்.
கட்டுரையாளர்: முனைவர்.கு.செல்வஈஸ்வரி - , தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. 
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரிஸ்டராகப் பயிற்சி பெற்றுள்ள சுசித்ரா விஜயனின் ‘Midnight's Borders: A People's History of Modern India (2021)’ என்ற ‘கள ஆய்வு’ நூலை, ‘நடுநிசி எல்லைகள் நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு’ என்ற தலைப்பில் ஞான வித்யா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அண்மையில் ஏற்பட்டது. இந்திய எல்லைகள் பிரச்சினைபற்றி செய்திகள் வாயிலாக மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்திய தேசிய உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து - அந்த மக்களின் பிரச்சனைகளை வாசித்தபோது மனதை அறுக்கும் காட்சிகளாக என்னால் பார்க்க முடிந்தது.

‘ஞானக் கிறுக்கு’வென தமிழில் சொல்லப்படுவதை என் சின்ன வயதில் நான் கேட்டிருக்கிறேன். பெரிய வகுப்பு படித்த, படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த பல அண்ணன்மார்கள் சிலவேளைகளில் அதுபற்றி சிரித்துச் சிரித்துப் பேசுவது இன்றுமெனக்கு ஞாபகம். பாரதியார் அவ்வாறானவர். வளர்ந்த பின்னால் அவரையே நான் ஞானக் கிறுக்காகக் கொண்டாடியதுமுண்டு.
கட்டுரையாளர்: - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 - 



“வலி” என்ற சொல் மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மனித உடலையும் மூளையையும் உள்ளடக்கிய மிகச் சிக்கலான உயிரியல் செயல்முறை இருக்கிறது. காயம் ஏற்பட்டால் வலி வருகிறது; நோய் ஏற்பட்டால் வலி வருகிறது; அழற்சி ஏற்பட்டாலும் வலி ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் காயம் குணமாகிவிட்ட பின்னரும் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க உட
உள்ளங்கள் திருந்திட உள்ளங்கள் உயர்ந்திட
எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான தொடர்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழ்தான். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ம், அவர் மறையும் வரை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அவரது நினைவு அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு. இன்றும் அவ்விதமே தோன்றியது. அப்போது என் மின்னஞ்சல்களில் அவர் எழுதியவற்றை மீண்டும் பார்த்தேன்.
எழுத்தாளர்கள் கூடுகை / விருது வழங்கும் விழா 20/10/26 மாலை நடைபெற்றது. சேவ் அலுவலகம், 5 ஐஸ்வர்யா நகர், கேஎன்பி காலனி, திருப்பூர் ( தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் அருகில்). தலைமை: வியாகுலமேரி ( இயக்குனர் சேவ் ).













