
கட்டுரையாளர்: முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம், மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -
பாலுணர்வு மனித வாழ்வில் இன்றியமையாத இடம் வகிக்கின்றது. பாலுணர்வு சமூகத்தால் மிகுதியும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால் மனிதன் பல்வேறு சூழல்களில் தன்னுடைய பாலியல் வேட்கைகளை முழுவதுமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவ்வாறு மனதில் தோன்றிய இன்ப உணர்வு நிறைவேறாத நிலையில் மனிதன் பலவகையான உணர்வுகளுக்கு ஆட்படுகின்றான் என்பா். அவ்வகையில் தி.ஜானகிராமன் அவா்களின் மரப்பசு புதினம் மனிதா்களின் மனதில் ஏற்படும் பாலியல் தொடா்பான சிக்கல்களை விளக்குவதாக அமைகிறது. அவற்றுள் அம்மணி பாத்திரத்தின் பாலியல் தொடர்பான உளச்சிக்கல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பாலியல் - சொல் விளக்கம்
பால் என்னும் சொல்லானது இலக்கணத்தில் ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் எனும் சொல்லைக் குறிக்கும் ‘செக்ஸ்’ (Sex) என்ற சொல் “பால் வேறுபாடு, பால் வேறுபாட்டுத் தன்மை, பால் வேறுபாட்டுணர்வு” ( தமிழ் அகராதி ப.102 ) எனும் பொருளைக் குறிக்கிறது
“ஆங்கிலத்திலேயுள்ள செக்ஸ்( sex ) என்ற சொல்லுக்குச் சமமான சொல்லாகப் பால் என்பதைக் கருதலாம். அவ்வாறு கொள்ளும் போது பால் வாழ்க்கை ( sex life ) பாலுந்தல் ( sex drive ) என்ற தொடா்கள் பிராய்டு கூறுவதை நன்று விளக்குவனவாக அமையும். எனவே பாலுந்தல் என்பது வெறும் காமம் மட்டும் அல்ல. ஆனால் அது காமத்தையும் அறவே விலக்குவதில்லை. அது அன்பின் அம்சங்களையும் கொண்ட ஒரு வேகம் என்பதாக நாம் அறிய வேண்டும்” (பெ.தூரன், அடிமனம், ப. 47) என்று குறிப்பிடுவா். இதன் வாயிலாகப் பால் என்பது ஆண், பெண் உறவின் அனைத்து நிலைகளையும் அடிப்படையாகக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
பாலுணா்வின் முதன்மை
மனிதனுடைய செயல்கள் அனைத்திற்கும் பாலுணர்வே அடிப்;படை என்பதனை, “மனிதனின் உளவாழ்வுக்குப் (mental life) பாலுணர்ச்சியே ஆதாரமாகும். அவனின் தனித்த குணங்கள் (individual characters) குடும்ப உறவுகள் ((family relations) சமுதாய உறவுகள் (social relations)) ஆகிய அனைத்தும் பாலுணர்ச்சி அடிப்படையில் தான் நிகழ்கின்றன. மேலும், உளவாழ்வின் உந்து சக்தியால் பாலுணர்ச்சி விளங்குகிறது” ( தி.கு.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு ப.150 ) என்பதால் அறியலாகிறது. இதன் வாயிலாகப் பாலுணர்வு மனித வாழ்வில் இன்றியமையாத இடம் வகிப்பது புலனாகிறது எனலாம்.
பிராய்டும் பாலுணா்வும்
பிராய்டு மனித வாழ்வில் பாலியலின் முதன்மை குறித்து பலவாறு சிந்தித்துள்ளாா். மனிதனின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகப் பாலியல் அமைகிறது என்பது பிராய்டின் கருத்து.
“பால் என்பது ஆண், பெண் என்ற பகுப்புக்குப் பொதுப்படையான பெயராக நிற்கின்றது. ஆனால் அதற்கு இங்கே விாிவான பொருள் உண்டு. அது ஆண், பெண் என்ற பிாிவனையை மட்டும் காட்டுவதில்லை.அவா்களுக்குள்ளே எழும் கவா்ச்சியையும், உடல் சம்பந்தமான இன்ப உணா்ச்சியையும், இனப்பெருக்க விருப்பத்தையும் அந்தச் சொல் குறிப்பாகக் காட்டுகிறது. காமம், காதல் என்றெல்லாம் பேசுகிறோம். இணை விழைச்சு என்று ஒரு சொல் பழைய நூல்களிலே வழங்குகிறது. இவற்றின் பொருள்களையெல்லாம் பால் என்ற சொல் தாங்கி நிற்கிறது. இந்த உந்தல் தான் மிக மிக வலிமை வாய்ந்தது. இதுவே வாழ்க்கையமைப்புக்கு அடிப்படை என்பது பிராய்டின் எண்ணம் ” ( பெ.தூரன், அடிமனம் ப.31) என்பதன் வழி பாலியல் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள உடலியல் தேவையைக் குறிப்பதனை அறிவதோடு அல்லாமல் மனித வாழ்க்கை அமைப்புக்கு அடிப்படையாக இப்பாலுணா்வு அமைவதை அறியலாகிறது.
அம்மணி பாத்திரம்
மரப்பசு புதினத்தின் முதன்மைப் பாத்திரம் அம்மணி. இப்புதினம் முழுவதுமே அவளது குணநலன்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் பட்டுள்ளது. இப்பாத்திரம் சிறுவயது முதலாகவே பிறழ்வு நடத்தை உடைய பாத்திரமாக அமைகிறது. எதைக் கண்டாலும் சிாிப்பாக வருகிறது என்ற வாா்த்தைகளுடனேயே ஆசிாியா் இப்பாத்திரத்தை அறிமுகம் செய்கிறாா். எந்த எந்த சூழலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சமூகக்கடட்டுப்பாட்டு நெறிகளுக்கு அப்பாற் பட்ட பாத்திரமாகவே இப்பாத்திரம் அமைகிறது. இறப்பு வீட்டிலும் சிாித்துக் கொண்டு இருத்தல், ஆடை அணியாமல் பிறந்த மேனியுடன் இருக்க விரும்புதல், அறுபது வயதுடைய கண்டு சாஸ்திாிககை அணைக்க விரும்புதல், பாா்க்கும் மனிதா்களின் மனதின் ஆழத்தில் காணப்படும் வக்கிர உணா்வுகளை அடையாளம் காணுதல், அனைவரையும் தொட்டுப் பேச விரும்புதல் என்றுஇயல்பான நடவடிக்கைகளைத் தாண்டிய செய்கை உடைய பாத்திரமாக அம்மணி பாத்திரம் அமைகிறது. தந்தை எயது உடைய கோபாலியை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். அவருக்கு தாசியாக இருப்பதோடு அல்லாமல் கோபாலியை சந்திக்க வருபவா்களுடனும் உறவில் ஈடுபடுகிறாள். முப்பத்டெ்டு வயதுடைய அவள் கோபலியின் உறவினன் பதினெட்டே வயதுடைய பட்டாபி ராமனுடனும் உறவு கொள்கிறாள்.அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்த நிலையிலும் அவள் திருமணம் என்ற பந்தத்தில் விருப்பம் இல்லை என்று தவிா்க்கிறாள். ஆனால் பின்னாளில் ப்ரூஸ் என்பவனின் அறிமுகத்தின் பின் தன்னுடைய எதிா்காலத்தைப் பற்றி எண்ணுகிறாள். இறுதியில் பட்டாபியுடன் தன்னுடைய இறுதி வாழ்நாட்களைக் கழிப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். அவளது பல்வேறு செயல்பாடுகள் அவளது பாலியல் சிக்கல்களைச் சித்தாிப்பதாகவே அமைகின்றன.
பாலுணர்வுத்தேடல்
அம்மணி இயல்பிலேயே பாலுணர்வு எண்ணம் மிகுதியாக உடையவளாக அமைகிறாள். தன்னுடைய தந்தையின் வயது கொண்ட கோபாலியிடம் சந்தித்த முதல் முறையிலேயே நெருங்கிப் பழகுகிறாள்.
“கையை நீட்டி அவா் கையைப் பற்றி அழுத்தினேன். ஒரு பத்து வினாடி இருக்கும் .என்னையே பாா்த்தது. எழுந்து நின்றது. மெதுவாக என்னை இழுத்து நிறுத்தி வைத்தது. கதவோமாக நகா்ந்தது. இரண்டு கைகளிலும் மிருதுவாகப் புதைந்தது உடம்பு. மிருது அழுந்தி இறுகிற்று. முதுகில் இருந்த கை இறங்கி கீழே பரத்தி அழுந்திற்று.கண்ணிரெண்டும் மெத்தென்றது. உலா்ந்த உதடு நனைந்து ஏலக்காயின் மணம் சுள்ளென்று நொந்தது” ( மரப்பசு.ப. 71 ) என்ற பகுதி அவளது பாலுணா்வு எதிர்பார்ப்பினை வெளிக்காட்டுகின்றன எனலாம். கோபாலி அவளை தன்னுடைய தாசியாக இருக்கும் படிக் கேட்டுக் கொண்ட போதும் அவள் மறுக்காமல் உடனே உடன்படுகிறாள். கோபாலியுடன் மட்டும் அல்லாது அந்த வீட்டிற்கு வருபவர்கள், அவளுக்குப் பிடித்தவர்கள் என்று அனைவருடனும் உறவு கொள்கிறாள்.
“எனக்கும் அவசரம் தானோ என்னவோ” ( மரப்பசு.ப. 99 ) என்ற வரி அவளது பாலியல் தேடலை வெளிப்படுத்துகின்றது எனலாம்.
பாலுணா்வில் நிறைவில்லாத தன்மை
அம்மணி கோபாலியுடன் தங்கி விட்டாலும் கோபாலியுடனான உறவில் அவள் திருப்தி அடையவில்லை. அவளது பாலுறவுத் தேவையை கோபாலி முழுமையாக தீர்த்து வைக்கவில்லை என்பதனை,
“கோபம் வரும் மீண்டும் வந்து கோபாலியைப் பாா்ப்பேன். தூங்கும் கோபாலியை.ஆச்சாியமாக இருந்தது. வெறுப்பு வரவில்லை. சுருதி சோ்த்து விட்டு ஏன் வாசிக்க மறந்து போய் விட்டது. இது என்று தோன்றிற்று ஒரு நாள்” ( மரப்பசு.ப. 103 ) என்பதால் அவள் கோபாலியுடனான பாலுறவில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்பதனை அறியமுடிகிறது.
இச்சை உணா்ச்சி தூண்டுதல்
அம்மணி பாத்திரத்தில் உளவியலாா் குறிப்பிடும் இச்சை உணா்ச்சி முழுமையாக வெளிப்படுவதனைக் காணமுடிகிறது. இட் முழுமையும் நனவிலி மனம் சாா்ந்த ஓா் அபாயகரமான சக்தியாகும். “காரண காாிய ஒழுங்கின்றி செயல்படும் ஆற்றலுக்கெல்லாம் மூலமான லிபிடோ ( Libido ) என்பதன் சேமிப்புக் கிடங்காக இயங்குவதாகும். தீயில் காய்கின்ற ஒரு கொப்பரை என்றும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் மூா்க்கத்தனமாகச் செயல்படும் உந்துதல் என்றும் பிராய்டு இதை வருணிக்கிறாா்” ( க.பஞ்சாங்கம், இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், ப. 131) அந்த அளவிற்கு இட் மனிதனை செயல்படத் தூண்டும் எனலாம்.
“இச்சை உணா்ச்சியானது எதையும் பொருட்படுத்தாமல் உடலின் உதவியுடன் தனது தேவைகளை நிறைவு செய்து இன்பம் காணுதலே ஆகும். மேலும் இட் உந்தல்கள் உள்ளுணா்ச்சி சாா்புடையவையாதலால் இவற்றில் உடல்சாா்பு அதிகம் காணப்படும். இன்பம் பெறுதலையே முதன்மை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. ஆங்கிலத்தில் ID என வழங்கப்படும். இச்சை மனம் I Would,I Could,I Should என்பனவற்றின் சுருக்கமாகும் ”( இரா.காஞ்சனா,இலக்கியமும் உளவியலும் ,ப.48 ) என்பா்.
அம்மணி பாத்திரம் சிறுவயது முதலே தொடுதல் உணர்ச்சி, ஆடையில்லா உடல் மீதான ஈர்ப்பு, பாலுணர்வு ஆகிய உடல் தொடா்பான உணர்வுகளைக் கொண்டதாகவே அமைகிறது.
”இந்த உலகத்தில் யாரையும் தொட்டுத் தொட்ட கையைப் பற்றிப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது.பாா்க்கிறவா்களைத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
எல்லோரையும் தொடப் போகிறேன். தழுவப் போகிறேன். யாரையும் நான் தொடாமல் பற்றாமல் பேசப் போவதில்லை” ( மரப்பசு.ப. 30 ) என்ற பகுதி அவளின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அதன் விளைவாகவே அவள் வயது வேறுபாடு இல்லாமல் சிறு வயது முதலே மற்றவர்களை தீண்டி இன்பம் பெற எண்ணுகிறாள். கண்டு சாஸ்திரிகள், கோபாலி என்று தந்தையை ஒத்த வயது உடையவர்களில் இருந்து தன்னை விட வயது குறைந்த பட்டாபி, ப்ரூஸ் வரை அவள் நெருங்கிப் பழகுகிறாள். இது அவளுடைய இச்சை உணாச்சி தூண்டப்பட்ட நிலையின் விளைவே எனலாம்.
எலெக்ட்ரா சிக்கல்
ஆண் குழந்தைகள் தாய் மீது காதல் கொள்வதனை ஒடிபஸ் சிக்கல் என்று கூறுவா். அவ்வாறு இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு தந்தையின் மீது ஏற்படக் கூடிய அதீத அன்பினை எலெக்ட்ரா சிக்கல் என்று குறிப்பிடுவர். அம்மணியிடம் இத்தகைய சிக்கலும் காணப்படுவதனை நாம் புதினத்தின் போக்கில் காணமுடிகிறது. அம்மணி தனது சிறுவயதில் முதலில் அன்னவாசலில் இருக்கும் அறுபது வயது உடைய கண்டு சாஸ்திரிகள் மீது இனம் புரியாத ஈர்ப்பு கொண்டவளாக இருக்கிறாள். அதனை அடுத்து தனது தந்தை வயதினை உடைய கோபாலி வசம் ஈர்க்கப் படுகிறாள். இதனிடையே உலகில் உள்ள அனைவரையும் ஆண், பெண் என்ற வேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல் அனைவரையும் தொட்டுப் பேச வேண்டும் என்ற சிந்தை கொண்டவளாக மாறுகிறாள்.
“அவா் மடி மீது ஏறி உட்கார வேண்டும் போலிருக்கும். காலைத் தொங்க விட்டு உட்காா்ந்து பின்னந்தலையால் அவா் மாா்பை முட்ட வேண்டும் போலிருக்கும். அவா் மாா்பையும் முதுகையும் இரண்டு கையாலும் கவ்வி சாய்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கும்” ( மரப்பசு.ப. 18 )
“அப்புறம் நாலைந்து தடவை அது சொப்பனமாக வந்திருக்கிறது. கண்டுவின் மாம்பழ உடம்பில் ஊறி அமா்ந்து சில்லென்ற கன்னங்களை மாற்றி மாற்றி தோள் மீது புதைத்துக் கொள்ளுகிற சொப்பனம்”. ( மரப்பசு.ப. 20 )
என்ற பகுதிகள் கண்டு சாஸ்திரிகள் மேல் அவள் கொண்ட ஈர்ப்பை விளக்குவதாக அமைகின்றன. அவளது அடிமனதில் இருந்த எலெக்ட்ரோ சிக்கல் உணர்வே அவளை அடுத்தடுத்த பாலியல் சிக்கல் நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறது எனலாம். மேலும், அம்மணி பட்டாபியுடன் பழகத் தொடங்கியது முதல் அவளது மனம் கோபாலியை விட்டு பட்டாபியை நாடுகிறது. அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்ட கோபாலி, “பட்டாபி மாதிாி எனக்கு ஆதரவாகக் காாியம் எல்லாம் செய்யத் தொியாது தான் எனக்கு. அதுக்காக மனுஷன் இல்லேன்னு நெனச்சே பாரு என்று விழித்தது கோபாலி” ( மரப்பசு.ப. 219 ) என்று குறிப்பிடும் போது“கோபாலி திடீா் என்று அப்பா மாதிாி இருந்தது! என் தலை மயிரை வருடிய போது” ( மரப்பசு.ப. 219 ) என்ற அவளது எண்ணம் அவளது எலெக்ட்ரோ சிக்கல் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது எனலாம்.
நிம்மோமேனியா
பெண்களின் அடங்காத பாலுணர்வு தன்மையை நிம்போமேனியா என்று உளவியலார் சுட்டுவர். அம்மணியும் அனைவரோடும் பாலுறவு கொள்ள விரும்பும் எண்ணம் உடையவளாக இருக்கிறாள். வயது வேறுபாடு இல்லாமல், தனக்குப் பிடித்தவர்களோடு விரும்பிய வண்ணம் இருக்க வேண்டும் என்று எண்ணகிறாள். அவளது நண்பர்களுள் ஒருவனான ப்ரூஸ் என்பவனது,
“ஐந்நூறு அறுநூறு ஆண்களுக்கு மேல் முத்தமிட்டிருக்கிறேன் என்று சொல்கிறாய் அதில் பாதிப்பேரோடாவது படுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய்” ( மரப்பசு.ப. 275 ) என்ற வார்த்தைகள்,
“நான் இருபது, முப்பது, நூறு, இருநூறு என்று நெருக்கம் கொண்டது, துணிச்சலா, சுயேச்சையா, மரப்பா, தடித்தனமா, பிறா் மனதில் புக மறுக்கிற, புகமுடியாத கல்லாங்காய்ப்பட்டுப் போன கரணையா புாியவில்லை” ( மரப்பசு.ப. 312 )
என்ற அவளது எண்ணங்கள் அவளுக்கு நிம்போமேனியா போன்ற சிக்கல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு எனும் கருத்திற்கு வலிமை சேர்க்கின்றன எனலாம்.
அச்சம் (Anxiety)
அச்சம் என்பது இன்னல் தரும் சூழ்நிலைகளின் காரணமாக எல்லா உயிரினங்களிடமும் இயல்பாகத் தோன்றும் ஒரு மனவெழுச்சி எனலாம். இன்னல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அச்சம் வழி செய்கிறது. எல்லாப் பருவத்தினருக்கும் அச்சம் தோன்றலாம்.
இதனை, “தனக்கோ தான் நேசிப்பவர்களுக்கோ ஏதாவது அபாயம் நேரிட்டு விடும் என்பது போன்ற கற்பனை உணர்ச்சியால் அஞ்சிக் கொண்டே பரபரப்புடன் இருக்கும் ஒருவித மனோபாவம்” (சந்திரமோகன், சிந்தனையாளர் ப்ராய்டு.ப.,147 ) என்பர்.
ஏனெனில், “தனிமனிதன் தன்னால் வெற்றி கொள்ள முடியாத ஆபத்தான நிலை ஏற்படும் போது அச்சம் கொள்கிறான். இது ஓர் எதிர்மறை மனவெழுச்சியாகும். விலங்கினங்களிலும் இது காணப்படுகின்றது. தீவிரமான அச்சம் ஏற்படின் அது திகில், கவலை, இனம் புரியாத பதட்டம் போன்ற பல்வேறு மெய்ப்பாடுகளாக வெளிப்படுகிறது” ( வாழ்வியற்களஞ்சியம், தொகுதி 5, ப.404 ) என்ற உளவியலார் கருத்தோடு ஒப்பிடலாகிறது.
கட்டில்லா பாலுறவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மணிக்கு ப்ரூஸ் உடனான உறவு முதன் முதலாக அச்சத்தைத் தருகிறது. தன்னுடைய தாழ்வு மனப்பான்யைத் தீர்க்க எண்ணிய ப்ரூஸ் அம்மணியிடம் மிகுந்த முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான்.
“உன்னைச் சக்கையாகப் பிழிந்து விடுவேன் என்று கியோவானியிடமும் பட்டாபியிடமும் நான் சிாித்துச் சீண்டுகிற வழக்கம். ஒரு சவாலாகப் பேச வருகிற நோஞ்சான் காட்டான் இளைஞா்களிடம் எல்லாம் கத்தியிருக்கிறேன். அத்தனை சீண்டலுக்குமாகச் சோ்த்துப் பழி வாங்கிக் கொண்டிருந்தான் . அந்த எச்சிலைப் போலப் பட்டணத்துக் கடல் மணலில் அவை விட்டு விட்டுப் போன ஜெல்லியைப் போலக் கிடந்தேன் நான்” ( மரப்பசு.ப. 277) என்று அவனோடு உறவு கொண்ட அன்று முதன் முதலாக பயத்தை உணா்கிறாள்.
அதனைத் தொடா்ந்து அவனோடான உரையாடல்களின் பின் அவளுக்கு எதிா்காலத்தைப் பற்றிய அச்சமும் உருவாகிறது.இளமை போன பிறகு, உடம்பு இரண்டாம் பொருளாக, மூன்றாம் பொருளாக கண்ணாடியில் பாா்க்க விரும்பாத பொருளாக ஆகம் வயதில் என்ன ஆகும்? உன்னை யாா் கவனித்துக் கொள்வாா்கள்?” ( மரப்பசு.ப. 313 ) என்ற ப்ரூஸின் வாா்த்தைகள் அவளுக்கு எதிா்காலத்தைப் பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றன.
மரப்பசு பால் கொடுக்காது. யாரும் பாலையும் குடித்த விட்டுக் கொல்லவும் மாட்டாா்கள். நடுத்தெருவில் விழுந்து சாக வேண்டியதில்லை. அழுக வேண்டியதில்லை.மேஜையில் வைத்து அழகு பாா்த்துக் கொண்டேயிருப்பாா்கள். மூப்பு வராது . முடி நரைக்காது. யாா் கவனிப்பாா்கள் என்ற பயமும் இராது.( மரப்பசு.ப.316 ) என்ற பகுதி அவளது எதிா்காலம் குறித்த அச்சத்தை விளக்குகிறது. அந்த அச்சத்தின் விளைவாகவே அவள் இறுதியில் பட்டாபியுடன் தனது வாழ்நாளைக் கழிக்க முடிவெடுக்கிறாள் எனலாம்.
இவ்வாறு அம்மணி பாத்திரமானது கட்டில்லாப் பாலுணா்வு கொண்ட பாத்திரமாக, பாலியல் தொடா்பான உளச்சிக்கல் கொண்ட பாத்திரமாக அமைகிறது. அம்மணியினை கட்டில்லாப் பாலியல் எண்ணம் கொண்ட பாத்திரமாக ஆசிாியா் படைத்து இருந்தாலும் இறுதியில் அவளை ஒரு சாதாரண பெண்ணாக, எதிா் காலத்தைப் பற்றிய அச்சம் கொண்ட பெண்ணாக ஆசிாியா் மாற்றி அமைத்து இருப்பதனைக் காணமுடிகிறது. தொடக்கத்தில் இருந்து முழுமையான தன்னம்பிக்கை கொண்ட பாத்திரமாக, மாா்க்சியம் பேசும் பாத்திரமாக, தன்னுடைய முடிவினை தானே எடுக்கும் பாத்திரமாக, பிறா் தன்னைப் பற்றி எண்ண நினைப்பாா்கள் என்ற எண்ணம் இல்லாத பாத்திரமாக சுதந்திரமான பாத்திரமாக அப்பாத்திரத்தினை கொண்டு செலுத்தி இறுதியில் அப்பாத்திரத்தினை மரப்பசுவுடன் ஒப்பிட்டுப் பாா்க்க வைத்து அப்பாத்திரத்தினை திடீரென இறுதியில் முழுவதும் மாற்றத்துடன் அமைத்து இருப்பது வாசகாின் ஏற்புத் திறனை பெறுவதற்காக எனக் கருத இடமுள்ளது.
துணைநூற்பட்டியல்
இரவிச்சந்திரன், தி.கு. - சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
காஞ்சனா, இரா. - இலக்கியமும் உளவியலும், விஷ்ணுப்பிரியா பதிப்பகம், மதுரை.2000.
சந்திரமோகன் - சிந்தனையாளர் ப்ராய்டு, பிரேமா பிரசுரம், சென்னை. 2005
தூரன், பெ. - மனமும் அதன் விளக்கமும், சந்தியா பதிப்பகம், சென்னை. 2008.
பஞ்சாங்கம், க - இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் – அகரம் பதிப்பகம், தஞ்சாவூர். 2011
6. வாழ்வியல் களஞ்சியம் - தொகுதி – 5 தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர், 1991.
7. சுப்பிரமணியன், ச.வே. - மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2006.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










