அண்மையில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் முருகபூபதியின் பவளவிழா நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது. அதனையொட்டி மேற்படி சங்கம் 'ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்' என்னும் தலைப்பில் பவளவிழா மலரையும் வெளியிட்டிருந்தது. 
 
முருகபூபதி அவர்கள் வாழ்க்கையின் சவால்களையெல்லாம் உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்து வருபவர். தன் கலை, இலக்கிய, அரசியல் சார்ந்த அனுபவங்களைத் தன் எழுத்துகள் மூலம் வரலாற்றை ஆவணப்படுத்தி வருபவர்.
 
இம்மலரில் எனது 'முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் பற்றிய சில குறிப்புகள்' கட்டுரையும் வெளியாகியுள்ளது. 
 
பவளவிழா கண்ட முருகபூபதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். விழாவைச் சிறப்பாக நடத்திய ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்துக்கும் வாழ்த்துகள். 
 
 
 
 

பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்