அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

    இந்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் ‘‘ எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும்.’ இது  பாலினச் சமத்துவத்திற்காகச் சேர்ந்து துரிதமாகச் செயற்படலாம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் சாதனையாளராக நிலைநிறுத்தி இருப்பதற்கு அதாவது ஒரு பெண்ணின் வெற்றிக்கு யாரோ ஒருவரின் உதவிக் குரல் அவருக்குப் பக்கபலமாக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் வீட்டில் இருந்துதான் உருவாகியிருக்கிறது. குடும்பத்திலுள்ள தாயாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், சகோதரனாக இருக்கலாம், துணைவருடைய உதவியோ அல்லது மகனுடைய உந்துதல்தான் நிட்சயமாக இருந்திருக்கும்.

    அந்தவகையில் ஆண் பெண் சமத்துவத்தை உணந்து நாம் செயற்பட்டு இந்நாளை முன்னெடுப்பது பொருத்தமானது என் நம்புகின்றேன். பெண்களுக்கு ஏற்படும் வன்மங்கள், அநீதிகளுக்கு எதிராக கண்டனத்தை நாம் வழங்கவேண்டும். அது பெண்ணாக மட்டுமன்றி யாராக இருந்தாலும் பரவாயில்லை அதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.

     பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இத்தினதில் நாம் பெண்களாகப் பிறந்ததை எண்ணிப் பெருமிதத்தோடு இருக்கின்றோம்.

     ‘மங்கையராயப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
     செய்திடல் வேண்டுமம்மா’

     என்ற கவிமணி சொன்ன கூற்றுக்கு இணங்க நாம் எல்லோரும் பெருமிதமடைய வேண்டும். பெண் என்பவள் பொறுமையின் சிகரம் என்று கூறுவார்கள். ஒரு தாய் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறாள் என்பதை நாம் குறிப்பாக அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணும் அந்தத்தாய்மை நிலையை அடையும்போது அது தானாகவே உருவாகி விடுகின்றது. எனவே இளையவர்களுக்கு பொறுமையில்லை என்று கூறவதைவிட அவர்கள் அந்த நிலைக்கு வரும்போது அவர்களிடம் இவை இயல்பாகவே வந்துவிடும். இந்த வேளையில் ஒவ்வொரு பெண்ணுக்கும்; மகளிர்தின வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

    அமெரிக்காவில் சோசலிஸ் கட்சிதான் பெண்கள் தினத்தை முன்னெடுத்தது. அங்கு செயற்பட்ட தொழிலாளர் இயக்கத்திலிருந்துதான் முதன்முதலில்; தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது எனலாம். குறுகிய கால சேவை நேரம், பெண்களின் வேலைக்கேற்ப சிறந்த ஊதியம், வாக்களிக்கும் உரிமை கேட்டு நியூயோர்க்கில் 1908 ஆம் ஆண்டில் அணிதிரண்டு ஆரம்பித்த பெண்கள் போராட்டம் இன்று சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடுவதற்கு வழிவகுத்தது. அந்தப் பெண்கள் போராட்டத்தில் பதினையாயிரம் பெண்கள்வரை பங்குபற்றியிருந்தார்கள் என்று அறிய முடிகின்றது.

    இதனைச் சர்வதேச மயமாக்கவேண்டும் என கம்யூனிஸ ஆர்வலரும் பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) இடமிருந்து உதயமானது. அவ்வேளையில் ஹோபன் ஹோலில் நடந்த ‘உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மகாநாட்டில்’ இதனை அவர் முன்வைத்துப்பேசிய வேளை அதனை ஏற்றுக்கொண்டு முன்னெடுத்தார்கள்;. அங்கு பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அம்மாநாட்டுக்குச் சமூகமளித்திருந்தனர்  என அறியமுடிகின்றது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல 1911 ஆம் ஆண்டில் ஒஸ்ரியா, ஜேர்மனி, டென்மார்க், சுவிற்ஸ்லாந்து போன்ற நாடுகளில் எல்லாம் இதனைக் கொண்டாடினார்கள் என அறிகிறோம். இதனை நினைவிருத்தி தொழில்நுட்ப அளவில் 2011 ஆண்டில் அதன் 111 ஆவது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடியமையையும் குறிப்பிட்டுக் கூறலாம்.

      1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைக் கொண்டாட வேண்டுமென ஆரம்பித்தபோது அனைத்தும் அதிகார பூர்வமாக இதனை மாற்றினார்கள். இதனை ஐக்கிய நாடுகள்சபை 1996இல் பெண்கள் தினமாக ஆரம்பித்தவேளை அதன் முதற்  கருப்பொருளாக ‘கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்’ என்பதனை மையமாகக் கொண்டு இதனை முன்னெடுத்தனர்.
     1917ஆம் ஆண்டில் ரஷ்யப் பெண்கள் ‘உணவும் அமைதியும்’ என்ற பெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்தத்திகதி அதாவது மார்ச் மாதம் எட்டாம் திகதியென்பது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவர்களின் அந்த நான்கு நாட்கள் இடம்பெற்ற போராட்டத்தில்தான் கிறகோரியன் நாட்காட்டியில் காட்டப்பட்ட மார்ச் மாதம் எட்டாம் திகதியை பெண்கள் தினத்திற்கான நாளாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள் என்பதனைப் பார்க்க முடிகின்றது.

     மகளிர் தினத்தில் ஊதாநிறத்தைத்தான் பயன்படுத்துவார்கள். ஊதாநிறம் நீதி மற்றும் கண்ணியத்தைக் குறிப்பதனால் சர்வதேச பெண்கள் தினத்தில் ஊதா நிற ஆடைகளையே அவர்கள் முக்கிய நிறமாகப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

     மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் பெண்களாகிய நாம் சுயமரியாதையாக இருப்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை நினைவிருத்தவேண்டும். அதுதான் பெண்கள் குறித்த சுயமரியாதை என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்;. எங்கே சுயமரியாதை கிடைக்கின்றதோ அங்கே அவள் மகிழ்ச்சியாக இருக்கின்றாள். எல்லோரும் சமம் என்பதை சமூகத்தினால் போற்றப்படவேண்டும். பெண் என்ற அடையாளத்தைச் சமூகம் சுமத்திக்கொண்டிருப்பதை விடுவிக்கும் போதுதான் அங்கே சுயமரியாதை ஒரு பெண்ணுக்குக் கிடைக்கின்றது.

    பெண்கள் முன்பைவிட பல்வேறு தளங்களில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தத்தமது திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி வருகின்றமை போற்றுதற்குரியது. அவர்களின் பெருமைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் உரையாடியும் வந்திருக்கின்றோம். ஆனால் புதிய அலையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய இளம் சமுதாயத்தினரின் சிக்கல்கள் எமக்குப் புரிவதேயில்லை. இளையவர்கள் சிறப்பாகத்தான் வளர்ந்து வருகின்றார்கள். படிப்படியாக அவர்கள் மிகவும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இளைஞர்களை நாம் கிண்டல் செய்வதையோ, அவமானப்படுத்துவதையோ நாம் தவித்துக்கொள்ளுதல் வேண்டும்.

    கனடாவில் இருபத்தியெட்டு வயதுக்குக் குறைந்த 63 இளையவர்களின்  (இலங்கை, இந்தியா) தற்கொலைகள் ஒரு வருடத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் கூடுதலாகப் பெண்பிள்ளைகளின்; தற்கொலைகள் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது. பெண் பிள்ளைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தவேளை சினைமுட்டைகள் காணப்பட்டதாகவும், அவை அவர்களின் மாதவிடாய்க் காலத்தில் அதிகயமாக இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய வைத்தியர்களின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல்ககள் எம்மால் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். மாதவிடாய் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், மாதவிடாயின் போதுள்ள மூன்று நாட்களும், அதற்கு பின்னர் மூன்று நாட்களும் அதாவது ஒன்பது நாட்களும் மிகவும் உக்கிரமான காலகட்டம் எனவும், அவ்வேளைகளில் பெண்களுக்குக் கவனிப்பு அவசியமெனவும் அறியமுடிகிறது.

    வாழ்க்கையில் வெற்றி என்பது தானாக வந்து வெற்றிவாகை சூடுவதில்லை. யாரிடமிருந்து அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளும்போது வெற்றி கிடைக்கின்றது. நாளை உலகம் உனக்காத்தான் எனச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புவதைப் செய்து கொண்டிருப்பதுதான் மிகப் பெரும் நிறைவைத் தரும் எனக் கொள்ள வேண்டும். பெண்ணின் போராட்டம் மிகப் பெரியது.

.     பெண்களுக்கெதிரான குற்றங்;கள் எங்கே நடக்கின்றனவோ அங்கே பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்;டத்தின் நியாயங்களை சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதும்தான் உண்மையான மகளிர் தினமாக நாம் கொள்ளலாம். ஆனால் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் காதலர் தினத்தைப்போலவே சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாட்டமாகச் செய்யப்பட்டு வருகின்றது. பெண்கள் தினம் என்பது இன்று அதன் முக்கியத்துவத்தை இழந்து எல்லோரினதும் மன மகிழ்;ச்சிக்கும், கொண்டாத்துக்கு மட்டுமே என்று மாறி இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது.

     இன்று மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் பெண்கள் தினமானது ஒரு நூற்றாண்டுக் காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டங்கள்தான் இன்றைய எமது ஆர்ப்பரிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளுக்காக அவர்கள் குரல்கள் கொடுக்காவிட்டால் இன்று நம்முடைய குரல்கள் எல்லாமே நசுக்கப்பட்டிருக்கும்.

    வாக்குரிமைகளுக்காகப் போராடி அதைப் பெற்றுத்தராவிட்டால் இன்று நாம் வாக்களிக்கும் உரிமையற்று வெறும் அலங்காரப் பதுமையாகவே இருந்து கொண்டிருப்போம். இன்று பெண்களாகிய நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகளையெல்லாம் போராடிப் பெற்றுத் தந்ததின் காரணமாக இருந்த முன்னோடிப் பெண்கள் அனைவரையும் இவ்வேளை நாம் போற்ற வேண்டும்.

    இன்று பெண்கள் தினம் என்பது அதிகமாக கொண்டாட்டத்துக்குரியதாக மாறி வருகின்றது என்ற கேள்வி எம்முள் எழுவதோடு, சர்வதேசப் பெண்கள் தினம் ஒவ்வொரு சமூகத்திலும்; அதீத கவனம் பெற்று வருவதும் குறிப்பிட வேண்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.