
1
ஈரானிய போரும் ஹோமூஸ் நீரிணையும் ஓர் இடியாப்ப சிக்கலாய் நீளுவதாய் உள்ளன. பரஸ்பர தாக்குதல்களும், பரஸ்பர மறுப்புகளும் இப்போரின் உறுத்தும் முக்கிய அம்சங்களாகின்றன. கண்ணுக்கு புலப்படாத, அதி நவீன விமானம் என்று பெயர் பெற்ற கு-35 விமானமும், மூன்று நாசகாரி கப்பல்களும் தாக்கப்பட்டு விட்டதாய் ஈரான் கூறினாலும் அமெரிக்கா அதனை உடனடியாக மறுப்பது வழமையாகின்றது. உண்மையில், அப்படி எந்த ஒரு கப்பலும் தாக்கப்படவில்லை. நாங்களாகவேதான் நீரிணையினையிலிருந்து அவற்றை அப்புறப்படுத்தி விட்டோம் என்று அமெரிக்கா எடுத்துரைப்பதையும் உலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது. போதாதற்கு, இப்போரின் நிலவரங்கள் இப்போது, நாளுக்கு நாள், மணிக்கு மணி, செக்கனுக்கு செக்கன் மாறி கொண்டே இருப்பது இன்னும் ஒரு விசேட அம்சமாகிறது.
15,000 துருப்பினரையும் 10 விமானங்களையும் களமிறக்கி தனது Project Freedom எனும் திட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறி வந்த அமெரிக்கா, ஏதோ காரணத்தால் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளதாக அறிவித்தது. இதே நாளில்தான் (மே-06) ஈரானின் வெளிநாட்டமைச்சர் சீனத்துக்கு தனது அதிரடி விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இப்படி திடீரென அவர் சீனத்திற்கு விஜயம் செய்வது என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ட்ரம்ப், சீனாவுக்கு விஜயம் செய்ய இருக்கும் ஒரு கிழமைக்கு முன்னதாகத்தான் ஈரானிய வெளிநாட்டமைச்சர் இப்படி திடீரென தனது விஜயத்தை மேற்கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, சங்கடப்பட வைப்பதாகவே இருந்தது. முக்கியமாக ட்ரம்பை. ஏனெனில், இப்படி Project Freedom என்ற பெயரில் ஓர் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து, பலவந்தமாக ஹோமூஸ் நீரிணையை திறப்பதில் தான் ஈடுபட்டால், சீனம் நேரடியாக போர்க்களத்தில் இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க சென்றுள்ளாரோ மனிதர் என்பது கேள்வியானது. ட்ரம்ப் இத்தகைய கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டதாலா Project Freedom ஐ வாபஸ் பெற்றார் என்பதும் கேள்வியானது. இருக்கலாம். ஏனெனில், ஈரானில் உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத எண்ணையை சீனாவே பெறுகின்றது. ஆகவே ஹோமூஸ் நீரிணையை மூடுவதும், ஈரானை தாக்குவதும் ஒருவகையில் சீனத்துக்கு எதிராக தொடுத்த போராகத்தான் இறுதி கணிப்பில் வந்து சேர்கிறது.
தனது 12 விமானம்தாங்கி கப்பல்களை கொண்டு ஹோமூஸ் கடல்பாதையை மூடிவிடலாம் என்றாலும் அத்தகைய அமெரிக்காவின் திட்டம் இப்போது கைகூடுவதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இதுவரை எடுத்துள்ள அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் ஈரானின் விடயத்தில் தொய்வடைந்து போய் விட்டதாகவே தெரிகின்றது.
உதாரணமாக, 39 விமானங்கள் ஈரான் தாக்குதலால் அழிபட்டுள்ளதாக அமெரிக்க செனட்டில் அண்மையில் கூறப்பட்டாலும், இவ் எண்ணிக்கையும் இப்போது கூடி உள்ளது என தெரிகின்றது. அமெரிக்க ஊடகங்களின் கருத்துப்படியே இத்தொகை 42 எனவும், இது தவிர மேலும் பல விமானங்கள் கடும் சேதங்களுக்குள்ளாகின என்பதும் இன்று தெரிய வருகின்றது. போதாதற்கு அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ட்ரோன்களும் அழிபட்டுள்ளன. சுநயிநச வகையிலான ஆஞ-4 ட்ரோன்கள் மாத்திரம் 30 அழிபட்டுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது. ஆஞ-4 ஒவ்வொரு ட்ரோனும் 30 மில்லியன் டாலர் செலவை உள்ளாக்கும் என கூறப்படுகின்றது. ஆதலால், இதுவரை அமெரிக்கா இப்போரினால் அடைந்துள்ள நட்டம், 29 பில்லியனை தாண்டும் என கூறப்பட்டாலும், அது இதனை விட பன்மடங்கு அதிகமானது என ஈரான் கூறி உள்ளது. (ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதிலும் சீன-ர~;ய செய்மதிகள் பங்கு வகித்தனவா என்பதும் இங்கே தொடர்புடைய கேள்வியானது).
ஆனால் இவை, அமெரிக்காவானது, இந்த ஈரானிய போரில், எதிர் கொள்ளும் பின்னடைவுகளில் ஒரு பகுதியேயாகும். ஈரான், இன்று வெளிப்படுத்தியிருக்கும் மனித ஆவேச எழுச்சி என்பதும் அது, இன்றைய மாறிவரும் உலகிலேயே மிகவும் சாத்தியமாகிறது என்பதும் பிரதான காரணங்களாகின்றன. உதாரணமாக சீனம் இன்று காட்டி வரும் பல்தரப்பட்ட முன்னேற்றங்கள், உலகின் பல தரப்புகளிடையேயும் சங்கடங்களை உருவாக்கவே செய்துள்ளது. நீரிலும், நிலத்திலும், விண்ணிலும் சீனம் காட்டி வரும் சாகசங்கள் இன்றைய உலகை ஆழமாக ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.
பாகிஸ்தானின் குவாட்டர் துறைமுகத்தை வாங்கி போட்டதும், பின் பாகிஸ்தானின் ஊடாக தனக்கென ஒரு நிலவழி பாதையை ஏற்படுத்தி கொண்டதும், இது போலவே மியன்மார்க்கூடாக தனக்கென எண்ணை குழாய்களை இட்டுக் கொள்வதும், மலாகா நீரிணையை அல்லது ஹோமூஸ் நீரிணையை கடக்கும் சீனத்தின், ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகின்றது. இருந்தும், இவ்விரண்டு நகர்வுகளுமே சீனத்தின், எண்ணை-எரிவாயு பிரச்சினைகளை முற்றாய் தீர்த்ததாயும் இல்லை.
இதன் காரணமாகவோ என்னவோ சீனம் அண்மையில் (ரஷ்யா போன்று) டர்க்மென்ஸ்தான்,-கஸகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊடாக ஓர் 10,400 கி.மீட்டர் நீளமான ஒரு ரயில் பாதையை, ஈரானின் எண்ணைக்காக, கட்டத் தொடங்கி இருக்கின்றது. இவ் ரயில்பாதையானது, ஹோமூஸ் நீரிணையையும் மலாக்கா நீரிணையையும் தாண்டும் அதே சமயம், எண்ணை-எரிவாயு ஏற்றுமதியை 30-40 தினங்களில் இருந்து 15 தினங்களாக குறைக்கும் சாத்தியக்கூறையும் உள்ளடக்குகின்றது.
சீனத்தின், ஈரானை நோக்கிய நகர்வுகள், இவ்வாறு பரிணமிக்கும் போது, ட்ரம்ப் கூறிவந்த “முற்றுகை திட்டமும்” முற்றாக வெற்றியளித்ததாக தெரியவில்லை. உதாரணமாக, இன்று ஈரான், 35 கப்பல்கள் வரை ஹோமூஸ் நீரிணையில், தனது பாதுகாப்பின் கீழ், கடந்தன என்று கூறுகையில், அமெரிக்கா, இக்கப்பல் கம்பனிகள் ஈரான் விதிக்கக்கூடிய சுங்க வரியை கொடுக்க கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவற்றுக்கு எதிராக தடை உத்தரவுகள் பெறப்படும் என்று அறிவிப்பை செய்வதுடன் மாத்திரம் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாய் உள்ளது (22.05.2026).
ஆரம்பத்தில், ஹோமூஸ் நீரிணை முழுவதும் முற்றாக தன் கைவசம் உள்ளது என்று அறிக்கை விட்டவர், பின் மெதுவாக கைவசத்தில் இருந்து நழுவி, முற்றுகைக்கு தாவி, பின், ஈரானின் ஹோமூஸ் நீரிணையையும் துறைமுகங்களையும் இம்முற்றுகைக்குள் அகப்பட்டு கொண்டதாக அறிவித்து, இப்போது, ஈரான் விதித்துள்ள சுங்க வரியை, நிராகரிக்கும்படி கம்பனிகளுக்கு கோரிக்கை விடுவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய அதே கதையைத்தான் நமக்கு நினைவூட்டுவதாய் இருக்கின்றது.
விடயம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியதில், சீனம் வகித்த பங்கு யாது என்பதே முக்கிய கேள்வியாகின்றது. மறுபுறம் ‘முற்றுகை’ தீவிரமாக இருந்த காலத்தில்தான், சீனத்தின் பல்வேறு கப்பல்களும் ஹோமூஸ் நீரிணையை கடந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இதே வேளை ர~;ய கப்பல்களும் ஈரானிய எண்ணையை நிரப்பி ஹோமூஸ் நீரிணை வழியாக புறப்பட்டன என கிளின்டன் உலகுக்கு அறிவிக்காமலும் இல்லை. இச் சூழ்நிலையில் எத்தகைய துருப்பு சீட்டுகளுடன் ட்ரம்ப் சீனாவில் இறங்கினார் என்பது கேள்வியானது.
2
ஈரானிய போர்முனை சம்பவங்களும், ஹோமூஸ் நீரிணை சிக்கல்களும் மனிதரை இப்படியாய் வாட்டி எடுக்க, சீனம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது, முக்கியமாக ஹைப்பர்சோனிக் போன்ற தனது விமானந்தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழங்க கூடாது என்பதை தனது தலையாய கோரிக்கையாக சீனத்திடம் முன்வைத்தார் மனிதர். இதற்கு உடனடியாகவே சீன தரப்பால் ஆமோதிப்பு வெளியிடப்பட்டிருக்கும். காரணம், தான் கொடுக்காவிட்டாலும் இவ் ஆயுதங்களை ர~;யா வழங்க கூடும் அல்லது தானே ரஷ்யாவுக்கு ஊடாக வழங்கலாம் என்பதனை அது யோசித்திருக்க கூடியதேயாகும். (அதைவிட, இருக்கவே இருக்கின்றது ர~;ய-ஈரானிய ரயில்பாதையும் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதே).
மறுபுறத்தில், மனிதர் சீனாவில் இறங்கியபோது பெரிதாக வரவேற்பும் அங்கு இருந்ததாக இல்லை– ஏதோ வேண்டா விருந்தாளி ஒருவர் உள்நுழைந்தாற் போல் ஏற்பாடுகளும் பெரிதாக அங்கே இருந்ததாக தெரியவில்லை.
சீனம் சிரத்தை கொண்டு யாதொன்றையும் கதைத்ததாகவும் தெரியவில்லை. கதைகளை அடிக்கு ஒருதரம் மாற்றுவதும், உலகில் ‘பிறவி பொய்யர்’ என்று ஏற்கனவே பெயர் எடுத்தவரிடம், என்னத்தைத்தான் கதைப்பது என்ற எண்ணத்தினாலோ என்னவோ சீனம் அவருக்கு பழமையான கட்டிடங்களை காட்டுவதும், சீன கலாசாரங்கள் சம்பந்தமான கதைகளை கூறுவதற்குமே இரண்டு நாட்களையும் செலவழித்து, இறுதியில் ட்ரம்பை விமானம் ஏற்றி அனுப்பி வைப்பதில் ஓஐ கவனம் எடுத்து இருந்தார்.
விமானத்தில் ஏறி, கையசைத்து, தான் சீனத்துடன் 200 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக ட்ரம்ப் அறிவித்த மறு கணமே, சீனம், முகத்தில் அறைவது போன்று அதனையும் மறுத்து விட்டது. போதாதற்கு, சீனம், தாய்வானை சுற்றி நூற்றுக்கணக்கான விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பி வேறு வைத்தது.
விடயம் இப்படி இருக்க, ட்ரம்ப் சென்ற இரு நாட்களிலேயே ரஷ்யாவின் புட்டினை சீனம் நேரெதிராக, ஆரவாரத்துடன் வரவேற்றதை உலகம் வேடிக்கை பார்க்கவே செய்தது.
3
ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளும், அமெரிக்காவின் ஒருமுனை உலக ஆதிக்கமும் இப்படியாய் நைந்து வீழ்ச்சியுறும் இன்றைய கட்டத்தில், ர~;ய-சீன ஆகிய இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவு, பொருளாதார ரீதியில் இன்று மிக நெருக்கமாக உருவாகி கொண்டிருப்பதை உலகம் காண கூடியதாக இருந்தது. 70 வருடங்களாய் 4200 கி.மீ எல்லைகளை உடைய இவ்விரு பிரமாண்ட நாடுகளும் ஒன்றை ஒன்று மோசமாக பகைத்தப்படியே இருந்தன (1956 முதல்). 1953இல் (ஸ்டாலின் மறைந்ததும் குறிப்பிடத்தக்கது).
நெடுநாள் இருந்த இப்பகைமையை, இன்று அடியோடு மறக்க வைத்து, இவ்விரு நாட்டையும் இணைய செய்ததில் ட்ரம்பின் புகழ் பூத்த பொருளாதார தடைகளும் அவரது அரசியலும் முக்கிய பங்கு வகித்தன என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 2824 கி.மீ நீளமும், சில இடங்களில் 1.5 கி.மீ அகலமும் கொண்ட அமூர் நதியானது இவ்விரு நாடுகளையும் பிரித்து வைக்கும் இயற்கை வேலியாக காலத்தாலும் இருந்து வந்துள்ளது. ஆனால் இதுவும் ஓர் பண்டைய காலமே. இன்று இப்பிரமாண்டமான நதியின் குறுக்காக 12 தொடர்பாடல் வசதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாயுள்ளன.
மூன்று மிக பிரமாண்ட பாலங்கள், கேபல் கார்கள், பிரமாண்டமான இறங்கு துறைமுகங்கள், சுரங்கங்கள், தானிய-நிலகரி-இரும்பு-கனிப்பொருள்கள், இவற்றை விநியோகிக்கும் பாரிய துறைமுக மையங்கள் - புதிதாய் நிர்மானிக்கப்பட்டுள்ள ரயில் பாதைகள் - இவை அனைத்தும் மில்லியன் கணக்கான பொருட்களை இரு நாடுகளிடையேயும் நாள்தோறும் பறிமாறி கொள்ள உதவி வருகின்றன. போதாதற்கு, இவ்விரு நாடுகளிடையேயும் விசா அற்ற சுதந்திர பிரயாணம் ஒழுங்கு செய்யப்பட்டு, 30 லட்சம் சீன-ர~;யர்கள் இதனால் பயன் பெறுவதாக பதிவுகள் கூறுகின்றன. (20 லட்சம் சீனர்களும் 10 லட்சம் ரஷ்யர்களும் பயணித்துள்ளனர்).
இவை அனைத்தும் ஒரு புதிய சிந்தனையை உருவாக்குகின்றன. புதிய விநியோக பாதை. புதிய உற்பத்தி பாதை. புதிய வர்த்தகம். புதிய பறிமாற்றம். புதிய நெருக்கம். புதிய தொடர்பாடல். ஆக, உலகின் புதிய முகம் இப்படியாய் மெது, மெதுவாய் உதயம் கொள்கிறது. இந்நிலைமை, நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் செழிப்புற்று வளர்வதாயும் உள்ளது. ஆக, வெறுமனே, சந்தடியற்று, கேட்பாரற்று கிடந்த அமூர் நதிகரையானது, இன்று பெருத்த ஆரவாரத்துடன் சந்தடி நிறைந்த ஓர் களமாக தோற்றம் பெறுகின்றது.
மறுபுறத்தே, இவை அனைத்தும், புதிய ராணுவ சிந்தனைகளை உலகில் தோற்றுவிக்காமலும் இல்லை. ஹோமூஸ் நீரிணை அல்லது மலாக்கா நீரிணைகள் போன்றவை மாத்திரம் இந்நடவடிக்கைகளால் தமது முக்கியத்துவத்தை இழந்தததாயில்லை. கூடவே 12 விமானம் தாங்கி கப்பல்களும், ஒரு சிறிது தமது முக்கியத்துவத்தை இழந்தவைதானா என்ற கேள்வியை இன்று எழுப்புவதாயுள்ளன. இவை, உலக நாடுகளிடை, தமது தாக்கங்களை எவ்வாறு செலுத்துகின்றன என்பது ஆழமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகின்றது. இவற்றுக்கு சிகரம் வைப்பது போல், ஜுலை 2025 முதல், ஆர்முஸ் நதியில் குறுக்கே இடப்பட்டுள்ள, போக்குவரத்து பாதைக்கூடு வருடாந்தம் 170,000 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் இன்று தகவல்கள் வந்து சேர்வதாயுள்ளது.
4
இவ்விரு நாடுகளிடை காணப்படும் வர்த்தகம், 2026இல் மாத்திரம், 240 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை மேலும் விருத்தி செய்யும் எண்ணத்துடனேயே புட்டின் அண்மையில் சீனத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. (19 மே 2026). (2025 இல் அமெரிக்காவின் மொத்த வர்த்தகம் Forbesஇன் அறிக்கையின்படி 5.6 ட்ரில்லியன் டாலர்களை காட்டிய போது, சீனம் அதனை பின்தள்ளி அதனது அரசாங்க அறிக்கையின்படி அதனது வர்த்தகம் 6.36 ட்ரில்லியன் டாலர்களை காட்டுவதாயுள்ளன).
உலக ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக வர்த்தகம் பார்க்கப்படுகின்றது என்பதற்கிணங்க ர~;ய-சீன வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே புட்டினின் சீன விஜயம் அமைவதாகின்றது என்பது ஒரு வாதம். ஆனால், உண்மையில் இது, இவ்விஜயத்தின் ஒரு பகுதியேயாகும். ஏனெனில், இவ் விஜயத்தின் போது, கையெழுத்தான ஒப்பந்தங்களின் தொகை 21 என்று கூறப்பட்டாலும், அனைத்து விடயங்களையும் சீர்தூக்கி பார்க்குமிடத்து இவ்விரு நாடுகளிடை செய்யப்பட்டுள்ள மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டுவதாயுள்ளது. இவற்றில், வர்த்தகமானது முக்கியமானது என்று கூறப்பட்டாலும் எண்ணை-எரிவாயு ஒப்பந்தங்களும் இதனை விட முக்கியமானதாய் விண்வெளி, யுஐ, நவீன ராணுவ – விஞ்ஞான துறைசார்ந்த ஒப்பந்தங்கள் அநேக முக்கியத்துவங்களை உள்ளடக்குவதாயுள்ளது.
எண்ணெய்-எரிவாயு ஒப்பந்தங்கள்:
இரண்டு எண்ணெய்-எரிவாயு குழாய்கள், இவ்விரு நாடுகளிடையே முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று சைபிரியா என்பதும் மற்றது சைபீரியா சக்தி அல்லது சைபீரியா-2 (ளுiடிநசயைn Pழறநச) என்ற குழாயுமே, ஆகும். சைபீரியா-1, 2019இலிருந்து இயங்குவதாயும் அது 3000 கி.மீ நீளம் கொண்டது எனவும், ரஷ்ய எரிவாயுவை சீனத்துக்கு அது வழங்குவதாயும் இருக்கின்றது எனவும் வருடாந்தம் 38 பில்லியன் கியூபிக் மீட்டர், எரிவாயுவை அது காவி செல்கின்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் கொள்வனவு இப்போது, 44 கியுபிக் மீட்டராக உயர்த்தப்பட வேண்டும் என புட்டின் விஜயத்தின் போது ஒப்பந்தம் செய்தார். பவர் ஒப் சைபிரியா -2 எனப்படும் குழாய், 50 பில்லியன் எரிவாயுவை வருடாந்தம் சீனத்துக்கு வழங்குவதாயிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது கிட்டத்தட்ட முழு இங்கிலாந்தின் எரிவாயு தேவைகளின் இரு மடங்காகும். ஆனால், இதன் நிர்மாணம் எதிர்வரும் காலங்களிலேயே முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேபோன்று, சைபீரியன்-பசுபிக் எண்ணெய் குழாய்கள் (எரிவாயு குழாய்களை போன்றே) 2011இலிருந்து சீனத்துக்கு 30 மில்லியன் தொன் எண்ணெயை வருடாந்தம் வழங்கி வருகின்றன. ஆனால் இது தனது இரண்டாவது கட்டத்தில், 2018 முதல் மேலும் 15 மில்லியன் தொன் எண்ணெயை சீனத்துக்கு வழங்க தொடங்கி விட்டன. (ஆக இன்று வருடாந்தம் 45 மில்லியன் தொன்கள் வழங்கப்படுகின்றன). ஆனால், தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, (ஊசுஊழுP) 813 மில்லி மீற்றர் சுற்றளவு கொண்ட குழாய்கள், சைபீரியாவில் இருந்து இடப்பட்டு, 603,000பீப்பாய் எண்ணையை 1030 கி.மீற்றர் சுமந்து வரும் என மதிப்பிடப்படுகின்றது. (86,206 தொன்கள்). ஆகவே சைபீரியன்-2 என வழங்கப்படும் எரிகுழாய் திட்டமும் ஊசுஊழுP என வழங்கப்படும் எண்ணை குழாய் திட்டமும் குறித்து, தனது விஜயத்தின் போது, புட்டின் கையெழுத்திட்டாலும், இவற்றின் முழு விபரங்களும் இனி வரும் காலங்களிலேயே பூரணமாய் வெளிப்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.
இத்திட்டங்கள், சீனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, இவ்விரு நாடுகளிடையே நிலவக்கூடிய புரிந்துணர்வு என்பதும் மதிப்பிட முடியாததாகவே இருக்கும் என கருதப்படுகின்றது. ஆனால், உண்மையில், தற்போது காணப்படும் புரிந்துணர்வே, உலகத்தை முகத்தை மாற்றுவதற்கு போதுமானது என்று நம்பப்படுகின்றது.
விண்வெளி தொடர்பாடல்:
AI முதல் விஞ்ஞான-ராணுவ உடன்படிக்கைகள், விண்வெளி செய்மதிகளின் ஒன்றிணைவும் ஒத்திசைவும், GLONASS–BEIDOU ஆகிய தடங்காட்டிகளின் ((Navigation System) போன்றவற்றின் ஒன்றிணைவு, மற்றும் விண்வெளியில் ஏற்படக்கூடிய அபாயங்களை கூட்டாக எதிர்கொள்ளல் மற்றும் சந்திரனில் ஒரு சந்திர மண்டல ஆராய்ச்சி நிலையத்தை இரு நாடுகளும் சேர்ந்து நிறுவுதல் (International Lunar Research Station - 2025-2035) மற்றும் அணு ஆலை, ஆய்வு கூடம், அங்கிருக்கக்கூடிய விஞ்ஞானி குழுவினர் குறித்தும் இரு நாடுகளும் இன்று ஒப்பந்தம் செய்துள்ளன. இவ் அம்சங்களையே, சீன ஊடகங்கள், முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் எனவும் வரையறுத்திருந்தன.
5
இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயேத்தான், இன்று அமெரிக்க-ஈரானிய “ஒப்பந்தம்” (உடன்பாடு) குறித்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புட்டினின் சீன விஜயத்திற்கு முன்பாக, ர~;யா, அணுஆயுத ஏவுகணைகள் அடங்கிய ஒரு பயிற்சியை, அதனது கப்பல்கள், நீர்மூழ்கிகள், நிலவழி ட்ரக்குகள் சகிதம் ஏவி (8000 கி.மீ) ஒத்திகை பார்த்தது. லுயுசுளு (சுளு – 24) இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், ளுயுவுயுN-2 என்ற அதனது மிக நவீன ஏவுகணை இரண்டொரு தினங்களின் முன்னரேயே ஏவப்பட்டு சோதிக்கப்பட்டிருந்தது. லுயுசுளு ஏவுகணையின் வேகம் ஆயுஊர் 20 என்றும் சுளு-28 (சர்மட் அல்லது சட்டான்-2) வேகம் ஆயுஊர் 22 எனவும் அது 35,000 கி.மீ தூரம் பயணிக்கத்தக்கது எனவும் கூறப்படுகின்றது. (வேகத்தை விட இதன் தூரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏனெனில், இத்தகைய தூரம் ட்ரம்பின் புழடனநn னுழஅந எனும் திட்டத்தை முற்றாக செயலிழக்க செய்யும் திட்டமாக கருதப்படுகின்றது).
இவற்றின் மத்தியில்தான், இன்று உக்ரைனானது தனது ட்ரோன்களை கொண்டு ர~;யாவின் பள்ளி ஒன்றை தாக்கி, அங்கே உறங்கிக் கொண்டிருந்த 21 பதின் வயது பெண்களுக்கு சமாதி கட்டி விட்டது. (22.05.2026).
மேற்படி தாக்குதல், உக்ரைனிய ட்ரோன்களால் (16) மூன்று அலைகளால் மேற்கொள்ளப்பட்டன என ர~;ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனை தொடர்ந்து ர~;யா தனது ழுசுளுர்நுNநுஐNமு ஏவுகணையை ஏவி பலமான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட 700 ட்ரோன்களையும் 90 ஏவுகணைகளையும் உள்ளடக்கிய ர~;யாவின் இத்தாக்குதலை தொடர்ந்து, ர~;யா இன்று தனது உக்ரைனிய தாக்குதலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த இருப்பதாகவும், இதனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் “கியவை” (உக்ரைனிய தலைநகர்) விட்டு காலி செய்ய வேண்டும் எனவும் தெரிய தந்தது. ர~;ய வெளிநாட்டமைச்சர், நேரடியாகவே அமெரிக்க வெளிநாட்டமைச்சரை தொடர்பு கொண்டு மேற்படி செய்தியை கூறி உள்ளார் என்பது விடயத்தின் தீவிர தன்மையை பறைசாற்றுவதாக உள்ளது.(24.5.2026).
இதனை தொடர்ந்தே ஈரானிய-அமெரிக்க நிலைபாடுகளும் இன்று மாற்றம் காண தொடங்கி உள்ளன.
6
பேச்சுவார்த்தைகளின் போது ஓர் 60 நாள் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், அணு ஆயுதம் தொடர்பிலான பேச்சு பின்னர் நடைபெறும் என்றும், ஹோமூஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தாலும் ஈரான், உடன்படிக்கை தொடர்பில், முற்றாக இறங்கி வருவதாக தெரியவில்லை.
60வீதம் யுரேனிய செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ எரிபொருளை தன்வசம் உடைய ஈரான் இன்று தனது 31 மில்லியன் குடிகளுக்கு தீவிர ஆயுத பயிற்சியை வழங்கி வருகிறது. ஒரு அணுகுண்டை அது வடிவமைக்க 90 வீதமான செறிவூட்டலே அதற்கு தேவையாகின்றது. மேலும், தான் NPவு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, தேவை ஏற்பட்டால் ஓர் அணுஆயுதத்தையும் தயாரிக்க போவதாக அது இப்போது அறிவித்துள்ளது.
மறுமுனையில், ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் கதைத்தது மாத்திரமல்லாமல், ஈரானுடனான தனது சமாதான ஒப்பந்தம் கிட்டத்தட்ட கைச்சாத்திடும் நிலையை எட்டியுள்ளது எனவும் கூறிவிட்டார்.
(மத்திய கிழக்கு தலைவர்களுடன் கதைத்த அவர், ர~;யா-சீனா போன்ற தலைவர்களுடன் கதைப்பதை லாவகமாக தவிர்த்து கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே).
ஏனெனில், உலகின் முகத்தை அடியுடன் மாற்றவும் , முக்கியமாக மத்திய கிழக்கின் முகத்தை அடியோடு, மாற்றவும், இஸ்ரேலை அதற்குரிய இடத்தில் வைக்கவும், அவா படக்கூடிய இவ்விரு நாடுகளும் (ர~;யா-சீனா) ட்ரம்புக்கான, புதைகுழியை, ஈரானிய போர் களத்திலேயே காண விழைகின்றனவா என்பதை அவை கேட்டுக் கொள்வதும் சாத்தியமானதே. ஏனெனில், ஈரானின் இன்றைய மமதைகளின் பின்னால், யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. காரணம், ஈரானின் இறுதி அறிவிப்பு, நாங்கள் போராட தயாராகவே இருக்கின்றோம் என்பதாகும். ஓர் உடன்படிக்கையை நாங்களாகவே கோரவில்லை. ஆனால், எந்த ஓர் உடன்படிக்கைக்கும், அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிரானவர்களாயும் நாம் இருக்கப்போவதில்லை என்பது ஈரானின் இன்றைய நிலைப்பாடாகும்.
ஆனால், ர~;யா-சீனா நாடுகளை பொறுத்தவரை, இன்று சர்வதேச பொறுக்கியாக உருவாகி உள்ள, அமெரிக்காவை அல்லது மத்திய கிழக்கின் ஒரே ஒரு காட்டுமிராண்டி இஸ்ரேலை அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய மேற்கை கீழிறக்கக்கூடிய இது போன்ற வாய்ப்பான ஒரு சூழலை அல்லது ஒரு தருணத்தை அவர்கள் இனியும் சந்திக்க போவதில்லை.
இழப்புகளையும் வீரத்தையும் ஒருங்கே சந்திக்க நேர்ந்துள்ள ஈரானே, இதற்கான களத்தை வழங்கக்கூடிய ஏற்ற நபர் என இவ்விரு நாடுகளும் முடிவு செய்திருக்கலாம்.
இவை, அனைத்தும், ஈரானிய ‘புதை மணலின்’ யதார்த்தங்கள் என கூறுவது பொருத்தமானதே. தெரிந்தோ, தெரியாமலோ ட்ரம்ப் இப்புதை மணலில் அழுந்த கால் நுழைத்து, இன்று எழுபடமுடியாது தத்தளித்து கொண்டிருக்கின்றார்.
கட்டெறும்பாகிக் கொண்டிருக்கும் இக்கழுதையானது, இப்படியான ஒரு இழுபறியில் தனது புதிய வடிவத்தை வெறுமனே பெற்று கொள்ள போவதும் இல்லை. யுரேனிய செறிவு அனைத்தையும் தன்னிடம் ஈரான் பவ்வியமாக ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அவற்றை முற்றாக அழித்துவிட வேண்டும் என்று இன்று கூறியுள்ள ட்ரம்ப், யுத்த நிறுத்தம் இன்று அமுல் நிலவும் இக்காலத்திலேயே ஈரான் மீது சடுதியாக மீள ஒரு தாக்குதலையும் மேற்கொண்டிருப்பது இதன் விளைவான ஒன்றே. (26.05.2026).
ஆனால், இத்தாக்குதல்களை ஈரான் ஏற்கனவே, எதிர்ப்பார்த்திருந்தது போலத்தான் தெரிகின்றது. ஏனெனில், ஈரான் இத்தாக்குதல்களை முறியடித்து, நிலைமையை ஓர் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக, இப்போது அறிவித்துள்ளது.
மறுபுறத்தில், ர~;யா, அமெரிக்க தூதராலயத்திலிருந்து அனைவரும் அகன்றாக வேண்டும் என்ற கோரிக்கையும் (உக்ரைனின், கியவில் இருந்து) இனி தீவிரம் பெற போவதாயும் தெரிகிறது. (இது ஐ.நா பாதுகாப்பு சபையிலும் அண்மையில் விவாதிக்கப்பட்ட விடயமாகிறது).
ஆகவே, முன்னர் கூறியதுபோல, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி கொண்டிருக்கையில், இத்தகைய இழுபறிகள் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதவைதானோ என்ற கேள்வியை இவை அனைத்தும் எழுப்பவே செய்கின்றன.
ஆனால், இச்சூழலில், ஒன்றை உறுதியாக கூறலாம். லெப்ரோவின் அறிவிப்பின்படி, ர~;ய தாக்குதல்கள் இனி நிச்சயமாய் தீவிரமடையும் என்றால், அது ர~;ய போர்களத்தை மாத்திரமல்லாமல் கூடவே ஈரானிய போர்களத்தையும் கூர்மைபடுத்தி தமது தாங்கங்களை செலுத்தவே போகிறது. இவை, ஐ.நா, உலகம் முழுவதும், விடயங்களை தீவிரப்படுத்துவதில் சென்று முடிவடையக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.
அண்மை நிகழ்வுகள்:
கியவில் இருந்து, அனைவரும் அகன்று விட வேண்டும் என்ற ர~;ய கோரிக்கை, வரலாறு காணாதது. இதன் எதிர் விளைவாக நடந்தேறிய மூன்று முக்கிய விடயங்கள்:
முதலாவதாய், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், மேற்படி விடயம் சம்பந்தமாக, ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டாவதாய், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், ர~;யாவின் இவ் எச்சரிக்கையை வழமையானது என தட்டி கழிப்பதில் ஈடுபட்டுள்ளன.
மூன்றாவதாய், உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் (அங்கோலா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகள்) உக்ரைன் எந்த ஒரு நிபந்தனையுமற்ற வகையில், சமாதானம் ஒன்றை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் ஆனால் ர~;யா இதுவரை ஆக்கிரமித்துள்ள தனது நாட்டின் பகுதியில் இருந்து முற்றாக அகன்றுவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருப்பது. இதில், இரண்டும் மூன்றும் ஒரே வகையானது என்பதால் அவற்றை பொருட்படுத்த தேவையில்லை. (அதாவது, அவை ர~;யாவின் உத்தேசித்திருக்கும் நடவடிக்கைகளை எவ்வகையிலும் பாதிக்க போவதில்லை எனலாம்). ஆனால், ஐக்கிய நாடுகள் சபையில் மேற்படி விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.
மேற்படி கலந்துரையாடலுக்கு, சிறப்பான ஒருவரை அனுப்பும்படி பாதுகாப்பு சபை, ர~;யாவுக்கு அழைப்பிதழ் விட்டிருந்தாலும், அத்தகைய “சிறப்பானவருக்கு” அமெரிக்கா, விசா அனுமதியை மறுத்ததிற்கூடாக, மேற்படி பங்கேற்பை தடுத்து விட்டது. இச்சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையை ஸ்திரப்படுத்துவதற்கான தேவையையும், காட்டு சட்டங்களே இன்று கோலோச்ச முனைவதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
நாடுகள் தமது சொந்த குறுகிய நலன்களை முன்னெடுக்க முனைவதால், அல்லது தாம் இணைந்த குழுவினரை காப்பாற்ற முனைவதால், இத்தகைய செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என கூறப்படுகின்றது.
சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவது என்பது அல்லது ஐ.நா சபையை ஸ்திரப்படுத்துவது என்பது இன்றைய மாறும் சூழலில், ஒரு பல்முனை உலக ஒழுங்கின் அடிப்படையிலே சாத்தியமாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்பு சபை இன்று பல விடயங்களில் மௌனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (காசா, லெபனான் நிகழ்வுகள் இவற்றுக்கான உதாரணங்களாக திகழ கூடும்). இச்சூழலில், ரஷ்யாவின் இனிவரும் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமடையும் சாத்தியகூறை உள்ளடக்குவதாய் இருக்கலாம். இவை, மற்ற, மேற்கின் ஆதிக்கங்களை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதாய் இருக்கும்.
இவை அனைத்தும் சுமூகமான அல்லது சிநேகபூர்வமான அடிப்படையில் கட்டுவிக்கப் போவதில்லை என கூறலாம். அதாவது, கழுதையானது கட்டெறும்பாக மாறுகையில், விடயங்கள், கடுமையாக நடந்தேறும் என்ற நம்பிக்கைகள், இனியும் வருவது சிரமமானதே.
1