“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “  “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “  என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை  துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )

இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது  விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும்  அமெரிகாவிலிருந்து  இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள்
சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது  பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்

மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது   ” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்  தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய  அகாடமி  என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்

0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா

0 விளிம்பு நிலை  மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா

0 பாரதியின் சிந்தனைகள் இன்றைக்கு எப்படி தேவை

0விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது

0 எழுத்தில் சரித்திர கதைகள் இன்றைக்கு ஏன் தேவை

0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது

0 சங்க் இல்க்கிய மறு வாசிப்பு ஏன் அவசியம்

0 தெலுங்கு  இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா

 0 ஜெயகாந்தன் ஆண்டாள் பிரதர்சினி  போன்றோரின் கதைகளை முன்வைத்து தமிழ் இலக்கியத்தில் மனித நேயம்

ஆகிய தலைப்புகளில் எழுத்தார்கள் பேசினார்கள்.

திருப்பூர் சக்தி விருது 2025 விழா  ( 21ஆம் ஆண்டில் )
09/03/25 ஞாயிறு மாலை 4 மணி- பார்ச்சூன் ஹோட்டல், 15 வேலம்பாளையம் சாலை, அனுப்பர்பாளையம், திருப்பூரில் நடைபெற்றது.

தலைமை: கேபிகே செல்வராஜ் ( தலைவர் முத்தமிழ்ச்சங்கம் ) முன்னிலை : சுப்ரபாரதிமணியன்( கனவு ), பி. குமார் ( ஸ்டார் அசோசியேட்ஸ்)., நாதன் ரகுநாதன்

21 ஆம் ஆண்டில் விருது பெற்ற  பெண் படைப்பாளிகள் :

அல்லிபாத்திமா /பத்மஜா நாராயணன்/ இவள் பாரதி /கயல்

சிவசெல்வி செல்லமுத்து / திராவிடமணி/ மோகனப்ரியா

பிருந்தா சீனிவாசன்/ காயத்ரி ஆர்///  ம. ஜீவ ரேகா/ கனகதூரிகா

வி. இளவரசி சங்கர்///  ரேவதிராம்/ அமுதா செல்வி/ பவுசியா இக்பால்

 மருத்துவர் தேவி / யசோதா பழனிச்சாமி / கனலி விஜயலட்சுமி

 விஜிலா தேரிராஜன்/  எஸ் வைஜெயந்தி / ஜெ. விஜயலட்சுமி

 பிரியா // எஸ். ஜெயலட்சுமி/ வி . கலாவதி/ விஜி ரவி /        

சிறப்பு விருந்தினர் :

திருமதி தி. லாவண்யா சோபனா அவர்கள் ( மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர் )

நன்றியுரை : கேபிகே பாலசுப்ரமணியன்  ( செயலாளர், முத்தமிழ்ச்சங்கம்:

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்/கனவு/ ஸ்டார் அசோசியேட்ஸ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.