
இன்று , மார்ச் 24, பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பிறந்த தினம். டி.எம்.எஸ், பி.சுசீலா, எஸ்.பி.பி, ஜிக்கி, ஏ.எம்.ராஜா போன்ற பாடகர்கள் எல்லோரும் எம் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தவர்கள். எம் பலவேறு பருவத்து உணர்வுகளுக்கு ஒத்தடங்கொடுத்த குரல்கள் இவர்களுடையவை. இன்பத்தைத்தந்தவை. அக்குரல்களில் ஓலித்த கவிஞர்களின் வரிகளை மறக்க முடியுமா? இன்றும் எம் உணர்வுகளுக்குத் துணையாக எம்மைத் தாங்கி நிற்பவை இவர்களது குரல்களே.
டி.எம்.எஸ் நினைவாக 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.