அக்டோபர் 25, 2025,  சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா யோகரத்தினம்,  முனைவர் திருமதி பார்வதி கந்தசாமி, திரு. ந. நகுலசிகாமணி ஆகிய ஐந்து கலைஞர்களுக்கு விருது அளித்துக் கௌரவித்தனர்.  எழுத்தாளர் இணையத்தால் அறிமுக நூல் ஒன்றும், குரு அரவிந்தனின் வாசகர் வட்டத்தால் எழுத்தாளர் குரு அரவிந்தனின் சாதனைகள் குறித்த நூல் ஒன்றும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் பெற்றன. 

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சாதனைகளில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாகப் (2000-2025) புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் பரிசுகளும் விருதுகளும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பெற்ற எழுத்தாளர் என்ற கௌரவம் கிடைக்கப் பெற்றது. ஐந்து நாடுகளில் ஒரே வருடத்தில் பெப்ரவரி மாதம் காதலர்தினக்கதை எழுதியும், தொடர்ந்து 16 வருடங்கள் கனடா உதயன் பத்திரிகையில் காதலர்தினக் கதை எழுதியும் இரண்டு சாதனைகளை இவர் படைத்திருந்தார். இதைவிட இவர் எழுதிய மாருதப்புரவீகவல்லி என்ற வரலாற்றுப் புதினத்திற்கு இவரே 40 விளக்கப்படங்களை அதிதொழில்நுட்ப உதவியுடன் வரைந்த முதலாவது எழுத்தாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கின்றார்.
Download all attachments as a zip file



:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.