
நாடகவியலாளர்களான பாலேந்திரா தம்பதியரின் ஐம்பதாண்டு நாடகத்துறைப் பயணத்தை விபரிக்கும் பாலேந்திரா அவர்களின் 'பிரத்தியேகக் காட்சி ஏழு நாடகங்களும் பதிவுகளும்' நூல் அறிமுகமும், ஆனந்தராணி பாலேந்திராவின் 'அரங்க நினைவுகள்' நாடக ஆற்றுகை நிகழ்வும் நவம்பர் 2, 2025 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. இலங்கை நாடகத்துறையை நவீனமயப்படுத்தியவர்களில் பாலேந்திரா & ஆனந்தராணி தம்பதியரின் பங்களிப்பு முதன்மையானது. முக்கியமானது.