2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 202 பத்திரிகையாளர் சந்திப்பு – செப்டம்பர் 17! மாநாட்டு ஆதரவு நிறுவனங்களுக்கு அன்பான அழைப்பு!

அன்புடையீர், வணக்கம்!

2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026 வெற்றிகரமாக நடைபெற பலரும் நிதியுதவி, விளம்பரம், ஊடகப் பரவலாக்கம், தன்னார்வப் பணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். அவர்கள்
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

பத்திரிகையாளர் சந்திப்பு – செப்டம்பர் 17

மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு (Press Meet)

வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2026,,மாலை 7:00 மணி,,Queen Palace Banquet Hall,1173 Brimley Rd, Scarborough, ON M1P 3G5 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

நமது Supporting Partners அனைவரையும் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு, மாநாடு குறித்த செய்தியைத் தங்களது அமைப்புகள், உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரங்களிடையே பரவலாக்கி, மாநாட்டின் வெற்றிக்கு மேலும்
வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இதுவரை சில ஆதரவு நிறுவனங்கள் தங்களது இலச்சினையை (logo) வழங்கி நம்முடன் இணைந்துள்ளபோதிலும், மாநாட்டுக் கூட்டங்கள், பரவலாக்கப் பணிகள் அல்லது மாநாட்டிற்கான நேரடிப் பதிவுகளில் இன்னும் இணைந்துகொள்ளாத நிலை உள்ளது.

எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கள் அமைப்பின் சார்பில் தவறாது கலந்துகொண்டு, மாநாட்டின் செய்தியையும் சிறப்பையும் பரவலாக எடுத்துச் செல்ல தங்களது முழுமையான ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் Supporting Partners சார்பில் பேசுவதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆதரவு நிறுவனங்களுடனான குழுப் புகைப்படமும் (Group Photo) எடுக்கப்படவுள்ளதால், அனைவரது
வருகையும் மிகவும் முக்கியமானது.

செப்டம்பர் 17 – நிகழ்ச்சி நிரல்
7:00 – 7:30 PM — Refreshments (Tea & Snacks)
7:30 – 8:00 PM — Press Meet – World Tholkappiyam Conference 2026
8:00 – 8:10 PM — மாணவர் பாசறை
8:10 – 8:20 PM — Supporting Partners
8:20 – 8:30 PM — Group Photos

நிகழ்ச்சி இரவு 8:30 மணிக்குள் நிறைவடையும். நாமெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகால அறிவுப் பாரம்பரியத்தில் பிறந்த தமிழர்
என்று பெருமைகொள்ளவதற்குக் காரணமாக இருப்பது தொல்காப்பியமே! இதனைத் தமிழராகிய அனைவரும் கொண்டாடுவது நம் அனைவரது கடமை.

இந்தப் பெருமையை உலகறியச் செய்வதும், தொல்காப்பியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் தமிழர்களாகிய நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

மாநாட்டுப் பதிவு https://www.zeffy.com/en-CA/ticketing/the-2nd-world-tholkappiyam-research-conference-sep--2026

நன்றி.

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைவர் (647) 881-3613
திரு. சுகந்தன் வல்லிபுரம் செயலாளர் (647) 850-0152
பேராசிரியர் இல. சுந்தரம் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் (437) 979-3006

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்