கண்ணைக் கரிக்கும்
புகைக் காற்று
தேர்தல் பண்டிகைகளில்
தீப் பிளம்பாய் வீசும்.
காதிலே சேல் வடியும்.

தீய அடுப்புக்ளை மூட்டி
காய்ந்த விறகுகளையும் சருகுகளையும்
தீப்பிளம்புக்குள் போட்டு பத்த வைத்து
சட்டி பானைக்குள்  எண்ணெய்யை ஊற்றி
பதமாக சுட்டு இறக்குகின்ற பலாகாரங்களை
ஈன இரக்கமில்லாமல் வெந்து  கரியாய் தீய வைத்து
யாருமே உண்ண மனமில்லாத
குப்பைக் குழிக்குள்; போட்டு மூடும் பலகாரங்கள்தான்
இங்கே மூக்கைத் துளைக்கின்றன.
   
இவையேதான் நாவுக்கு சுவையென
விளம்பரங்கள் செய்து
பசியாறிக் கொள்ள சிறந்த சாதனம் என்று
வெடிக் கொளுத்தி
மொழிகளில் முழுக்கமிடுகிறார்கள்.

விசங்களைக் கக்கிக் கொண்ட எரிந்த விறகுகள்
கால ஒட்டத்தில் சாம்பலாகி தோல்வியைத் தழுவினாலும்
வயிறு நிறையத் தின்று ஏப்பமிட்ட தலைக்கனம்
மீளவும் அடுப்புக்களை மூட்டி
விறகுகளை எரிக்க ஆயத்தம் செய்யும்.

கறைபடிந்த மொழிகள் திரும்பத் திரும்ப
வறண்ட சமூக ஊடகங்களில்  விசத்தைக் கக்கி
பேய்வெறியாட்டம் ஆடுகிறது.

நிம்மதியற்றவாழ்வு அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது
கருகிய பலாகரங்களைத் தின்று சுவைக்கவே

மானுடனிடம் பெரிய பெரிய  கோரப் பற்கள்
இருப்பதால்தான்
சந்தையில் மலிவாய் விற்கப்படும் எந்தப்பொருட்களானாலும் வாங்கி
வாயில் போட்டு மென்று கடித்து
வயிறு நிறைய உண்டு சுவைத்து
ஏப்பமிடும்
வெறுப்பூட்டும் விசக்காற்றுக்கள்
சூறாவளியாய் உருவெடுத்து
அழிவுகளை அரங்கேற்றி
பட்டப் பகலில் குருதிவெள்ளத்தில் நீந்தி
மகிழ்ச்சியின்பம் கொண்டாடும்.

எமது மண்ணில்
சுற்றுச் சூழல் சுத்தமானால்
கண்ணெரிவும் வராது.
காதிலே சேலும் வடியாது.
நல்ல திசைநோக்கி
சுத்தமான காற்று வீசும்.

கண்டி முத்தமிழ் சங்கம் ஏற்பாட்டில் பங்குனி மாத ஒன்று கூடலும் கவி மாலை நிகழ்வும் 6-04-2025  கண்டி இந்து சிரேஷ்ட கல்லூரி  மண்டபத்தில் பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.  அக் கவியரங்கில் வாசித்த கவிதை இது. இக்கவிதா நிகழ்வில்  ஒய்வு நிலை அதிபர். இஸ்மாலிஹா தாவூத்,  வளவாளர், ஆசிரியர் ஆலோசகர்.  சிவானந்தன்,  கண்டி சிரேஷ்ட கல்லூரி அதிபர்  சிவகுமார்,  ஒய்வு நிலை ஆசிரியர்  பீலிக்ஸ்,  பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திருமதி. ஆன்யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.