முருகன்

அழகனவன்
ஆறுமுகன் கொண்டவன்
வெறியாட்டு நாயகன்
சேயோன், செவ்வேலோன்
தமிழன் முப்பாட்டன்
இன்று சைவனாய்….!

படிப்பு

படித்தால் முன்னேறலாம்
பலரும் சொன்னார்கள்
யாரும் சொல்லவில்லை
யார் முன்னேறுவாரென்று…

கைம்மை

நெற்றியின் பொட்டு
புதியதாய் நிறமற்று போனது
வாழ்க்கையும் தான் …

காதல்

விடியுமுன்னே
வீதிக்குச் சென்றேன்
வருகைக்காக….
வாழ்க்கையே வீதியில்
வருகையால்….

காதல் இடைவெளி

மீளாத பார்வை
கானாத தொலைவில்
இரவுகளில் மட்டும்
இடம் பெயர்கிறது
கனவுகளின் காதலியாய்…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.