ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து     என் கிராமத்தை ,   அராலியைப்  பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான். முன்பும் ,  அராலித்துறை போக்குவரத்துக்கு    வள்ளப்பாதையாக விளங்கி இருக்கிறது . காலனிக்காலத்திலிருந்தே  அரசாங்கம் தரைவழிப்பாதை அமைக்கும்  திட்டத்தை வைத்திருக்கிறது  புங்குடு தீவு (கைவேப்) பாதையின் நீட்சி    செயல்  வடிவம் பெறவில்லை .  கடலில் கல்லைக் கொட்டி பண்ணை வீதி , காரை வீதி , புங்குடுதீவு வீதி போன்றவை என்று அமைக்கப்பட்டன ? அப்படி அராலித்துறை வீதி ஏன் அமைக்கப்படவில்லை ? விபரம் தெரியவில்லை . பண்ணைப்பாலம் என்கிறார்கள் . அங்கே பாலம் ஒன்றும் இல்லை .  பாலங்கள் இல்லாது இருப்பதால் தான் இவை வற்றுக்கடலாகிக் கொண்டு செல்கிறதா ? அந்த ஃபைலை ,  மகிந்தா தன் ஆட்சியில் எடுத்து   தூசி தட்டி பார்த்திருக்கிறாரோ ? என்று தோன்றுகிறது .

1985 இல் பண்ணை வீதியை , காரைநகர் ஃபெர்ரி பாதையை இலங்கைப்படையினர் மூடி விட   வேலணை , புங்டு ...நயினை மக்கள் தம்தேவைகள்....வள்ளங்களின் மூலம் அராலித்துறைக்கு வந்து ...கல்லுண்டாய் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லத் தொடங்கினர் . வள்ளம் , பெரு வள்ளமாகி , படகுகளாகி ...பிறகு , புளட் அமைப்பினால் .சிறிய  ஃபெர்ரி போன்ற மிதவையும் கூட தயாரிக்கப் பட்டு மிதக்க விடப்பட்டது  , அதில் , மோட்டர் சைக்கிள் ... கறுவாட்டுச்சிப்பம்  என கணிசமானளவில் கொண்டுச் செல்வதில் முன்னேற்றம் கண்டவர்கள் . மிதவையில் ட்ராக்டர் , கார்கள்  கூட ஏற்றிச் செல்ல தலைப்பட்டனர் .  அந்த நேரமே நானும் ...இது சிறிய கடல் தான் என்பதை  அறிந்தேன் . இடைப்பட்ட கடலில் பெரிதும் கழுத்தளவு நீர் உயரம்  தான்  என்பது என்னையும் ஆச்சரியப்படுத்தியது .  பிறகு , அவ்வூரவருக்கு நானும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனேன்.

அராலி த்துறைக் கடலைப்பற்றி ..அராலியர் , நவாலியர், ஆனைக்கோட்டையயினர்க்கே நன்கு தெரியும் . வள்ளப்பாதை கண்டே ஓட வேண்டும் .   ஓடியபாதை  வாய்க்கால் போல நிலத்தில் கீறி இருக்கிறது . அதில் படகுகளைச் செலுத்தினால் சேதமடையாது . வெளியாருக்கு  வாய்க்கால் பற்றிய விபரம்  துப்பரவாக தெரியாது . முதலில் அராலியரின் சிறிய வள்ளங்கள் மட்டுமே  ஓடின . நவாலியரின் பெரியவை வந்தன .இரு  வள்ளக்காரர்களும் , அடிபட பிரச்சனை  உருப்பெற்றது . புலிகள்     " இரு வள்ளத்தாரையும்  ஓட வேண்டாம் " என்று நிறுத்தி விட , தோழர்கள்   நாம்  அவர்கள் வள்ளத்தில் மக்களை ஏற்றி  ,  எங்களுக்கு என்ன  வள்ளம் ஓடத் தெரியுமா ?  , கயிறுகளைக்   கட்டி இழுத்து அக்கரையிலும் , இக்கரையிலும் விட்டு வரத் தொடங்கினோம் .அதில் ,இயக்கப் பிரசன்னம் தொடங்கியது . (அதை வெகுண்ட உள்ளங்கள் என்ற நவீனமாக எழுதியிருக்கிறேன்.  நூலகத்தில் நூல் ,  வேலிகள் என்ற தலைப்பில்    இருக்கிறது .  நீங்கள் வாசிக்கலாம் .)  மறஂறைய இயக்கங்களும்   அரசு  தானே .  புளட்டும் , புலி ஆதரவாளர்களுமே  முழுதாக படகோட்டத்தை நடத்தியதாகப் படுகிறது...எல்லாவற்றிலுமே ஆதரவாளர் , தோழர் , என   இரு  பிரிவுகள் இருக்கின்றன. புலிகள் , சமூகப்பிரச்சனைகளில் எதிலும் நேரடியாக , தலையை நுழையாது விலகி நினஂறு  ஆதரவாளர்களிடம் விட்டு விடுவது வழக்கம்   . ஆரம்பத்தில் இருந்தே... இது தான்  அவ்வியக்கத்தின் நடைமுறை

படைத்தரப்பு  , மீன்பிடி தடைகளை  ஏற்படுத்தியதால் வேலையற்றிருந்தவர் பலருக்கு  உழைப்பு இல்லை ....பிரச்சனைப்பட மாட்டார்களா ? அவர்களும் ஒய்வில் கிடந்த  தமது பைபர் கிளாஸ் படகுகளை ட்ராக்டரில் கட்டி இங்கே கொண்டு வந்தார்கள் .  அரசுக்குப்  பதிலாக இயக்கங்கள் இருந்தன . டெலோவை புலிகள் அடித்த போது  'நிறைய கிழக்குத் தோழர்களை கொன்று விட்டார்கள் ' என்ற விமர்சனம் இருந்தது . அதோடு அவசியமற்று ஆதரவாளர்களையும் கொன்று விட்டார்கள் என்ற கோபமும் இருந்தது . இஸ்ரேல் , ஹாமாஸ் ஆதரவாளரான மக்களை அளவுக்கதிகமாக கொன்று கொண்டிருக்கிறார்கள் . இது பெருங்குற்றம் . இலங்கை , ஆதரவாளரான மக்களைக் கொன்று விட்டு போர்க்குற்றவாளியாக மாட்டுப் பட்டு நிற்கிறது .

' தெய்வம் நின்று கொல்லும் ' என்பது நம்பிக்கை . அது தான் இனி நடைபெற இருக்கிற சுபகாரியம் .

எந்த கதைக்கும் ஒரு முடிவு இருக்க வேண்டுமல்லவா . அது இது தான் .மனித உரிமை அமைப்பின் குரல் , " நாலு வயசு சிறுவர் தொட்டு சரணடைந்தவர்க்கு என்ன நடந்தது என்பதை இலங்கையரசு ,இன்னமும்...சொல்லவில்லை " என்று உரத்து ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது . யூதர்களைக் கொன்ற ஜேர்மனியருக்கெதிராக ஒலித்தது போல , ஒட்டு மொத்த இலங்கை அரசுக்கும் எதிராகவும் ஒலிக்கிற குரல் . உலகம் ஒரு செவிட்டு பிறவி தானே .  எழுந்தாலும் உடனே கேட்டு விடுவதில்லை . தொடக்கத்தில், சிலவேளை கேளாதது போல​ பாசாங்கு செய்யும் . கேட்டாலும்  கூட​ ஒரு காதில் வாங்கி மறுகாதால் விட்டு விடுவதாக​ இருக்கும் . இப்படி பலவித​ நடிப்பைக் காட்டும் .
 
புலிகள் ,  ஒரு கிழமைப் புரட்சிய​ர்கள் . குண்டை வெடிக்க​ வைப்பர் , அல்லது வெளிய​ தனிய​​வரும் இராணுவத்தினர் ...இலக்காவார்கள் .  உடன்டியாக சுட்டுக் கொல்லப்படுவர் . இப்படி , ஒரு தாம் தூம் ஒன்றை நிச்சியமாக​ ஒவ்வொரு கிழமையும்  எதிர்பார்க்கலாம் .  வழக்கத்திற்கு மாறாக  மற்றைய   இயக்கங்கள்  மேல் புலிகள் உடனடியாக பாயவில்லை .   பள்ளிப்பிரார்த்தனைக் கூடத்தில் கீதம் பாடும் புதிய​ ( சந்ததி) பிறவிகளுக்கு ...இயக்கமே புரியப் போவதில்லை , இதெல்லாம் எங்கே புரியப் போகிறது ? .
.
பிறகு பைபர்கிளாஸ் படகுகள் மட்டுமே ஓடின . பைபர் படகுகளிற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன . ஏர்கள் உடைந்தன . கற்கள் கிழித்து கீழ் , பக்க பகுதிகளில்  சேதங்கள் கணிசமாயின . செலவும் ...பயமுறுத்தன ....ஓட்டமுமில்லை , வேலையுமில்லை , எனவே அவ்விடத்தவரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது . படகிற்கு இருவர் தான் ஓட்டுனர் . ஒருமாதிரி  சேர்த்து கொண்டு  ஓடின .
கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரையில் மினிபஸ்கள் டீசல் புகையில் புளுதி பறக்க ஓடின . அந்த நாட்களில் ஓலை அடைப்புகளில் பல தேத்தண்ணீக்கடைகள்  முளைத்தன . பிளாஸ்டிக் டீப்புகளில் (குட்டிபரல்) வைத்து எரிபொருள் விற்றார்கள்   .  வீதி , அதே பழைய குண்டும் குழி    தான் . திருத்தப்படவே இல்லை  .  இரவிலும்  மண்ணெண்னெய் விளக்கில் சந்தடிகள்  நிலவின .  நாம்  தெற்கராலி வீடொன்றில் காம் பண்ணி இருந்தோம் .

ஒருநாள்  , மேலே சுற்றிக் கொண்டு திரியும் கெலியின் பார்வையிலும்  பட்டு , மெசின்துவக்கு சுட்டுத் தள்ளியது . நம்ம குண்டுத் தோழன்  " நிலத்திலே படுங்கடா " என்று கத்தி படுக்க வைத்தான் . இருந்த போதிலும் வர்த்தகர் ஒருத்தரின் மகன் குண்டு பட்டு  இறந்து போனான் . இன்னொருவருக்கு காயம் . 90களிலும் அத்துறையில் சுட்டு பலர் இறந்ததாக கேள்வி . அந்த விபரம் எனக்குத் சரிவர  தெரியவில்லை .

புலிகள் புளட்டை தடைசெய்யா விட்டிருந்தால் மேலும் இன்னும்  சில காலம் நம் கடல்ப் புறாக்கள் ( படகுகள்)  ஓடி இருக்கும் . புளட்டிலும் , உட்கொலைகள் வெளிப்பட்டு  உட் தள ,வெளித்தள மாநாடுகள் என்றெல்லாம் நடந்து கொண்டிருந்தன . தளத்தில் வேறு போதிய ஆயுதமில்லை . ஆயுதம் சேர்க்க மோட்டர்பைக் கடத்தல் ...இந்தியாவில் விற்றல் என அமைப்புக்கள்  பீறிட்டுக் (மீறல்களுடன் செயல்பட்டுக் )   கொண்டும் இருந்தன . இப்படி விடுதலையில் நிறைய   புதிய​ப் பாடங்கள் வேறு  படிக்க வேண்டி இருந்தன .

புலிகள் ,  சுடத் தொடங்கியதில் இயக்கங்களின் ஆயுள் வெகுவாக சுருங்கிப் போய் விட்டது  , நாமெல்லாம்  கனவு நிலைக்குத் தள்ளப்பட்டோம் . எவனும்  ஒருமுறை தான் வாழ்கிறான் .  நமக்கு பக்கத்தில் இருப்பவரோடும்  போராடித் தான் கிடக்க​ வேண்டும் என்றால் இது என்ன வாழ்வு ?.  தூரத்தில் இருப்பவரோடு  வாழும் வரையில் போராட வேண்டும் . நாம் எதைத் தெரிந்தோமோ , அதில் உறுதியாக நின்றிருக்க வேண்டும் .புலிகள் மட்டுமில்லை எல்லா இயக்கங்களும் பயிற்சியின் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டு தானிருந்தன . உட்கொலைகள் நிகழவும் ஒருவேளை , அது தான் காரணமாக இருந்திருக்கலாம் .  விடுதலைக்கு எதிரானவர்களை ஓரேயடியாக​ துரோகி என்ற வரையறுப்பு செய்து விடுகிறோம். நாம் உறுதியை பிழையாய் எழுதிக் கொண்டிருந்ததாகப் படுகிறது .  சரியாய் எழுதிக் கொள்ளவில்லை  .எழுத்தாளச் சிங்கங்களே  , ஒவ்வொரு சிறு விசயமும் எம்மை தலைகுப்புற வீழ்த்திக் கொண்டிருக்கிறது . எழுத்தை , வரைபடத்தை சரிவர எழுதுங்கள் . வருபவர்களுக்கு ....இலகுவாக இருக்கும் .  எதையும் விற்கிறதோ , தாரை வார்த்துக் கொடுக்கிறதோ   எம் இலட்சியமில்லை . இலக்கை அடையும் வரையில் இழப்பு இருந்து கொண்டே இருக்கும் . காலனியிலிருந்து விடுதலை கிடைத்த போது அதை தமது விடுதலையாய் எடுத்துக் கொண்ட சிங்களவரின் பரிசக்கேட்டைத்  தான் இன்று  நாம் பார்க்கிறோம் .

இன்று , நாம்  அனைவருமே ....  புதுப் பிரச்சனையாய்  வீதிகளாலும் , பஞ்சத்தினாலும்  செத்துக் கொண்டிருக்கிறோம் . அபிவிருத்தியடைந்த​ ...நாடுகளில் சதா வீடுகள் எரிந்து செத்துக் கொண்டிருப்பார்கள் . அக்னித்தகனம் . நம்நாடுகளில் வீதி விபத்துகள் . முந்தி என்றால் இராணுவத்துடன் சேர்ந்து ,நகரக்காவலரும் ...என்னவோ நாட்டைக்காப்பாறுவது போல​ தமிழிளைஞர்களை தினமும் கொன்று கொண்டிருப்பர் . வடக்கு கிழக்கு தனிநாடு . ' ஏன் ? , சுடுதல் , படுகொலை , கடை எரிப்புகள் , அவசரகால நேரக்கொலைகள் ( கேவ்வுயூ) ...நடைபெறுகின்றன​ '  என்றே புரியாமல் இருக்கும் . குமுதினி , மண்டைதீவு , பஸ்சை நிறுத்தி , இறக்கி வரிசைக்கு நிரையாக​ நிற்க​ வைத்து  நிகழ்ந்தேறிய​ படுகொலைகள் ....இன்று வரையில் தெரியவில்லை . எங்களுக்கே இந்த​ நிலை என்றால் ..புதுக்குஞ்சுகளின்  ... நிலை , யானைப்   பார்த்த​ குருடர் தான் . இலங்கையில், நடக்கிறது , நடந்தது ..." இனப்படுகொலையே இல்லை " என​ கையில் சூடத்தை ஏந்தி சிறிலங்கா அரசு சத்தியம் செய்யும்.  எவன் தான் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறான் ? .

இயக்கங்களில் நிகழ்ந்த​ உட்கொலைகளும் உள்ளே வலிக்கவே செய்தன .  முஸ்லிம்களும் பேசப் பிரியப்படாத​ , விரும்பாத​ ...கிழக்கில் , இனக்கலவரம் போல நிகழ்த்தப்பட்ட​ ஊர்காவல்படைக் கொலைகள் . விடுதலையிலேயே  இறங்காத​  , ' கெளரவப்பிரஜை ' என்கிற​ சாதி , சடங்கெனத் திகழ்ந்த​ படித்த​ பெடியள் கணிசமாக​ இறந்தது இவர்களால் தான் . காணாமல் போனோருடன் இந்த​ அழுகுரலும் உள்ளது . சட்டமும் ,ஜனநாயகமும் தன் கடமைகளைச் செய்யாது . நாம் தாம் செய்ய​ வேண்டும் .

பரிகாரத்தில் இறங்காத வரையில் கேள்விகளும் , விமர்சனங்களும்  என்றுமே இருக்கும் , மறைந்து போகாது . புலிகள் எம்மை தடைசெய்த போது ,' இவர்கள் யார் தடை செய்ய ? 'என்ற கோபம் என்னுள்   பொங்கியது . வாழ்வில் 2 ம் பாகம் தொடங்கியது . இந்தநேரத்திலே சின்னம்மா  எனக்கு சைக்கிள் வாங்க  800 ரூபா தந்தார் . நட்பு அவ்விலைக்கு சைக்கிளைத் தர உடன்பட்டது . அவன் நோர்வே செல்ல இருந்தான் . தம்பியும் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது . பெண்களிற்கு லேடீஸ்பைக்கே தேவைப்பட்டது .அவை   விலை கூடியவை . இயக்கப்பெட்டைகளும் , கம்பஸினருமே அவ்வேளை ஓடியவர்கள் . தடை , கிடை ...என​ புதிய​ அடக்குமுறைகள். அச்சைக்கிள்,  நட்பின் வழியிலும் , உறவினர்களை தேடியும்  அளவெட்டி , மயிலிட்டி , கரவெட்டி , வேலணை ...என எல்லா இடங்களிற்கும் ஓடியது . புலிகள் , இந்தியனாமியிடம் ஆயுதம் ஒப்படைப்பதையும் , சுதுமலையில் பேசுவதையும் கூட​  சென்று பார்த்திருந்தேன் . அச்சமயம் புலேந்திரனின் பேச்சு எனக்கு நிரம்ப பிடித்திருந்தது .

ஒரிரு தடவை புலியினர் என்னை மறித்து விசாரித்தனர் . சாரமும் சேர்ட்டும் தான் என் தேசிய உடை .  என்னுடன் வந்தவர் " சொந்தக்காரர் . வீட்ட வந்திருக்கிறார் " என்றார் . விட்டு விட்டார்கள் . சில புலிகள் உர்ரென பார்க்கவும் செய்தார்கள் . இந்தியனாமியோட பிரச்சனையில்  ஓடுபட்டுக் கொண்டிருந்த  பதற்றம் . நான் புளட் என்பது அயலவருக்கு  மட்டும் தான் தெரியும் . இது வேறு இடம் . என்னைப் பிடித்து விசாரிக்க​  அவர்களுக்கு  நேரமில்லை . நான் பண்ணை வீதியில் நின்ற மெற்றாஸ்ரெஜி மெண்ட் சிப்பாயியிடம்    கூட "...இப்படி சொல்கிறார்களே ...? " என்று  கேட்டிருக்கிறேன் . அவர்" நாங்கள் உங்களுக்காகத் தான் வந்திருக்கிறோம் . தெரியல்லை " என்றார் . பிறகு , அந்த ரெஜிமெண்டையே மாற்றி வேற சிப்பாய்களை இறக்குமதி செய்து விட்டார்கள் . அதற்கிடையில் சுழிபுரத்திலே இரண்டு வயசான   சிப்பாய்கள் புலிகளிடம் மாட்டுப்பட்டு மாலை போல விடுவிக்கப்பட்டார்கள் . மெற்றாஸ்தமிழ் .  புலிகளையும் ...அசைத்திருக்கிறது . இந்த சிங்கள அரசு  தமிழில் ,தமிழ்பகுதியில்  மட்டும் பேசி பழகக்கூடியவர்களை பணிக்கு அமர்த்தி இருந்திருந்தால் அரைவாசி வெறுப்புகள் இருந்தே இருக்காது . எல்லாப்பகுதிகளிலுமிருந்து  நேர்மை , நியாயம்  ....  பெருக்கெடுக்கவும் வேண்டும் .

நிலக்கொள்ளையிடும் கும்பலோடு எப்படி பேச முடியும்? . உண்மையிலே , சிறிலங்கா அரசு  தீர்வைப் பேசினாலும் கூட....நம்புவது சிரமாகவே இருக்கிறது . முதலில் , தவறு செய்தவர்கள் பட்டியலை தெரிவித்து , தண்டிக்கா விட்டாலும் ,  பொதுப்படையாக    மன்னிப்பாவது கேட்க வேண்டும் . பிறகு கீலிங்கள் தொடங்கப்பட வேண்டும் . சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் . இதில் கால் வைக்காமல் ......அந்த நாகரிகம் எங்கே செல்கிறது  ?  ,  எந்த அதிசயங்களும் இந்த மண்ணில் நிகழப் போவதில்லை .

கிராமங்களில் , தீவுகளில்  ஒரளவு படித்தவர்கள் ,பரவாயில்லையான வேலையில் ...உறவுகளுடனஂ ஈரத்துடனும்   ஈர்ப்புடனும் இருந்தார்கள் ,  சரி ,பிழையை ஒருபுறம் விட்டு , விட்டு  சந்தித்தால்  எவருடனும்  முகம்பார்த்து உரிமையுடனஂ கதைப்பார்கள் . சந்தர்ப்பம் கிடைத்தால் உதவுவர் . இடையில் சச்சரவு ஏறஂபட்டு கதைக்காமலும் இருப்பர் மத்தியிலும் கூட இளகியவர்கள் இருப்பார்கள் .   எதற்காக  அவர்களினஂ  பிள்ளைகளிடம் சாதிக்கவே மாட்டார்கள் . கடனஂ கொடுத்து கொடாமல் இருப்பது நீண்டிருக்கும் . ஒரு நேரத்தில் ...' கொடுக்கவேண்டியதில்லை ' எனத் தளர்த்தியும் விடுவர் . திரும்ப  பிழங்குற போது ...வனஂமம் இருக்காது . இவருடைய​ அம்மாவிற்கு இரு அண்ணர்மார் ,மூன்று தம்பிமார் . அம்மம்மா , பெரும்பாலும் பெண்ணுடன் தான் இருப்பார் . எல்லாருமே ...விசேசம் என்றால் இவர் வீட்டிலே கூடி விடுவர் . ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அம்மம்மா அந்த​ சகோதரத்துடன் போய் இருப்பார் . அம்மாவின் அண்ணரை ...பெரிய​ மாமா , சின்ன​ மாமா என்பதும் , தம்பிமாரை சின்னு , சீனி மாமா , ஆசை, குஞ்சு மாமா ...என்பதும் அறியப்பட​ வேண்டியவை .

நான் கையில் , வைத்திருந்த​ புத்தகத்தை எழுதிய​   எழுத்தர் ;  ஆசிரியர்  இவ்வகையான​ குடும்ப​ பிணைப்புடையவர் .  யாழ்ப்பாணத்தில் வேலை  இல்லை  என்றாலே..ஆள்  காலி  . நான்  இப்படியான​  சொந்தங்கள் மத்தியில்  வேறு  இருக்க வேண்டும் எனஂற  ஏக்கம் பிடித்தவன். எனது நண்பனஂ அகிலனஂ இதைப் புரிந்து கொண்டு அவனுடைய உறவினரில் எனஂன விசேசம் எனஂறாலும் எனஂனை இழுத்து கொண்டு செல்வான் . சில​ சமூகங்களில்  ( பெரும்பாலானவற்றில்....) இந்த​ பிணைப்பும் , ஈர்ப்பும் அதிகம் . அதற்காக​ அவர்கள் முறை , கிறை...என​ எழுதப்படாத​ விதிகளை பின்பற்றுறவர்களாக​ , ' மொய் ' குறிப்பேடு வைத்திருப்பவர்களாக​  திகழ்கிறார்கள் .

என்னைப் போல​  யாழ் இந்துக்கல்லூரியில்  படித்த இப்புத்தகத்து ஆசிரியருக்கு ,  அன்று , பல்கலைக்கழகம் செல்வேனா ?  எனஂற ஒரு  யோசனை  எழுகிறது . படிக்கிற காலத்தில் கல்வியைக்  கடந்து விட வேண்டும் . இனம் , மதம் , மொழி என​ தடைப்பட்டு  நிற்கக் கூடாது  .  பட்டதாரியாக வருகிறவர்களிற்கு எதிராக​  இலங்கையரசு  தீவிர​ நிலை எடுப்பதில்லை , ஓரளவு தயவு காட்டுகிறது .   ஆயிரத்தில்   ஒன்று தான் ஜே. ஆர் போல கொடுங்கோலத் தலைவராக​ வருகிறார்  . அடிப்படையில்  , அரசு ஒரு  மிருகம் . அதனுடன் நெடுக​ மோதிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை . அப்படியே இருந்தால்  எல்லாவற்றையும்  இழந்து  போய் விடுவோம்   என்ற​​ நினைப்பு வடமராட்சி , வட்டுக்கோட்டை வேறும் சில​ இடங்களிலும் நிலவுகின்றன​ . மாறுதலாக​ சிலரிடம்  ஏன் , வெளியே போக​ வேண்டும் . இது நம்ம  நாடு , இங்கேயே படித்து , இங்கத்தைய​ படிப்பிலேயே இங்கே நல்லாய் இருக்க​ வேண்துமென்ற சத்திய​ ஆவேசமும் கிடக்கிறது . அந்த​ வித்திலிருந்து தான் விடுதலைப் போராட்டமும் முளைத்தது . இலங்கையரசு , இவர்களை"  பயங்கரவாதிகள் " , " இது பயங்கரவாதம் " என்று சொல்லி  ...கசாப்புத் தொழிலில் இறங்கியது  . (கொன்றொழிக்க​ ஆரம்பித்தது ) .

அவர் இந்தியா செல்கிறார் . அவருடைய அக்காமார் ஏற்கனவே இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பி.யூ.சி என்கிற புகுமுக வகுப்பை ,பிளஸ் 2வை திரும்ப எடுக்கச் சொல்கிறார்கள் . சென்னையில் இடம் கிடைக்காததால் காஞ்சிப்புரத்திற்குச் சென்று பச்சையப்பன் கல்லூரியில் சேர்கிறார் . கல்லூரிக்கு விடுதி கிடையாது . மாடவீதியிலுள்ள​ வீடுகளே விடுதியாக​ பயன் பட்டன​ . தங்கிய​ வீட்டை  " வாசலுடன் திண்ணை .ஒற்றைக்கதவைத்  திறந்ததும் ....நீள நடுக்கூடம் . முன் ,பின்...ஆக​ அறைகள் . பின் கதவைத் திறந்ததும் திண்ணையில் வலது பக்கம் சில​ அறைகள் . திறந்த​ மாடி . பின் வளவில் கிணறு , அடைப்பு  மலசலக் கூடம் . வீட்டுக்காரர் சில​ பன்றிகளும் வளர்க்கிறார் "  என்று நகைச்சுவையாகவும் விபரிக்கிறார் .  காஞ்சிப்புரம் பற்றியும் தெரிந்திருக்கிறது .

அந்த​ காஞ்சிபுரம்  சரித்திரப்புகழ் பெற்றது . ( 11.6சதுர​ கிலோமீற்றர்  , 4,5சதுர​ மைல் பரப்பளவைக் கொண்டது ) காஞ்சியை.... ஒரு மாநகராட்சியாக​ ஸ்டாலின் , ஒகஸ்டு 21 , 2021   இல் அறிவித்தார் .
 'காஞ்சி' ஆய்வுக்கு உட்படுத்தி  ... எழுதப்பட​ வேண்டிய​ பழம்  நகர் . ஏற்கனவே , இப்படி ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறதா ?  .  நல்லூர்  நகர​ அமைப்பை ஆய்வு செய்தது போல் ...இதுவும்  விரிவாக​ ஆய்வு செய்யப்பட​ வேண்டும்  . பாலாறில் வேகநதி வில்வளைவாக​ இணைகிறதுக்கு இடைப்பட்ட​ நிலப்பரப்பில் காஞ்சிநகர் அமைந்திருக்கிறது .  தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்த​ வேண்டும் என்று தேடலைச் செய்த  எழுத்தர்   சாண்டில்யன் ,  அவர்  கதைகளில் வாரது போல​ பாலாறு , வேகநதி... பெயர்கள் .  ...நிச்சியம்   , இதைப்பற்றியும் எழுதி இருப்பார் , தேட​ வேண்டும் .  அங்கிருந்த​மல்லைக்கோவில்கள் சிலவற்றை கடல் கொண்டு விட்டதும் என்கிறார்களே ,  உண்மையா ?சரித்ததிரம் தெரியாதவனாக​  இருக்கிறேனே . இதற்குப் பிறகு தான் தஞ்சை.

' காஞ்சியை , 2500 ஆண்டுகளிற்கு முன் தொண்டைமான் இளந்திரையன் ஆண்டான் ' என்று    சங்க​ இலக்கிய "பரிபாடல்"கூறுகிறது . இது,  புத்தர் காலத்தில் , கல்விச் சிறப்பு பெற்ற நகர் . உலகில் , முதல் பல்கலைகழகம் எல்லாம் ....இங்கே தான் தோன்றியது​ . 2ம் நூற்றாண்டில் பதஞ்சலி (யோகக்கலையை எழுதியவர்) முனிவரால் குறிப்பிடப்படுகிறது .2 ம் நூற்றாண்டில் மணிமேகலையிலும் காஞ்சிநகர்  குறிப்பிடப்படுகிறது . 4 ம் , 9 ம் நூற்றாண்டு   வரையில் பல்லவர் தலைநகர் . சென்னை , வேலூர் , திருவண்ணாமலை , திருவாரூர் மாவட்டங்கள் , இவ​ற்றை அடக்கி இருந்ததாகச் சொல்லப்படுவது ஒருவேளை தொண்டைமண்டல​ நாட்டையோ ? தொண்டைமண்டலம் பெருநாடு . பல்லவர் ஆண்ட​ தொண்டைமண்டலம் 1000 கோவில்களைக்  கொண்ட​ நாடு என​ சிறப்பு பெற்றது .  மீனாட்சியம்மன் ஆலயத்தில் நின்று  சூழபார்க்கிற போது   பெரிய​ தெப்பக்குளம் இருக்கிறது , கூட​ பிரமாண்டமும் ....தெரிகிறது . எறும்புகள்  போல​  நிரைய​ மக்கள் , இடிச்சு , நெருக்கிய​ கடைகண்ணிகள் , வெளிநாட்டவரைக் கண்டால் கையை நீட்டும் மதிப்பிறக்க பண நாணயத்தின் ​ நிலமை ....இந்தியாவின் ரூபா அதிகமாகி விட்டால் ... யாரிடமும் கையேந்த​ வேண்டியிராது . . அனைத்து அலகுகளிலும் வளர்ர​ தொடங்கி விட்டால் ....இந்தியாவின் அகோர வெய்யில் .....அதைப்பற்றியும்  கலாம்கள் சிந்திக்க ​ வேண்டும் .

.வரலாற்று ஆசிரியர்கள் ,   தமிழ்நாட்டில் ,  பார்க்க​ வேண்டிய​​ இடங்கள் என்றால்  காஞ்சியையும் , மாவலிப்புரத்தையுமே முதலில் சொல்கிறார்கள் . அண்ணாத்துரை பிறந்த​ இடம் காஞ்சி . அதனாலே எம்.ஜி. ஆரின் பாடல்களில் மிதமிஞ்சி ....'காஞ்சி'   வருவதைப் பார்க்கிறோம்  .

நல்லூரை விட​ பெரிதான​ மீனாட்சியம்மன் கோவிலும்  அதை  சுற்றிவர​ ஏகாம்பரநாதர் , வரதராஜப்பெருமாள்  , கைலாசநாதர் , கச்சபேசுவரர்...கோவில்கள் எழுந்திருக்கின்றன​ .  இரு நண்பர்களுடன் கைலாசநாதர் கோவிலைப்பார்க்க குதிரை வண்டியிலும் செல்கிறார் .  .நல்லூரைப் போல​ நகரவமைப்பு  இல்லையா ? கைலாசநாதர் கோவில்  .....  பல்லவன் நரசிம்மனால் கட்டத் தொடங்கியது , மகன் மகேந்திரனால் தொடரப்பட்டு , பின்னர் மாமல்லன் நந்திவர்மனால் கட்டி முடிக்கப்பட்டது . அக்கோவில் சுண்ணாம்புச்சுதையால் முழுக்க​ எழுப்ப​ப்பட்டது​  . சிறிது புரியவில்லை . குகூளில் போய் தேடிப் பார்க்க​ வேண்டும்  கைலாசநாதர் கோவில் சூழவுள்ள​ கோவில்களில் ஒன்றாக​ இங்கேயும் வருகிறது .   , நல்லூருக்கும்  இதற்கும் ஏதும்  தொடர்பு இருக்க​லாமோ ? .

பிறகு "பட்டதாரியாக திரும்பிய போது , இங்கேயே படித்த வரதா ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் . இவர் வேலையில் இல்லை . கிடைப்பதாக இல்லை . மாட்டுப்பண்ணை வைக்க யோசிக்கிறார்  . எங்க கிராமத்தில் சிலர் சிறிமாவின் காலத்தில் , காடு வெட்டி தோட்டம் செய்ய  விசுவமடுவிற்குச் சென்றிருக்கிறார்கள் . வெங்காயம் , மிளகாய்ச்செய்கையில் ஒருவர்  லாபம் பெற்று கனடா கூட​  சென்றிருக்கிறார் .   முதலில் இத்தினி  இறங்கி , அவரின் அனுபவத்தில் மற்றவர்கள் ..என  மூன்றுபேர்கள் கோழிப்பண்ணை வைத்து  வெற்றி அடைந்திருக்கிறார்கள் . மரநாயும் , சாரைப்பாம்பும் பெரும் கோழிக்கு எதிரிகள் , சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமில்லை . இத்தினியே இழப்புகளை சந்தித்து நின்று தாக்குப் பிடித்து குருவாகி வழி நடத்தி  இருக்கிறார் .  அவரோடு நின்றிருப்பவருக்குத் தான் தெரியும் அந்த வலிகள் .

மாட்டுப்பண்ணைக்காட்சிகளைக்  காட்டுகிறார் . முதலில் இரண்டு மாடுகள் வாங்கினார் . சே ! , பிழைப்புக்கு  இது போதாது என மேலும்   மாடுகள் , கன்றுகள் வாங்கிறார் . தொடக்கம் நல்லாவே கலக்கிறது .சில்லறைக்கடன்களை எல்லாம் அடைக்கிறார் . பிறகு , மழைக்காலம் . காற்று கடுமையாகி  கச்சானும் ,கொண்டலும் மாறி , மாறி வீசுகிறது . கொட்டலைச் சுற்றி குளிருக்கு சிமால்   போட்டு திணறிப் போகிறார் .  பிறகு   , பங்குனி வெய்யில்  வாட்ட​ தீவனம் கிடைக்காமல்  நட்டத்தையே   ஏற்படுத்தி விடுகிறது . வரதா வருகிறாள் "பண்ணையாரே , இந்த ஏழைப்பெட்டையை  மறந்திடாதிங்க , பசுக்களைப் பார்க்கலாமா ? " என்றுகேட்கிறாள் .  தாவடித்தோட்டதிற்கு கூட்டிச்செல்கிறார் . அதில் சிவப்பியைப் அவளுக்கு பிடித்து விடுகிறது .

பிரதேசசபையினூடாக பட்டதாரிகளை பயிலுனராக சேர்க்க விண்ணப்பங்களை கோர . அதில் மூன்று மாசப்பயிற்சி பெற்ற  இவருக்கும் ஆசிரியராக பணி கிடைக்கிறது . போதுமடா சாமி என்று களைத்துப் போகிற அவர்  முதல் காரியமாக மாடுகளை விற்று கடனை வட்டியுடன் அடைத்து ஈட்டுப்பத்திரத்தை வாங்கி அம்மாவிடம் கொடுக்கிறார் . அம்மாவின் முகமலர்ச்சி மகிழ்விக்கிறது . மீதியை நகைகளைக் கொடுத்து உதவிய அக்காவிடம் கொடுக்கிறார் . சிவப்பியை வரதாவிற்கு கொடுக்க ,  அவள் 2000ரூபா கொடுக்க வாங்க மறுத்து விடுகிறார் . அக்காமாருக்கும் திருமணங்கள் தகைகின்றன . இவருக்கு ரூட் கிளியர் . இவரிடம் இப்ப பணமில்லை . " தாலியை பத்து பவுணில் நானே செய்கிறேன் .சடங்கை எளிமையாகச் செய்வம் நல்லூரிலே ருத்ராபிஷேகம் செய்து தீபம் காட்டேக்க தாலி கட்டலாம் " என்கிறாள்  ,  கெளரவப்பிரச்சனை அவருள் எட்டிப் பார்க்கிறது போல "  வயசிருக்கு தானே , படுவேகமாக இருக்கிறதே " என்கிறார் .. " வயசு வட்டுக்க போற வரைக்கும் ஏன் காத்திருக்க  வேணும் ?"   என்று கேட்கிறாள் . " உனக்கு  25 வயசு . இரண்டு வருசம் பொறுப்பமே  . வேலை நிரந்தரமாகட்டும் பார்ப்போம்" என்கிறதுக்கு சம்மதிக்கிறாள் . பேச்சுத்தமிழ்  ரசிக்க​ வைக்கின்றன​ .

ஆசிரியர் , வரதா வீட்டிலே அவளுடைய அறையிலே அடுகிடையாக இருந்தேனஂ ' எனஂகிறார் .   கிராமத்திலும்   , இப்படி பழகிறதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேனஂ . நீங்களும் அறிவீர் .

நம் ஊரிலே  கூட  மணமாக முதலே , " மாப்பிள்ளை வந்திருக்கிறார் , பொஞஂசாதி வீட்ட போயிருக்கிறார் .." எனஂறு கூறுகிறதைப் பார்க்கிறோம் . இளவாளைத் தோழரினஂ தம்பியர் முறைக்காரியைக் கட்ட முடிவாகியிருக்கிறது . அவனோடு நிறஂகிற போது " அம்மா ,தம்பி எங்கே ?" எனஂறு கேட்டானஂ . " அவனஂ பொஞஂசாதி வீட்ட போயிருக்கிறானஂ " என்று அவர் இயல்பாக பதிலளிக்கிறார் . கிராமத்தில்  , அயலில்   உள்ள  அக்காவை  சேது அண்ணர் கட்ட முடிவாகி இருந்தது . அந்த அக்காவிறஂகு அவருடைய அம்மா இறந்து விட்டிருந்தார் . தம்பி , தங்கைமார் படித்துக் கொண்டிருந்தனர் . வீட்டிலே அவர் தானஂ அம்மா . நாலைந்து வருசம் காத்திருக்க சேது அண்ணரும் ஒத்துக் கொண்டிருக்கிறார் .  தம்பிக்காரனஂ வேலையில் சேரவும் உதவினார் . தம்பிக்கு என் வயசு , என்  நண்பர் .  அந்த வீட்டுக்கு  அடிக்கடி   வந்து போவார் . அவரும் அந்த வீட்டில் ஒருத்தர். தம்பியர் வெளியில் போக மூனஂறாம்   வருசத்திலே அவர்களுடைய கல்யாணம் நடதேறியது .   நகரப்பள்ளியில் படிக்கிற  போது நம்பக்கத்தில் இருந்தவர் பறஂறி ஒனஂறுமே தெரிவதில்லை .  அப்படி கிராமத்தில் இருப்பதில்லை . பள்ளியிலும்  அப்படி இருந்திருக்கக் கூடாது ' எனஂற தாக்கத்தில் , தொழில்க்கல்லூரியில் படித்த போது விடுமுறை  நாளில் வகுப்புத்  தோழர்கள் வீடுகளிறஂகுச் செனஂறு அக்குடும்பத்தில் ஒருத்தராக உபசரிக்கப்பட்டு  ஒருநாளை ....கழித்து   வந்தோம் . அவர்களில்  ஒருத்தராக பழகிய போதே சதாவிறஂகு ...கட்ட மச்சாள் ஒருத்தி  இருப்பதும் தெரிய வந்தது . பெறஂறவர்களினஂ விருப்பமும்  கூட   .  இவர்களுக்கிடையிலும்  சிறுவயதிலிருந்தே  வரதாவைப் போல  விருப்பம் நிலவி   வந்திருக்கிறது .  நாங்களும் அவனை கலாயித்து தள்ளினோம் . அன்று தான் , ' ரமணனின் அப்பா , அவனை டெக்கிற்கு பஸ்சில் ஏற்றி   அனுப்பிய​ பிறகு  வீதியில் வைத்து  கத்தியால்  குத்தப்பட்டு கொல்லப்பட்டார் '   என்ற​  செய்தியை            அறிந்தோம் . அவர் ஒரு அப்பிராணியான​ ஆசிரியர் . எவ்வளவு வலி ! . எங்களுக்குத் தெரியாத​ வலி . தமிழ்ச்சினிமாவில் காணும் ரவூடியிசம் இங்கே சண்டியர் ...என​ கீறப்படுத்தப்படும் காயங்கள் .

சண்டியரும்  பொலிஸும் நட்பினர் . ஏன் ? , மாகாணவரசுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்பது உங்களுக்கு புரியும் என​ நம்புகிறேன் . சிறையில் வைத்து தமிழர்களை கொத்தாக​ கொலை செய்து  பொலிஸ் தான் ஜூலைப்படுகொலையை தொடக்கி வைத்தது . ரிபன் வெட்டுறவர் எல்லாம் பொலிஸ் தான் .

ஆசிரியரின்   காதல் கதையை எதிர்ப்பு , பிரச்சனைகளில் கடைசியில்  வெற்றி பெற்ற​ பதின்ம​ வயசு ....எழுத்துக்களை வெகுவாக​ ரசிக்கலாம்​ . என்னுடைய​ விமர்சனம் வாசிக்கிற உங்களுடைய​ சுவாரசியத்தை எந்த​ விதத்திலும் குறைத்து விடாது .

சொந்தத்தில் கட்டுறது பிழை ,  அறிவியலாக செயல்பட வேண்டுமெனஂபது இன்றைய நிலை ... ஆனால் இனச்  சூழலில்.. ? ....எவ்விசயத்திற்கும் தொடங்கிறதுக்கு என்று ஒருநாள் இருக்கிறது  .

" இனப்பிரச்சனை இருக்கும் வரையில் ....எம்மில் எவருமே சரி ,பிழைகள்    ..பார்த்துக் கொண்டு நிறஂக க்கூடாது .   உங்களை  யாரும் விரும்பினால் அறிவியல் ,அது ,இது என​ பேசிக் கொண்டு தயவு செய்து நிற்காதீர்கள் ? " தொழில்கல்லூரியில் எங்களுடன் படித்த​ வசந்தா (அக்கா போன்றவர் ) பெடியளிடம் நெடுக​ கூறுவார் . நாங்கள் சிறுகதைகள் நிறைய​ எழுதணும் , சாதிக்க​ வேண்டும் என்று எல்லாம் நிறைய​ ஆசைப்படுகிறோம் . நிறைவேறுவது கொஞ்சமாகத் தான் இருக்கிறது . வாழ்க்கையும் அப்படி தான். ஏன் , எங்களுக்கு மட்டும் நடக்கிறது ? என்ற கேள்வியும் எல்லாருக்கும் தொக்கி விடுகிறது . அதற்கு ,  நாம் கணிசமாக​ அறியாமையில் கிடக்கிறோம் என்பதே காரணம் . சிலவேளை , அறியாமை கூட​ அவசியமாகவும் கிடக்கிறது . நேரம் என்ற​ ஒற்றைச் சொல் அங்கே வந்து நிற்கிறது  . அதையே  நம் சந்ததிக்கு கடத்துகிறோம் . அடிமைத்தனம் , காலனித்துவம் களையப்பட​ வேண்டியவை . அதில் மாறுக்கருத்து இல்லை . அறியாமையால்  தாம்    நாம்  அவற்றைக் களையாமலும் கிடக்கிறோம் . வேலை வாய்ப்பு இரண்டு மடங்காகி​  முதனஂமையான  பிரச்சனையாகி நம்மைக்   கொல்கிறது . பெண்  சமத்தனஂமை நிலவ , நாமும் சிறிது தடைப்படுத்தி ​ என்ப​தையும் ...உணர வேண்டும் . அரசியல் அதிகாரம் நம் கையில் இல்லை . எனவே ...முழுமையாகவில்லை . அதிகாரம் கையில் பெற்ற தமிழ்நாட்டில் இந்த​ சாட்டைக் கூற​ முடியாது . என்ன​ தான் எங்களிலே பிழை ? . கோயில்களில்  உள்ள​ அர்த்தநாரீஸ்வரரை ...விளங்கிக் கொள்ளாத​ வரையில் ...நா  யாரோ , நீ யாரோ ? அங்கே நிகழும் வன்முறைகளைக் குறித்து தலை குனிய​ வேண்டும் . சேர வேலைவாய்ப்புகள் அவளுக்கும்   கிடைக்கிற சூழலும் நிலவ  வேண்டும் . அதறஂகுப் பிறகே , அறிவியல்  மண்ணங்கட்டி எல்லாம் . படைத்தரப்பு ....பாலியலையும்     ஒரு ஆயுதமாக கேவலமாகப் பயனஂபடுத்துறது  .  இலங்கையில் , வெறும் வார்த்தைகளில் தானஂ "சோசலிச ஜனநாயகக் குடியரசு" வாழ்கிறது  . அவர்களினஂ "சர்வோதய " அமைப்பை இயங்க வைக்கிறது . அதே மாதிரியான தமிழர் தரப்பில் இயங்கிய​ "காந்தியசேவையை " அமைப்பினஂ நிலங்களை எல்லாம் பறித்துக் கொண்டு  தடை செய்து விட்டிருக்கிறது.போரினஂ பிறகு , இஸ்ரேலைப் போல எம்மவரினஂ நிலம் முழுதையுமே பறித்து  சொந்தம் கொண்டாடவும் ... கெலி பிடித்து அலைகிறது , முயல்கிறது . அரசு ,   தமிழருக்கு  முழுமையான  எதிரி , பயங்கரமான   எதிரி  . கொரானா போன்ற​ கொடிய ஒரு வைரஸ் .

இந்தியாவிற்கு சுற்றுலாவை மனைவியுடன் இருதடவைகள் மேற் கொள்கிறார் .  மனைவி , ஒரே கோயில் பையித்தியமாய் இருக்கிறார் . கையில் நூல் கட்டுவது போல எடுத்ததிற்கும்  நேர்த்திக்கடன் வைப்பவர் . முதல்ப் பயணம் தேனிலவுப்பயணமாகப் படுகிறது . மணமுடித்த கையோடு மேற்கொண்டது .  தலைமன்னாரிலிருந்து கப்பலில் பயணம் ( மன்னாருக்கும் , தலைக்குமிடையில் வீதி இருக்கிறது) தனூஸ்கோடியை அடைந்து , அங்கிருந்து ரயில் சென்னைப்பயணம் .  அங்கிருந்து ,கோவில் சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக சென்றிருக்க வேண்டும் போலப்படுகிறது . திருச்சியில் மலைக்கோவில் , தஞ்சாவூர்கோவில் , மதுரை மீனாட்சியம்மன் , சில  ஆறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை , பழனி , திருப்பெருங்குன்றம் ...திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ,    திரும்பவும் திருச்சி வழியாக பெங்களூர் வைட்  ஃபீல்ட் ( ),சாய்பாவாவின் கோடை வாசஸ்தலம் , அவர் வந்திருக்கவில்லை  ,  புட்டப்பர்த்திக்கு செல்கிறார்கள் . அவரின் ஆசி பெற்று திரும்பி  வருகிறார்கள் . ஆசிரியரை  ' சாயின் சர்வமத இணக்கம் 'அதன்  சேவைகளும் கவர்கின்றன .  அப்பவும் வெய்யில் கொளுத்தி எரிந்திருக்கும் . ஆனால் , பயணம் மனத் திருப்தியை அளிக்கிறது . தெய்வங்களை தரிசித்தப்பலன் ...வசந்தமாக​ வீசுகிறது . சங்கரின் படத்தைப் போல​ பார்க்கும் இடமெல்லாம் பூக்களாக​ பூத்துச் சிரிக்கின்றன​ . எத்தனை மகிழ்ச்சி .

வாழ்க்கையில்  " நமக்கு , எவர் பிறந்தாலும் சரி தானஂ .  எப்படி , ...உனக்கும்  சரி தானே ? " எனஂற வரதாவின் பேதமையான கேள்வியில் ...கொஞ்சும் குழந்தைத்தனம் . எம்மையும் சந்தோசம் தொற்றிக் கொள்கிறது .

நெருப்புக் காய்ச்சல் தொற்றி ...சிதைவுறபோது.... கண்ணுக்குத் தெரியாத ....இந்த​ வில்லன்களும் , பூதக்கணங்களும் .... எங்கே மறைந்திருந்தார்கள் என​ அதிர்ந்தே போய் விடுகிறோம் . அவர்களோடு  சேர்ந்து நாமும் அழுகிறோம் . ஆண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வதைப்படலாம் போல படுகிறது  .   கடவுள்  . இவளை  போய் ஏன்  இப்படி...  சோதித்தார் ?  என்று கடவுள் மேல் கோபம்  ​ வருகிறது  .  நமக்கு மட்டும் ஏன் ...நடக்கிறது ? ....என்ற சம்மட்டி கேள்விகள் இருவருக்குமே  இடியாக இறங்கிறது . தாங்கும் சக்தி எனஂபது பாதிக்கப்படுபவருக்கு எப்பவும்  இருப்பதில்லை  .  நெருப்புக் காய்ச்சலிருந்து  விடுதலை இல்லை .  

பெண்களிற்கான பிள்ளைப்பேறே வாழ்வா , சாவா ? என்ற ஒரு கண்டம் . அவள் அந்த வயதில் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சிகள் எடுத்துக் கடந்திருந்தால் ... உடற் பலம் கிடைத்திருக்குமோ , மனத்திடம்  இவ்வளவு கீழே விழுந்து நொறுங்கியிருக்காதோ .  பலவீனம் , வலி , மனம்  ..இவையும்  நோய்  தான் . ஒரு சமூகம், ' தன் சந்ததியை சரிவர​ வளர்க்கா விட்டால் ..' அதுவும் குற்றம் தான் . டே கெயர் போல​ சிவில் கெயர் . எந்த​  ஒரு பிரச்சனையும் ,  ஒனஂறுடனஂ மட்டும்  நிற்பதில்லை . இனப்பிரச்சனை போல கிளைக்கும் , கிளைக்கும் . அடி மேல் , அடிக்கும்  .   அந்தகாரத்தினுள் கடைசியில்  வீழ்த்தியும் விடும் .

ஆசிரியர் " மனது பாழ்பட்டு விட்ட உணர்வு நம்மை நடைபிணமாக்கி விட்டது .துயரங்கள் கடந்து வாழ வேண்டும் அது தானஂ மனித இயல்பு ." எனஂறு தனஂனை சமாதானப்படுத்திக் கொள்கிறார் . வரதாவால் சமனுக்கு வந்திருக்க​ முடியுமா ?

இதனஂ மத்தியில் வரதாவிற்கு  இடது மாரில் சில புள்ளிகள்  . கானஂசராக இருக்குமோ ?... என' கிலி'  வேற​ பரவ  மள , மளவென நேர்த்திக்கடன்களை ஏற்றிக் கொண்டே போகிறாள் . கொன்றோல்  என்பது கிடையாது . " நல்லூர் சிவனுக்கு வெள்ளி மேலங்கி , நயினையில் உள்வீதியில் ஏழு தடவை பிரதட்ணம் (பிரதிட்டை எடுத்தல்) ,திநெல்வேலி அம்மனுக்கு பொங்கல் , முத்துமாரிக்கு ...கடனஂ..." சட்டர் கையைப் பிசைக்கிறார்  .

வாழ்க்கைச் சுழலில் அகப்பட்ட பிறகே , இவர்கள்  2வது முறை இந்திய​ சுற்றுலா சென்றதாகப் படுகிறது .

திரும்பவும் ஆறுபடை வீடுகளின் தரிசனம் , தவற விட்ட வீடுகளாக இருக்கலாம் . கடற்கரையோரமிருந்த சிறு குன்று சார்ந்து  திருச்சிலைவாய்த் தணிகைச்செல்வன் தெய்வானையோடு இருக்கிற( வள்ளி ...அவுட்  , சின்ன​ வீடோ ? ) திருதணி தனக்கு  பிடித்தது என்கிறார் .  திருவனந்தபுர​ சிறு விமான​ நிலயத்தில் , வரியில்லாமல் வாங்கி வரும் ஏலம் , கராம்பு , மதுப்புட்டிகளை  இவர்களிடமிருந்து வாங்க அங்கத்தைய​ சனம் பரபரக்கிறது . இன்று,  கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் உதவி செய்ய  .... கூட்டம்   ....பரபரக்கிறது . டிப்ஸாக கிடைக்கும்   வெளிநாட்டுக்காசுகள் அங்கத்தைய பணத்தில் பெருந்தொகை . ஆசிரியர் ,  " இதெற்கெல்லாம் அனுமதி அளிக்கிறார்களே " என​ நம்மைப் போலவே  ஆச்சரியமாக பார்க்கிறார் . போர்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அமெரிக்கா , தனது டொலரின் மதிப்பை இறங்க​ விடாதும் வைத்துக் கொள்கிறதையும் கவனியுங்கள் . இதுவே , கூட​ இன்னொரு  உலகப்போருக்கும் வழிவகுத்து விடலாம் .

நம் ​ மனிதரின்  கீழிறங்கி விட்ட நிலையைப் பார்த்தீர்களா ? . அவருடைய உழைப்பு , நேரம் ...விவசாயத்திற்குப் போகவில்லை .  விரயமாகவே போகிறது . தேசநேசதையே அரசுகள் அழித்துக் கொண்டிருக்கின்றன . கேரளத்தில் , கோவளம் கடற்கரை பார்க்க வேண்டிய இடம் என்கிறார் .  1000 தீபங்களைக்காட்டும்  அநாதபத்மநாதர் கோவிலிற்குள் ' வேட்டியுடனே செல்ல முடியும் . இரவலாக வேட்டியை  அணியக் குடுக்கிறார்கள் , அதற்கு பணம் அறவிடவில்லை ' என்றும் கூறுகிறார் . திருவனந்தப்புரத்திலிருந்த போது இவர் , மின்நிலையங்களில் எல்லாம் ஏறி ,  நீல பத்மநாதனையும் தேடுகிறார் . நம் நிலையும் அது தான் . நாம் தாம் நம்மை பற்றி பெரிய​ எழுத்தாளராக​ நினைத்துக் கொண்டிருக்கிறோம் . அய​லில் தெரிந்திருக்குமா ? ஒருத்தருக்கு கூட தெரிந்திருக்கவில்லை . இந்தியாவிலிருக்கிற பல இடங்களில் மக்களைப் பார்க்கிற போது எமக்கும் கூட  இவர்களுக்குத் ​'அரசியல் 'தெரியுமா ? என்ற சந்தேகம்  எழும் .

கோயம்புத்தூர் வந்து வரதாவின் சினேகிதி , ஆசிரியையின் வீட்டில் ஒருநாள் தங்குகிறார்கள் . இப்படியான நட்புகளை ஆடவர்,   எம்மால் கட்டிக் கொள்ள முடிவதேயில்லை .   எம்  தலைகளில்  அரசியல் , அது , இது என குப்பைகளுடன் சதா அலைபுரண்டு கொண்டிருப்பதால் மனிதத் தன்மைகளை ஒருபுறம் இழந்து கொண்டிருக்கிறோம் . அது தான் இலங்கையர்களையும் இனவெறியர்களாக  மாற்றி  , எம்மை பலிக்கடாவாக்கி விட்டிருக்கிறதா ? . ஆடவரின் வேதம் .  சர்வதேசம்​ உட்பட​  இஸ்ரேலும்  கூட "  மக்களை கொல் !"உலகம் சிறிதும் ..கவலைப்படுவதில்லையே .  ஃபிரான்ஸ்  ஒலிம்பிக்கை நடத்த முனைகிறது . அணுகுண்டு வெடித்தாலும் எதுவுமே நடக்கவில்லை போல​ உலகம் இயங்க​ விரும்புகிறது . பகிஸ்கரிக்க வேண்டும் என்ற சிந்தனை யாருக்கு எழ வேண்டும் ? உலகத்தில் ஒரே ஒரு பெரிய​ மனிசர் ....காந்தி தான் இருப்பார் ...போல​ இருக்கிறது . இஸ்ரேல் , நீதியாக​ நடக்கவில்லை என்று அன்றே கூறி விட்டார் . ஒரு காலத்தில் யூதர்கள் இஸ்ரேலை எங்கே அமைப்பது என​ மூளையைக் குழப்பிக் கொண்டவர்கள் தாம் . அமெரிக்க​ மாநிலம் ஒன்றிலா , பாலஸ்தீனத்திலா ..? இப்படியும் ஒரு தரவும் இருக்கிறதாகப் படுகிறது . பிரிட்டன் , " லூசியானா மாநிலம் பழங்குடிகளின் மாநிலம்   ஆகலாம் !" என்று கூறியது போல​ ...! போரில் தோற்று விட்டது . கை விட்டு விட்டது . இன்று , கனடாவில் ....அவர்களுக்கென்று ஒன்று உள்ளதா ? அறுபதுகளிற்குப் பிறகு ...பள்ளி விடுதி கொலைகள் தான் நிறைவேறுகிறது . " புத்தி உள்ள மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை !" .

" காலம் உயிர் வாழதலையே அர்த்தமில்லாதாக்கி விட்டது " என்கிறார் .  " இந்த நிலையிலே தமிழைவாலாய்ப்படுத்திக் கொள்ள  எழுதத் தொடங்கினேன் "என்கிறார் . இதறஂகு முதலே கவிதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார் , எதுவும் பிரசுரமாகி இருக்கவில்லை . (29ம் வயதில்) "  நாணயம் " எனஂற சிறுகதை வீரகேசரியில் பிரசுரமாகியது . பிறகு , அஞ்சலியில் " அந்தஸ்து" சிறுகதை , மல்லிகையில்  ... மாற்றம் , உலா , உறவுகள் , இப்படியும் காதல் வரும் , பிச்சைப்பெட்டிகள் ...பல கதைகள் , அலையில் " கிராமத்துச் சிறுமி " , பூரணியிலும் வருகிறது ...எனஂகிறார். மு . த வும் , ஏ .ஜே உம் " உனக்குத் தோனஂறுதை தொடர்ந்து எழுது " எனஂறு   ஆறுதல் கூறுகிறார்கள்  (தூண்டினர்)  . அதை 'வேதமாக' வைத்துக் கொண்டேன் " எனஂகிறார் .

எழுதுறவர்க்கு பல தடைகள் இருக்கின்றன​ . மேலும் கால் வைக்க​ வேண்டிய​ பிரச்சனைகளைத் தான் படிகளாகக் கூறுகிறேன் . அவற்றையும் தாண்டி பாய்ய வேண்டும் .

புத்தக முயறஂசியில் ஆசிரியர்  இறங்கி   விடுகிறார் .  அனஂறு ,  பட்டாரி ஆசிரியரினஂ வருவாய் ஆயிரம் வரையிலே இருந்தது . பயிறஂறுவிக்கப்பட்ட ஆசிரியரினஂ வருவாய் எண்னூறு வரையிலே இருந்தது . இவ்வருவாயில் ...வாழ்க்கைச் செலவை மட்டுமே சமாளிக்க​ முடியும் .  வேறுச் செலவுகளை  ....தொடர​  ​ முடியாது . கூரையைப் பொத்திக் கொண்டு ஏதாவது ...அற்புதம்  நிகழ​ வேண்டும் .  வரதா , தாலியை இலங்கை வங்கியில் அடவு வைத்து ஆறாயிரம் ரூபாவைப் பெறஂறுக் கொடுத்தார் . இவர் சிறுகதைகளைக் கொண்ட புத்தகத்தை சாவச்சேரி அச்சகத்தினூடாக வெளி கொணர்ந்தார் . அதிலுள்ள ஆறு கதைகள் முத்தானவை எனஂறு வேறு பாராட்டினாள் . அந்த​ மனம் வரதாவிற்கு இருக்கிறது . இந்த​ கொடுப்பினைகள் எல்லாருக்கும் இருப்பதில்லை .  வரதாவே   இவர் எழுதுறதை சரி பார்க்கிறதை.... செய்கிறாள் . " விறஂறு வார பணத்தை உனஂனிடமே  தந்தேனஂ .  சிறு உதவியாய் இருந்திருக்கும்  .  இரண்டு வருடங்களில் சிறுக , சிறுக பணத்தை சேகரித்து  தாலியை மீட்டுக் கொண்டாய்  "  என்று இவர் கூறுகிற​ போது  இந்த வரிகளிலே எல்லா  நிலமைகளும் பிரதிபலித்து விடுகினஂறது . மேலும் சில புத்தகங்கள் வெளியாகின எனஂகிற போது  , எழுத்தர் சிறிது முரடுள்ளவர் ...என்பது தெரிகிறது . மேலும் கஸ்டதசைகளை   இழையோட​ வைக்க​ காத்திருக்கிற​    தொடர் ​  எனஂபது ....புரிந்தும் விடுகிறது , .

தமிழரில், ஏனஂ  வாசிப்பு குறைவாகவிருக்கிறது ? .... எனஂபதறஂகு ....சராசரியைத் தொட​ முடியாத​  பொருளாதாரமும் ஒரு காரணம் . இனப்பிரச்சனை  எல்லாப் பிரச்சனைகளிலும் புரையோடிப் போய்  அத்திவாரமாகக் கிடக்கிறது . ! . தலையீட​ற்ற  மாகாணவரசு தேர்த்தலை நடத்தினால் ....புத்தகப்பிரச்சனைகளை மாகாண  அரசே கணிசமாக குறைத்து விடும் . நூலகங்களை எரிய விடவே விடாது . மேனஂமேலும் பெருக்கும் . எரிப்பவர்களை வாழஂநாள் முழுதும் சிறையில் போட்டு பாடம் படிப்புக்கும் . தற்போதைய​ நிலைக்கு மத்திய அரசே, பிரதான குறஂறவாளியாக நிறஂகிறது .

2 வருடங்களின் பின் சிறுகச் சிறுக சேர்த்து தாலியை மீட்டாள் " . எனஂறதில் பெண்ணின் பெருவலி தெரிகிறது . மழை விட்ட பாடில்லை . மேலும் புத்தகங்கள் , ஒரு கவிதைத் தொகுதி ..  வெளியாகிக் கொண்டேயிருக்கின்ற​ன . அவருக்கென்ன​  புகழ்  மயக்கம் , அது  ஒருவகை  போதையும்  கூடத் தான் . ஆனால் , புத்தக​ம் வெளியாகிறதும்  அவசியம் தானே . புத்தகம் வெளியாகா நாடு , கண்ணின் ஒலியை மெல்ல​ , மெல்ல​ இழந்து குருடாகிப் போய் விடும் என்கிறார்கள் . வள்ளுவர் , குறளில்  அதை  ...கல்வி ...எனக் கூறி    குறிப்பிடுகிறார் .  எழுத்தாளன் பிள்ளைகளைப் பெற்றுத் தான் ஆண்டியாக வேண்டும் என்பதில்லை , புத்தகங்களை வெளியிட்டும் ஆண்டியாகி விடலாம் . அரசியல் தான் எல்லாத்திற்கும் கைகொடுக்க​ வேண்டும் . புத்தக​ அமைச்சு என்கிற​ ஒன்றை ...நிறுத்த​ வேண்டும் . மானியம் வழங்கல் , அன்பின் கரங்கள் என்கிற​ வெளியையும் ஏற்படுத்த​ வேண்டும்.

  இடையே  அரசியல் .. துளிகளை     தெளித்தும் கோலம்    போடுகிறார் . (கீழே)

" எழுபதுகளினஂ கடைக்கூறில் முளைவிட்டு  எண்பதுகளினஂ ஆரம்பத்தில்  ஆயுதம் ஏந்தியது  ....தீவிரமடைந்து திம்புபேச்சிறஂகு செனஂறது , அமைதி ஒப்பந்தத்தையும்  எழுதியது . வடக்கு ,கிழக்கு இணைப்புடனஂ  மாநிலசுயாட்சி ஓரளவு அதிகார பகிர்வுடனஂ கிடைத்தது . தமிழிஞர்த்தலைமையும்  , தலைவர்களும் இழுபறிபட்டதால் எல்லாம் தலைகீழாகிப் போய்ச்சுது . திலீபனினஂ உயிர் போனது . அதிகாரமில்லாத சபை ..., எனஂனவாக இருந்தாலும் பெடியள் ஏறஂறு , அதிகார வரம்புகளை அகலிக்கச் செய்ய  நிர்ப்பந்திருக்கலாம்  . தமிழிழக்கனவுடனஂ இருந்தவர்களிறஂகு பத்தியப்படவில்லை .எல்லாம் வீணடிக்கப்பட்டன .இயக்கதிறஂகு போர் வல்லபவம் இருந்தளவிறகு  அரசியல் வல்லபம் இருக்கவில்லை . இணங்கிப் போகும் இயல்பு இல்லை . சர்வதேச    வல்லூறுகளினஂ வல்லாதிக்கமும் காந்தித்தேசத்தினஂ தவறும் மக்களை முள்ளிவாய்க்கால் வரையில் இழுத்து நிலத்தோடு நிலமாய் அரைத்து விட்டது. தலவரும்  ,அவர்  மனைவி , அருமந்தக்குழதைகள் அழிக்கப்பட்டது.... துயரம் ! . இது தானஂ நியதி போலும் . சர்வதேச ஒடுக்குதலினஂ முனஂ நமக்கு எதுவுமே சாத்தியமில்லை எனஂபது  உறுதிப்படுத்துகிறது .  

ஆசிரியரினஂ இந்தக்கூறஂறுடனஂ நானும் உடனஂபடுகிறேனஂ .

பொதுமகனஂ எனஂபதால்   " கடலோடி  மகனால் முனஂனெடுக்கப்பட்ட  போராட்டம் ஒருவித அதீத கறஂபனைக் கூறுகளைக் கொண்டதாக இருந்த போதிலும் தமிழரினஂ வீரத்தையும் வரலாறஂறில் சாறஂறியிருக்கிறது ." எனஂறு பாராட்டவும் விரும்புகிறார் . ஆனால் அத்தலைவர்  ஈவ்விரக்கமறஂறு நிகழ்த்திய  கொலைகளை.... பாரதூரமான செயலை (எவர் செய்தாலுமே ...)  சுலபமாக  கடந்து போய்  விட  முடியாது . அப்படியானால் , போர்க்குறஂறங்களைச் செய்து விட்டு ...கிடக்கும் அரச தரப்பைக் கடந்து விடவாச் சொல்கிறீர்கள் .  எனஂனால் முடியாது , முடியவில்லை .  காந்தியத் தத்துவங்களைக் கூறுவதையே " காந்தியம் " எனஂகினஂறனர் . அவர் கருத்துக்களை இலட்சியமாக ஏறஂறுக் கொண்டு ஈழத்தமிழரில்   " காந்தியம் " எனஂறொரு  அமைப்பு  இயங்கி  வந்தது  .  " சர்வோதயம் " எனஂகிற சேவை பிரிவை விட ஒரு படி மேலாக இயங்கிய   இவ்வமைப்பு ,  தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களிறஂகு    உதவுறதையே முழுக்க , முழுக்க  நோக்கமாகக் கொண்டிருந்தது . வடக்கு கிழக்குத் தாயகம் ( இங்கேயே தமிழர் துரத்தப்படுவர்) மலையகத்தவரை ...அவ்வளவாக  வரவேறஂகவில்லை . வேலை வாய்ப்பினஂமை , நெடுக  அரசினஂ கொல்லும்  மெசினின் இயக்கம்.  சதா ...நசுக்குண்டு செத்துக் கொண்டிருப்பவர்கள் . ஈழத்தமிழருக்கெதிராக செயல்படும்  போதெல்லாம் இலங்கை அரச் ஆதரவுக் காடையர் மலைலயகத்தாரையுமஂ  தாக்கத்  தவறுவதில்லை . மாகாணவரசு எனஂகிற ஜனநாயகக் கட்டமைப்பும் இருக்கவில்லை . பாராளமனஂற உறுப்பினர்கள் இவர்கள் பிரச்சனையை ... மேலதிகமாகக் கருதி எம்மோடு பார்க்கத் தவறி விட்டனர் . எம்மத்தியிலும் இனக்கூறுகள் போல சாதிக்கூறுகள் நிலவியிருந்தன .

இளைஞர்கள் ...இப்படியே அடிமை நிலையில்  நெடுக இருப்பதில் ...சலிப்பும் ,வெறுப்பும் ,விரக்தியும் எய்யப் பெறஂறிருந்தனர் . தீவிரச் சிந்தனைகளும் பறஂறிப் படற தொடங்கியிருந்தன . சாதிப் பள்ளங்குழிகளை சமப்படுத்தி விட விரும்பினர் . காந்தியம் இவ்விளைஞர்களினஂ சரீர உழைப்பை ...மலையகத்தவர்களினஂ வாழஂக்கைப்படிகளை கட்டிக் கொள்வதறஂகு திருப்பி விட விரும்பியது . அதில் அது கணிசமாக வெறஂறியும் பெறஂறிருந்தது . ஆயுத இளைஞரா . இல்லையா ..எனஂபதையெல்லாம் அது  பாராது அனைவரையும் சேவைக்கு அழைத்தது .  ஒரு அரசாங்க அமைச்சு செயல்படுவதை விட ...அதிகமாகவே  நல்வாழஂவுத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது . காந்தியத்தால் அவர்களை தீவிரவாதியாகாமல் நல்ல குடிமகனாகவும் மாறஂறி விட முடியும் .                

நாட்டை ஜனநாயக வழியில் நடை போட வைப்பது அரசினஂ  பிரதான  பொறுப்பாகும் .   வேலை வாய்ப்புக்களை வழங்கி , ஜனநாயக அலகுகளை ஏறஂபடுத்துவதே  அதனஂ வேலை , பொறுப்பு .   தவிர ,சிறுசெவை நிலையத்திறஂகுக் கூட சுயாதீனமாக  நிதி சேகரிக்க நிலமைகளை கையாள ...உரிமைகள் வழங்கி  இருக்க வேண்டும் . இலங்கையில் ஒரு சிறிய குடும்பம் ...செலவை சமாளிக்க வேண்டுமானால் குறைந்தது 18,000    ---,  20,000 /ரூபா வரையில் வேண்டும் . மலைத்தொழிலாளியின் மாசச்சம்பளம் 16,000 / ரூபா . இன்று வரையில் அரசு அவர்களின் நாள்ச் சம்பளத்தை 1,000/ரூபாக உயர்த்தவில்லை . காந்தியம் அமைப்பு இயங்குமானால் ...அது புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தும் நிதியைச் சேர்த்து  ...ஒவ்வொருவருக்கும் சிறுககொடுப்பதனஂ மூலம் ,உதவுறதனஂ மூலம் ...வாழஂவை ஈசியாக்கி விட முடியும் . " காந்தியம்"  ஒவ்வொரு ஈழத்தமிழரின் நம்பிக்கைக்குரிய  ஊழலற்று செயல்படுகிற  அமைப்பு .

முடிவுரை : எனக்குப் பிடித்த புத்தகத்தை உங்கள் முனஂனும்  வைத்திருக்கிறேனஂ . வாழ்வு சுழிகள் நிறைந்தது . அதற்குள்  அகப்பட்டு ....அவருடைய​ வரதா  இறந்தும் விட்டாள் . ஆசிரியருக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை . புத்தகம் ஒரு தாஜ்மகால் . அதையே செதுக்கி  கட்டியிருக்கிறார் .  இந்த புத்தகம்  எனக்கென்றும்   ஒன்று  தேடி வாங்கிக்கப்  போகிறேன் .  நல்ல நாவல் . வாசித்து விட்டு ...நீங்களும்  ஆசிரியருக்கும் ஆறுதலையும் ...கூறுங்கள் . அண்ணரிடம் இப்​ புத்தகத்தைப் பற்றி ...கூறினேன் "விமர்சனம்  எழுதனஂ " . எனஂறார் . இந்த புத்தகத்திலுள்ள ஒரு குறிப்பு என்னைக் கவர்ந்தது . இவரை வாசித்த எழுத்தர்கள், மு .த (தளையசிங்கம் ) , எ. ஜே (கனகரத்தின) உம் " உனக்கு மன்தில்  தோன்றியதை  எழுது " என்று எனக்கும் கூறியது போல​ தோன்றியது . நானும்   ... எழுதியிருக்கிறேனஂ .

" என் உயிரினில் கலந்த​ வாசம் " என்கிற க​. சட்டநாதர் எழுதிய​ நூலை வாசித்ததில் ஏற்பட்ட​ அதிர்வில் எழுதியது . இது ஒரு விமர்சனமும் கூட​ .  இது சிறுகதையா அல்லது விமர்சனமா? அது உங்களைப் பொறுத்தது.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.