
டிசம்பர் 11, மகாகவி பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்!
"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்.' - பாரதியார் -
என்னைக் கவர்ந்த, பாதித்த மகாகவிஞர் பாரதியார். தன் குறுகிய இருப்பில் இவர் சாதித்தவை அதிகம். ஆச்சரியமூட்டுபவை. தன் இருப்பைப்பற்றி, தன் பிறந்த மண்ணைப் பற்றி, தன் நாட்டைப்பற்றி, தான் வாழ்ந்த சமுதாயச் சூழல் பற்றி, அதன் சீர்கேடுகள் பற்றி, பெண் விடுதலை பற்றி, தேசிய, வர்க்க, சமூக விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மார்க்சிய அரசியல் தத்துவங்கள் பற்றியென்று இவர் சிந்திக்காத விடயமெதுவுமில்லை.
தீவிர வாசிப்பாளர். எழுத்தாளர். சிந்தித்தலுடன் நின்று விடாத செயல் வீரரும் கூட. இவரது சிந்தனையின் முரண்பாடுகளை இவர்தம் அறிவுத்தேடலின் வளர்ச்சிப்படிக்கட்டுகளாகவே கருதுவேன். இவரது எழுத்தின் ஆழமும், தெளிவும் என்னை மிகவும் கவர்ந்தவை.
[* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]